என் மலர்tooltip icon

    சமையல்

    • சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள்.
    • வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு முட்டை, மீன் போன்றவற்றை கொடுப்பதில் தாய்மார்களுக்கு பெரும் சாவாலாக உள்ளது. மீன் மற்றும் முட்டையில் அதிகப்படியாக சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள். ஆனால் மீன் வறுவலில் அதிக எண்ணெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எந்த உணவாக இருந்தாலும் அதை வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் மீன் மற்றும் முட்டையை எப்படி குழந்தைகளுக்கு எளிய முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    சதை அதிகம் உள்ள மீன் - 3

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    பச்சைமிளகாய் - 5

    கறிவேப்பிலை - 2 கொத்து

    எண்ணெய் - தேவையான அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நன்கு சதை பகுதி உள்ள மீனை சுத்தம் செய்து கொள்ளவும்

    • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    • இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருந்த மீன்களை வைத்து நன்கு ஆவி வரும் வரை (15 நிமிடம்) வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    • வேக வைத்த மீன்களை எடுத்து பொடி பொடியாக மீன் முள்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ளவும்.

    • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    • பின்னர் வதக்கிய இந்த கலவையுடன் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.

    • இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

    • பின்னர் இந்த மீன் கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.

    • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

    • முட்டையுடன் தயாரித்து வைத்திருந்த முன் கலவையை சேர்த்து நன்கு டிப் செய்யவும்.

    • இதனுடன் முட்டைக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.

    • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடு ஆனதும். சிறிது எண்ணெயை கல்லின் மீது பூசவும்.

    • பின்னர் முட்டை ஆம்லெட் செய்வதற்கான கலவையை எடுத்து கல்லில் ஊற்றவும்.

    • ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பவும்.

    • இதோ இப்போது சுவையான ஃபிஷ் ஆம்லெட் ரெடி.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவும் ஆகும்.

    • டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
    • பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    டோஃபு பன்னீர் - 400 கிராம்

    கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப

    மைதா மாவு - தேவைக்கேற்ப

    பிரட்தூள்கள் - தேவையான அளவு

    இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - வறுக்க

    மிளகுத்தூள் - சுவைக்கு ஏற்ப

    உப்பு - ருசிக்கேற்ப

    செய்முறை:

    • டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கண்ணாடி பவுளில் வெட்டி வைத்துள்ள டோஃபு பன்னீர், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

    • பின்னர் இந்த பன்னீர் கலவையை ஒரு 15 நிமிடம் ஊறவிடவும்.

    • ஒரு தட்டில் மைதா மாவு, மற்றொரு தட்டில் பிரட் தூள்கள், ஒரு பவுளில் கார்ன்ஃப்ளார் மாவுவை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளுங்கள்

    • டோஃபு பன்னீர் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் முதலில் மைதா மாவில் டிப் செய்து பின்னர் கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து எடுத்து கொள்ளவும்.

    • கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்த டோஃபு பன்னீரை பிரட் தூளில் நன்கு அனைத்து பக்கங்களில் பிரட்டி எடுக்கவும்.

    • ஒரு வாணலில் தேவையான எண்ணெய் ஊறி பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.

    • டோஃபு பன்னீர் நகட்ஸ் ரெடி.

    • இதனுடன் டெமேட்டோ சாஸ் வைத்து சாப்பிட கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விருப்பி சாப்பிடுவார்கள்.

    • பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.
    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 10

    தக்காளி - 6

    காஷ்மீர் மிளகாய் - 50 கிராம்

    குடமிளகாய் - 4 வண்ணங்களில்

    வெங்காயம் - 2

    இஞ்சி - 2 துண்டு

    பூண்டு - 15 பல்

    வெண்ணெய் - தேவையான அளவு

    எண்ணெய் - பொறிக்க

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் ஓடை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • தக்காளி மற்றும் காஷ்மீர் மிளகாய் இரண்டையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அறைத்துக் கொள்ளவும்.

    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.


    • ஒரு வாணயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் சுத்தம் செய்து வைத்திருந்த நண்டை அதன் ஓடுடன் பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    • வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

    • பின்னர் பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.

