என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி. இது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது.
    ஆடை… நாகரிக காலத்தில் வாழும் எல்லோருக்கும் இது அவசியம். ஆனால், ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி. இது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது. சிலருக்கு என்ன டிரஸ் போட்டாலும் உடல் சற்று பருமனாகவே தெரியும். காரணம் அவர்களாகவே மனதுக்குப் பிடித்த ஆடையை உடுத்துவதால் இப்படித் தெரியும்.

    சிக்கென…

    பிளஸ் சைஸ் ஆட்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணிய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்காகவே சில பேஷன் டிஷைனர்கள் இருக்கிறார்கள். அதன்படி செய்தால், மனதுக்குப் பிடித்தமான உடையை உடுத்தலாம், உடலும் சிக்கென்று இருக்கும். இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கும் பொருந்தும்.

    ஆடை விஷயத்தில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கலர் தான். நம்முடைய நிறம் மற்றும் உடல்வாகுக்கு ஏற்ப ஆடைகளின் நிறத்தை தேர்ந்தெடுத்தாலே போதும். நம்முடைய முழு அழகும் அதற்குள் அடங்கிவிடும். அழகுக்கு அழகு சேர்க்கும். பார்ப்பவர் வாயடைத்துப்போகுமளவுக்கு அவர்களது தோற்றத்தில் அத்தனை மாற்றங்கள் தெரியும். அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகள் எப்போதும் உடலை சற்று மெல்லியதாகவே காட்டும். அதனால் எப்போதும் டார்க் கலர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    எடுப்பான தோற்றம்:

    அதேபோல் பெண்களுக்கு மார்பகம் முதல் இடுப்பு வரை கச்சிதமான உடலோடு சேர்ந்திருக்குமாறு ஆடையின் ஃபேப்ரிக் இருப்பது அவசியம். டார்க் கலர் ஆடைகள் பெரும்பாலும் இடுப்பு மற்றும் மார்புப் பகுதியை சிக்கெனக் காட்டும். அடர்ந்த பெரிய பெரிய டிசைன்கள் கொண்ட அவுட்லுக் டிரஸ்களை அணியலாம். பெல்ட்டுடன் கூடிய கோட் மற்றும் ஆடைகளை அணியலாம்.

    மார்பகங்களை எடுப்பாகக் காட்டும்படியான வீ- நெக் டாப்ஸ்களை அணிந்தால் உடல் சிக்கெனக் காட்டும். வயதானபிறகும்கூட சில பெண்கள் எடுப்பான தோற்றத்தில் இருப்பதற்கு இந்த ஆடை தேர்வுதான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டிஷைனர்:

    ஷர்ட் டாப் அணிந்து ஷர்க் அல்லது ஓப்பன் ஜாக்கெட் அணிந்தால் பார்ப்பதற்கு லுக்காகவும் மார்டனாகவும் இருக்கும். உடல்பருமனாக இருந்தாலும் வெளியே தெரியாது. இப்படி பெண்கள் சிக்கென இருக்கவேண்டும் என்பதற்காக ஃபேஷன் டிசைன் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப நிபுணர்களையோ அல்லது அதுதொடர்பாக அனுபவம் உள்ளவர்களையோ அணுகி உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கலாம்.
    பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்.
    தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முட்டை நாற்றம் போக சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாள் வீதம் செய்து வந்தால் பொடுகுப் பிரச்சினை தீரும்.

    வெந்தயம் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்து நன்றாக அரைத்து தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின்மீதும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து முடியை நீரில் அலச வேண்டும். தலைக்குக் குளிப்பது சிறப்பு. இதை வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பசலைக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதை அவ்வப்போது செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். வசம்பை தட்டிப்போட்டு தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அடிக்கடி தலையில் தடவி வந்தாலும் பொடுகுத்தொல்லை சரியாகும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும். குளிக்கும்போது தேவைப்பட்டால் சீயக்காய் பயன்படுத்தலாம்.

    எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதன் சாற்றினால் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்து 15-லிருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசலாம். இது தலைமுடியின் பசைத்தன்மையைக் குறைத்து பொடுகை ஒழித்து கூந்தலை ஜொலிஜொலிக்க உதவும்.

