என் மலர்
பெண்கள் மருத்துவம்
பிறப்புறுப்பு சுத்தம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். பிறப்புறுப்பு சுத்தமாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருந்தால் உங்களது உடல்நலமும் நன்றாக இருக்கிறது என அர்த்தம்.
பிறப்புறுப்பு சுத்தம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். தாய்மார்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லி கொடுக்கலாம். ஓரளவுக்கு புரிந்து கொள்கின்ற 10-12 வயது பெண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். அதுபோல் நீங்களும் பிறப்புறுப்பை எப்படி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பிறப்புறுப்பு சுத்தமாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருந்தால் உங்களது உடல்நலமும் நன்றாக இருக்கிறது என அர்த்தம். ஹெல்தியான டயட், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தரையில் செய்ய கூடிய பயிற்சிகள் ஆகியவற்றால் உடல்நலம் நன்றாகவே இருக்கும்.
பிறப்புறுப்பில் பிரச்னைகள் வராமல் தடுப்பது, தவிர்ப்பது எப்படி?
நீச்சல், ஜிம் சென்ற பிறகு உள்ளாடையை அவசியம் மாற்றுங்கள். அணிந்து கொண்டே இருந்தால் தொற்றுக்கள் வரும். சாதாரண தண்ணீர் அல்லது மிதமான சோப் போட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம். எப்போதும் முன்னிலிருந்து பின் என்றே சுத்தம் செய்யுங்கள். பின்னிலிருந்து முன் என சுத்தம் செய்ய கூடாது. மலக்கிருமிகள் பிறப்புறுப்பு இடத்தைத் தாக்கும். தொற்றை ஏற்படுத்தும். உங்களது உள்ளாடைகளை அதிக கெமிக்கல் கொண்ட சோப், டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைக்க வேண்டாம். கெமிக்கல்களால் எரிச்சல், பாதிப்புகள் வரலாம்.
உங்களது உள்தொடைக்கு சில பயிற்சிகளைக் கொடுக்கலாம். சாரில் அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை சுவற்றில் வைத்து மடக்கி, நிமிர்த்தலாம். இப்படி சின்ன சின்ன பயிற்சிகள் செய்வதால் தொடை இடுக்குகளில் அதிக சதை இருக்காது. இதனால் அரிப்பு பிரச்னைகளும் வராது. நேராக உட்காருவதைப் பழகி கொள்ளுங்கள்.
இதனால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். பிறப்புறுப்பு, அடி இடுப்புக்கு பகுதிக்கு சீராக ரத்த ஓட்டம் செல்லும். 3-4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி பேட் அல்லது டாம்பூனை மாற்றுங்கள். பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள முடிகளை அடிக்கடி டிரிம் செய்து கொள்ளுங்கள். முடியை நீக்கும் கிரீம் பயன்படுத்தி முடியை நீக்க வேண்டாம். அந்த இடத்தில் முடியை நீக்கும் கிரீமில் உள்ள கெமிக்கல்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
வாசனை மிகுந்த சோப், பாடி வாஷ், ஜெல், ஆன்டிசெப்டிக் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவையெல்லாம் பி.எச் அளவை மாற்றி, பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு மாதவிலக்கு நடக்கும்போது, 2-3 முறையாவது பிறப்புறுப்பை சுத்தம் செய்யுங்கள். மலவாயும் பிறப்புறுப்பு பகுதியும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
சாதாரண தண்ணீரோ சாதாரண உடலுக்குத் தேய்க்கின்ற சோப்போ போதுமானது. இதை வைத்தே பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யலாம். இதற்காக எந்த பிரத்யேக வாஷ் எல்லாம் தேவையில்லை. இயற்கையான முறையில் வெஜினல் வாஷ் செய்யலாம். அது எப்படி என இங்கே பாருங்கள்.
பிறப்புறுப்பைப் பாதுகாக்கும் உடைகள்…
டைட் ஃபிட்டிங் உடைகள், பிறப்புறுப்பு பகுதியை சூடாக்கும். தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பருத்தியால் தயாரித்த உள்ளாடை அணிவது நல்லது. பாலிஸ்டர் வகை உள்ளாடைகள் தவிர்க்கவும். வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் ஒரு நாளைக்கு இருமுறை உள்ளாடையை மாற்றுங்கள். இரவில் தூங்கும் போது உள்ளாடையைத் தவிர்க்கலாம்.

