என் மலர்
பொது மருத்துவம்
- மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று 2 வகை உண்டு.
- ராமலிங்க அடிகளார் கரிசலாங்கண்ணியை ஞான மூலிகை என்று கூறுகிறார்.
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை
சித்தர்களில் ஒருவரான ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் அருட்பிரகாச வள்ளலார் மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.
கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும். இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.
`கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்' என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்து காணப்படும்.
வெள்ளை கரிசலாங்கன்னி
வெள்ளை கரிசாலாங்கன்னி சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் ரத்தசோகை அல்லது உடலின் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலாங்கன்னி சாறு கலந்து கொடுத்துவந்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை உயரும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இந்த கரிசலாங்கன்னிக்கு உண்டு.
கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தம் மற்றும் தலை சார்ந்த அனைத்துபிரச்சினைகளும், இளநரையையும் சரி செய்யலாம்.
- நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை.
- புற்றுநோய்க்கு அற்புதமான மருந்து இந்த தலைச்சுருளி.
நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. பூச்சிகள் கடித்துவிட்டால் நாட்டு வைத்தியம் மூலமாக, அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இப்போது நாம் பார்க்கப்போகும் மூலிகை ஈஸ்வர மூலி, தலைச்சுருளி, பெருமருந்து உரிக்கொடி, ஆதிமூலம், தராசுக்கொடி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு அற்புதமான மருந்து இந்த தலைச்சுருளி. புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு பெரிதும் உதவும் இந்த தலைச்சுருளி. இது இதற்குமட்டுமல்ல சர்க்கரை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கால் பாதங்களில் எரிச்சல் இருப்பவர்களுக்கு இந்த தலைச்சுருளி மூலிகை பயன்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் காலில் ஆணி இருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த மருந்து. கால் ஆணி இருப்பவர்கள் ஒரு மண்டலம் இந்த மூலிகையை தடவி வந்தால் மறுபடியும் வராமல் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுக்கோளாறுகளை நீக்கும், இருமல் சலி, மூட்டுவலி நீங்க பயன்படுத்தபடுகிறது. ஆஸ்துமா நோயை குணபடுத்துகிறது
பாம்பு கடிக்கு சிறந்த தலைச்சுருளி மருந்தாக இலை சாறு கொடுக்கபடுகிறது. புண்களை ஆற்றுவதற்கு பயன்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளினால் ஏற்படும் நஞ்சை நீக்குவதற்கும் இந்த தலைச்சுருளி மூலிகை பயன்படுகிறது.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்த பொடியை டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
விஷம் இறங்குவதற்கு இந்த பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்து தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.
வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.
சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
- எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும்.
- ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
பொதுவாக நமது உடலின் உள்பகுதியில் உணவுக்குழாய்க்கும். வயிற்றுக்கும் இடையே ஒரு வால்வு உள்ளது. இந்த வால்வு பலவீனம் அடையும்போது வயிற்றில் இருக்கும் அமிலம் மேலே வருகிறது. இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் பணியைத் தான் வால்வு செய்யும்.
ஆனால் அது பலவீன டைந்து விடுவதால்தான் நாம் சாப்பிட்ட பின்னர், வயிறு முழுவதும் நிரம்பிவிடும் நேரத்தில் அந்த அமிலம் உணவுடன் கலந்து மேலே வருகிறது. இதனால்தான் அடிக்கடி எதுக்களிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஜீரணத்துக்கான பிரச்சினை மட்டும் இல்லை. அந்த வால்வு பலவீன மடைந்து விடுவதால்தான் இதுபோன்று ஏற்படுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
அமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள். இந்த மாதிரியான உணவுகள் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டுபண்ணுகிறது. சாலட் போன்றவற்றில் சுவையூட்ட பயன்படுத்தும் வினிகர் கூட இந்த பிரச்சினையை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தலாம்.
காரமான உணவுகள், தக்காளி, பால்பொருட்கள், பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் ஜீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள் சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்காதீர்கள். நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
- மாடிப்படி ஏற முடியாது அத்தனை சிரமம்.
- உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம்.
தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் `சுள்'ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூட காலை எட்டு வைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்.