    கைப்பிடி வேப்ப இலையை எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்ய வேண்டும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சாதாரண நீரிலோ தலையைக் கழுவ வேண்டும்.

    துளசி மற்றும் காய்ந்த நெல்லிக்காய்ப் பொடிகளை நீரில் கலந்து பசை போலச் செய்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற எளிய வழிமுறைகளால் பொடுகுத் தொல்லையில் இருந்து மீளலாம்.
    பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.
    பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.

    பார்ட்டி உடைகளில் கவுன்களும், லாங் ஃப்ராக்குகளும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

    * ஒன் ஷோல்டர் சீக்வின் எம்பிராய்டர்டு கவுன்கள்:

    இந்த கவுன்களில் இருக்கும் ஒரு கைக்கும், கவுனின் கீழ்புறம் சுற்றிலும் ஃபிரில்கள் இணைக்ககப்பட்டு, இடுப்புப் பகுதியில் லேசானது இணைக்கப்பட்டு, ஜிப்பானது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு, பூக்கள் சீக்வின் எம்பிராய்டரி வேலைப்பாடு உடல் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கவுன்கள் மென்மையான நிறங்களில் பார்ப்பதற்கு அம்சமாகவும், அழகாகவும் உள்ளன.

    ஆர்கன்ஸா, காட்டன் மற்றும் ஷேட்டின் துணிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கவுன்கள் ஒரு வயது குழந்தை முதல் பதினோரு வயது குழந்தைகளுக்கேற்ற பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற ஆடைகளாக உள்ளன.

    விஸ்கோஸ் எம்பிராய்டரி நெட் கவுன்கள் இந்த கவுன்கள் பெரும்பாலும் நெட்டட் முழுக்கைகள் அல்லது கைகளே இல்லாமலும் வடிவமைக்கப்படுகின்றன. மார்பிலிருந்து கழுத்துப்பகுதியானது நெட்டட் துணியில் கழுத்தைச்சுற்றிலும் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் தைக்கப்பட்டுள்ளன. உடலின் மேற்பகுதியில் கவுனானது உடலைப் பிட்டித்தவாறு சிக்கென்றும் இடுப்பிலிந்து குதிங்கால் வரை ஃப்ளேர்களுடனும், ஷேட்டின் துணியின் மேல் நெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றொரு லேயரானது இணைக்கப்பட்டு மிகவும் பிரமாதமாக காட்சியளிக்கின்றது.

    இவ்வகைக் கவுன்களிலும் இரண்டு வயது முதல் பதினான்கு வயதுவரை பெண் குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பல்வேறு அளவுகள் உள்ளன. இவை வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அணியஏற்றவையாக இருக்கும்.

    *ஸ்லீவ்லெஸ் கவுன்களுடன் வரும் போன்ச்சோ:-

    ஷேடின் அல்லது சில்க் துணியில் கைகளில்லாமல் எளிமையான டிசைன்களில் தைக்கப்படும் கவுன்களின் மேலே கழுத்திலிருந்து மார்பு வரை மறைக்கும் மேலாடையே போன்ச்சோ என்று அழைக் கப்படுகிறது. இவ்வகை போன்ச்சோக்கள் பலவித வண்ணங்களில் தனியாகவும் விற்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வண்ணங்களில் இவற்றை வாங்கி வைத்துக் கொண்டோமானால் அவற்றை வெவ்வேறு கவுன்களின் மேல் மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம்.

    * ஹால்ட்டர் கழுத்துடன் வரும் கவுன் கள்:-

    இவை பார்ட்டிகளுக்கும், வரவேற்பு விழாக்களுக்கும் அணிய ஏற்றவையாக இருக்கும். இவ்வகை ஆடையில் மார்பிலிருந்து கணுக்கால் வரை உட்புறம் லைனிங் கொடுத்து மேற்புறம் உள்ள துணியானது வயிற்றுப்பகுதியிலிருந்து ‘A’ வடிவில் பிரிந்து பின்புறம் தரையில் புரள்வது போல் மிகவும் கச்சிதமாக வடிவமைக்ப்பட்டிருக்கும். இடுப்பை இருக்கி பிடிக்கும் விதமாக அழகிய இடுப்பு பட்டைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். மேல் கழுத்திலிருந்து கழுத்தைச்சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகள் துணியில் செய்யப்பட்டிருக்கும். முன்புற கழுத்தில் இருந்து மெல்லிய துணியானது இணைக்கப்பட்டு அது மார்பை அந்தக் கவுனின் மேற்புறம் மறைப்பது போல் வடிவமைக்கபட்டிருக்கும்.

