என் மலர்
அழகுக் குறிப்புகள்
டாட்டூக்களை முறையாக பராமரிக்காவிட்டால் சில மாதங்களிலேயே பொலிவை இழக்க தொடங்கி விடும். டாட்டூக்களை முறையாக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கைகளிலும், உடல் பாகங்களிலும் விதவிதமான டாட்டூக்களை பதித்துக்கொள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப கருப்பு நிறம் மட்டுமின்றி வண்ணமயமான நிறக்கலவையிலும் டாட்டூக்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.
அவைகளை முறையாக பராமரிக்காவிட்டால் சில மாதங்களிலேயே பொலிவை இழக்க தொடங்கி விடும். டாட்டூக்களை முறையாக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* டாட்டூக்கள் வரைந்த பிறகு ஒரு வாரம் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்கவேண்டும். நீச்சல் பயிற் சியை தவிர்க்க வேண்டும்.
* மதுப்பழக்கம் கொண்டவர்கள் மூன்று, நான்கு நாட்களாவது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மதுவில் இருக்கும் ஆல்ஹகால் ரத்தத்தில் கலந்து டாட்டூக்களின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.
* ஒரு வாரம் கழித்து ‘டாட் வேக்ஸ்’ எனப்படும் மாய்ஸ்ரேசரை கொண்டு அதன் மீது மசாஜ் செய்ய வேண்டும்.அது டாட்டூக்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
* சூரிய கதிர்கள் டாட்டூக்களுக்கு எதிரானவை. அவை டாட்டூக்கள் மீது நேரடியாக படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சூரிய கதிர்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் டாட்டூக்களின்பொலிவை குறைக்கும். அதோடு டாட்டூக்கள் மூலம் ஊடுருவி சருமத்திற்கும் கேடு விளைவிக்கவும் செய்யும்.
* உடலில் டாட்டூக்கள் வரைந்திருப்பவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அவை டாட்டூக்களில் உராய்வை ஏற்படுத்தி அதன் நிறத்தை மங்க செய்துவிடும்.

வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக் உங்கள் பார்வைக்கு...
சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக் உங்கள் பார்வைக்கு...
தேவையான பொருட்கள்:
கடலை மாவு -1 கப்
பொடித்த மஞ்சள்: சிறிதளவு
பால்- சிறிதளவு
செய்முறை:
மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.

மைசூர் சில்க் சேலையில் ஒரிஜினல் பட்டு மற்றும் தூய தங்க ஜரிகை பயன்படுத்தப்படுவதே அதன் தனித்துவமான சிறப்பம்சம் என்று சொல்லலாம்.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களின் அணிவகுப்பில் மைசூர் சில்க் சேலைகளும் உள்ளன. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் கைத்தறி தயாரிப்புகளில் ஒன்றான இவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவற்றின் துடிப்பான வண்ணம் மற்றும் நுட்பமான வேலைப்பாட்டுடன் மென்மையான துணிகளில் ஒரு ரிச்சான தோற்றத்தை தருவதே மக்கள் பெரிதும் விரும்புவதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
மைசூர் சில்க் தோற்றமும் வரலாறும்:-
திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட பொழுதே தோற்றம் பெற்றவை மைசூர் சில்க் சேலைகள். கி.பி. 1785-ல் இருந்தே இவை வளர்ச்சி அடையத் துவங்கின.
மகாராஜா கிருஷ்ணராஜா வாடியார் ஐவி பிரிட்டிஷ் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டு பட்டுத் துணிகளை விக்டோரியா மகாராணிக்கு அன்பளிப்பாக எடுத்துச் சென்றார். பிறகு ஸ்விட்சர்லாந்திற்குச் சென்று அங்கிருந்து 32 தறி இயந்திரங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தார். அதன் பின்னரே இயந்திரத்தால் மைசூர் பட்டுச் சேலைகளை நெய்வது ஆரம்பமானது என்று வரலாறுகள் கூறுகின்றன.
