என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களே உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும்.
    முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்சனைகள் மறைந்து இருக்கக் கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

    வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்களாக இருக்க வேண்டும். இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேங்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து இதைக் கொண்டும் ஸ்கரப் செய்யலாம்.

    பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல. தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொக்கோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாமை தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம். முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் உங்களது உதட்டை டிரையாக்கும். எனவே இதை முடிந்தவரைத் தவிர்க்கலாம். அல்லது லிப் பாம் பயன்படுத்திய பின் லிக்விட் லிப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.

    நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

    ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

    இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

    வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.
    மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன.
    மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக மூங்கில் ஆடைகள் தயாரிப்பும், அதனை அணிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன. அதனை அணிவதன் மூலம் ஏராளமான உடல் நல நன்மைகளையும் பெறலாம். அதனால் அந்த ஆடைக்கு மவுசு கூடிக்கொண்டிருக்கிறது.

    * மூங்கில் இழைகளுக்கு உறிஞ்சும் திறன் அதிகம். அது பருத்தியை விட மூன்று மடங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வியர்வை பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு மூங்கில் ஆடைகள் கை கொடுக்கும். ஈரப்பதத்தை விரைவாக வெளியேற்றுவதோடு நீண்ட நேரம் புத்துணர்ச்சியோடு செயல்படவும் வழிவகை செய்யும்.

    * மூங்கில் இழைகள் மென்மை கொண்டவை. அவை சருமத்திற்கு எரிச்சலோ, உறுத்தலோ ஏற்படுத்துவதில்லை. உள்ளாடைகள் தயாரிப்பில் மூங்கில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சரும ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மூங்கில் ஆடைகளை அணிவது சவுகரியமாக இருக்கும்.

    * மூங்கில் ஆடைகளை சலவை செய்து பயன்படுத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். அயர்ன் செய்யாமல் கூட அணிந்து செல்ல முடியும். அதில் மடிப்புகள் அதிகம் ஏற்படாது.

    * மூங்கில் இழைகள் பாக்டீரியாவை எதிர்க்கும்தன்மை கொண்டவை. மூங்கில் ஆடைகளிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். தோல் அழற்சி, அரிப்பு போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுபவர்களுக்கு மூங்கில் ஆடை நிவாரணம் அளிக்கும்.
    எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று வித விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும்.
    தற்போது ஹேர் டை பயன்பாடு வழக்கமாகிவிட்டது. ஆனால் முதன் முறை பயன்படுத்தும் போது எந்த விதமான ஹேர் டையாக இருந்தாலும் அதை முதலில் சருமத்தில் பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். ஆனால் எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று ஒவ்வொருமுறை ஒவ்வொரு விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும். இந்த அலர்ஜிக்கான அறிகுறி மற்றும் தீர்வு குறித்து இப்போது பார்க்கலாம்.

    அறிகுறிகளின் தீவிரம் ஒவ்வொருவரது தோல் ஒவ்வாமைக்கேற்ப மாறுபடும். ஹேர் டை பயன்பாட்டுக்கு பிறகு 48 மணி நேரங்களில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்கிவிடும். உடலில் சிவப்பான தடிப்புகள், உச்சந்தலை மற்றும் கழுத்தில் ஒருவித நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வீக்கம், கொப்புளங்கள், கண் இமைகள் மற்றும் உதடுகளில் அழற்சி, கால்கள் கைகளிலும் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.

    ஹேர்டை பயன்பாட்டுக்கு பிறகு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசுவதன் மூலம் ஓரளவு குறைக்கலாம். சருமத்தில் மாய்சுரைசர் மற்றூம் க்ரீம் வகைகள் சருமத்தின் வீக்கத்தை குறைக்க உதவும். ஆனால் வெகு அரிதான சமயங்களில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கலாம்.

    அது தொண்டை வீக்கம், தோல் அலர்ஜி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றையும் உண்டு செய்யலாம். இயன்றவரை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைக்கான அறிகுறி இலேசாக இருந்தால் இந்த கைவைத்தியம் நிச்சயம் உதவும்.

    இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயை ( சுத்தமானதாக இருக்கட்டும்) தடவி உச்சந்தலை முழுக்க விரல்களால் இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு கூந்தலை அப்படியே விட்டு மறுநாள் காலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் வரை செய்துவரலாம்.