    ஏழு, எட்டு வயதிலிருந்து பெரிய வயது பெண் குழந்தைகள் இந்த கவுனை அணியும் பொழுது அது அவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாகவே உள்ளது.

    * ஷாப்ஃப் குர்த்தி மற்றும் டோத்தி சல்வார்:-

    இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன இணைவு உடை என்று சொல்லலாம். இது நவநாகரீகமாகவும் அதே சமயம் பாரம்பரியமான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளது. மேலாடையானது ஸ்லீவ்ரெஸ் ஷார்ட் குர்த்தி அதன் கீழ்புறம் ஃபிரில்கள் வைத்து பார்க்க அழகாக உள்ளது. கீழாடையானது பஞ்சகச்சம் போல் அதிக ஃபிளிட்ஸ்களுடன் கூடிய பேன்ட்டாகும். இநத ஆடைகள் அனைத்து விதமான சமயங்களிலும் அணிய ஏற்றவையாக உள்ளது.

    * டங்கரீஸ்: இது சாதாரணமான அதே சமயத்தில் நேர்த்தியான உடையாக உள்ளது. இவை சாதாரண துணிகளிலும் பெரும்பாலும் டெனிம் துணிகளிலும் கிடைக்கின்றன. இவை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இருபாலரும் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டங்கரீ உடையை டி-ஷர்ட் மற்றும் ஷர்ட்டுடன் அணிந்துகொள்ளலாம். இவை முழுக்கால் மற்றும் அரைக்கால், முக்கால் கால்வரை இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    * ஃப்ளவர் டிரஸ்:- இவை ட்யூலி ரகத்துணியால் வடிவமைக்கப்படும் ஆடையாகும். இந்த ஃப்ராக்கில் கைகளில்லாமல் வெறும் தோள்பட்டையை மறைப்பது போல் லேஸ் துணிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன இடுப்பை சுற்றிலும் அழகிய கற்கள் பதித்தோ அல்லது தோள்பட்டையில் இருக்கும் மலர்களைப் போன்றே இடுப்பைச்சுற்றிலும் பட்டைகள் அமைக்கப் பட்டு அணிந்துகொள்ளும் சிறு பிள்ளைகளுக்குவசதியாகவும் நேர்த்தியான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளன.
    நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
    உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை. இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

    உண்மையில் தலை முடி என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ள ஒரு விஷயம். உடல் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்தாலே முடிகொட்டும் பிரச்னையை எளிதாக எதிர்கொள்ளலாம். முடிகொட்டும் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

    முடிகொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. புரதச் சத்து குறைபாடு, இரும்புச் சத்து பற்றாக்குறை, விட்டமின் குறைபாடு, ஹார்மோன் சிக்கல் என நிறைய காரணங்கள் இருக்கின்றன. நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

    புரதச் சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். அதில் உள்ள கெரட்டின் என்பது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. எனவே புரதச் சத்தை அதிகரிக்க வீடுகளில் சாம்பார், பருப்பு குழம்பு வைக்கும்போது பயன்படுத்தும் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவர் சாப்பிடும்போது அவர்களுக்குத் தேவையான பருப்பு கிடைக்கும் விதத்தில் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். பருப்பு சுண்டல் செய்து சாப்பிடுவது பலன் நல்ல அளிக்கும்.

    பாலில் புரதச் சத்து உள்ளது. அதனால், ஒருநாளைக்கு 400 மிலி பால் உங்கள் உடலில் சேர்வதுபோல பார்த்துக்கொள்ளவும். ஒரு கப் தயிர் சாப்பிடவும் செய்யலாம். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களிலும் புரதச் சத்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உணவு வகைகள் செய்து சாப்பிடலாம்.

    அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், சிக்கன் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். முட்டை எனும்போது வாரத்திற்கு அதிகமாக மூன்று நாட்கள்தான் செய்வார்கள். சிக்கன் அல்லது மீன் என்பது வாரத்திற்கு ஒருமுறைதான் வழக்கமாக இருக்கும். அதனால், பருப்பு, முட்டை, மீன், சிக்கன், சிறுதானியம் என்பது சுழற்சியாக இருப்பதுபோல ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுக்கொள்ளலாம்.

