என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    35 வயதை கடந்தும் சில பெண்களுக்கு சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.
    35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.

    அத்துடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது, கடந்தகால, எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும். இத்தகைய வாழ்வியல் முறையுடன் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதும் சரும அழகை நிலைத்திருக்க செய்யும்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனையும், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். சரும சுருக்கத்தையும் தடுக்கலாம். 200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்துக்கொள்ளவும். அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும். சுருக்கங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காது.

    முட்டையையும் பயன்படுத்தலாம். இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங் களை மங்க செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

    தேன் மெழுகும் சரும சுருக்கத்தை தடுக்கும் தன்மை கொண்டது. 50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அது குளிர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். பின்பு அதனை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
    சன்ஸ்கிரீன் சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. சருமத்திற்கு சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    உங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.
    நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், மேலும் சன்ஸ்கிரீன் வாங்கும் போது கண்டிப்பாக இதை பார்க்க மறந்துவிடக்கூடாது.
    சன்ஸ்கிரீன் சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாமல் தடுக்கலாம். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    UVA  மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வு செய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். UVA தோல் அனுபவத்தை முன்கூட்டிய வயதானதாக மாற்றும், அதே நேரத்தில் UVB என்பது வெயில் மற்றும் தோல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும்.

    ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது  UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சன்ஸ்கிரீனில் ஷிறிதி 15 என்பது ஹிக்ஷிஙி கதிர்களில் 93 சதவிகிதத்தை வடிகட்டுகிறது, அதே நேரத்தில் UVB  30 வடிகட்டிகள் 97 சதவிகிதம், மற்றும் UVA 50 வடிப்பான்கள் 98 சதவிகிதம் UVB கதிர்கள்.

    இருப்பினும், குறைந்த எஸ்பிஎஃப்  எண்களிலிருந்து நீங்கள் இன்னும் பாதுகாப்பைப் பெறலாம். முக்கியமானது, அதிக எஸ்பிஎஃப் அளவை விட அடிக்கடி விண்ணப்பிப்பது, எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மணி நேரமும். குறிப்பாக நீங்கள் நீந்தினால், வியர்வை, தண்ணீரில் அடித்தால்.

    சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.
    முடி உதிர்வது பிரச்சினையை பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது அவசியமானது.
    முடி உதிர்வது பெரியவர்களுக்கு பொதுவான பிரச்சினையாகும். ஒவ்வொரு மனிதனும் தினமும் சில முடிகளை இழக்கிறான். அது இயல்பானது. ஆனால் குழந்தைகளும் இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது அவசியமானது.

    சில குழந்தைகளுக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்படும். அவை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். முடி உதிர்ந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகளையும் காணலாம். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நீண நீர் செல்லும் பாதையில் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணமாகும். மற்றவர்களின் சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவும். ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக முடி உதிர்ந்து பின்பு வழுக்கையை உருவாக்கும்.

    குழந்தைகளுக்கு தலைப்பகுதியில் மட்டுமல்ல புருவங்களிலும் முடி இழப்பு ஏற்பட்டால் அதற்கு ‘அலோபீசியா அரேட்டா’ பாதிப்புதான் காரணமாகும். இது பரம்பரை மரபணுக்கள் வழியாக பரவக்கூடும். குடும் பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.

    சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழுக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு முடியாக இழுத்துக்கொண்டிருப்பார்கள். கவலை அல்லது மன அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இது ஒருவகை மனநல கோளாறாக கருதப்படுகிறது. ‘பிகேவியோரல் தெரபி’ எனப்படும் நடத்தை, ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

    உச்சந்தலையில் இருக்கும் மயிர்க்கால்களில் தொற்று ஏற்படுவது ‘டெலோஜென் எப்ளூவியம்’ எனப்படும். இதுவும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். கொலோஜென் என்பது முடி வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடியது. அதன் செயல்பாடுகளுக்கு இடை யூறு ஏற்படும்போது அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படக்கூடும். மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு நேரும். ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டிவிடும். ஆதலால் குழந்தைகளுக்கு சமச்சீரான உணவு கொடுப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    பொதுவாக பெங்காலி புடவைகள், பெங்காலி காட்டன் என்று மட்டுமே அந்தப் புடவைகளை அறிந்திருக்கும் நாம் அவற்றில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாமா?
    தென்னிந்தியர்களை போலவே சேலைகள் அணிவதில் அதிக ஆர்வமுடையவர்கள் பெங்காலி பெண்கள் என்று சொல்லலாம். பொதுவாக பெங்காலி புடவைகள், பெங்காலி காட்டன் என்று மட்டுமே அந்தப் புடவைகளை அறிந்திருக்கும் நாம் அவற்றில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாமா?