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். இந்த நோய் வருவதற்கான காரணங்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் சரியான விழிப்புணர்வு இல்லாதது மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமல் அலசியமாக இருப்பதாகும். நமது உடலில் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால் புற்றுநோய் (breast cancer) செல்களாக மாறுவதாலே புற்றுநோய் ஏற்படுகிறது.
மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்
மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும். இது 5 முதல் 10 சதவிகிதம் வரை பரம்பரையாக தாக்க வாய்ப்புள்ளது. 55 வயதை கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். மற்றவர்களை விடவும் இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவதும் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள். அதேபோல பூப்பெய்தியதில் இருந்து 15 வருடங்களில் உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிகமாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் (breast cancer cause) அபாயம் அதிகமாகும்.
திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 30 அல்லது 35 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
அதிகமான உடல் எடை இருக்கும் பெண்களும் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.
வருடக்கணக்கில் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோயை வரவழைக்க முக்கிய காரணமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆண்டுதோறும் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் தொடர் பரிசோதனை அவசியம்.
எடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குண்டான பெண்கள் கண்டிப்பாக எடையை குறைத்தாக வேண்டும். உடற்பயிற்சி மிக முக்கியம். தினமம் 3 கி.மீ நடக்க வேண்டும். 10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பது நல்லது.
எண்ணெய், கொழுப்பு உணவுகள தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும். அசைவப் பிரியர்கள் இறைச்சி உணவுகளை பொரித்து உண்பதை தவிர்த்து குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது. நேரடியாக நெருப்பில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற உணவுகளில் புற்றுநோய்க்கான விஷயங்கள் அதிகம்.
அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும். அதன் காரணமாக காலப் போக்கில் புற்றுநோய் தாக்கலாம். எனவே மனதை லேசாக வைத்திருங்கள்.
மார்பக புற்றுநோயை (breast cancer) ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்த அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ, சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தைரியமும் தன்னம்பிக்கையும் மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க வழிவகுக்கும்.

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.
இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் இனி எளிமையான வழியில் தங்கள் தொப்பையைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தையும் காத்து நல்ல அழகான தோற்றத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றிப் பெறலாம்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் இனி எளிமையான வழியில் தங்கள் தொப்பையைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தையும் காத்து நல்ல அழகான தோற்றத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றிப் பெறலாம். இவை உங்களுக்கு எளிமையானதாக இருக்கும். மேலும் இதன் பலனை நீங்கள் முயற்சி செய்யத் தொடங்கிய முதல் சில நாட்களிலேயே தெரிந்து கொள்வீர்கள்.இங்கே உங்களுக்காக சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய குறிப்புகள்.
வயிற்றை இறுக்கிக் கட்டுவது (Abdominal binding)
இந்த முறையில் நீங்கள் ஒரு நீளமான துணியை எடுத்து உங்கள் வயிற்றுப் பகுதியில் நன்கு கட்டிக் கொள்ளுங்கள்.உதாரணமாக சற்று கெட்டியான வேட்டி,துப்பட்டா அல்லது துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.அல்லது சந்தைகளிலும் அதற்கென்றே பட்டைகள் கிடைக்கின்றன.அதை வாங்கி பயன்படுத்தலாம்.இது போல நீங்கள் 4 முதல் 6 வாரங்கள் தொடர்ந்து செய்தால்,உங்கள் தொப்பைக் குறையத் தொடங்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.இது ஒரு நல்ல வழியாக இருந்தாலும், இதை அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொண்ட பெண்கள் முயல வேண்டாம்.மற்ற தாய்மார்கள் இந்த வழியைப் பின்பற்றலாம்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு (Honey and lemon)
இந்த முறையில் நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிமையான ஒன்றுதான். இதமான சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை பழச் சாற்றைப் பிழிய விட்டு,அத்தோடு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு தேனையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் தொப்பை சில நாட்களிலேயே குறைவதை நீங்கள் காணலாம். மேலும் இதனை சுகப் பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சை பிரசவம் செய்து கொண்ட பெண்கள் அருந்தலாம்.மேலும் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இது மேலும் பல நன்மைகளை உங்கள் உடலுக்குத் தரும்.