ஆனால், இந்த சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச்செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்த பிரச்சினைக்கு `பிளான்டார் பேசியைட்டிஸ்' என்று பெயர்.
குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க `பர்சா' எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு `கால்கேனியல்ஸ்பர்' என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.
சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். 30 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது.
பெற்றோருக்கு வந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி `வார்ம்அப்' பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.
கரடுமுரடான செருப்புகளை அணிபவர்களுக்கும் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். இன்றைய பெண்களில் பலரும் `ஹைஹீல்ஸ்' செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்குச்சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.
இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.
- அரிசி, பிரீபயாடிக் பண்புகளை கொண்ட உணவு.
- ஹார்மோன் சமநிலைக்கு வித்திடும்.
அரிசி சாதம் சாப்பிடுவது பசியை போக்கி வயிறை நிரப்பும், இதனால் எந்தவொரு ஆரோக்கிய நன்மையும் கிடைப்பதில்லை, விரைவாகவே உடல் எடை அதிகரிப்புக்குத்தான் வழிவகுத்துவிடும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த காரணத்திற்காக உணவில் அரிசியை பரிந்துரைக்காத ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் உள்ளனர்.
மறுபுறம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அரிசி சாதம் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறார். இரவு உணவில் அரிசியும், பருப்பும் ஏதாவதொரு வடிவில் கண்டிப்பாக இடம் பிடித்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.
அரிசி, பிரீபயாடிக் பண்புகளை கொண்ட உணவு. இது உங்களுக்கு மட்டுமல்ல, உடலுக்குள் இருக்கும் பல்வேறு வகையான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறது.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை உண்பதில்தான் பிரச்சினை இருக்கிறது என்ற நிலையில் அதற்கு மாற்றாக கைகுத்தல் அரிசியை உபயோகிக்கலாம். அந்த அரிசியில் கஞ்சி முதல் இனிப்புகள் வரை அனைத்து வகையான உணவுகளையும் சமைத்து உட்கொள்ளலாம்.
பருப்பு வகைகள், தயிர், நெய், இறைச்சி என அரிசி சாதத்துடன் மற்ற உணவு வகைகளை சாப்பிடும் விதத்தில், சரியான அளவில் உட்கொள்ளும்போது நன்மையே கிடைக்கும். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.
அரிசிக்கும் வளர்சிதை மாற்ற நோய் அறிகுறிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இரவில் மிதமான அளவில், எளிதில் ஜீரணமாகும் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதனை அரிசி பூர்த்தி செய்துவிடும். இட்லி, தோசை என ஏதாவதொரு வடிவத்தில் உட்கொள்ளலாம். அது சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஹார்மோன் சமநிலைக்கு வித்திடும். இவை குறிப்பாக வயதானவர்கள், இளம் வயதினருக்கும் தேவைப்படுகிறது.
அரிசி சாதம் சாப்பிடுவது சருமத்திற்கும் சிறந்தது. அதிலிருக்கும் புரோ லாக்டின், சருமத்தில் தென்படும் பெரிய துளைகளை சீர் செய்யும். முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.
- உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை.
- பால்வினை பாதிப்புகளையும் சரியாக்கும்.
சீமை அகத்தி, இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.
உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், ரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்யவும், சுவாசக்கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், பெண்களின் ரத்த சோகை, மாதாந்திர பாதிப்புகள் இவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது சீமை அகத்தி. மற்றும் பால்வினை பாதிப்புகளையும் சரியாக்கும்.
சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு, சிலருக்கு சிறுநீர் கழிக்க முயற்சித்தாலும், சிறுநீர் கழிக்க முடியாமல், வேதனையில் தவிப்பார்கள். இதற்கு தீர்வுகாண சீமை அகத்தியின் மஞ்சளும் பழுப்பும் கலந்த வண்ண மலர்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் அந்த மலர்களை நீரில் இட்டு, நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை தினமும் பருகி வர, சிறுநீர் கழிக்க முடியாமல் அடைப்பை ஏற்படுத்திய சிறுநீரக பாதிப்புகள் எல்லாம் விலகி, சிறுநீர் முழுமையாக வெளியேறும். சிறுநீர்ப்பையில் தேங்கிய நீர் முழுதும் வெளியேறி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.
