search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை பவுண்டரிகள் அடிப்படையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இந்தியா நம்பர் 2-வது இடத்தில் இருந்தது.

    தொடரின் லீக் ஆட்டங்கள் பாதி முடிந்த நிலையில் இங்கிலாந்து தொடர்ச்சியாக சில தோல்விகளை சந்தித்ததால் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்திற்கு பின் தங்கியது. அதன்பின் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது.

    தற்போது உலகக்கோப்பையை வென்றதன் மூலம் 125 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    2016 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இழந்த பெருமையை, தற்போது இந்த உலகக்கோப்பை மூலம் மீட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
    2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 155 ரன்கள் சேர்த்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.

    சாமுவேல்ஸின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை வீசினார். இங்கிலாந்து 19 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்திவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் நான்கு பந்துகளிலும் பிராத்வைட் இமாலய சிக்சர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

    பென் ஸ்டோக்ஸ்க்கு இது மிகப்பெரிய அளவில் மோசமான நாளாக அமைந்தது. இங்கிலாந்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் பென் ஸ்டோக்ஸ் இழக்க வைத்துவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் விமர்சனத்தில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகின. அதன்பின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் 84 ரன்கள் குவித்து போட்டி ‘டை’ஆக முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடிக்க துருப்புச் சீட்டாக இருந்தார்.

    பென் ஸ்டோக்ஸ்

    உலகக்கோப்பையை இங்கிலாந்து 44 ஆண்டுகள் கழித்து கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் 2016-ல் வில்லனாக மாறிய பென் ஸ்டோக்ஸ், நேற்று கதாநாயகனாக மாறினார்.

    ‘‘2016-ல் இழந்த  பெருமை  இந்த உலகக்கோப்பை வெற்றியின் மூலம் மீட்கப்பட்டது’’ என பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை எட்டாக்கணியாக இருந்த இங்கிலாந்துக்கு 44 ஆண்டுகள் கழித்து நேற்றிரவு கனவு நிறைவேறியுள்ளது.
    கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. அந்த விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. 44 ஆண்டு கால இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு நேற்று நனவானது.

    3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் வாய்ப்பை இழந்த அந்த அணிக்கு இந்தமுறைதான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    1975-ம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்தில் அறிமுகமானது. இந்தப் போட்டி உருவாவதற்கு காரணமாக அந்த நாடு அறிமுக போட்டியில் அரை இறுதியில் தோல்வியை தழுவியது.

    2-வது உலகக்கோப்பையும் இங்கிலாந்தே நடத்தியது. இந்த முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. வெஸ்ட் இண்டீசிடம் 92 ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது. 3-வது போட்டித் தொடரையும் அந்த நாடே நடத்தியது. இதில் அரை இறுதியோடு இங்கிலாந்தின் கதை முடிந்தது.

    இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

    4-வது உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு வெளியே இந்தியாவில் முதல் முறையாக நடந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 7 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது முறையாக கோப்பையை இழந்தது.

    ஆஸ்திரேலியாவில் நடந்த 5-வது உலக கோப்பையிலும் அந்த அணி சிறப்பாக விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 22 ரன்னில் தோற்று 3-வது முறையாக கோப்பையை இழந்தது.

    1999-ம் ஆண்டு இங்கிலாந்து மீண்டும் உலக கோப்பையை 16 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பிறகு நடந்த போட்டிகளிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

    கடந்த முறை நடந்த போட்டியில் அந்த அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது.

    20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இங்கிலாந்து 5-வது முறையாக நடத்தியது. இந்தப் போட்டித் தொடருக்காக அந்த அணி கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு சிறந்த வீரர்களை தயார்படுத்தியது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணி மிகவும் அபாரமாக விளையாடி எல்லா அணிகளையும் வீழ்த்தி முத்திரை பதித்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்குதான் உலகக் கோப்பை வாய்ப்பு என்று வல்லுனர்கள் கணித்து இருந்தனர்.

    அதற்கு ஏற்றவாறு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஆடும் இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வெல்லுமா? 2-வது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடும் நியூசிலாந்தை முதல் தடவையாக சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    லண்டன் லார்ட்ஸ மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி அனைத்து எதிர்பார்ர்பையும் தாண்டி அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டியும், அதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த கணக்கில் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறைகயிலும் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி உலக கோப்பையை வெல்ல முழு தகுதியானது. அதே நேரத்தில் அந்த அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டமும் கிடைத்தது.

    கிரிக்கெட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை வென்றதன் மூலம் தனது கனவை நனவாக்கி கொண்டது.
    உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.
    லண்டன்:

    உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார். நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தையும் சேர்த்து வில்லியம்சன் 2 சதம் உள்பட 578 ரன்கள் குவித்து இருக்கிறார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கையின் கேப்டனாக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே 548 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் சிறந்ததாக இருந்தது. அவரை வில்லியம்சன் முந்தி இருக்கிறார்.

    மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

    * இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்காக ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இயான் போத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    * இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்த மூத்த பவுலர் இவர் தான். பிளங்கெட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 99 நாட்கள்.

    * நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் 2 கேட்ச் செய்தார். இந்த உலககோப்பையில் கேட்ச், ஸ்டம்பிங் செய்த வகையில் மொத்தம் 21 பேரை அவர் ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். இதன் மூலம் 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் அதிக பேரை விக்கெட் கீப்பிங் மூலம் வெளியேற்றிய ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டின்(21 அவுட்) சாதனையை சமன் செய்தார்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. 

    பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனாது. 

    பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

    16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மாணிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    நியூசிலாந்தின் ஸ்கோர் 103 ரன்களாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டெய்லர் 15 ரன்னிலும், நீஷம் 19 ரன்னிலும் வெளியேறினார்கள். இறுதியில் நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிளெங்கட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனது. 
    நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 241 ரன்கள் சேர்த்தது.

    பின்னர்  242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்த்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறினர். ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜோ ரூட் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பேர்ஸ்டோவ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மோர்கன் 9 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இதனால் இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறி வருகிறது. தற்போது ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் நியூசிலாந்து 21.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதேவேகத்தில் சென்றால் நியூசிலாந்து 300 ரன்னைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  நியூசிலாந்தின் ஸ்கோர் 103 ரன்களாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டெய்லர் 15 ரன்னிலும், நீஷம் 19 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை எட்டுமா? என்று எதிர்பார்த்து ஏற்பட்டது.

    மார்க் வுட்

    டாம் லாதம் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை தாண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் கிராண்ட் ஹோம் 16 ரன்னில் வெளியேற, டாம் லாதம் 49-வது ஓவரில் 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 48.3 ஓவரில் 232 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 9 பந்தில் 9 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்துள்ளது.

    பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை முத்தமிடலாம் என்ற நோக்கத்துடன் இங்கிலாந்து சேஸிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிளெங்கட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
    கேன் வில்லியம்சனை அடுத்து நிக்கோல்ஸ், டெய்லர் ஆகியோர் அவுட்டானதைத் தொடர்ந்து நியூசிலாந்து 250 ரன்களை கடக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து 13.4 ஓவரில் 50 ரன்களையும், 21.2 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது. 100 ரன்னைக் கடந்தபோது நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் நல்ல நிலைமையில் களத்தில் இருந்ததால் நியூசிலாந்து 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அணியின் ஸ்கோர் 103 ரன்னாக இருக்கும்போது வில்லியம்சன் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் 15 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார்.

    இதனால் 103 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து. 141 ரன்னுக்குள் மேலும் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. தற்போது டாம் லாதம் உடன் நீஷம் ஜோடி சேர்ந்துள்ளார். நியூசிலாந்து 36 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது. லாதம் 12 ரன்னுடனும், நீஷம் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்த இருவர் மட்டுமே பேட்ஸ்மேன்கள். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 23 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து வீரர்கள்

    இதனால் நியூசிலாந்து 21.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் நியூசிலாந்து மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 23-வது ஓவரின் 4-வது பந்தில் கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ் 45 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் டோனியை பின்வரிசையில் இறக்கியது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் டோனியை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். டோனியை முன்கூட்டியே இறக்கி ஆட்டம் இழந்திருந்தால் அத்துடன் இலக்கை விரட்டும் முயற்சி செத்து போயிருக்கும். டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறப்பு மிக்கவர். அவரது அனுபவம் பின்வரிசையில் தேவை என்பதாலேயே 7-வது வரிசையில் அவரை இறக்கினோம். இந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் குற்றமாகியிருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

    பேட்டிங்கில் 4-வது வரிசையில் நிலையான ஒரு ஆட்டக்காரர் தேவையாக இருந்தார். அது தான் எங்களுக்கு பிரச்சினையாகவும் இருந்தது. ஷிகர் தவான் காயமடைந்து வெளியேறியதால் லோகேஷ் ராகுல் தொடக்க வரிசைக்கு வந்தார். அதன் பிறகு விஜய் சங்கரும் காயத்தால் விலக நேரிட்டதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரைஇறுதிக்கு முன்பாக மேலும் ஒரு ஆட்டம் இருந்திருந்தால் மயங்க் அகர்வாலை தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து, லோகேஷ் ராகுலை மிடில் வரிசைக்கு அனுப்பி சோதித்து பார்த்து இருப்போம்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
    ×