என் மலர்tooltip icon

    சமையல்

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • சிறுதானியங்களில் நிறைய தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன.
    • அரிசியில் இருப்பதைவிட இதில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 100 கிராம்,

    இட்லி அரிசி - 100 கிராம்,

    உளுந்து - 25 கிராம்,

    வெந்தயம் - அரை தேக்கரண்டி,

    கருப்பட்டி - 200 கிராம்,

    இளநீர் - அரை கப்.

    செய்முறை:

    குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.

    புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.

    கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

    ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி சாப்பிடலாம்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி இது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,

    வெங்காயம், தக்காளி - தலா 1,

    நறுக்கிய பச்சைமிளகாய் - 4,

    உப்பு - தேவைக்கு,

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,

    கறிவேப்பிலை - 10.

    செய்முறை

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் கோதுமை சேமியா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.

    பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை சேமியா கிச்சடி ரெடி.

    • இந்த இட்லி பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    இறால் கருவாடு - 250 கிராம்

    காய்ந்த மிளகாய் - 10

    சின்ன வெங்காயம் - 7

    பூண்டு - 8 பல்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 200 கிராம்

    புளி - எலுமிச்சை அளவு

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.

    இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    • இந்த ஸ்வீட் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது.
    • இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3,

    பால் - 1 கப் ,

    சர்க்கரை - 5 ஸ்பூன் ,

    ஏலக்காய்பொடி - சிறிதளவு,

    பாதாம், பிஸ்தா - 10 கிராம்

    செய்முறை

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.

    முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும்.

    ஆறவைத்த பாலை முட்டையில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.

    அதன்பின் அதில் பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.

    அதனை மூடி 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

    அடுத்து சூடு ஆறியதும் இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

    இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.

    குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

    தேவையான பொருட்கள்

    பால் - 1/2 லிட்டர்,

    ரோஸ் மில்க் எசென்ஸ் - 100 மிலி,

    சர்க்கரை - 200 கிராம்,

    ஏலக்காய் தூள் - 10 கிராம்.

    செய்முறை

    பாலை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்.

    சர்க்கரை, ஏலக்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைக்கவும்.

    பால் நன்றாக ஆறியதும் அதில் ரோஸ் மில்க் எசென்ஸ், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும் போது ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.

    தேவைப்பட்டால் பாதாம் பருப்பை சீவி அதில் அலங்கரித்து தரலாம்.

    • கார்த்திகை தீபமான இன்று இறைவனுக்கு படைக்க தேங்காய் பால் பாயாசம் செய்யலாம்.
    • இந்த பாயாசம் செய்வது சுலபம், சுவையோ அருமை.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    வெல்லம் - ஒரு கப்

    பச்சரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டீஸ்பூன்

    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    காய்ந்த திராட்சை - 10

    செய்முறை :

    முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

    இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!.

    • கார்த்திகை தீபத்திற்கு நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை செய்யலாம்.
    • இந்த ரெசிபி ருசியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 2 கப்

    வெல்லம் பொடித்தது - 1 கப்

    பால் - 2 கப்

    தேங்காய்த்துருவல் - 1 கப்

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    ஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

    4 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சிறிது சிறிதாக போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

     சூப்பரான வெல்லம் பால் கொழுக்கட்டை ரெடி.

    குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதாரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.

    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
    • சளி, இருமல், காய்ச்சலை குணமாக்கும்.

    தேவையான பொருட்கள் :

    தூதுவளை இலைகள் - 10.

    பூண்டு - 5 பல்,

    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு

    உப்பு, மிளகுத்தூள் தேவைக்கு, துளசி இலைகள் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்).

    செய்முறை:

    வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

    • இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த முட்டை - 5

    வெங்காயம் - 2

    தக்காளி - 3

    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க

    உப்பு - சுவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும்.

    வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும்.

    பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.

    பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

    பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!.

    • இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
    • இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.

    தேவையான பொருட்கள்

    காய்ந்த மிளகாய் - 10

    பூண்டு பல் - 3

    புளி - நெல்லிக்காய் அளவு

    உப்பு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    செய்முறை

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    ×