1912-ம் ஆண்டு மைசூரை ஆண்ட மகாராஜாவால் பட்டு நெசவுத் தொழிற்சாலையானது நிறுவப்பட்டது. அதுவே இந்தியாவின் மிகப் பழமையான பட்டு உற்பத்தி நிலையமாகும். இந்த தொழிற்சாலையானது இப்பொழுது கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சேலை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் ஒரே குக்கூனிலிருந்து பெறப்படுகின்றன.
பின்னர் அது பட்டு நெசவுத் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பட்டு இழைகளின் அடர்த்தி அளவிடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊற வைத்தல், முறுக்குதல், வெப்டிங் மற்றும் வைண்டிங் போன்ற பல படிகளைக் கடந்து நெசவு செய்வதற்கு நூல் தயாராகின்றது. நெசவு செயல்முறையானது டோபி தறி மற்றும் ஐகார்ட் தறி என்ற இரண்டு வகைகளை உள்ளடக்கியது. ஒரு சேலையை நெய்வதற்கு நான்கு மணி நேரம் ஆகும். இதன் பின்னர் டிகம்மிங் எனப்படும் துணியை மென்மையாக்கும் செயலானது ஆரம்பமாகின்றது. இதனை அடுத்து சேலை சாயமிடவும் கழுவவும் அனுப்படுகின்றது.
மைசூர் சில்க் சேலையில் ஒரிஜினல் பட்டு மற்றும் தூய தங்க ஜரிகை பயன்படுத்தப்படுவதே அதன் தனித்துவமான சிறப்பம்சம் என்று சொல்லலாம். அதனால்தான் மைசூர் பட்டுச்சேலை பார்ப்பதற்கு பணக்காரத் தோற்றத்தை தருகின்றது. உடல் முழுவதும் பிளையின் நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மெல்லிய பார்டர்கள் மற்றும் பெரிய பார்டர்களில் மாங்காய், பூக்கள், அன்னம் மற்றும் பெரிய புட்டாக்கள் போன்றவை மைசூர் பட்டிற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக உள்ளன.
கசூத்தி எம்ப்ராய்டரி மற்றும் பாந்தனி டிசைன்களையும் மைசூர் பட்டில் நம்மால் பார்க்க முடியும். ஆரஞ்சு, சிகப்பு, பச்சை, நீலம், காஃபி பிரெளன் மற்றும் லைலாக் நிறங்கள் இந்தச் சேலைக்குப் பெயர் போனவை.
மைசூர் ஒரிஜினல் பட்டுப் புடவையின் விலையானது இரண்டு இலட்சங்களைத் தொடுகின்றன. அதே சமயத்தில் மூவாயிரத்திலிருந்தும் இவ்வகைச் சேலைகள் விற்கப்படுகின்றன. விலைக்கேற்ற தரத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடிகின்றது.
விலை அதிகமான மைசூர் பட்டுச் சேலைகளின் ஒரு ஓரத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஒரு தனித்துவமான குறியீட்டை நீங்கள் பார்க்க முடியும். அதில் சேலையின் வரலாறு, உற்பத்தி பற்றிய விவரங்கள், நெசவு செய்வதற்கு செலவிடப்பட்ட நேரம், இதை நெசவு செய்வதற்கு கிடைத்த கூலி போன்றவை இடம் பெற்றிருக்கும். இதை வைத்துக் கொண்டே மைசூர் பட்டில் போலி எது அசல் எது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
அசல் மைசூர் பட்டை கைகளில் தேய்க்கும் பொழுது கைகளில் வெதுவெதுப்பை உணர முடியும். செயற்கை மற்றும் சின்தடிக் பட்டைத் தேய்க்கும் பொழுது இதுபோன்ற வெதுவெதுப்பை உணர முடியாது. மைசூர் பட்டுச் சேலைகளை துவைக்கும்பொழுது மென்மையான சோப்பைக் கொண்டு சேலையின் ஓரத்தை சிறிதளவு துவைத்து சோதனை செய்த பிறகு கலர் நீங்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு துவைக்கவும்.