தாய்ப்பால் (Breastmilk)
தாய்மார்கள் தினம் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வர,அவர்களின் எடை மேலாண்மை அடையும்.இது எப்படி என்று பலரும் வியப்பு அடையலாம்!ஆனால் ஒரு அன்னை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் அவளது உடலிலிருந்து தினம் 500 கலோரிகள் எரியப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சரியான உணவு (Balanced diet)
உங்கள் உணவில் சில மாற்றங்களை நீங்கள் செய்யும் போது நீங்கள் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். குறிப்பாக உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.மேலும் சோடா மற்றும் கார்போனேட் கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. அதிகம் பப்பாளி, மாம்பழம், திராட்சை, போன்ற நீர்ச் சத்து நிறைந்த பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள். நார்ச் சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்து மற்றும் எண்ணை நிறைந்த உணவுப் பொருட்களையும், நொறுக்குத் தீனிகளையும், சிற்றுண்டிகளையும் தவிர்ப்பது நல்லது. அவை மேலும் உங்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும்.
குறைவாக அவ்வப்போது சாப்பிடுங்கள் (Eat at intervals)
இது எதை குறிக்கிறது என்றால் ஒரே சமயத்தில் அதிக அளவு உணவை உண்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது உண்பதால் உங்கள் தொப்பை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அதாவது பொதுவாக மூன்று வேளைகளில் உண்ணும் உணவை குழந்தைப் பேறு பெற்ற தாய்மார்கள் ஆறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். மேலும் பிரசவத்திற்குப் பின் இது ஒரு நல்ல உணவு முறையாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள் (Do exercise)
பிரசவத்திற்குப் பின் எளிமையான உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.வயிற்றுச் சதைகளைக் குறைக்கும் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை ஒரு நல்ல பயிற்சியாளரின் ஆலோசனைப்படி செய்யும் போது எதிர்பார்த்த நற்பலன்களை விரைவில் பெறுவீர்கள். எனினும் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொண்ட பெண்கள் சிறிது காலம் அதிகமாக பொறுத்திருந்தே உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் அது உங்கள் உடலை பாதிக்கக் கூடும்.
தூக்கம் (Sleep)
நீங்கள் மிக முக்கியமாகப் போதிய தூக்கத்தைப் பெற வேண்டும். எனினும் பிரசவத்திற்குப் பின் அதாவது குழந்தை பிறந்ததும் தூக்கம் என்பது அனைத்து தாய்மார்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு கனவாக மட்டுமே இருக்கும். இருப்பினும் நீங்கள் முடிந்த வரை அவ்வப்போது நன்கு தூங்க வேண்டும். இதனால் உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது.ஏனென்றால் சரியான தூக்கம் கிடைக்காத பட்சத்திலும் உடல் எடை அதிகரிப்புக்கு வாய்ப்பு அதிகமாம்.இதை தாய்மார்கள் அலட்சியம் செய்யக் கூடாது.
நடைப்பயிற்சி (Walking)
நேரம் கிடைக்கும் போது நீங்கள் நடைப் பயிற்சி செல்வது மற்றொரு நல்ல முயற்சியாக இருக்கும். நீங்கள் நடக்கும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும்.உடல் எடை குறைவதோடு, உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும்.இந்த வழியில் நீங்கள் உங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
இனிப்பு வேண்டாம் (Avoid sweets)
இனிப்பு மிட்டாய்கள்,இனிப்பு பலகாரங்கள்,சர்க்கரை போன்றவற்றை முடிந்தளவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.இனிப்புப் பண்டங்கள் உடை எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.அதனால் தாய்மார்கள் நாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது சாலச் சிறந்தது.

பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்.

* 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
* ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.
* அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.
* இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.
* உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.
* உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.
* மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.
இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.
அரிதான பிரச்னை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்னைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள். முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.
பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்னை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக ஸ்ட்ரஸ் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாயுக்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்னை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பு குறைந்திருக்கிறது என எப்படி கண்டுபிடிப்பது?
5-6 முறை குழந்தை மலம் கழிக்க வேண்டும். இதுதான் தாய்ப்பால் போதிய அளவு கிடைத்த குழந்தையின் அடையாளம். 3-4 முறை மட்டுமே குழந்தை மலம் கழித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை. குறைவான, மிக மிக நீர்த்த மலம் இருப்பது. 8-10 முறை சிறுநீர் கழிக்கவில்லை எனும்போது. 0-6 மாத குழந்தைக்கு வரும் சிறுநீர் மிகவும் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை. குழந்தை எடை போடாமல் இருப்பது. நீங்கள் தாய்ப்பால் கொடுத்த பின்னரும் உங்களின் மார்பகம் சாஃப்டாக இருந்தால் தாய்ப்பால் குறைவாக சுரக்கிறது என அர்த்தம்.