    60 கிலோ மனிதருக்கு ஒருநாளைக்கு 60 கிராம் புரதச் சத்து தேவை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளவும். முடிகொட்ட இன்னொரு காரணம் இரும்புச் சத்துப்பற்றாக்குறை.

    கீரைகளில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. குறிப்பாக, முருங்கை கீரையில். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரையை உங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளவும். முருங்கை கீரை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.

    அதேபோல, பேரிட்சை பழம், மாதுளம் பழம், முழு தானியங்களிலும் இரும்புச் சத்து இருக்கிறது. உலர் பழங்கள், பட்டானி ஆகியவற்றைச் சாப்பிடுவதாலும் இரும்புச் சத்து கூடும். அதனால், அவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது.

    முடி வளர்வது எப்படி எப்போது நடைபெறுமோ முடி கொட்டுவது அப்படி நடக்கும். எனவே, அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பித்தால் இதனால் ஏற்படும் முடி கொட்டுதலை தவிர்க்க முடியும்’ என்கிறார்.

    என்ன சாப்பிடுகிறோம் என்பது நாம் பழக்கிக்கொள்வதுதான். அதனால் உடலுக்கு ஆரோக்கியமானவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை நம் பழக்கிக்கொள்வோம். உடல் ஆரோக்கியத்துடன் தலை முடி கொட்டும் சிக்கலையும் சரி செய்துகொள்ள முடியும்.
    நெயில் பாலிஷ் வைத்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால்தான் காய்ந்து நகங்களில் ஒட்டிக்கொள்ளும். நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
    பெண்கள் தங்கள் நகங்களையும் அழகுப்படுத்த தனி கவனம் செலுத்தி வருகின்றனர். நகத்தை அழகுப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெயில் பாலிஷ். தற்போது பல நிறங்களில் நெயில் பாலிஷ் கிடைப்பதனால் பெண்கள் தங்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப வைத்து வருகின்றனர்.

    இந்த நெயில் பாலிஷ் வைத்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால்தான் காய்ந்து நகங்களில் ஒட்டிக்கொள்ளும். சிலருக்கு அவ்வளவு நேரம் அமர்ந்து இருக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்காக நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    * நெயில் பாலிஷ் வைத்ததும் அதன் மேல் தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது எண்ணெயை தடவி வைத்து பாருங்கள். நெயில் பாலிஷ் உடனே எண்ணெயை உறிஞ்சி காய்ந்துவிடும்.

    * நெயில் பாலிஷ் வைத்ததும் குளுர்ச்சியான நீரில் விரல்களை முக்கி எடுத்தால் உடனே காய்ந்துவிடும்.

    * சிலருக்கு முடி காய ஹேர் ஸ்பிரே பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நெயில் பாலிஷ் வைத்துவிட்டு விரல்களில் ஸ்பிரே செய்யுங்கள். அந்த நொடியிலே நெயில் பாலிஷ் காய்ந்துவிடும்.

    * டேபில் ஃபேன் அல்லது ஹேர் டிரையர் இருந்தால் நெயில் பாலிஷ் வைத்து விட்டு காற்று படும்படி விரல்களை வைக்க விரைவில் காய்ந்துவிடும்.
    கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி இருக்கிறது. கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றினால் சருமத்தில் சுருக்கம் வருவதை தடுக்கலாம்.
    கடுமையான சரும சுருக்கங்கள் தென்படும் இடங்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதி இருக்கிறது. மேலும் கண்ணைச் சுற்றி இருக்கும் இடங்கள், உதடு, கன்னங்களில் அதிக சுருக்கங்கள் தோன்றக்கூடும். வயது அதிகரிக்கும் போது சருமம் மிகவும் பலவீனமாகி, நெகிழும் தன்மையை இழப்பதால் சுருக்கங்கள் உண்டாகிறது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் சரும பாதிப்பை உண்டாக்குகின்றன.

    குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் வயது முதிர்ச்சியைத் தூண்டி சருமத்தில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும் புகை பிடிப்பதால் சருமம் தினமும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகிறது. இதனால் சருமம் வறண்டு, சுருக்கங்கள் எளிதில் உண்டாகும். முகத்தைக் கழுவும் போது கழுத்தையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. அப்போது கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்கு, நச்சு போன்றவை வெளியேறும்.

    கழுத்து பகுதியை கழுவுவதற்கு சோப் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்தின் பி.எச். சமநிலையை மாற்றிவிடும். மூலிகை நீர் அல்லது மூலிகை சோப் பயன்படுத்தலாம். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது சூரிய கதிர்வீச்சில் இருந்து கழுத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    அதிக அளவு தண்ணீர் பருகுவது சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். சருமம் நீர்ச்சத்துடன் இருந்தால் சுருக்கங்கள் குறைவாக காணப்படும். முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ் மாஸ்கை வாரத்திற்கு ஒருமுறை கழுத்தில் தடவி நன்றாக சுத்தம் செய்யலாம். அதன் மூலம் கழுத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் வெளியேறும்.
    உதட்டில் வறட்சி எதற்கு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், இனிமேல் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும்.
    உதடுகளில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதனை அப்போதே சரிசெய்ய முயல வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த பிரச்சனை எதற்கு வருகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பலருக்கு உதடுகளில் வறட்சிகள் தான் ஏற்படும். எனவே அத்தகைய வறட்சியானது எதற்கு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், இனிமேல் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும்.

    இங்கு உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கான சில காரணங்களையும், அதற்கான நிவாரணிகளையும் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    காலநிலை மாற்றங்களால் உதடுகளில் வறட்சி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது, உதடுகளின் மீதுள்ள ஈரப்பசையானது வெளியேற்றப்பட்டு, வறட்சியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், காலநிலை மாறும் போது, அதிகப்படியாக வேலையின் காரணமாக வெளியே சுற்ற வேண்டியிருப்பதால், குறிப்பாக குளிர்காலம், கோடைகாலம் போன்றவற்றின் போது மேற்கொள்ளும் போது, உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புக்கள் ஏற்படுகிறது. எனவே இக்காலங்களில் உதடுகளை தவறாமல் முறையாக மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும்.

    உதடு வறட்சியால் வெடிப்புக்கள் அதிகமானால், அப்போது லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதடுகளுக்கு லிப் பாம்களை அனைத்து பருவ காலத்திலும் மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அப்போது தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். இப்படி நீரை அதிகம் பருகி வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்

    உடலில் அசிட்டிக் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். அப்போது உதடுகளின் வறட்சியைப் போக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு, அசிட்டிக்கின் அளவை குறைக்க வேண்டும். அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அசிட்டிக்கின் அளவு குறைந்து அல்கலைன் அளவானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

    எப்போதும் உதடுகளில் எச்சல் வைத்துக் கொண்டே இருந்தால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயானது குறைந்து, வறட்சி அடைய ஆரம்பிக்கும். எனவே உதடுகளில் எப்போதும் எச்சில் வைப்பதை நிறுத்துங்கள். உதடுகளில் வறட்சி அடைவது குறையும்.
    அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
    ஸ்பூன் மசாஜ் செய்வதற்கு இரண்டு ஸ்பூன்கள், ஒரு டம்ளர் தண்ணீர், சிறிதளவு ஐஸ் கட்டி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் போன்றவை போதுமானது. முதலில் டம்ளரில் இருக்கும் நீரில் ஐஸ்கட்டியையும், ஸ்பூன்களையும் போட்டு நன்றாக குளிர்வித்துக்கொள்ள வேண்டும். முகத்தை கழுவிவிட்டு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷன் அல்லது கிரீம் ஏதாவது ஒன்றை தடவிக்கொள்ள வேண்டும். டம்ளரில் இருக்கும் நீரில் குளிர்ந்திருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து கண்களின் அடிப்பகுதியில் இமையையொட்டி லேசாக அழுத்தி தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூனில் இருக்கும் குளிர்ச்சி நீங்கும் வரை கண் இமைகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