முதல் முறை ட்ரைக்ளன் கொடுப்பது சிறந்ததாகும்.
சேலைகளை பிரத்தியேகமான பைகளில் வைத்து உபயோகப்படுத்தவும். ஒரே மடிப்பில் வைக்காமல் மாற்றி மாற்றி மடித்து வைக்கவும்.

வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை உப்பியபடிவைத்து பயிற்சி செய்தால் முக தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கன்ன தசைகளை வலுப்படுத்த உதவும்.
வயிற்றில் கொழுப்பு படிந்து தொப்பை உருவாகுவதுபோல் சிலருக்கு கன்னங்களில் கொழுப்பு படிந்து காணப்படும். அத்தகைய கன்னங்கள் தொடக்கத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் நாளடைவில் தொங்கி, அழகற்றதாகிவிடும். எளிமையான முக பயிற்சிகள் மூலம் முகத்தில் படியும் கொழுப்பை போக்கிவிடலாம்.
வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை உப்பியபடிவைத்து பயிற்சி செய்தால் முக தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கன்ன தசைகளை வலுப்படுத்த உதவும். முக தோற்றத்திற்கும் அழகு சேர்க்கும். இந்த பயிற்சியை செய்வது எளிதானது. காற்றை உள்ளிழுத்து கன்னங்களை உப்பியடி வைத்துக்கொள்ள வேண்டும். அதே நிலையில் 10 வினாடிகள் வைத்துவிட்டு, பின்பு கன்னத்தின் வலது பக்கத்திற்கு காற்றை திருப்பி உப்பியடி வைத்திருக்க வேண்டும். 10 வினாடிகள் கழித்த பிறகு இடது புறமாக உப்பவைத்தபடி 10 வினாடிகள் இருக்க வேண்டும். இப்படி அவ்வப்போது செய்துவரலாம்.
விரல்களால் புருவங்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். இது நெற்றியில் உள்ள ப்ரன்டிஸ் தசைகளின் செயல்பாடுகளால் ஏற்படும் நெற்றி சுருக்கத்தை போக்கும். இந்த பயிற்சிக்காக புருவங்களுக்கு இடையே ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை வைத்துகொள்ளவும். மற்ற விரல்களையும், உள்ளங்கையையும் கன்னத்தையொட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள். கண்களை திறந்தநிலையில் வைத்தபடி விரல்களின் உதவியுடன் புருவங்களை மேலும், கீழும் அசைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 30 வினாடிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று முறை செய்து வரலாம். இது புருவங்களுக்கும், கன்னத்திற்கும் பொலிவு சேர்க்கும்.
* உதட்டை வாய்க்குள் தள்ளியபடியோ அல்லது உதட்டு பகுதியை வாயின் ஒரு மூலையில் தள்ளியபடியோ வைத்தபடி, கழுத்து தசைகளுக்கு 10 வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது வாய், கழுத்து, கன்ன தசைகள் இலகுவாகும். முகத்தில் உள்ள கொழுப்பும் குறையும். தாடையும் அழகு வடிவம் பெறும்.
* கன்னத்தின் இருபுறமும் விரல்களைவைத்து அழுத்தி கீழ் இருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வாயை திறந்து டி, ஓ வடிவில் வைத்திருக்க வேண்டும். அப்போது விரல்களை கன்னத்தில் அழுத்தியபடி அதே நிலையில் 10 வினாடி கள் இருக்கவேண்டும். இந்த பயிற்சியை செய்யும்போது கன்ன தசைகளில் அழுத்தம் ஏற்படுவதை உணரலாம். தினமும் 10 முறை இந்த பயிற்சியை செய்து வரலாம். கன்ன தசைகளை இறுக்கமடைய வைக்கவும், முக கொழுப்பை குறைக்கவும், கன்னத்தின் அழகை பராமரிக்கவும் இந்த பயிற்சிகள் உதவும்.