விஷ பூச்சிகள் கடித்துவிட்டாலோ அல்லது அவற்றின் எச்சம் நம் மீது பட்டாலோ, உடலில் அரிப்பு உண்டாகி, அதை சொரிய, வீக்கமாகி, காயமாகி ஆறாத புண்ணாக மாறிவிடும். இதற்கு தீர்வாக, சீமை அகத்தியின் பசுமையான இலைகளை நன்கு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உடலில் அரிப்பு, ஆறாத புண் மற்றும் வண்டுகடி காயங்களின் மேல் தடவி வர, சில நாட்களில், விஷக்கடி பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறி விடும்.
சீமை அகத்தியை, உடலுக்குள் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். படர்தாமரை பாதிப்பை சரிசெய்ய, பசுமையான சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, தினமும் இருவேளை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.
சீமை அகத்திக்கீரை, பூஞ்சைத்தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் அடர்ந்த சிவப்பு வண்ண தேமல், அரிப்பு சொரி, சிரங்கு போன்ற இடங்களில் இந்த சீமை அகத்திக்கீரை 200 கிராம், குப்பை மேனி இலை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 2 துண்டு, மிளகு- 4 பல் ஆகியவற்றை நன்றாக இடித்து இதனை அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதனை தடவி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
- பிரசவித்த பெண்கள் அதிக சோர்வோடும், பலவீனமாகவும் காணப்படுவார்கள்.
- வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தீர்க்கும்.
பிரசவத்திற்கு பிறகு கருப்பை சுருங்குவது. குடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவற்றில் செரிமானக் கோளாறு முக்கியமானதாகும். இதனால் பிரசவித்த பெண்கள் அதிக சோர்வோடும், பலவீனமாகவும் காணப்படுவார்கள். செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு உதவும் உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்.

சீரகம்:
தைமால் எனும் ரசாயனமும், சில வகை அத்தியாவசிய எண்ணெய்களும் சீரகத்தில் உள்ளன. அவை உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி செரிமானத்தை துரிதப்படுத்துகின்றன. மேலும் இதில் உள்ள இரும்பு, கால்சியம், வைட்டமின் பி. ஆன்டி-ஆக்சிடன்டுகள் போன்ற சத்துக்கள், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் தடுக்கின்றன. ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்றாகக் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை மிதமான சூட்டில் குடித்து வந்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

வெந்தயம்:
நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அஜீரணம் மற்றும் வாயுக்கோளாறு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் பண்புகள் வெந்தயத்தில் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து, மலச் சிக்கலைத் தீர்க்கும். வெந்தயத்தில் வைட்டமின்கள் ஏ.சி.கே.கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம். போலிக் அமிலம் ஆகிய சத்துங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள மூலக்கூறுகள் வலி நிவாரணியாகவும் செயல்படும். ஒரு மஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும், அடுத்த நாள் காலையில் உணவுக்கு முன்பு அந்த தண்ணீரையும், வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

காய்கறிகள்:
பிரசவித்த பெண்கள் உணவில் நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள், கேரட், முருங்கைக்காய் ஆகியவை உடல் ஆரோக்கியத்தையும், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கக் கூடியவை. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளையும் சீர்படுத்தும். முளை கட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டியாக சமைத்து சாப்பிடலாம். இது தாய்க்கும்.குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்க உதவும்.

பூண்டு:
பிரசவித்த பெண்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவற்றுள் ஒன்று பூண்டு. இது தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு, உடலில் உள்ள கழிவுகளையும் முழுமையாக வெளியேற்றும்.
வெந்நீர்:
சாப்பிட்டவுடன் மிதமான சூடுள்ள தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் சீராகும். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.
தவிர்க்க வேண்டியவை:
அதிக காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளையும். காபி, குளிர்பானங்கள் போன்றவற்றையும் பிரசவித்த பெண்கள் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் செரிமான பிரச்சினைகளை உண்டாக்குவதோடு, மந்தத்தன்மையையும் ஏற்படுத்தும். பால் பொருட்களான தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.
- கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை குறைவாக உண்ணவேண்டும்.
- காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் 100 முதல் 150 கிராமுக்குள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். பழங்களிலும் இருக்கும் கார்போஹைட்ரேட்டும் உடலில் சேரும் பட்சத்தில் அதன் அளவு அதிகரித்துவிடும்.
எப்போது பழங்கள் சாப்பிடலாம்?
உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ, அல்லது காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ பழங்களை சாப்பிடலாம். பழங்களை நன்றாக மென்றுதான் சாப்பிட வேண்டும். பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் பழமாக உட்கொள்ளும்போது நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.
வெறுமனே பழமாக சாப்பிடாமல் அதனுடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் குளுக்கோஸாக மாற்றப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் குறையும். பழங்களுடன் பாதாம், புரதம் நிறைந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து உட்கொள்வதும் நல்லது. பன்னீர், வேர்க்கடலை போன்றவைகளை எப்போதாவது உட்கொள்வது நல்லது. இப்படி சாப்பிடுவது குளுக்கோஸ் வேகமாக உறிஞ்சப்படுவதை தாமதமாக்கும். பழங்கள் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
எந்த பழங்களை சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள்:
1. ஆப்பிள்
2. கொய்யா
3. ஆரஞ்சு
4. பப்பாளி
5. முலாம் பழம்
இந்த பழங்களில் இயற்கையாகவே கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக இருக்கும். அத்துடன் அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கும். அதிலும் போலேட், வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானவை. அவற்றின் தேவையை இந்த பழங்கள் நிவர்த்தி செய்துவிடும்.
* ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் பொட்டாசியம் இந்த பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
* செல்கள் வளர்ச்சி அடைதல், பழுதடைந்தால் சீர் செய்தல், காயத்தை குணப்படுத்துதல், பற்கள் மற்றும் ஈறுகளை பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவையான வைட்டமின் சி, கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
* சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், முலாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் இருந்து ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் போலேட் நிறைந்திருக்கிறது.
* இந்த பழங்கள் குறைவான கலோரிகளுடன் வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருகின்றன. இவற்றுள் நார்ச்சத்தும் உள்ளடங்கி இருக்கிறது. உணவு செரிமானமாவதற்கு அது உதவுகிறது. குடல் இயக்கத்தை பராமரிக்கவும் துணைபுரிகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து இதய நோயையும் தடுக்கிறது.
தவிர்க்க வேண்டிய பழங்கள்:
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஐந்து பழங்கள்:
1. மாம்பழம்
2. பலாப்பழம்
3. வாழைப்பழம்
4. சப்போட்டா
5. திராட்சை
இந்த பழங்களை சாப்பிட விரும்பினால் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள்:
* இந்த பழங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
* இந்த பழங்களில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வேண்டுமானால் உட்கொள்ளலாம். இந்த பழங்களின் சீசன் போது அதிகம் உட்கொண்டுவிட்டு நிறைய நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு அதிகரித்து அவதிப்படுகிறார்கள். ஒருவேளை இந்த பழங்களை உட்கொள்ள விரும்பினால் சாப்பிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குறைவாக உட்கொள்ளலாம். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மதியம் மற்றும் இரவில் அரிசி உணவு, சப்பாத்தி போன்றவற்றை குறைவாக உட்கொள்வதும் நல்லது.
* நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே உண்ணும் பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பாதிக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். எந்த பழம் ரத்தத்தில் சர்க்கரை அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து அதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும்.
- வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள்.
மழைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், சளி-இருமல் தொல்லையும், காய்ச்சல் நோய் பாதிப்புகளும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. தொண்டையில் உண்டாகும் மாற்றத்தை கண்டு சளி பிடிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அடிக்கடி மருந்து மாத்திரைகள் என்று பயன்படுத்துவதை விட காய்ச்சலின் ஆரம்பத்திலேயே, சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதனால், சளி-காய்ச்சல் தொல்லையின் வீரியத்தை குறைத்துவிடலாம். இதற்கென பிரத்தியேகமான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை. அதிக மெனக்கெடலும் தேவையில்லை. உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும். சாதாரண காய்ச்சல், சளி, தலைவலியாக இருந்தால் இந்த உணவு வகைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது சீரகம் போட்ட நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இதனால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நாள் முழுக்க அரை மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் நீரை குடிப்பதன் மூலம் உடலில் நச்சு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அதோடு காய்ச்சலின் போது உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வைரஸ், பாக்டீரியா கிருமித்தொற்று வேகமாக பரவக்கூடும்.