பிறந்த குழந்தைக்கு தாய் ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால். தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன. சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும். மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.
மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.
ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம். குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள்.
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது. ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குழந்தை பருவத்தில் இருந்தே, நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதே, சதைக்கட்டிகள் ஏற்பட காரணம். கடந்த, 10 ஆண்டுகளில், உணவு பழக்கமே, வெகுவாக மாறி விட்டது. கேக், வெண்ணெய், பிஸ்கட், ஐஸ்கிரீம் என, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு, கர்ப்பப்பையில் சதைக் கட்டிகள், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் என, வாழ்க்கை முறை மாற்றத்தினால் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இது தவிர, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நடக்காமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, கூடுமான வரை நடப்பதைத் தவிர்ப்பது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமல் இருப்பது, இவையும் வேறு சில காரணங்கள்.
சதைக் கட்டிகள், 1 செ.மீ., 2 செ.மீ., இருக்கும் போதே, அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அறுவை சிகிச்சை செய்த நான்கைந்து மாதங்களில், மீண்டும் வளர்ந்து விடுகிறது. வெட்ட வெட்ட வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தான், இதனுடைய தன்மை. அதே நேரத்தில், உணவு பழக்கம் உள்பட, வாழ்க்கை முறை மாற்றத்தினால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
30, - 35 வயதில், சரியான உடல் எடையுடன் இருந்தால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். காலை உணவில், எண்ணெயில் பொரித்த வடைகள், தேங்காய் சட்னி, மட்டன் குருமா என்று கொழுப்பு நிறைந்த உணவாக இல்லாமல், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.

இட்லிக்கும், தோசைக்கும் ஒரே மாவு தான் என்றாலும், தோசை சில நிமிடங்களே கல்லில் வேகிறது. எனவே, செரிமான சக்தி இதற்கு குறைவு. இட்லி, 10 - 15 நிமிடங்கள் ஆவியில் வேகிறது. இது எளிதில் செரிக்கும், எடையும் போடாது, பசியும் அடங்கும். இதற்கு, மல்லி தழை, வெங்காயம், பொட்டுக் கடலை, விரும்பினால் சிறிய துண்டு தேங்காய் வைத்து சட்னி செய்யலாம். மதிய உணவில், கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும். எத்தனையோ வகை கீரைகள் உள்ளன.
முருங்கைக் கீரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம். இரும்பு சத்து அதிகம். உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரிசெய்யலாம். சற்று அதிக உடல் எடையுடன் இருப்போருக்கு, மருந்துகளுடன் உணவு கட்டுப்பாடும் தேவைப்படும். மருந்து சாப்பிட்ட அடுத்த வாரமே சரியாகுமா என்றால், இல்லை. குறைந்தது, ஆறு மாதங்களாவது சாப்பிட வேண்டும். இது ஏதோ சரி செய்யவே முடியாத கட்டி என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2005-06-ம் ஆண்டில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாசாரம் நமது நாட்டில் 9 சதவீதமாக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016-ம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையில் இருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக அறுவை சிகிச்சையை பயன்படுத்தலாம் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி, நேரங்களை பெற்றோரே நிர்ணயிப்பதால் அறுவை சிகிச்சையை அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள்.
உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின்போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மூன்றாவது பிரச்சினை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது அறுவை சிகிச்சை ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு தயாராகிவிடுவார்கள்.
முதல் பிரசவம் அறுவை சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் அறுவை சிகிச்சை முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில்தான் உள்ளது.

