search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Dress"

    • குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும்.
    • ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.

    குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, சவுகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

    பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். எனவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது. முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும். முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். கழுத்துப் பகுதிக்கு இழுத்து கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப்பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.

    குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்குபடாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும். கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.

    ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

    ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.

    வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.

    உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.

    மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்குப் போர்வைகளைப் போர்த்தி கதகதப்பாக தூங்க வைத்தால் அவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். மென்மையான போர்வைகள், மென்மையான க்வில்ட்டுகள் மற்றும் அவற்றில் பல்வேறு விதமான டிசைன்கள் மற்றும் மாடல்களில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.

    * குழந்தையின் தலை, காது மற்றும் உடம்பையும் சேர்த்து இறுக்கமாகப் போர்த்தி வைக்க போர்வையிலேயே தலையை மூடும் முக்காடு (ஹூடட்) பகுதியானது இணைக்கப்பட்டது போல் வருவது பார்க்க அழகாக இருக்கின்றது. அந்த முக்காட்டில் கரடித்தலை, பான்டா கரடித்தலை, ஆட்டுக்குட்டித்தலை என வருவது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பொழுது அவை குளிரிலிருந்து பாதுகாப்பதோடு பார்க்கவும் அவ்வளவு அழகாக இருக்கின்றது.

    * நூறு சதவீதம் பருத்தியால் செய்யப்பட்ட குறைந்த எடையுடைய மென்மையான போர்வைகளில் இரண்டு புறமும் வெவ்வேறு டிசைன்கள் கொடுக்கப்பட்டு இருபுறமும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக் கொள்வது போல் வந்திருக்கும் போர்வைகள் அட்டகாசம் என்று சொல்லலாம். குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் டைனோசர், போக்கிமான், டோரா புஜ்ஜி, பவர் ரேன்ஜர்ஸ் மற்றும் விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்டு வரும் போர்வைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் மிகவும் பிடிக்கும்.

    * மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    ×