நீண்ட காலத்திற்கு எதிர்மறை உணர்வுகளை சுமந்து கொண்டிருப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவார்கள் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
‘சிரிப்பை விட சிறந்த மருந்து இல்லை’ என்று சொல்வார்கள். ஆனால் நாம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறோம்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? சிரிப்பு மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இறுக்கமான மன நிலையில் இருக்கும்போது புன்னகைத்து பாருங்கள். மனம் இலகுவாகும்.
எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் தேக்கி வைப்பது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நீண்ட காலத்திற்கு எதிர்மறை உணர்வுகளை சுமந்து கொண்டிருப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவார்கள் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அழகுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மன அழுத்தம், கோபம், கவலை, எரிச்சல் உணர்வு போன்றவை புற அழகை பாதிக்கும். ஒருவருடைய வெளிப்புற தோற்றத்தை வைத்தே அவருடைய மன நிலையை புரிந்து கொண்டுவிடலாம் என்பதால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அவை மன நலனையும், உடல் நலனையும் சீர்குலைத்துவிடும். சரும அழகை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
மன அழுத்தம்: தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் முகத்தில் அதன் தாக்கம் வெளிப்படும். கார்டிசோல் ஹார்மோன்களின் உற்பத்திதான் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். இதன் உற்பத்தி அதிகரிக்கும்போது சருமம் சார்ந்த பிரச்சினைகளும் உருவாகும். மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால், புதிய செல்கள் உருவாகுவதில் குறைபாடு உண்டாகும். விரைவில் வயதான தோற்றம் தொற்றிக்கொள்ளும்.
மன அழுத்தத்தில் இருக்கும்போது, சாக்லேட் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குடிப்பழக்கம் அதிகமாகிவிடும். இது தண்ணீர் பருகும் அளவை குறைப்பதற்கு வழிவகுத்துவிடும். சரும சுருக்கங்கள் உட்பட பல தோல் பிரச்சினைகளுக்கு நீரிழப்புதான் முக்கிய காரணமாகும். முறையற்ற உணவு பழக்கம், சரும பராமரிப்பில் போதிய அக்கறையின்மை காரணமாக முகப்பரு பிரச்சினையும் உண்டாகும். மன அழுத்தம் ரத்த நாளங்களில் சுருக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.
கோபம்: நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்ளும்போது முகத்தை கவனியுங்கள். கோபம் உங்கள் முக தசையை இறுக்கமாக்கும். சோர்வும் தென்படும். அது காலப்போக்கில் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். கோபமாக இருக்கும் சமயத்தில் கார்டிசோல் ஹார்மோன்கள் வேகமாக உற்பத்தியாகும். இது சருமத்தை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கொலோஜனின் உற்பத்தியைத் தடுக்கும். அதன் காரணமாக சருமத்தின் பொலிவு குறைந்து, விரைவாகவே சுருக்கம் தென்பட வழிவகுத்துவிடும்.
சோர்வு: முகபாவம் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி மனச்சோர்வடைந்தால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.
நீண்டகால மனச்சோர்வு சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உயிரணுக்களும் பாதிப்புக்குள்ளாகும். ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுதலை உண்டாக்கி தூக்கத்தை பாதிக்கும். கண்களில் வீக்கம், மந்த உணர்வு, சோர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். நீண்ட காலமாக ஏதாவதொரு விஷயத்தை பற்றி நினைத்து கவலையுடன் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகும்.
பயம் : ஆபத்தில் இருப்பதாக உணரும்போதோ, பீதி அடையும்போதோ, பயம் தொற்றிக்கொள்ளும்போதோ மூளை உடனடியாக அட்ரினலின் சுரப்பிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இதன் விளைவாக, இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கி விடும். உடலுக்குள் ரத்தம் செல்லும் வேகமும் அதிகரித்துவிடும். இந்த சமயத்தில் உடல் தசைகளுக்கு தேவையான ரத்தம் முகத்தில் இருந்து எடுக்கப்படும். காயம் அடையும்போதும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கு சருமத்தில் உள்ள ரத்த நாளங்கள் உதவும். அப்போது சருமத்தில் ரத்தத்தின் அளவு குறைவதால் சோர்வு எட்டிப்பார்க்கும்.
