என் மலர்
சமையல்
- இந்த ஸ்நாக்ஸை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் (Desiccated Coconut) - 1 கப்
மில்க்மெய்ட் - 1 1/2 கப்
துருவிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு அதனுடன் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். எல்லா உருண்டையும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் துருவிய டார்க் சாக்லேட்டை போட்டு நன்றாக கைவிடாமல் கிளறவும்.
சாக்லேட் நன்றாக கரைந்து உருக ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.
இப்போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சாக்லேட் கலவையில் டிப் செய்து ஒரு பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.
இதனை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான தேங்காய் ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்த ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இன்று சாக்லேட், தேங்காய் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 200 கிராம்
மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10
சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்
பால் - அரை கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)
அலங்கரிக்க
தேங்காய் துருவல் - தேவையான அளவு
செய்முறை
* மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.
* ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.
* இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.
* அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.
இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
- வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
- விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - தேக்கரண்டி
திராட்சை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சுக்கு தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
* வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)
* எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
* நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
* சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 200 கிராம்,
கேழ்வரகு - 200 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
வெந்தயம்-1 டீஸ்பூன்,
கருப்பட்டி - 500 கிராம்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும்.
அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
இப்போது சத்தான சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி.
- சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சேமியா வைத்து கேசரி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 500 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
தண்ணீர் - 400 மி.லி.
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை :
சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.
கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.
சுவையான சேமியா கேசரி தயார்.
இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.
- ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று பருப்பு உருண்டை சேர்த்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பருப்பு உருண்டை செய்ய
ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
ரசம் வைக்க :
நெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும். அதோடு மஞ்சள், தனியா, சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.
சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.
- சாண்ட்விச் பலரது பசியைப் போக்கும் நல்ல ஸ்நாக்ஸாக உள்ளது.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச்.
தேவையான பொருட்கள்:
பிரெட் - 6 துண்டுகள்
டார்க் சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
டார்க் சாக்லேட் துண்டுகளை துருவிக்கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.
பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துருவலை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.
இதேப் போன்று மற்ற 3 பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, கரண்டியால் லேசாக அழுத்திவிட வேண்டும். பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்தால் தான் உள்ளே இருக்கும் சாக்லேட் உருகி பிரெட் முழுவதும் படரும்.
இதேப் போல் மீதமுள்ள சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான சாக்லேட் சாண்ட்விச் தயார்.
- இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
- இந்த ரெசிபியில் விரும்பிய காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 கிராம்பு - 5
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)
பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.
மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் வேக வைத்த சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!!
இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை செய்து கிருஷ்ணருக்கு படைப்பார்கள்.
- இன்று எளிய முறையில் சீடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி!!!
- கிருஷ்ணருக்கு இந்த லட்டை நைவேத்தியம் செய்யலாம்.
- இதை குழந்தைகள் விரும்பி உண்பர்; சுவையும், சத்தும் நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்,
பால் - 100 மில்லி லிட்டர்,
வெல்லம் - 1 கப்,
நெய் - சிறிதளவு,
ஏலக்காய் - சிறிதளவு,
முந்திரி - சிறிதளவு,
பாதாம் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும்.
அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!
- இன்று உருளைக்கிழங்கு பிரட் சேர்த்து வடை செய்யலாம்.
- இந்த வடை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
உருளைக் கிழங்கு - 2
பிரெட் துண்டுகள் - 10
வறுத்த ரவை - அரை கப்
அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.
விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு அடிக்கடி கருப்பு உளுந்து உணவுகளை கொடுத்தால் ரத்த சோகை வராது.
- கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கப்
வெண்ணெய், மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
கருப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் ரவை போன்று கரகரப்பாக பொடியாக்க வேண்டும்.
அதோடு கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து வடையாக தட்டி, கடாயில் சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கருப்பு உளுந்து வடை ரெடி.






