search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வீரர் மார்க்வுட்
    X
    இங்கிலாந்து வீரர் மார்க்வுட்

    நிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து?

    கேன் வில்லியம்சனை அடுத்து நிக்கோல்ஸ், டெய்லர் ஆகியோர் அவுட்டானதைத் தொடர்ந்து நியூசிலாந்து 250 ரன்களை கடக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து 13.4 ஓவரில் 50 ரன்களையும், 21.2 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது. 100 ரன்னைக் கடந்தபோது நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் நல்ல நிலைமையில் களத்தில் இருந்ததால் நியூசிலாந்து 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அணியின் ஸ்கோர் 103 ரன்னாக இருக்கும்போது வில்லியம்சன் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் 15 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரின் தவறான முடிவால் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார்.

    இதனால் 103 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து. 141 ரன்னுக்குள் மேலும் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. தற்போது டாம் லாதம் உடன் நீஷம் ஜோடி சேர்ந்துள்ளார். நியூசிலாந்து 36 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது. லாதம் 12 ரன்னுடனும், நீஷம் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்த இருவர் மட்டுமே பேட்ஸ்மேன்கள். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Next Story
    ×