எதிர்மறை எண்ணங்கள்தான் அக அழகையும், புற அழகையும் அதிகளவில் பாதிக்கின்றன. இதனால், தேவையற்ற எண்ணங்கள், சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. எப்போதும் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது புன் சிரிப்பை உதிர விட வேண்டும். நகைச்சுவை உணர்வை தூண்டும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

கூந்தலை பாதிக்காமல் இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள், உடனடியாக நிறத்தை மாற்றும்.
அதன்கூடவே பக்க விளைவுகளை ஏற்படுத்தி, முடியின் வேர்க்கால்களைப் பாதித்து, முடி உதிர்வையும் அதிகமாக்கும். இந்த ரசாயனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனைத் தவிர்ப்பதற்கு இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
இயற்கை சாயம்:
இரண்டு அல்லது மூன்று கொட்டாங்குச்சிகளை அடுப்பில் எரித்து, அதன் மூலம் கிடைக்கும் கரியுடன், செக்கில் ஆட்டிய சுத்தமானத் தேங்காய் எண்ணெய்யைத் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு, அதை அரை மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் இந்தச் சாயத்தை தடவும்போது முடி நன்றாகக் கருப்பாகும். இதனை தினமும் தடவி வந்தால், நாளடைவில் முடி கருப்பாக மாறும்.
நெல்லிச் சாயம்:
நிழலில் உலர்த்தி விதை நீக்கப்பட்ட 4 நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளவும். அதை லேசாக பொடித்துக்கொண்டு, அடி கனமான வாணலியில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை, நன்றாகக் கருப்பாகும் வரை வறுத்தெடுக்கவும். பின்பு தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். இந்தக் கலவையை அறை வெப்பநிலையில் இரவு முழுவதும் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனைத் தலை முடியில் முழுமையாகத் தடவவும். பின்பு 2 மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.
அவுரிச் சாயம்:
‘அவுரி’ எனப்படும் ‘இண்டிகோ பொடி’ - 1 தேக்கரண்டி, மருதாணி பொடி - 1 தேக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி, சோளமாவு - 1 தேக்
கரண்டி, உப்பு - சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். மருதாணிப் பொடியில், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது கெட்டியாக கலந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாதவண்ணம் மூடி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் அவுரிப் பொடி, சோளமாவு, உப்பு இதனுடன் தேவையான அளவு மருதாணிக் கலவை, தண்ணீர் கலந்து, கைப்படாமல் பிரஷ்ஷால் தலை முழுவதும் தடவவும்.
3 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஷாம்பூ போடாமல், தண்ணீரால் தலைமுடியை அலசவும். இதன்மூலம் இயற்கையான கருமை நிறத்தைப் பெறுவது மட்டுமின்றி கூந்தல் மிருதுவாகவும் இருக்கும். இதில் பயன்படுத்தும் அவுரி, முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் மிக்கது.
மேற்கூறிய எந்த சாயத்தை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் ஷாம்புவை தவிர்ப்பது நல்லது. சாயம் பயன்படுத்திய இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வீரியம் குறைந்த ஷாம்புவை உபயோகிக்கலாம்.

ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது.
பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். வெளியே செல்லும்போதும், விசேஷ நாட்களிலும் இயல்பான அழகை ஒப்பனை மூலம் மேலும் ‘பளிச்’ என்று மாற்றிக் கொள்வதில் பல பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம். லைட்-வெயிட் மேக்கப்பை பகல், இரவு என எந்த நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம்.
பவுண்டேஷன்:
அதிக அடர்த்தி இல்லாத, மென்மையான பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். சருமத்தின் நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷனைப் பயன்படுத்தும்போது, மேக்கப் இயற்கையானதாக இருக்கும்.