    • பிரட்டிய நண்டில் அரைத்து வைத்திருந்த தக்காளி காஷ்மீர் மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.

    • இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு நண்டு மற்றும் அதன் ஓடு இரண்டு ஒன்றாக வைத்து பாறிமாறுங்கள் சுவையோ ஆஹா... ஓஹோ... என்று இருக்கும்.

    • மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
    • மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய சீஸ் - கால் கப்

    உருளைக்கிழங்கு - 4

    பிரெட் துண்டுகள் - 8

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பூண்டு - 4 பல்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி - ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்)

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

    சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்

    பால் - ஒரு கப்

    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக்கவும். இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக நறுக்கவும். நறுக்கிய பிரெட் துண்டுகளின் மேல் உருளை மசாலாவைத் தடவி, அதன் மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்னர் பரிமாறவும்.

    • தோசையை புரட்டி போட அவசியம் இல்லை.
    • ரவை தோசை பதத்திற்கு கரைத்து கொண்டால் இன்னும் சிறப்பு.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்

    அரிசி மாவு - ¼ கப்

    கோதுமை மாவு - ¼ கப்

    வெங்காயம் - 1 நறுக்கியது

    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது

    இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலைகள் - 1 தேக்கரண்டி

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பத்திரத்தில் ஓட்ஸ், கோதுமைமாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

    இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ரவை தோசை பதத்திற்கு கரைத்து கொண்டால் இன்னும் சிறப்பு.

    பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும். பின்னர் சிறிது எண்ணெய் தடவவும். ஒரு குழி கரண்டி அளவு ஓட்ஸ் மாவை எடுத்து தோசை கல்லில் நல்லா வட்ட வடிவமாக சூடவும். இந்த தோசையை மிதமான தீயில் வைத்து செய்யவும். தோசை பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம். இந்த தோசையை புரட்டி போட அவசியம் இல்லை.

    • சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால்கள் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 5 முதல் 6 எண்

    வேர்க் கடலை - 50 கிராம்

    முந்திரி - 7

    பிரிஞ்சி இலைகள் - 2

    கிராம்பு - 2

    இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்

    பச்சை ஏலக்காய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு - 2 பின்ச்

    செய்முறை:

    வேர்க்கடலையை சிறிது நேரம் (20 நிமிடம்) ஊறவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸர் சாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அறைத்து எடுத்தக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், இலவங்கப்ட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் முந்திரியை சேர்க்கவும், பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்தவுடன் அறைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை அதனுடன் சேர்ந்து 5 நிமிடம் கிளறவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்ந்து பரிமாறவும்.

    • சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
    • பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள்.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு பழம் ஆகும். பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பலாபழத்தை வைத்து செய்யும் கூட்டானது செய்வதற்கு எளிமையானது மட்டும் இன்றி மிக மிக சுவையானதும் கூட.

    தேவையான பொருட்கள்:

    பலாப்பழம் (சக்கை/பழப்பழம்) - 1 கோப்பை

    காரமணி - 2 டீஸ்பூன்.

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.

    உப்பு - 1 தேக்கரண்டி

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    சீரகம் - 1 தேக்கரண்டி

    சிவப்பு மிளகாய் - 1 எண்

    தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி

    உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு) - 1 தேக்கரண்டி

    சிவப்பு மிளகாய் - 2 எண்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    செய்முறை:

    * காரமணியை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பலாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    * 1/4 கப் தண்ணீரைப் பயன்படுத்தி காரமணியை 3 விசில் வரை அழுத்தி சமைக்கவும்.

    * அடி கனமான பாத்திரத்தில், வெட்டிய பலாப்பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    * கடாயை மூடி சுமார் 6 முதல் 8 நிமிடங்கள் சமைக்கவும்.

    * சமைத்த காரமணியை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

    * இதற்கிடையில், தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை ஒரு மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.

    * இந்த கலவையை வேகவைத்த பலாப்பழத்தின் மீது ஊற்றவும். நன்கு கலந்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை இளங்கொதிவாக்கவும்.

