search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பீப் சமோசா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பீப் சமோசா

    • சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

    உருளைக்கிழங்கு - 4

    பச்சை மிளகாய் - 3

    பெரிய வெங்காயம் - 2

    கறிமசாலா - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    மிளகாய் பொடி - தேவையான அளவு

    நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    கருவாப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    மைதா மாவு - 1 கப்

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.

    Next Story
    ×