என் மலர்
சமையல்
- காலையில் செய்த அடை மீந்து விட்டால் கவலைப்படாதீங்க.
- மீந்த அடையை வைத்து சூப்பரான உப்புமா செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
அடை - 3
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
புளி கரைச்சல் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடையை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கலவை உதிரியாக வந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.
சூப்பரான அடை உப்புமா ரெடி.
- கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
- ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
எலுமிச்சை பழம் - ஐந்து
பச்சை மிளகாய் - பத்து
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
கடுகு - ஒரு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.
- எல்லோருக்கும் ஹோட்டல் சட்னி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
சீரகம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
- சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த ரெசிபி அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 பெரிய துண்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை:
* கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.
- துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
- துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
உப்பு - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 6,
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து உப்பு, காய்ந்த சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான துவரம் பருப்பு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள குருமா சுவை கொடுக்கும்.
- சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை.
- கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 2 கப்
வெல்லம் - 2 கப்
பாதாம் - 10
ஏலக்காய் - 10
பிஸ்தா - 10
முந்திரி - 10
திராட்சை - 10
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை :
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.
- வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.
- முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைகேற்ப
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை
முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
கோஸ் - 1/2 கப்
குடை மிளகாய் - 1
சீஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் - 12 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சீஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கோஸ், குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.
- தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
- குழந்தைகளுக்கு இந்த மீன் மிளகு மசாலா மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
கறிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.
- காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
செய்முறை
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு காலிஃபிளவரைப் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
காலிஃப்ளவர் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்த மிளகு சீரகம் தூள் தூவி இறக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் பெப்பர் பிரை ரெடி.
- வீட்டில் இருக்கும் வாழைப்பழங்களை கொண்டே இந்த ரெசிபியை செய்யலாம்.
- இந்த ரெசிபி ஆரோக்கியமானது, சத்தானது.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1
சாக்லேட் கிரீம் - தேவைக்கேற்ப
முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தா - விருப்பம் போல்
செய்முறை
முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.
பழத்தின் மீது சாக்கோ கிரீம் தடவுங்கள்.
அதன் மேலே, முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சிறிதாக நொறுக்கி தூவினால் இனிப்பான வாழைப்பழ ஸ்நாக்ஸ் ரெடி.
- ஊறுகாய் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம்.
- பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை.
பண்டையகாலம் முதலே, ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. சிறு அளவு ஊறுகாய், முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சலித்தவர்களுக்கு, வித்தியாசமான சுவை கொண்ட 'சிக்கன் ஊறுகாய்' செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் 'சிக்கன் ஊறுகாய்' செய்முறை இதோ...
பொரிப்பதற்குத் தேவையானவை:
எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கிராம்
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கத் தேவையானவை:
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ¼ கப்
கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி
வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - அரை மூடி
தாளிப்பதற்குத் தேவையானவை:
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.
பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும்.
பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.