கர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஒருவேளை குழந்தையின் வளர்ச்சி நினைத்ததை விட பல மடங்கு பெருகி காணப்பட்டால் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
கர்ப்பம் பற்றிய பொதுவான விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவற்றுள் ஒன்று தான் கர்ப்ப கால குழந்தையின் எடை. அதாவது கர்ப்பிணி பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஒருவேளை குழந்தையின் வளர்ச்சி நினைத்ததை விட பல மடங்கு பெருகி காணப்பட்டால் என்ன செய்வது? வாருங்கள் என்னுடன் சேர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
வல்லுனர்களின் கருத்துப்படி குழந்தையின் எடையானது பொதுவாக 2500 கிராம் முதல் 5000 கிராம் வரை இருக்கக்கூடும். எந்த குழந்தையின் எடையாவது 5000 கிராமை கடந்து காணப்படுமெனில் குழந்தை பெரிதாய் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், குழந்தை குண்டாக பிறப்பதால் ஆரோக்கியம் அற்று இருக்கக்கூடும் என அர்த்தமில்லை. இதனால் பிரசவத்தின் போதும் நீங்கள் ஒன்றும் பெரிய சிக்கல்களை சந்திப்பதுமில்லை.
கர்ப்பிணிகள் உடல் எடை பொறுத்து குழந்தையின் எடை அமையுமா?
உங்கள் உணவு முறை பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அளவு என்பது அமைகிறது. ஆனால் நீங்கள் உண்ணும் உணவின் தரம் மற்றும் எடுத்துக்கொள்ளும் அளவை பொறுத்து குழந்தைகள் குண்டாக பிறப்பதில்லை.
1. ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், உங்கள் எடையானது 23 பவுண்டிற்கும் அதிகமாக இருக்கும்போது 8.8 பவுண்ட் அளவுக்கு அதிகமாக குழந்தை எடையுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.
2. அதேபோல் அம்மாக்களின் எடை 44 முதல் 49 பவுண்ட் இருக்கும்போது குழந்தைகளின் எடை இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
1. நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் கவனம் தேவை.
2. எண்ணெய் அதிகம் அடங்கிய உணவையும் ஜங்க் (Junk) உணவையும் தவிர்க்க வேண்டும்.
3. உங்கள் வயிறு சிறியதாக இருப்பின் சத்துள்ள உணவை மருத்துவரின் பரிந்துரையுடன் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
எதனால் குழந்தை குண்டாக பிறக்கிறது?
1. இரத்த சர்க்கரை அளவு பொறுத்து குழந்தையின் எடை என்பது அதிகரித்து காணப்படுகிறது.
2. அம்மாக்களின் வயது பொறுத்து குழந்தையின் எடை அதிகம் காணப்படுகிறது.
3. உங்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இரத்த சோகை இருக்கும்போது குழந்தை குண்டாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.
4. ஒரு ஆண் மற்றும் பெண்ணின் மரபு மாற்றங்களை பொருத்தும் குழந்தை குண்டாக பிறக்கிறது.

கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. கருவுறாமை உறவுகளுக்குள் என்னென்ன மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது பற்றி காணலாம்.
கருவுறாமை பிரச்சனை பலரது வாழ்க்கையை சோகத்திற்குள்ளாக்குகிறது. இதில் இருந்து மீண்டு வருவது சற்று சிரமானது தான். இந்த கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் இருக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு நேர்மறையாக செயல்படுவார்கள். மற்றும் சிலர் எதிர்மறையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவார்கள். மொத்தத்தில் கருவுறாமை உறவுகளுக்குள் என்னென்ன மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது பற்றி காணலாம்.
கணவன் மனைவி உறவிற்குள் கருவுறாமை பிரச்சனை வரும் போது ஒரு சிலர் இனிமேல் உனக்கு நான், எனக்கு நீ என்று வாழத்தொடங்கிவிடுகின்றனர். அவர்களது சோகத்தை மறக்க ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு செலுத்துகின்றனர்.
சிலர் கருவுறாமை பிரச்சனையை அடிப்படையாக கொண்டு விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இது முற்றிலும் தவறான செயல். குழந்தை இல்லை என்பதற்காக ஒருவரை ஒதுக்குவது கூடாது.
ஒரு சிலர் குழந்தையின்மை அவர்களுக்குள் நம்பிக்கையை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர். மருத்துவர் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்ன பின்னரும் கூட அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், இது அவர்களது இறை நம்பிக்கை, காதல் ஆகியவற்றை அதிகரிக்க செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கையை கைவிடமால் இருப்பது சிறந்தது. பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு கூட குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.
கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டாலே அளவில்லாத ஆனந்தம் வீட்டில் குடி கொள்ளும். எங்களுக்கு குழந்தை பெற வாய்ப்புகள் குறைவு என்று தெரிந்தவுடன் முன்பை விட இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்கிறோம் என சில தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின்மை எதிர்மறை மாற்றங்களை தான் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் குழந்தையின்மைக்கு பின்னர் பலர் தனது துணைக்காக நேர்மையான வாழ்க்கையை வாழ்கிறார்களாம்.