    தேங்காய் எண்ணெய் தோல் எரிச்சலுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ள இயற்கையான பொருள். இது ஹேர் டை ஒவ்வாமையை உருவாக்கும் வீக்கம், சிவத்தல் மற்றும் வலியை குறைக்க உதவும்.

    4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முழுக்க தடவி விடுங்கள். குறிப்பாக தலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுக்க தடவி இரவு முழுவதும் தலையில் ஊறவிட்டு மறுநாள் ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள்.

    இரவு தேய்க்க சிரமமாக இருந்தால் தலை குளியலுக்கு ஒரு மணி நேரம் முன்பு தடவி ஊறவிடலாம். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.

    ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது ஹேர் டை ஒவ்வாமை அறிகுறிகளை போக்க கூடும்.

    4 டீஸ்பூன் நல்லெண்ணெயை இலேசாக சூடேற்றி உச்சந்தலையில் தலைப்பகுதியில் தடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தலையை ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இதுவும் ஆலிவ் எண்ணெய் போன்று இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறினால் போதுமானது.

    நல்லெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவப்பு மற்றும் தடிப்பு அரிப்பையும் போக்கும். சரும வீக்கத்தை குறைத்து சருமத்தை சமநிலைப்படுத்தும். ஹேர் டை ஒவ்வாமைக்கு இவை பெரிதும் உதவும்.

    மேற்கண்டவைகள் உங்கள் ஹேர் டை அலர்ஜியை போக்க கூடியவை என்றாலும் முதல் முறை நீங்கள் பயன்படுத்தும் போது சரும பராமரிப்பு மருத்துவர் அல்லது கூந்தல் நிபுணரை சந்தித்து உங்களுக்கு ஏற்ற ஹேர்டையை தேர்வு செய்யலாம். இதனால் ஹேர்டையை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜியை தவிர்க்க முடியும்.
    உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் கரித்தூள் உதவுகிறது.
    உங்களது முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கரித்தூள் உதவுகிறது. கரித்தூளை தயார் செய்ய நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும். அல்லது ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue) 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள், பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்

    முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

    மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

    இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை அப்ளை செய்த உடன் கைகளால் தொட்டு பார்த்து அசைக்க வேண்டாம். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

    மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.

    உங்களது முகத்தின் ஒரு சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து பாருங்கள். எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டானால் இந்த மாஸ்க்கை நீங்கள் உபயோகிக்க வேண்டாம். இந்த மாஸ்க்கை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் அத்தனையும் நீங்கி முகம் புதுப்பொலிவு பெரும்.
    ஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்த்தால் இந்த பிரச்சனைகள் வராது.
    இளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.

    தாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.

    நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

    ஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.

    ஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

    தாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.
    இருசக்கர வாகனங்கள் போன்ற திறந்தவெளி சாலை பயணங்களை மேற்கொள்ளும்போது கூந்தல், சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    பயணங்களின்போது பெரும்பாலானவர்கள் கூந்தலை கவனத்தில் கொள்வதில்லை. அதற்கும் போதுமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுபோல் இருசக்கர வாகனங்கள் போன்ற திறந்தவெளி சாலை பயணங்களை மேற்கொள்ளும்போது புற ஊதா கதிர்கள் சருமத்தை அதிகமாக பாதிக்கும். அப்போது சருமத்தில் பூசப்படும் அழகுசாதன பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனமும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    வெயிலில் செல்லும்போது சரும திசுக்கள் புற ஊதாக்கதிர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும். அதை தவிர்க்க பயணத்தின்போது சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்தலாம். அது புற ஊதாக்கதிர்வீச்சுக்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமம் நிறம் மாறுவதையும் தடுக்கும். நீண்ட தூரம் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்ளும்போது சருமத்தில் நீரிழப்பு ஏற்படும். சருமமும் வெளிர் நிறமாகவும் மாறும். அதை தவிர்க்க ஈரப்பதமான மாய்சரைசரை பயன் படுத்தலாம். தூசுவும், சுற்றுச்சூழல் மாசும் சாலை பயணத்தின் முக்கிய எதிரிகளாகும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அவர்கள் சருமத்தை நன்றாக பரா மரிக்க வேண்டும்.