    பெங்காலி புடவைகள் என்பது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் கிடைக்கின்றன. பெங்காலி காட்டன் சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமாகவும் அழகான தோற்றத்தை தருவதாகவும் உள்ளன.

    சிறப்பம்சங்கள்:

    * பலுச்சாரி பெங்காலி புடவைகள் ஐந்து ஜெக நீளம் மற்றும் நாற்பத்திரண்டு அங்குல அகலத்துடன் நெய்யப்படுபவையாகும்.

    * தாந்த் பெங்காலி சேலைகள் ஆறு ஜெக நீளம் கொண்டவையாகும்.

    பெரும்பாலான பெங்காலி புடவைகள் சிவப்பு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களிலேயே நெய்யப்படுகின்றன.இவ்வகை சேலைகள் மிகவும் எடைகுறைவாகவும் அதிக வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் கூட அணிந்து கொள்ளக்கூடியவையாகவும் இருக்கின்றன.

    பெங்காலி பெண்கள் சேலைகளை கட்டும் விதத்திற்காகவே இவை சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பயன்படுத்தப்படும் துணிகள்:

    பெங்காலி புடவைகளில் பல விதமான துணிகளைப்பயன்படுத்துகிறார்கள். அதில் பருத்தி முதன்மையாக உள்ளது. முர்ஷிதாபாத் பட்டு, டஸ்ஸர் பட்டு, மட்கா பட்டு, முல் காட்டன், பருத்தி பட்டு, மல்பெரி பட்டு மற்றும் மெல்லிய மஸ்லின் துணிகளை கொண்டு புடவைகளை நெசவு செய்கிறார்கள்.

    தாந்த் சேலைகள்: பெங்காலி காட்டன் புடவைகளில் பிரபலமான ஒரு வகை என்று இதை சொல்லலாம். இவை மிகவும் லேசாகவும், எடை குறைவாகவும் உட்புறம் நுட்பமான நூல் டிசைன்களுடனும் பல்லு மற்றும் பார்டரில் அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகளுடனும் வருகின்றன. அலுவலகங்கள் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவை.

    டஸ்ஸர் பட்டு: பெரிய ஜவுளிக்கடைகளில் இதற்கென்று ஒரு தனிப்பிரிவே இருப்பதை பார்க்க முடியும். மிகப்பிரசித்தி பெற்ற பெங்காலி சேலைகளில் இதுவும் ஒன்றாகும். அணிந்தால் கம்பீரமான தோற்றத்தை தரும் இச்சேலைகளின் செழுமையை அதன் நெசவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அனைத்து உடல்வாகு உடையவர்களும் இந்த டஸ்ஸர் பட்டு சேலைகளை திருவிழாக்கள் மற்றும் பாரம் பரிய விழாக்களுக்கு அணியலாம்.

    பெங்காலி பட்டுப்புடவைகளில் புகழ்பெற்றவை என்று பலுச்சாரி புடவைகளை சொல்லாம். இந்த சேலைகளின் பல்லுவில் இந்திய கலாச்சாரத்தின் புராணக்காட்சிகள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நெய்த நெசவாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த நெசவு சேலைகளில் இதுவும் ஒன்று.

    இந்த சேலைகளின் வேலைப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தங்கநிற நூல்கள் சேலைகளுக்கு மேலும் அழகை கூட்டுகின்றன. திருமணம் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லக்கூடிய பட்டுப்புடவைகள் இவை.

    முர்ஷிதாபாத் பட்டு: அழகான தூய கலை வேலைப்பாட்டை வெளிப்படுத்துபவை இந்த சேலைகள் பல்லு மற்றும் பார்டரில் கைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றவை.

    காந்தா சேலைகள்: இந்தப்புடவைகள் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் சிக்கலான மற்றும் விரிவான நூல் வேலைக்கு பிரபலமானவை. வொர்லி பாணி மட்டுமல்லாது எந்த ஒரு பாணியையும் காந்தா வேலைகளால் சேலைகளில் அழகாக உருவாக்குகிறார்கள். பட்டுச்சேலைகளில் காந்தா வேலைப்பாடுகளானது அழகிற்கு அழகு சேர்க்கின்றன.