    பின்னர் டம்ளரில் குளிர்ந்திருக்கும் மற்றொரு ஸ்பூனை எடுத்து கண்களின் மேல் இமைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து எண்ணெய்யை சூடாக்கி அதில் ஸ்பூனை வைக்க வேண்டும். கன்னத்தில் வைக்கும் பதத்திற்கு ஸ்பூன் சூடானதும் அதை கண் இமைகள் மேல் வைத்து அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இரு கண்களின் இமைகளிலும் குறைந்தது 10 முறையாவது இவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும். அதுபோல் மிதமான சூட்டில் இருக்கும் ஸ்பூனை கன்னம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைப்பதற்கும் ஸ்பூன் மசாஜ் உதவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெய்யில் ஸ்பூனை முக்கி கன்னத்தில் வட்ட வடிவத்தில் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்துவந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்க கோடுகள் அகலும்.

    கண்கள் வீங்கிப்போய் இருந்தாலும் இந்த மசாஜை செய்யலாம். குளிர்ந்த நீரில் ஸ்பூனை முக்கி மூடிய கண்கள் மீது ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பது கண்களுக்கு நல்லது.

    அப்போது கண்களுக்குள் இருக்கும் வெப்பம் ஊடுருவி அடிப்பகுதியில் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். ஸ்பூன் மசாஜ் செய்யும்போது சூடான எண்ணெய்யைகொண்டு முகத்தில் தடவிவிடக்கூடாது. 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்வதும் நல்ல தல்ல.

    ஒரு கண்ணுக்கு மசாஜ் செய்துவிட்டு அடுத்த கண்ணுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மசாஜை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    வயதாகும்போது சருமத்தின் மிருதுத்தன்மை மாறத்தொடங்கும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலவீனமடையும். அதனால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணமாகும். முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முறையாக முகத்தில் மசாஜ் செய்வது அவசியம். வீட்டின் சமையலறையில் உபயோகிக்கும் ஸ்பூனை கொண்டே எளிமையாக மசாஜ் செய்துவிடலாம். இது சரும அழகையும், இளமையையும் தக்கவைக்க உதவும்.
    பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைப்பர்கள் வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு உங்கள் பாதங்களை பளபளப்பாக்கலாம்.
    நாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு அதற்கு எல்லாம் நேரமும் கிடைப்பதில்லை. பெடிக்யூர், மெனிக்யூர் போன்று நிறைய காசுகளை செலவு பண்ண வேண்டியிருக்கும். இப்படி அழகு நிலையம் சென்று தான் பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    வீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது, மசாஜ், இயற்கை பொருட்களைக் கொண்டு பெடிக்யூர் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    இது உங்கள் பாதங்களை புதுப்பித்து பாத வெடிப்பை போக்குகிறது. இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்.

    பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய பிரச்சனை இந்த பாத வெடிப்பு. இது பாத வெடிப்பை கெடுப்பதோடு தீராத வலியையும் தருகிறது.

    எனவே இதை எளிதாக சரி செய்ய இந்த இரண்டு பொருட்கள் கையில் இருந்தால் போதும். கற்றாழை ஜெல் மற்றும் லெமன் இரண்டும் பாத வெடிப்பை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    கற்றாழை ஜெல் மற்றும் லெமன்

    கலவை தேவையான பொருட்கள்

    2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
    1/2 லெமன்
    1 டீ ஸ்பூன் டீ ட்ரி ஆயில்
    வெதுவெதுப்பான நீர்
    1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு
    1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

    பயன்படுத்தும் முறை

    ஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இப்பொழுது உப்பு உங்கள் பாத வெடிப்பை சரியாக்க ஆரம்பித்து விடும். பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும். குதிகால்களும் மென்மையாகும்

    சில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள்.

    மற்றொரு பக்கெட்டை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவு இருந்தால் போதும். அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், லெமன் சேர்த்து கலக்குங்கள்.

    டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும் இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

    பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து கொள்ளுங்கள் இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

    இந்த கற்றாழை மற்றும் லெமன் நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை தருகிறது. அப்புறம் என்ன உங்கள் பாதங்களும் பேசும்.

    உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
    உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

    * தேன், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முக அழகாக மாசுமறுவற்று இருக்கும்.

    * 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.

    * உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.

    * சோத்துக்கத்தாழை சாறு ஒரு டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு முகத்தை அலம்பினால் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.