    சருமத்தை போலவே உதடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதட்டுக்கு தடவும் பூச்சுக்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். உதடுகள் உலர்வடையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் அதிகப்படியான மேக்கப் உபயோகிப்பது நல்லதல்ல. சரும செல்களின் துவாரங்களை மூடும்படி மேக்கப் அமைந்துவிடக்கூடாது. சருமம் இயற்கை தன்மையுடன் இருந்தால்தான் பாதிப்பு நேராது. அழகு சாதன பொருட்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

    கூந்தல் மீது சூரிய கதிர்வீச்சுகள் நேரடியாக படுவதால் விரைவாகவே உலர்ந்து போய்விடும். மிருது தன்மை நீங்கி கடினமாகவும் மாறிவிடும். அதனால் வெளியே செல்வதற்கு முன்பு ஈரத்தன்மை கொண்ட கிரீமை பயன்படுத்துவது நல்லது. பயணத்தின்போது தலைமுடியை தளர்வாக தொங்கவிடக்கூடாது. அது காற்றில் பறந்து சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். ஓரளவு இறுக்கமாக கட்டி ஜடை போட்டுக்கொள்வது நல்லது. கூடுதலாக ‘ஹேர் பேண்டு’களையும் உடன் எடுத்துச் செல்லலாம். சாலை பயணத்தின்போது தலைமுடிக்கு ஸ்பிரேக்களை பயன்படுத்தக்கூடாது. அது தலையில் தூசு படிய காரணமாகிவிடும்.
    வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.
    பெண்கள் வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி, முடிந்து வைக்கவேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ற ‘ஸ்கார்ப்’ அல்லது தொப்பியை அணிந்து செல்வது கூந்தலின் பாதுகாப்பிற்கு ஏற்றது.

    பெண்கள் இப்போது ஏற்றுமதி நிறுவனங்களிலும், துகள்கள் நிறைந்த பகுதிகளிலும் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் பணி இடங்களுக்கு செல்லும்போது ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் ஆயில் போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மேற்கண்டவைகளை அதிகம் பயன்படுத்தினால் கூந்தலில் அழுக்கு, துகள்கள் போன்றவை அதிகம் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.

    அடிக்கடி வெயிலில் செல்லும் பெண்கள் கூந்தலில் ஹேர் சன்ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது பலனளிக்கும்.

    முடி நனைந்திருந்தாலும், அதிக எண்ணெய்தன்மையுடன் இருந்தாலும் அழுக்கு பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை பெண்கள் எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.

    வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.

    சுற்றுப்புற சூழல் மாசுவால் முடி உலர்ந்துபோகும். அந்த வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.
    பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.
    பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். மற்றவர்களுக்கு அழகாக இருப்பதும், கடைகளில் பார்க்கும்போது உங்கள் கண்களை பறிப்பதுமாக இருந்தால் மட்டும் போதாது. அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.

    நீண்ட கழுத்தினை கொண்டவர்களுக்கு சோக்கர் மற்றும் கழுத்தோடு இறுக்கமாக இருக்கும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை அழகுதரும்.

    மெல்லிய இடையை கொண்ட இளம்பெண்கள் புடவை உடுத்தும்போது இடுப்பில் வெயிஸ்ட் செயின் அணிந்துகொள்ளலாம். அவை முத்து அல்லது செயற்கை கற்கள் பதிக்கப்பட்டதாக இருந்தால் அதிக அழகுதரும். அடுக்குகளை கொண்ட சிறிய சங்கிலிகளை அவர்கள் அணிந்து அழகுபெறலாம். இரண்டு அல்லது மூன்று சோக்கர்களை ஒன்றாக அணிவது நீளமான கழுத்தினை கொண்டவர்களுக்கு அழகுதரும்.

    ஜீன்ஸ், ட்ரவுசர் போன்ற மேற்கத்திய உடைகளை பெண்கள் அணியும்போது அதிக கனம்கொண்ட தங்க ஆபரணம், வளையல், கொலுசு போன்றவைகளை அணியக் கூடாது.

    சிறிய தங்க சங்கிலிகள், வெள்ளி ஆபரணம், ஒயிட் கோல்டு, பிளாட்டினம் போன்றவைகளில் உருவான சங்கிலிகள் எல்லாவிதமான உடைகளுக்கும் அழகுதரும்.