தரத்துக்கு முக்கியத்துவம்:
அழகு சாதனப் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக முகப்பொலிவு குறையும். எனவே, தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.
பயன்படுத்தும் முறை:
பவுடர், கிரீம், லிக்விட் என பல வகைகளில் அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது சருமத்துக்கு ஏற்ற விதத்தில் உபயோகப்
படுத்துவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மாய்சுரைசர்:
மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை நன்றாகத் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஈரமான துணியைக் கொண்டு, முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு, மாய்சுரைசர் பூச வேண்டும். இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
முக்கியமான பகுதிகள்:
கண்களுக்குக் கீழிருக்கும் கருவளையம், சுருக்கங்கள், கருந்திட்டுக்கள் போன்ற அனைத்தையும் மறைக்கும் வகையில் மேக்கப் போட வேண்டும்.
கன்னம், கண்கள்:
கன்னத்திற்கு மேக்கப் போடும்போது, அதிக இறகுகள் கொண்ட பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லது. இதில் குறைந்த அளவில் பவுடரைத் தொட்டு, கன்ன எலும்புகளில் மேல்வாக்கில் தடவ வேண்டும். இதன் மூலம் கன்னங்களை அழகுபடுத்தலாம்.
மேலும் எடுப்பாகக் காட்ட வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளி நிற பவுடரை லேசாகத் தடவலாம். முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
உதடுகள்:
வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் உதடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதற்கு லிப்பாம் அல்லது கண்டிஷனர் பூச வேண்டும். பின்பு பிங்க், பிரவுன் போன்ற நிறங்கள் கொண்ட உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.
முக அழகை அதிகரித்து வசீகரிப்பதில் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை மேலும் அழகு படுத்துவதற்காக பயன்படுத்தும் உதட்டுச்சாயங்கள் பெரும்பாலும் ரசாயனம் கலந்தவை. உணவு சாப்பிடும் போது உதட்டுச்சாயத்தின் துகள்களையும் சேர்த்து விழுங்குவதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. அதனை தவிர்ப்பதற்காக இயற்கை முறையில் உதடுகளின் வண்ணத்தை பராமரிக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம்.
உதடு சிகப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கிமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு, வறண்டு போவும் நேரிடும். இதை தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உதடுகள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
அடிக்கடி தேநீர் அருந்துபவரின் உதடுகள் கருத்து காணப்படும். இதனை தவிர்க்க தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.
முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கும் கொடுக்க வேண்டும். அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தும் போது உதட்டிற்கு தனி கவனம் செலுத்துவது நல்லது. உதடுகளை தூய்மைப்படுத்த தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்றவற்றை நன்றாக கலந்து சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மிருதுவாகும்.
பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி குப்பியில் காற்று புகாதவாறு மூடி குளிர்சாதனப்பொட்டியில் பாதுகாக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும்.
பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் அவை சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.
சிறிது கஸ்தூரி மஞ்சளுடன், பசுவின் பால் கலந்து பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும் சிகப்பாகவும் மாறும்.

உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம்.
ஒவ்வொருவருடைய துணி அலமாரியிலும் குறைந்த பட்சம் ஒரு ஜீன்ஸாவது இல்லையென்றால் அது சிறிது வருத்தத்தை அளிக்கக் கூடிய விஷயம் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்தவித மேலாடைக்கும் பொருந்துவதால் அனைவராலும் விரும்பி அணியப்படும் பாட்டம் என்ற பெருமையுடன் ஜுன்ஸைச் சாரும்.
ஜுன்ஸைப் பொருத்தவரை பல்வேறு வகைகள் உள்ளன.
