என் மலர்
சமையல்
- கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
- வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 3
பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
பால் - அரை கப்
பாதாம் பருப்பு - 10
சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.
இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்
- இன்று ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மில்க் பிஸ்கட் - 12
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்
செய்முறை
* பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
* பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்
* சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
* சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பிஸ்கட் சாக்லேட் பால்ஸ்
- பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
- இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பழத்துண்டுகள் - 1 1/2 கப்
நெய் - விருப்பத்திற்கேற்ப
முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - விருப்பத்திற்கேற்ப
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை கொட்டிக் கிளறவும்.
ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் ஏலக்காய்த் தூள், கேசரி பவுடரை சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பழக்கேசரி ரெடி.
இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.
- பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிரண்டைத் துவையலை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கட்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
சாக்லேட் சிரப் - 1/4 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
செர்ரி பழம் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும்.
அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.
இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.
பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம்.
எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்
- கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி.
- கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
கம்பு - 400 கிராம்
இட்லி அரிசி - 400 கிராம்
உளுந்தம் பருப்பு - 200 கிராம்
வெந்தயம் - 2 ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்ந்த கம்பினை முதலில் அலசி, சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
கம்பு ஊற வைத்த இரண்டு மணி நேரம் கழித்து, இட்லி அரிசியை கழுவி, கம்புடன் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஊற வைக்கவும்.
உளுந்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் நன்கு அலசி சுமார் 1மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் கம்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி, கிரைண்டரில் முதலில் அரிசி மற்றும் கம்பினை நைசாக அரைத்து எடுக்கவும.,
பின்னர் உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை நைசாக தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும்.
தேவையான உப்பினை, கம்பு மற்றும் அரிசி மாவினை தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் மாவில் சேர்த்து, ஒருசேர அரைத்ததும் தோண்டவும்.
பின்னர் இரண்டு மாவினையும் ஒருசேரக் கரைத்து, ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லில் புளித்த மாவினை மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
லேசான பச்சைநிறத்தில் சுவையான கம்பு தோசை தயார்.
இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் உள்ளிட்டவைகள் பொருத்தமாக இருக்கும்.
- சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
ப.பட்டாணி - ஒரு கைப்பிடி
பெ.வெங்காயம் - 1
கேரட் - 1
குடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஐஸ் குச்சிகள் - 5
செய்முறை :
வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட் துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.
பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.
- குழந்தைகளுக்கு காலிபிளவர் சில்லி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
மைதா - அரை கப்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலி பிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த லட்டு மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் திடீரென வந்தால் இந்த லட்டு செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 2 தேகரண்டி
முந்திரி, திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 3 (பொடித்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
எளிய முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.
- இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
- சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் இந்த காபியை அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்கு - ஒரு துண்டு,
கருப்பட்டி - தேவையான அளவு,
துளசி - கைப்பிடி.
செய்முறை :
துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.
இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
- இது வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி.
- நிலக்கடலை மிட்டாய் எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 200 கிராம்,
நெய் - 200 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
முந்திரி, பாதாம் - தேவையான அளவு,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - சிறிதளவு.
செய்முறை :
வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.
சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1/4 கப்
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/3 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்
இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.
இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்