    குண்டான உடல் அமைப்பைகொண்டவர்கள் கழுத்தோடு இறுக்கிப் பிடிக்கக்கூடிய சோக்கர் வகை ஆபரணங்களை அணிவதை தவிர்க்கவேண்டும்.
    நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையானவை:

    வெங்காயம்- 2
    மயோனைஸ்- 3 ஸ்பூன்
    தயிர்- 25 மில்லி

    செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

    அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.
    நமது உடலில் கொலாஜென் புரதம் குறைவதால் இளவயதில் முதிர் தோற்றம், சருமச் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படலாம். இதை தடுக்கும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.
    கொலாஜென் என்பது, நமது உடலில் தசைகள், எலும்பு, தோல், ரத்தக்குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் உள்ள ஒருவகை புரதம். இது எலும்பு, தோல் போன்றவற்றை இறுக்கமாகவும் சக்தியுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் மூட்டுகளுக்கு ஒட்டும் பசைத்தன்மையைத் தருகிறது. ஆனால், நமக்கு வயதாகும்போது இந்தப் புரதத்தின் உற்பத்தி குறையும்.

    அதனால்தான் வயதானவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், தசை தளர்ந்து போதல், மூட்டுகளில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உண்ணுதல், புகைபிடித்தல், வெயிலில் அதிக நேரம் சுற்றுதல் போன்ற பழக்கங்களாலும் நமது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையும்.

    கொலாஜென் உற்பத்திக்கு உதவும் உணவுப்பொருட்கள்:- முட்டைக்கோஸ், சிவப்பு கோஸ், அவகேடோ பழம், மீன், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி, பீட்ரூட், கேரட், முளைகட்டிய பயறு வகைகள், பூண்டு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆளி விதை, கீரை வகைகள், சோயா பால், சோயா உணவுகள்

    கொலாஜென் குறைவால் ஏற்படும் பிரச்சினைகள்:- இளவயதில் முதிர் தோற்றம், வயிற்று உபாதைகள், அஜீரணம், அடிக்கடி மலம் கழித்தல், உணவு உண்ட உடனே மலம் கழித்தல், வளர்சிதை மாற்றம் குறைதல், சோர்வு, சருமச் சுருக்கம், மூட்டுவலி.

    ஒருநாளைக்கு எவ்வளவு கொலாஜென் தேவை? இந்தப் புரதத்தின் ஒரு நாளையத் தேவை சரியாகப் பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் இந்தப் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    பெண்கள் கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கே முதலில் முக்கியத்துவம் தருவார்கள்.
    கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், அவை கைகளினால் செய்யப்படும் எம்ப்ராய்டரியா அல்லது மெஷின் எம்ப்ராய்டரியா என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    அதேபோல் எம்ப்ராய்டரி வகைகளில் எந்த வகை என்பதும் தெரிவதில்லை. எம்ப்ராய்டரி குறித்த சுவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    கை எம்ப்ராய்டரி:-

    புல்கரி, மிரர்/சீஷா வேலைப்பாடு, சிக்கன் கரி, கட்ச் எம்ப்ராய்டரி, காந்தத்தா வொர்க், ஜர்தோஷி எம்ப்ராய்டரி மற்றும் கஷிடா எம்ப்ராய்டரி போன்றவை மிகவும் பிரபலமான கை எம்ப்ராய்டரி வகைகள் ஆகும்.

    புல்கரி எம்ப்ராய்டரி:-

    பஞ்சாப் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டது இந்த வகை எம்ப்ராய்டரி ஆகும். பலவிதமான மலர்களின் வடிவங்களை மிகவும் கண்கவர் வண்ணங்களில் குறிப்பாக டார்னிங் ஸ்டிட்ச் மூலம் எம்ப்ராய்டரியாக போடுவது புல்கரி வேலைப்பாடு ஆகும். இப்பொழுது பெரும்பாலும் ஜியாமெட்ரிகல் வடிவங்களிலேயே இந்த வகை எம்ப்ராய்டரி டிசைன்கள் ஆடைகளில் இடம்பெறுகின்றன.