    ஷாந்திபுரி காட்டன் சேலைகள்: இவை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. மிகக்கடுமையான கோடைக்காலத்தில் அணிவதற்கு ஏற்ற மென்மையான வசதியான சேலைகள் இவை. இந்த சேலையின் மற்றொரு சிறப்பம்சம் நீளமான புட்டா போன்ற டிசைன்களை பல்லுவில் அதிகமாக வருவதாகும். தினப்படி உடுத்துவதற்கு ஏற்றவை.

    பேகம்பூர் சேலைகள்: உடல் முழுவதும் அடர்த்தியான ஒரே வண்ணம், பார்டர் மற்றும் பல்லுவானது மற்றொரு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் ஜியாமெட்ரிகள் டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை காட்டன் சேலைகள் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏற்றவை.

    பத்திக் சேலைகள்: பெங்காலி சேலைகளில் அதில் இடம் பெற்றிருக்கும் டிசைனுக்காகவே பிரபலமானவை இவ்வகை சேலைகள்.

    மட்கா பட்டு சேலைகள்: அலுவலக விருந்துகளுக்கும், பெரிய கவுரவமான விருந்துகளுக்கும் அணிந்து செல்ல ஏற்றவை.

    பாரம்பரிய பட்டு சேலைகள் : பிளெயின் வெள்ளை நிறத்தில் பட்டையான சிவப்பு பார்டர் மற்றும் சிவப்பு கோடுகளால் ஆன பல்லு இவை பெங்காலிகளின் பாரம்பரியச் சேலையாகும்.

    இவைமட்டுமல்லாது லினென் காட்டன் சேலைகள், பட்டில் ப்ரோகேட் வேலைப்பாட்டுடன் வரும் சேலைகள், பெங்கால் பட்டு, பெங்காலி காட்டன் சில்க் சேலைகள், தங்கைல் சேலைகள், புலியா கைநெசவு சேலைகள், கரோட் சேலைகள், கொரியல் சேலை கள், தனியாகாலி காட்டன் சேலைகள் என ஒவ்வொன்றும் தனக்கெனத் தனிச்சிறப்பைக் கொண்டிருப்பதோடு பெங்காலி நெசவாளர்களின், திறமையையும் பறைசாற்றுகின்றன.
    உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக இருந்தால், நீங்கள் சில விஷயங்களை தவறான வழியில் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இக்கட்டுரையில் அந்த விஷயங்கள் என்னவாக இருக்கும் என்பதை பற்றி காணலாம்.
    எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதால் உங்கள் சருமம் எண்ணெய் குறைவாக இருப்பதை எளிதாக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் தேவையை உணரும்போது மட்டுமே அதைக் கழுவவும், அதனுடன் நீங்கள் அதிகமாக முகம் கழுவும்போது, அது உங்கள் சருமத்தை மேலும் சேதப்படுத்தும்.

    உங்கள் முகத்தை ஈரப்பதமாக்காதது உங்கள் எண்ணெய் சருமத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சரைசரைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எண்ணெய் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹைட்ரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். லேசான நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதைத் தடுக்க நன்றாக வேலை செய்கிறது.

    பல மேக்கப் தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது கனமான கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் துளைகளை அதிகமாக அடைத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருளைக் கொண்டு உங்கள் முகம் கழுவும் அல்லது டோனரில் ஒரு சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திறந்த துளைகளுடன் நீங்கள் மிகவும் எண்ணெய் சருமம் இருந்தால், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதால் அடாபலீன் அல்லது அசெலிக் அமிலம் கொண்ட ஒரு நைட் கிரீம் பயன்படுத்தலாம்.

    உங்கள் உடலில் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஹார்மோன்கள் கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பருவமடையும் போது கூட மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மன அழுத்தம் இந்த நிலைகளை அதிகரிக்கும் மற்றும் கார்டிசோலுடன் இணைந்தால், அது சரும உற்பத்தியை ஏற்படுத்தும். இது வியர்வை அதிகரிக்க காரணமாகிறது மற்றும் இரத்த ஓட்டம் தோலை விட்டு வெளியேறி உள் உறுப்புகள் மற்றும் மூளைக்குச் செல்வதால் செயல்பாடு குறைகிறது. இது இறுதியில் அதிக சருமத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்குகிறது.
    பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.
    பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். முடியை வெட்டினாலோ, சேவிங் செய்தாலோ மீண்டும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.