இந்தக் கர்ப்பப்பை இறக்கமானது பெண்களது வாழ்க்கைக் காலத்தில் எதிர்கொள்ளும் முக்கிய விஷயம். இதனை எவ்வாறு கையாண்டு பெண்களுக்குள்ள சிக்கல்களைத் தீர்ப்பதென ஆராய்வோம்.
பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பான கர்ப்பப்பை, அடிவயிற்றுப் பகுதியினுள் பல தசைகளினதும், தொடுப்பிழையங்களினதும் உதவியுடன் தாங்கப்பட்டுள்ளது. இத்தாங்குமிழையங்களின் பலவீனத்தால் கர்ப்பப்பை சற்றுக் கீழிறங்கி கர்ப்பப்பை இறக்கமாக மாறுகின்றது. (whom prolapse) இது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் ஒரு அசெளகரியமான நிலை. இதற்குப் பல எளிய முறையிலான தீர்வுகள் உள்ளன. ஆனால் பல பெண்கள் இதனை கூச்சத்தினாலும், வெட்கத்தினாலும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தாது இருப்பதுடன் இதற்கான சிகிச்சைகளும் சற்றுக் சிக்கல் நிறைந்தவையாக இருக்குமென நினைத்து தாமே இதனை இறுதிவரையில் தமக்குள்ளேயே அனுபவித்து வாழ்பவர்கள் பலருள்ளனர்.
ஆனால் இறுதியில் அவர்கள் மிகவும் முதுமையடைந்த பின்னர் இந்த கர்ப்பப்பை இறக்கத்தினால் ஏற்படும் சிக்கல்களினால் அவதிப்படுவது மட்டுமல்ல அவரைக்கூட இருந்து பராமரிக்கும் அவரது உறவினர்களும் இடர்படும் இன்னல்களில் பங்கெடுக்க நேரிடுகின்றது. அதாவது தகுந்த நேரத்தில் இந்த கர்ப்பப்பை இறக்கத்தை தகுந்த முறையில் கையாண்டு, சரியான தீர்வுகளை வழங்காது தவறவிடுவோமேயானால், இறுதிக் காலத்தில் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
ஆகையால் இந்தக் கர்ப்பப்பை இறக்கமானது பெண்களது வாழ்க்கைக் காலத்தில் எதிர்கொள்ளும் முக்கிய விடயம். இதனை எவ்வாறு கையாண்டு பெண்களுக்குள்ள சிக்கல்களைத் தீர்ப்பதென ஆராய்வோம்.
கர்ப்பப்பை இறக்கத்திற்கான காரணங்கள்
கர்ப்பப்பையைத் தாங்கும் இழையங்களும் தசைகளும் பலவீனமடைவதே இந்தக் கர்ப்பப்பை இறக்கத்திற்கான மூலகாரணமாகும். இது சிலருக்கு பரம்பரையாகவே பலவீனமான இழையங்களைக் கொண்டிருப்பதனால் நடுத்தரவயதைத் தாண்டும் போது ஏற்படலாம். எனினும் பொதுவான காரணமாக பல குழந்தைகளை சாதாரண பிரசவம் மூலம் பெற்றெடுத்த தாய்மாருக்கு அதிலும் மிகவும் கடினமான நீண்ட நேரம் பிரசவங்களை எதிர்கொண்ட பெண்களில், கர்ப்பப்பையைத் தாங்கும் இழையங்கள் காயப்பட்டு பலவீனமடைவதாக ஏற்படுகின்றது. அடுத்ததாக மெனோபோஸ் பருவத்தை அடைந்த பின் பெண்களில் ஓமோன்களின் குறைபாட்டினால் இழையங்கள் பலவீனமடைவதால் இந்நிலை ஏற்படலாம். இவ்வாறான கர்ப்பப்பை இறக்கங்களை மேலும் தீவிரப்படுத்தும் காரணிகளாக நாற்பட்ட இருமல், மலச்சிக்கல் என்பன பங்களிக்கின்றன.