    * ஒரு சிறிய வாணலியை சூடாக்கி, 1 தேக்கரண்டி சேர்க்கவும். எண்ணெய் மற்றும் கடுகு விதைகள். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு), சிவப்பு மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த டெம்பரிங் சக்கா கறி மீது ஊற்றவும். வெப்பத்தை அணைக்கவும்.

    * சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தேங்காய் துருவல் உலக வாசனையை வீசுகிறது. இதை கறி மீது ஊற்றவும்.

    * இப்போது சக்க கூட்டு கறி பிரசாதம் மற்றும் பரிமாற தயாராக உள்ளது.

    • பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
    • மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 1

    தக்காளி - 1

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 1டீஸ்பூன்

    கடுகு - 1/4டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு


    செய்முறை:

    பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.

    தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    எல்லாம் ஒரு வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

    இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.

    • வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
    • வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.

    தினை: கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் துணைபுரியும். பிரமாதப் பலன்களைத் தரும் தினையில் உருவான பலகாரங்கள் நம் உடல்நலம் காக்கும்.

    கேழ்வரகு: கேழ்வரகு, வெப்பமான பகுதிகளில் விளையும் தன்மை கொண்டது. அரிசி, கோதுமையை விட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    சாமை: அரிசியை விட இதில் நார்ச்சத்து பலமடங்கு உள்ளது. அதேபோல மற்ற சிறுதானியங்களை விட சாமையில் இரும்புச்சத்தும் அதிகம் உண்டு. இது, ரத்தசோகையை நீக்க உதவும். இதில் இட்லி, மிளகுப் பொங்கல் (வெண் பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.

    வரகு: இது பல நாடுகளின் பாரம்பரிய உணவு. வறட்சியான நிலத்தில் கூட விளையும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு அதிக சக்தியளிக்கும். அரிசி, கோதுமையை விட இதில் நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. இதில் புட்டு, வெண் பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாக செய்ய முடியும்.

    கம்பு: இந்தியா முழுக்கப் பயிர் செய்யப்படும் தானிய வகை இது. வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும். வளரும் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.


    சோளம்: இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் இது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடையை அதிகரிக்க உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.

    சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளை தயாரிக்கலாம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வோம். நமது பாரம்பரியத்தைப் போற்றி வளர்ப்போம்.

    • துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கி

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    வறுத்து அரைக்க:

    பட்டை - 2

    கிராம்பு - 3

    ஏலக்காய் - 3

    மராட்டி மொக்கு -1

    அன்னாசி பூ -1

    கல்பாசி - சிறிதளவு

    வரமிளகாய் - 4

    தனியா - 2 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    கருவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி- 10

    பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்

    கசகசா - 1 ஸ்பூன்

    துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை:

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம் 1 ஸ்பூன், பெருஞ்சீரகம் 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அதே கடாயில் 5 ஸ்பூன் துருவிய தேங்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து, கருவேப்பிலை போட்டு, வர மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    இதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து வறுத்து அரைத்த பொடியை சேர்க்க வேண்டும். சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும். இடையிடையே கலந்து விட்டு, 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான சிக்கன் வறுவல் தயார்.

    • மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.
    • வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தேவையான பொருட்கள் :

    மீன் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 10

    மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்

    கரம்மசாலா பொடி - 2 ஸ்பூன்

    பூண்டு - 4

    இஞ்சி - சிறிது

    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது

    கறிவேப்பிலை - 2 கொத்து

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 ஸ்பூன்


    செய்முறை:

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிசறி தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    பிறகு மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.

    அதன் பிறகு வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி விட வேண்டும்.


    நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது இலையை மடக்கி நன்றாக பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது ரெடி. இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.

    • சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
    • சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    மஷ்ரூம் - 1/2 கிலோ

    சோள மாவு - 100 கிராம்

    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 முழுஅளவு

    பிரெஷ் கிரீம் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.

    பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

    சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    ×