    * 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து கலக்கி, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகம் மாசு மருவற்று இருக்கும்.

    * 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 ஸ்பூன் பாலின கலந்து முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முதத்திலுள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.
    செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் நன்மைகள், தீமைகள் என இரண்டும் கலந்துள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பேஷன் உலகில் நாளுக்கு நாள் பல ஸ்டைல்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை அனைத்து நன்மை தருவதில்லை.

    செயற்கை கண் இமைகளை பொருத்திக் கொள்பவர்களுக்கு கண் பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பல பேருக்கு நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக வளரும் இமை மயிர் பலமாக சேதமடைந்து உதிர்ந்து விடும். சிலருக்கு நோய் தொற்று ஏற்படாவிட்டாலும் தொடர்ச்சியாக செயற்கை கண்ணிமைகள் பயன்படுத்துவதால் இயற்கையாக வளரும் கண் இமைகள் கொட்டி, அதன்மேல் செயற்கை இமைகள் கூட பொருத்த முடியாமல் போகலாம்.

    செயற்கை கண் இமைகள் நமக்கு நாமே பொருத்திக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக சிறப்பு அம்சம் கொண்ட பார்லர்கள் உள்ளன. எல்லா பார்லர்களிலும் இதற்கான சிறப்பு வசதிகள் கிடைப்பதில்லை இல்லை. வெகு சில பார்லர்களில், அதிலும் வெகு சிலபேர் மட்டுமே செயற்கை கண் இமைகள் பொருத்துவதில் கற்றுத் தேர்த்தவர்களாக உள்ளனர் . அவர்களிடம் நேரம் கிடைப்பதும் அரிதினும் அரிதாகவே இருக்கும்.

    செயற்கை கண் இமைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கென தனியாக பிரஷ் வைத்து கோதி விட வேண்டும். தண்ணீரில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை செய்யாவிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதனால் உண்டாகும் அழகும் கெட்டுவிடும்.

    மஸ்காரா பயன்படுத்துவதே போதுமான அழகை கண்களுக்கு அளிக்கிறது. கண் இமைகள் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் அழகு, வெறும் மஸ்காராவிலேயே கிடைக்கிறது. இன்றைய தேதியில் மஸ்காராவின் ரகங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன.

    கண் கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் செயற்கை கண் இமைகள் பொருத்தக்கூடாது. அது பொருத்தமானதாக இருக்காது. ஆரோக்கியமாகவும் இருக்காது. கண் இமைகள் சற்று பெரிதாக இருப்பதால் கண்ணாடியில் பட்டு சுருண்டுவிடுவதும், உருத்தலை ஏற்படுத்துவதும் தொந்தரவாக இருக்கும். செயற்கை கண் இமைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.

    கண் இமைகள் நீளமாக இருப்பதால் மற்ற மேக்கம் போடுவதோ, கண் மை வைத்துக்கொள்வதோ கூட முடியாமல் போகும். மேக்கப் போடுவது, பவுண்டேசன் கோட்டிங் கொடுப்பது என எந்த வித அழகுபடுத்தும் வேலைகளையும் நாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடியாது. செயற்கை கண் இமைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நேரிடும்.
    முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் எப்படி பலன் அளிக்கும் என்று பார்க்கலாம்.
    முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் இதமளிக்கும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும்.

    * எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழ், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் ஆக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவலாம்.

    * வறண்ட சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் பால் பவுடருடன், 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை சேர்த்து குழைத்து சருமத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஏதாவதொரு மாஸ்சரைசரை லேசாக தடவிக்கொள்ளலாம்.

    * 1 டீஸ்பூன் ஓட்ஸ் கூழுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

    * முலாம் பழ கூழையும், ரோஸ் வாட்டரையும் சம அளவு கலந்து ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கூந்தலை அலசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கூந்தல் பளிச்சென்று ஜொலிக்கும்.

    * முலாம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நச்சுகள் உள்ளிட்ட நோய் கிருமிகளை அழித்து வெளியேற்றவும் செய்யும்.

    * கண்களின் ஆரோக்கியம் காக்கவும் முலாம் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட் பீட்டா கரோட்டின், ஜியாசாந்தைன் போன்றவை கண் பார்வை திறனை மேம்படுத்த உதவும்.
    ×