search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் செய்யலாம் வாங்க..
    X

    ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் செய்யலாம் வாங்க..

    • ஓணத்தின் ஸ்பெஷலே அடை பிரதமன் தான் .
    • அதனை மிக எளிமையாக செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி அடை - 100 கிராம்

    வெல்லம் - 200 கிராம்

    நீர்த்த தேங்காய் பால் - 200 மிலி

    கெட்டியான தேங்காய் பால் -200 மிலி

    தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    சுக்குத் தூள் - தேவையான அளவு

    ஏலக்காய் பொடி - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.

    அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.

    இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

    கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

    நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

    இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

    Next Story
    ×