    * எலுமிச்சை பழத்தையும், சர்க்கரையையும் பயன்படுத்தி முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். அகன்ற பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்துவந்ததும் இறக்கி ஆறவிடவும். மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்துவந்தால் வளரும் முடி உதிர தொடங்கிவிடும்.

    * ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து பொடித்துக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கால் மணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவிவிடலாம்.

    * வாழைப்பழத்துடன் ஓட்ஸையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தையும், சிறிதளவு தேனையும் சேர்த்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்றாக பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முடி வளர்வது தடைபடுவதுடன் சருமமும் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

    * உருளைக்கிழங்கும், கடலைமாவும் முகத்தில் முடி வளர்வதை தடுத்து நிறுத்திவிடும் தன்மை கொண்டவை. கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.

    * முட்டையின் வெள்ளைக்கருவில் சோள மாவு, சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவிவிடலாம். வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளர்வது நீங்கும்.
    வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.
    வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.

    நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.

    வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். கண்களில் போட்ட மேக்கப்பை சாதாரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது.

    சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து முடியும் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றி, முடி பிளவுகளை சரி செய்யும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிபிளவை சரி செய்து, வறண்ட நிலையை வாஸ்லின் நீக்கும்.

    கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். மற்ற லோஷன்களை விட வாஸ்லின் பாதங்களை மிருதுவாக்குகிறது.

    உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும்.  கண் இமை ரோமங்கள் நன்றாக இருந்தால் கண்கள் அழகா இருக்கும்.

    சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும்.

    முக சுருக்கங்களை குறைக்க வாஸ்லினை பயன்படுகிறது. வாஸ்லினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் வாஸ்லினை (vaseline) கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.

    வாஸ்லினை கொண்டு மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு கொஞ்சம் வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகும். இதன் பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் எடுப்பாக இருக்கும்.
     
    நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும். வாஸ்லினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.
    சருமத்தின் மற்ற பகுதிகளைவிட முகம் சற்று மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். ஒரு சில வீட்டு உபயோகப் பொருட்களை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
    ஊடரங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாளுகிறார்கள். ‘பேஸ் பேக்’, ‘பேஸ் கிரப்’ என சருமத்திற்கு உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து பயன் படுத்தவும் செய்கிறார்கள். ஒருசில வீட்டு உபயோகப் பொருட்களை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். சருமத்தின் மற்ற பகுதிகளைவிட முகம் சற்று மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதற்கு பொருத்தமான பொருட்களைத்தான் உபயோகப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் எரிச்சல், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

    முகத்திற்கு ‘ஸ்க்ரப்’களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவைதான் முகத்திற்கு பொருத்த மானது. வீட்டிலேயே ‘ஸ்கிரப்’ தயாரிப்பதாக இருந்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பொருட் களை ஒன்றாக கலக்கக்கூடாது. அவை மென்மையான முகத்தை பாழாக்கிவிடும். வீட்டில் தயாரிக்கும் ‘ஸ்கிரப்பில்’ பயன்படுத்தக் கூடாத நான்கு பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    எலுமிச்சை: பெரும்பாலானோர் முக அழகை பராமரிப்பதற்காக தயாரிக்கும் ஸ்கிரப்பில் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள். அது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் எலுமிச்சை பழம் அமிலத்தன்மை அதிகம் கொண்டது. மேலும் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்யை குறைத்து எரிச்சலை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் காயங்களை உண்டாக்கிவிடும். சருமத்தில் நேரடியாக சூரிய ஒளி படும்போது பக்கவிளைவுகளும் ஏற்படலாம். அதனால் எலுமிச்சை சாறை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதனுடன் அதே அளவுக்கு தண்ணீர் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.

    சர்க்கரை: நிறைய பேர் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு சர்க்கரையை பயன்படுத்துவார்கள். சர்க்கரை கட்டிகளின் விளிப்பு பகுதி கூர்மையாக இருக்கும். மேலும் சர்க்கரை துகள்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் முகம் போன்ற மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு தீங்குதான் விளைவிக்கும். மெலானின் அதிகமாக உற்பத்தி யாவதற்கு வழிவகுக்கும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சர்க்கரையுடன் எலுமிச்சையை மட்டும் ஒன்றாக கலந்து உபயோகிக்கக்கூடாது.