பெல் பாட்டம் ஜுன்ஸ்:- இவ்வகை ஜுன்ஸ்கள் முதல் கால்கள் வரை குறுகலாகவும் முழங்காலில் இருந்து கனுக்கால் வரை சில நேரங்களில் தரையைத் தொடும் அளவிற்கு மணி போன்ற வடிவத்தில் அகன்று பரவியிருக்கும். எழுபதுகளிலிருந்து இன்று வரையும் பேஷன் உலகில் கர்ஜிக்கும் வகையாக இந்த பெல் பாட்டம் ஜீன்ஸ்கள் இருக்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணிந்து கொள்ள ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்வெட்டர்ஸ், க்ராப் டாப், டீ ஷர்ட்டுகளுக்கு சிறந்த பாட்டமாக இவை செயல்படுகின்றன.
லோ வெயிஸ்ட் ஜீன்ஸ்:- இவை குறைந்த இடுப்பு இறக்கத்துடன் கணுக்கால் வரை சிக்கெனப் பிடித்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டவையாகும். இவ்வகை ஜுன்ஸ்கள் இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளன. தட்டையாக உள்ள செருப்புகள், ஸ்னீக்கர்கள் மற்றும் குதிகால் செருப்புகளுடன் அணியும் பொழுது இவை மேலும் அழகு சேர்க்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணியக்கூடியவை இவை.
3டி எஃபெக்ட் பேனல் ஜுன்ஸ்:- இளவயதினர் சாதரணமாக அணிந்து கொள்ளக்கூடிய சரியான தேர்வு என்று சொல்லலாம். 3டி வெட்டுகளுடன் உங்கள் கால்களுக்கு வசதியாகப் பொருந்தும் இவற்றை ஆண், பெண் என இரு பாலரும் அணியும் பொழுது அவர்களது வயது சிறிது குறைத்துக் காட்டப்படுவதாக பரவலாகக் கூறப்படுகின்றது. ஸ்லோகன் பிரிண்ட் டீ-ஷர்ட்டுகளுடன் இவை கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.
டேப்பர்டு ஜுன்ஸ்:- இவை தொடைப்பகுதியில் அகன்றும் கணுக்காலில் குறுகலாகவும் இருப்பவையாகும். நீளமான கால்களை உடையவர்கள் அணிய ஏற்றவை இவை. ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
க்ராப்டு ஜுன்ஸ்:- சரியான நவீன தொடுதலுடன் கணுக்கால் வரை நீண்டிருக்கும் இவை கச்சிதமான உடல்வாகுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்று சொல்லலாம்.
ஹை வெயிஸ் ஜுன்ஸ்:- மேல் இடுப்பிலிருந்து தொடங்கும் இவ்வகை ஜுன்ஸ்கள் ஒல்லியான தோற்றத்தைத் தரக் கூடியவையாகும். சாதாரணமான பயணத்திற்கு ஏற்றவையாக இருப்பதால் இருபாலரும் அணியக்கூடிய ஆடையாக இது உள்ளது.
ட்ராப் க்ராட்ச் ஜுன்ஸ்:- இடுப்பு இருக்கை மற்றும் பின்புறத்தில் தொய்வாக இருக்கும் இவை மெல்லிய தளர்வாக ஃபிட்பேன்ட் ஆகும். இவ்வகை டெனிப்கள் குளிர்ச்சியான புதுப்பானியுடன் கூடிய தோற்றத்தைத் தருபவை என்று சொல்லலாம். அனைவராலும் விரும்பி அணியப்பட்டாலும் தடகள உடல் தோற்றமுடையவர்களுக்கு கச்சிதமான தோற்றத்தை தரக்கூடியவையாக இவை உள்ளன.
செய்லர் ஜுன்ஸ்:- பெண்கள் மட்டுமே அணியக்கூடிய இவ்வகை ஜுன்ஸ்களானது மேல் இடுப்பிலிருந்து துவங்கி முன்புறம் பட்டன்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அணிவதற்கு வசதியானவையாக இருப்பதோடு நாகரீகத் தோற்றத்தையும் தரக்கூடிய இந்த ஜுன்ஸ்கள் எழுபதுகளிலிருந்து இன்று வரையிலும் பிரபலமாக உள்ளது.