கர்ப்பப்பை இறக்கத்தின் வகைகள்
கர்ப்பப்பை இறங்குவது போல் யோனி வாசல் சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி, மலக்குடல் என்பனவும் கீழிறங்கி வீக்கமாகக் காணப்படும். கர்ப்பப்பை இறக்கமும் பல நிலைகளாக ஆரம்பநிலை, இடைப்பட்ட நிலை, பிந்திய நிலை எனும் கட்டங்களாகக் காணப்படும். சிலரில் கர்ப்பப்பை இறக்கம் மட்டும் காணப்படும், சிலரில் கர்ப்பப்பை இறக்கத்துடன் சேர்ந்து சிறுநீர்ப்பை இறக்கம், மலக்குடல் இறக்கம் போன்றன காணப்படும். வேறு சிலரில் கர்ப்பப்பை இறக்கம் இல்லாமல் சிறுநீர்ப்பை இறக்கம் அல்லது மலக்குடல் இறக்கம் காணப்படும்.
கர்ப்பப்பை இறக்கத்தினால் ஏற்படும் நோய் அறிகுறிகள்
கர்ப்பப்பை இறக்கம் உள்ளவர்களில் யோனிவாசல் பகுதியில் ஒரு வீக்கம் போன்று காணப்படும். இதன்போது வலி ஏற்படுவதில்லை. அத்துடன் இந்த வீக்கம் காலையில் எழுந்தவுடன் மிகவும் குறைவாகவும் மாலை வேளைகளிலும் கூடியளவும் வேலை செய்கின்ற வேளைகளிலும் இது தெளிவாகத் தெரியும். சிலவேளைகளில் இந்தக் கர்ப்பப்பை இறக்கப் பகுதியில் புண் போன்று ஏற்பட்டு இரத்தம் அல்லது திரவம் போன்றன வடிதல் ஏற்படும். ஆனால் இவை எதுவும் புற்றுநோய்கள் அல்ல. சிறுநீர்ப்பையும் சேர்ந்து இறங்கியுள்ளவர்களில், சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இருமும் போது தும்மும் போதும் சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறுதல் போன்றன ஏற்படும். மேலும் மலக்குடல் பகுதி இறங்கியுள்ளவர்களில் மலங்கழிப்பதில் கடினங்கள், மலம் பூரணமாகக் கழிக்கப்படாமை போன்ற உணர்வுகள் ஏற்படும்.
கர்ப்பப்பை இறக்கத்திற்கு எவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன?
இதற்கான சிகிச்சைகள் பிரதானமாக இருவழிகளில் மேற்கொள்ளப்படும். அதாவது கர்ப்பப்பை இறக்கத்தை உயர்த்தி அதனை தாங்கக் கூடிய வளையங்கள் (Pessary) போடப்படலாம். இதன் பின் இவற்றை 3 மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றவேண்டும். இதன்போது சத்திரசிகிச்சைகள் தவிர்க்கப்படலாம். ஆகையால் இந்த வளையங்கள் போடப்படும் முறை, சத்திர சிகிச்சைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத உடல் வாகைக் கொண்டவர்களுக்கும், சத்திரசிகிச்சைக்கு தயங்குபவர்களுக்கும், சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கும் காலப்பகுதியிலும், பிரசவத்தை தொடர்ந்து ஏற்படும் தற்காலிக கர்ப்பப்பை இறக்கத்திற்கும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கத்திற்கும் பெரிது உதவியளிக்கும் சிகிச்சை முறையாக காணப்படுகின்றது.
மற்றைய சிகிச்சை முறையாக சத்திரசிகிச்சை முறை உதவியளிக்கும். இதிலும் கர்ப்பப்பையை முற்றாக அகற்றாமல் செய்யப்படும் சத்திரசிகிச்சை, கர்ப்பப்பையை முற்றாக அகற்றும் சத்திரசிகிச்சையென இருவகைகள் உள்ளன. இது ஒருவர் தனது குடும்பத்தை முடித்துக் கொள்வதா அல்லது இல்லையா என்பதனைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். இந்த சத்திரசிகிச்சைகளில் சிறந்தது கர்ப்பப்பையை அகற்றி கர்ப்பப்பை பகுதி தசைகளை மறுசீரமைக்கும் சத்திரசிகிச்சையே சிறந்தது. இது ஒருவரை முழுதாக மயக்காமல் முதுகுப் பகுதியில் ஊசி ஏற்றி உடம்பின் கீழ்ப்பகுதியை விறைக்கப் பண்ணுவதன் மூலம் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதன்மூலம் மிகவும் வயது கூடிய பெண்களில் கூட எந்தவித சிக்கலின்றி இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.