என் மலர்tooltip icon

    சமையல்

    • ஜவ்வரியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ஜவ்வரிசியில் தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - ஒன்றரை கப்,

    ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 4,

    கடுகு - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

    முதலில் அரிசியை ஆட்டவும்.

    பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி தோசை ரெடி.

    • நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 ஆழாக்கு

    பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு

    தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    * அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது) அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும். ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும்.

    * பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.

    • நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் சத்யா ஸ்பெஷல் அவியல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சௌசௌ - 150 கிராம்

    உருளைக்கிழங்கு - 150 கிராம்

    கேரட் - 150 கிராம்

    பூசணிக்காய் - 150 கிராம்

    வாழைக்காய் - 150 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தேங்காய் - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 4

    தயிர் - 1/2 கப்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * காய்கறிகள், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

    பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.

    * இப்போது சுவையான அவியல் ரெடி!!!

    * அவியல் தொக்கு போல் வேண்டும் என்பவர்கள் காய்கறி தண்ணீரை வற்ற விடாமல் தேங்காய் சேர்த்து செய்ய வேண்டும்.

    • ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான ரெசிபிக்கள் சமைக்கப்படும்.
    • இன்று இதில் ஒன்றான ஓலன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்

    தட்டைப்பயறு - 1-2 கப்

    பச்சை மிளகாய் - 2

    மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கி கொள்ளவும்.

    * நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

    குறிப்பு

    * நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

    * கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

    * சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

    • ஓணத்தின் ஸ்பெஷலே அடை பிரதமன் தான் .
    • அதனை மிக எளிமையாக செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி அடை - 100 கிராம்

    வெல்லம் - 200 கிராம்

    நீர்த்த தேங்காய் பால் - 200 மிலி

    கெட்டியான தேங்காய் பால் -200 மிலி

    தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    சுக்குத் தூள் - தேவையான அளவு

    ஏலக்காய் பொடி - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.

    அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.

    இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

    கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

    நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

    இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

    • மைதா மாவில் சூப்பராக தோசை செய்யலாம்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருள்கள் :

    மைதா மாவு - 1 கப்,

    பச்சரிசி மாவு - முக்கால் கப்,

    உப்பு - தேவையான அளவு,

    சின்ன வெங்காயம் - 15,

    பச்சை மிளகாய் - 2,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    கடுகு - அரை டீஸ்பூன்,

    சீரகம் - கால் டீஸ்பூன்,

    மிளகு - 10,

    கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,

    எண்ணெய் - (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக உடைத்துக்கொள்ளவும்.

    மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும்.

    அத்துடன் கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

    சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

    வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

    • மக்கன் பேடாவை கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே செய்யலாம்.
    • இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம்

    வெண்ணெய் - 1 ஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    எண்ணெய் - தேவையான அளவு

    பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

    பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு - 1 ஸ்பூன்

    சாரைப் பருப்பு - 1 ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    சர்க்கரை பாகு செய்ய

    சர்க்கரை - 1 1/2 கப்

    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    * மைதாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சமையல் சோடாவை போட்டு அதனுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை கலக்கவும்.

    * மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

    * பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை போட்டு அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை தயாரித்துக் கொள்ளவும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    * உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாறினால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

    • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வது மிகவும் நல்லது.
    • இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

    அரைக்க:

    பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

    வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர் மாவை சப்பாத்தியாக திரட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.

    அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

    • சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

    உருளைக்கிழங்கு - 4

    பச்சை மிளகாய் - 3

    பெரிய வெங்காயம் - 2

    கறிமசாலா - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    மிளகாய் பொடி - தேவையான அளவு

    நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    கருவாப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    மைதா மாவு - 1 கப்

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.

    • குழந்தைகளுக்கு திடீரென ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    அப்பளம் - 10,

    காய்கறி பொரியல் - 50 கிராம்,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும்.

    இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும்.

    இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பளம் சமோசா ரெடி.

    • காலையில் ஆரோக்கியமான உணவிற்கு இந்த சாண்விச் சாப்பிடலாம்.
    • இந்த சாண்விச்சை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    முட்டை - 2

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    பிரெட் - 2

    சீஸ் ஸ்லைஸ் - 2

    சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பிரெட்டின் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல் சில்லி ஃபிளேக்ஸ் தூவி மற்றொரு பிரெட்டால் மூடவும்.

    தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பிரெட்டை வைத்து ஒரு புறம் ரோஸ்ட் ஆனதும் மறுபுறம் திருப்பி போட்டு சுற்றி வெண்ணெய் விட்டு இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்த பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி முட்டை சற்று வெந்ததும் பிரெட்டை நடுவில் வைத்து முட்டையை அதன் மேல் மடித்து போட்டு பின்னர் திருப்பிபோட்டு வேக வைக்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் தவாவில் இருந்து இறக்கி இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி.

    • வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம்.
    • உணவகங்களில் வாங்கும் சாண்ட்விச்கள் கொழுப்பு, கலோரி மிக அதிகமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4

    சோளம் - 1/4 கப்

    முட்டைக்கோஸ் - 50 கிராம்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

    மயோனைஸ் - 2 தேக்கரண்டி

    வெண்ணெய் - 4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

    சீஸ் - 4 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கோஸ், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

    கடைசியாக முட்டைக்கோஸ் சேர்த்து, இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

    இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சப்பாத்தியை உங்கள் விருப்பப்படி வெட்டி ஒரு துண்டை எடுத்து அதில் காய்கறி கலவையை எடுத்து நிரப்பவும்.

    அதன் மீது சீஸ் சேர்த்து சப்பாத்தியை பாதியாக மடியுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் செய்து வைத்த சப்பாத்தி சாண்ட்விச்களை வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது பொன்னிறமாகும் வரை இருபுறமும் சமைத்து பரிமாறவும்.

    ×