புஸ் பேன்ட் ஜுன்ஸ்:- அடிப்படையில் நேராகப் பொருந்தும் வகையான இவ்வகை டெனிம்கள் ஆண்களுக்கே வடிவமைக்கப்பட்டது போல் இருக்கின்றது. முன்புறமும், பின்புறமும் இரண்டு இரண்டு பாக்கெட்டுகளுடன் வரும் இவ்வகை ஜுன்ஸ்களுடன் லெதர் ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணியும் பொழுது அணிபவரின் தோற்றம் நவ நாகரீகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஸ்லிம் ஃபிட்:- தொடை பின்னங்கால் மற்றும் கணுக்கால் வரையிலும் உடலுடன் ஒட்டிப் பிடிக்கும்படி இறுக்கமாக வரும் இவ்வகை ஜுன்ஸ்கள் இள வயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியக்கூடியதாகவும், நாகரீக தோற்றத்தைத் தருவதாகவும் உள்ளது.
ஜாகர்:- குறிப்பாக ஜாகிங் செய்யும் பொழுது வசதியாக இருப்பதற்காக இடுப்பு மற்றும் கணுக்காலில் எலாஸ்டிக்கானது கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவை இவை. நகர்புறத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் இவற்றை வேலைக்கு விடுப்பு இருக்கும் நாட்களில் அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் இயல்பாகச் செல்லலாம்.
ஸ்ட்ரெயிட் ஃபிட் ஜுன்ஸ்:- இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அளவாக நேராக வெட்டப்பட்டு தைக்கப்பட்டிருக்கும் இவை அனைத்து மேலாடைகளுடனும் அணிய ஏற்றவை. அணிவதற்கு வசதியான ஜுன்ஸ்களாக இவை இருப்பதால் அனைத்து வயதினாராலும் விரும்பி அணியப்படுபவை என்ற பெருமைக்குரியது இவை என்று சொல்லலாம்.
ஸ்கின்னி ஜுன்ஸ்:- இடுப்பு தொடை பின்னங்கால் மற்றும் கனுக்கால் வரை உடலுடன் சிக்கென ஒட்டிப் பிடித்திருக்கும் இவற்றில் கணுக்காலில் கட்டுடன் வருபவையும் பெண்களால் விரும்பி அணியப் படுபவையாக உள்ளன.
பூட்கட் ஜுன்ஸ், பாய் ஃப்ரண்டு ஜுன்ஸ், ஃப்னேர்டு ஜுன்ஸ், பெக்குடு ஜீன்ஸ், வைட் லெக் ஜீன்ஸ், ஸ்டிர்அப் ஜீன்ஸ், பேச்சுடு ஜீன்ஸ், ரிப்டு ஜீன்ஸ் என ஜீன்ஸ்களில் இன்னும் எத்தனையோ வகைகள் உள்ளன. நம்முடைய உடல் தோற்றத்திற்கு ஏற்றாற் போலவும், அணிவதற்கு வசதியாகவும் இருப்பவற்றைக் தேர்ந்தெடுத்து அணியும் பொழுது நம் தோற்றத்தை மேலும் இவை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...
பூசணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.
பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...
சரும நிறத்தை அதிகப்படுத்துவதற்கு…
தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும். பின்னர் சிறிதளவு பூசணிக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து பூசணிக் கலவையைத் துடைத்து எடுக்கவும். சில வினாடிகள் கழித்து, மீண்டும் மீதம் உள்ள பூசணிக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் மூலம் முகம் மற்றும் கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிளிரும்.
மிருதுவான சருமத்திற்கு...
தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, தயிர் - 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் தயிர், அரைத்த பாதாம், தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
பொலிவான சருமத்திற்கு...
தோல் நீக்கி மசித்தப் பூசணி - 2 தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள் - ½ தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, பசுவின் பால் (காய்ச்சாதது) - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் மசித்த பூசணி, ஜாதிக்காய் தூள், பாதாம் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அதில் தேவையான அளவு பால் சேர்த்து, பசை பதத்திற்கு வரும் வரை கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.
2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.
5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.
ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.
உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.
உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.
சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.
சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!