    காபி கொட்டை: காபி கொட்டை களை அரைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் நேரடியாக உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் காபி கொட்டையில் இருக் கும் மூலக்கூறுகள், அவற்றின் விளிம்புகள் கடினமானவை. அவற்றை முகத்தில் தடவும்போது வெட்டுக்காயங்கள் ஏற்பட வழி வகுக்கும். சருமத்தில் திட்டுகள் தோன்றக்கூடும். நிறமிழப்பு பிரச்சினையை எதிர் கொள்ளவும் கூடும். காபி பவுடரை பயன்படுத்துவதுதான் நல்லது. டீ இலை களையும் பயன்படுத்தலாம். காபி கொட்டையுடன் ஒப்பிடும் போது அது சருமத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தாது.

    எண்ணெய் வகைகள்: வீட்டிலேயே ‘பேஸ் கிரப்’ செய்வதற்கு பெப்பர் மிண்ட் அல்லது லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இருப்பினும் சிலவகை எண்ணெய்கள் மாறுபட்ட மணம், தன்மையை கொண்டிருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். தடிப்புகள் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. ஆதலால் எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்வது அவசியமானது.
    கைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால் மென்மை தன்மையை இழந்துவிடும். கைகளை பராமரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
    கொரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, சீரான இடைவெளியில் கைகளை கழுவுவது அவசியம். அப்படி கைகளை கழுவுவது நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கு உதவும். அதேவேளையில் தொடர்ந்து கைகளை கழுவும்போது உள்ளங்கை பகுதி உலர்ந்து போய்விடக்கூடும். கைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால் மென்மை தன்மையை இழந்துவிடும். கைகளை பராமரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

    கைகளை சோப்பு கொண்டு தேய்த்து 20 வினாடிகள் கழுவுவது, வைரஸ் பரவாமல் தடுக்க உதவும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. நிறைய பேர் வெது வெதுப்பான சுடுநீர் கொண்டு கைகளை கழுவினால் கிருமிகள் இறந்துவிடும் என்று கருதுகிறார்கள். அது சரியல்ல.. வெதுவெதுப்பான நீர், கைகளின் உள்ள ஈரப்பதத்தை இழக்க வைத்துவிடும். சாதாரண நீரைக் கொண்டு கைகளை கழுவுவதுதான் நல்லது.

    கைகளை கழுவுவதற்கு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தரம் கொண்ட சோப்பை பயன்படுத்துங்கள். இத்தகைய சோப்புகள் கைகளில் எண்ணெய் அல்லது கிரீம் போன்ற நுரைகளை வெளிப்படுத்தி கைகளுக்கு ஈரப்பதத்தையும், மென்மையையும் தரும். ஆனால் சாதாரண சோப்புகள் கைகளை உலரவைத்துவிடும். பொதுவாக கிளிசரின், லானோலின் போன்றவை ஈரப்பதமூட்டும் தன்மை கொண்ட சோப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மாஸ்சரைஸிங் சோப் இல்லையென்றால் திரவ வகை சோப்புகளை பயன்படுத்தலாம்.

    கைகளை கழுவிய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். கழுவிய கைகளை துடைத்ததும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாவிட்டால், உள்ளங்கை பகுதி ஈரப்பதத்தை இழக்க தொடங்கி வறண்டு போய் விடும். கைகளில் ஓரிரு துளிகள் ஊற்றி தேய்த்தாலே உடனே உலர்ந்து ஈரப்பதத்தை தக்கவைக்கும் திரவ நிலை மாஸ்சரைசர்கள் இருக்கின்றன. அவை கைகளுக்கு நல்ல ஈரப் பதத்தை அளிக்கும்.

    கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறைக்கு சென்றுவந்த பின்பு, மண், தூசுகள் படிந்து கைகள் அழுக்கான பின்பு போன்ற சூழ் நிலைகளில் சானிடைசரை பயன்படுத்துவது சரியாக இருக்காது. அப்போது சோப்பை பயன்படுத்துவதுதான் நல்லது. கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகுதான் சானிடைசரை பயன்படுத்தலாம்.