    மிரர் / சீஷா வேலைப்பாடு:-

    பல வடிவமான கண்ணாடி துண்டுகளை வைத்து அவற்றை சுற்றி எம்ப்ராய்டரி செய்யப்படும் துணிகள் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றத்தை தருவதுடன் மிகவும் டேஸ்லிங்காகவும் இருக்கும்.

    சிக்கன்கரி:-

    கிழக்கு வங்கத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த வகை எம்ப்ராய்டரி பெரும்பாலும் வெள்ளை நிறத் துணிகளில் காட்டன் நூல்களை கொண்டு செய்யப்பட்டு வந்தது. இப்பொழுது காட்டன், லினென், ஜியார்ஜெட் போன்ற லேசான எடையுள்ள துணிகளிலும் ஸேடின் ஸ்டிச், ஸ்டேம் ஸ்டிச், பேக் ஸ்டிச், பட்டன் ஹோல் மற்றும் ஜால் ஸ்டிச் இவற்றை கொண்டு மிகவும் அழகான எம்ப்ராய்டரி டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

    கட்ச் எம்ப்ராய்டரி:-

    குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் நகரம் இவ்வகை எம்ப்ராய்டரிக்கு பிரபலமாகும். கட்ச் எம்ப்ராய்டரியானது முக்கியமாக ஹெர்ரிங்கோன் தையல்களால் செய்யப்படுகிறது. இவற்றை சிந்தி எம்ப்ராய்டரி என்றும் அழைக்கிறார்கள்.

    சிறிய சதுரங்கள் கட்ச் எம்ப்ராய்டரியின் அடிப்படையாக அமைகின்றன.

    காந்த்தா எம்ப்ராய்டரி:-

    மிகவும் அழகான மற்றும் தனித்துவமான எம்ப்ராய்டரி பாணியை கொண்ட காந்த்தா வேலைப்பாடு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்ததாகும்.

    இந்த எம்ப்ராய்டரி முழுவதும் எளிய தையல்களே பயன்படுத்தப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம், புராண கதைகளின் காட்சிகள் மற்றும் இயற்கை காட்சிகள் இந்த வகை எம்ப்ராய்டரி மூலம் மிகவும் சிறப்பாக ஆடைகளை அலங்கரிக்கப்பதோடு பெண்கள் மனதிலும் இடம் பிடிக்கின்றன.

    ஜர்தோஷி எம்ப்ராய்டரி:-

    தங்க நிற மற்றும் வெள்ளி நிற நூல்களை கொண்டு செய்யப்படும் ஜர்தோஷி எம்ப்ராய்டரி வேலைப்பாடானது பெரும்பாலான மணப்பெண்களின் ஆடைகளில் இடம் பெற்றிருக்கும்.

    மிகவும் சிக்கலான மற்றும் அழகான வடிவங்களை கவுச்சிங் ஸ்டெம் ஸ்டிச், ரன்னிங் ஸ்டிச் மற்றும் ஸேடின் ஸ்டிச்களின் மூலம் ஜர்தோஷி எம்ப்ராய்டரியாக உருவாக்குகிறார்கள்.

    கஷிடா எம்ப்ராய்டரி:-

    காஷ்மீர் சால்வை மற்றும் கஃப்தான்கள் உலக அளவில் பிரபலமடைந்ததற்கு காரணம் கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு என்று உறுதியாக சொல்லலாம். கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட துணியின் இரு புறமும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும்.

    கிளிகள், மயில்கள், மரங்கொத்தி, இலைகள், ஆப்பிள்கள், பிளம்ஸ், செர்ரிஸ், திராட்சை கொத்து மற்றும் பலவிதமான மலர்களையும் இந்த வகை எம்ப்ராய்டரியில் மிகவும் தத்ரூபமாகவும், அழகாகவும் கொண்டுவர முடியும்.

    மிகவும் பிரபலமான பஷ்மினா சால்வைகள், புடவைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் இடம் பெற்றிருப்பவை இவ்வகை காஷ்மீரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு ஆகும்.
    இந்த மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.
    முந்தைய காலங்களில் பெண்கள் மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். ஏனெனில் இவை எவ்வித பக்க விளைவுகளையும் தருவதில்லை. பச்சை பாசிப்பயறு மாவை பயன்படுத்தி நமது சருமத்தை எப்படி பொலிவாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

    பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.

    சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.

    1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தலாம்.

    சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

    அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக காணப்படுவீர்கள்.
    ×