    அடிக்கடி கைகளை கழுவுவதை தவிர்க்க நினைப்பவர்கள் கையுறைகளை பயன்படுத்தலாம். ஆனால் கையுறைகளை அணிவதற்கு முன்பு கைகளை நீரில் ஐந்து நிமிடம் முக்கிவைக்க வேண்டும். பின்பு துணியையோ, டிஸ்யூ பேப்பரையோ பயன்படுத்தி நன்றாக துடைத்து கைகளை உலரவிட வேண்டும். பின்பு கைகளில் மாஸ்சரைசரை தடவிவிட்டு அதன்பிறகு கையுறைகளை அணிவதுதான் சரியான வழிமுறையாகும். ஒரே கையுறையை இரண்டு மணி நேஇரத்திற்கு மேல் அணிவது நல்லதல்ல.

    கைகளை கழுவுவதோடு சரியான முறையில் கைகளை உலர்த்துவதும் முக்கியம். சிலர் கைகளை உலர வைப்பதற்கு ‘ஹேண்ட் டிரையரை’ பயன்படுத்துவார்கள். அதனால் கைகள் விரைவில் உலர்ந்து போய் விடும். கைகள் உலராமல் இருப்பதற்கு அதற்கான கிரீம்களை தடவ வேண்டும். அதன் பிறகு டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தி கைகளை துடைப்பது நல்லது.
    மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.
    மழைக்காலம் மனதுக்கு இனிமையாக அமைந்தாலும் சருமத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் ஈரப்பதமான காலநிலை சரும செல்களுக்கு ஒத்துக்கொள்ளாது. மற்ற பருவக்காலங்களை விட மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.

    நிறைய பேர் மழை காலத்தில் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள் காரணமாக முகப்பருக்கள், தோல் அழற்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

    * பெண்கள் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. இருண்ட மேகங்களுக்கு பின்னால் சூரியன் மறைந்திருக்கும் என்றாலும், புற ஊதாக்கதிர்வீச்சுகளின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். அக்கதிர்வீச்சுகள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் கோடை காலம் போல் அதன் வீரியம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீனை அதிகம் பயன்படுத்தக்கூடாது.

    * மழைக்காலத்தில் குடிநீர் பருகுவதை குறைத்தால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த காலநிலை நிலவும் என்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீர் பருகாமல் இருக்கக்கூடாது. ஏனெனில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது. அது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

    * மழை நீரில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் அதில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடக்கூடும். அப்படியிருக்கையில் மேக்கப் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மேக்கப் தேவையில்லை. ஈரப்பதத்தன்மை கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி சரும துளைகளை அடைக்காமல் பாதுகாக்கலாம்.

    * மழைக்காலத்தில் நிறைய பேர் முகம் கழுவு வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் முகம் கழுவாவிட்டால் சருமத்தில் அழுக்குகள் தேங்கிவிடும். அதனால் சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மழைக்காலத்தில் மூலிகை தன்மை கொண்ட பேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்துவது சிறப்பானது.

    * கோடை காலத்தை போலவே மழைக்காலத்திலும் சரும செல்கள் உதிரத்தொடங்கும். அழுக்குகள், இறந்த செல் அடுக்குகளை அப்புறப்படுத்த இது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள் அடைப்பட்டுவிடும். சரும நோய்த்தொற்றுகளும் உண்டாகும்.
    பெண்கள்,ஆண்கள் தினமும் எதிர்கொள்ளும் தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு சிறப்பான தீர்வு தரும் சிம்பிளான முள்ளங்கி பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தலைமுடி உதிர்வுப் பிரச்சினை இன்று நம்மில் 10 இல் 8 பேர் சந்திக்கும் பிரச்சினையாகும். இத்தகைய தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு சிறப்பான தீர்வு தரும் சிம்பிளான முள்ளங்கி பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையானவை:

    முள்ளங்கி- 1

    தயிர்- கால் கப்

    எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முள்ளங்கியினை நன்கு கழுவி தோல் நீக்கிக் கொள்ளவும்.

    அடுத்து அதனை சிறு துண்டுகளாக அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.

    இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்துப் பயன்படுத்தவும்.

    இந்த முள்ளங்கி பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் நன்கு ஊறவிட்டு காயவிட்டு முடியினை அலசிவிடவும்.
    ×