காலை உணவு
காய்ச்சல் காலங்களில் பிரட் உணவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆவியில் வேக வைத்த இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த துவையல், தாளிப்பு தேவையெனில் நல்லெண்ணெய்யில் தாளித்து தொட்டு கொள்ளலாம். இதனால் வாய் கசப்பு நீங்கும். காரத்துக்கேற்ப புளி, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.
வயிறார சாப்பிடக்கூடாது. வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு இட்லிகள் வரை சாப்பிட வேண்டும். அரை வயிறாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாந்தி, குமட்டல் இருக்காது. அதேபோன்று இளஞ்சூட்டில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இளஞ்சூட்டில் நீர் குடிக்க வேண்டும்.
மதிய உணவு
புழுங்கலரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ரவை போன்று பொடியாக மாற்றவும். இரண்டு டம்ளர் நீருக்கு கால் டம்ளர் அரிசி ரவை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதில் சீரகப்பொடி, பெருங்காயம் சிட்டிகை, உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். தேவையெனில் தொட்டுகொள்ள புதினா சட்னி எடுத்துகொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரக நீரை குடிக்க வேண்டும். பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்.
அரிசி சாதத்துடன் கூடிய மிளகு ரசம் என்பது நிச்சயம் நன்மையே என்றாலும் சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் முதல் இரண்டு நாட்கள் இதை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில்
அரை வயிறு உணவு என்பதால் வயிற்றில் பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். மாலையில் இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் 5 உலர் திராட்சை, 2 ஏலக்காய், 3 மிளகு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும். பாகுக்கு முந்தைய பதம் வரும் போது அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
இரவு உணவு
ஆவியில் வேகவைத்த உணவு அல்லது கஞ்சி போதுமானது. அதிக காய்ச்சல் இல்லையெனில் எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். இரவு நேரத்தில் துவையல் சேர்க்க வேண்டாம். பால், காபி, தேநீர் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இடையில் பசி எடுத்தாலும் இளஞ்சூடான சுக்கு மல்லி காபி அல்லது வெந்நீர் மட்டும் அருந்துங்கள். பகல் வேளையில் 4 அல்லது 5 உலர் திராட்சையுடன் மிளகு 3 சேர்த்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாறை விழுங்குங்கள். தொண்டை கரகரப்பு, இருமல் வேகமாக குறையும்.
மேற்கண்ட இந்த உணவு பட்டியல் தான் ஒரு நாளுக்கான உணவாக இருக்க வேண்டும். இந்த உணவு உங்களின் சளி, அதனால் உண்டான இருமல், காய்ச்சலின் தீவிரத்தை வெகுவிரைவாக குறைத்துவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் திட உணவுகள் அதிலும் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
அதிகப்படியான சளி, காய்ச்சல் பிரச்சினை இருக்கும் போது நாள் முழுக்க இதை கடைப்பிடித்தால் அடுத்த நாள் தூங்கி எழும்போது உடல் சோர்வு நீங்கியிருப்பதை உணர்வீர்கள். ஏனெனில் இவை எல்லாமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியவை. பெரும்பாலும் தொற்று தீவிரமாகாமல் தடுத்துவிடும் என்பதால் நிச்சயம் இது கைகொடுக்கும்.
சூப் வகை
சளி, இருமலின் போது சூடாக குடிக்கும் காபி, தேநீரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து காபி குடிக்கலாம். சிறுவர்களுக்கு சூப் கொடுக்க வேண்டும்.
முருங்கைக்கீரை காம்புகளை வேகவைத்து மசித்து வடிகட்டி அதில் சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சிட்டிகை சேர்த்து கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை சேர்த்து தாளித்து கொடுக்கவும். சிறு குழந்தைகளாக இருந்தால் கொத்தமல்லி, புதினாவின் சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த நேரத்தில் காய்கறிகள் சூப்பை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சளியை முறிக்கும் முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.

கூடுதல் கவனம்
தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் மிக அவசியம். காலையும், மாலையும் கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தலையை உயரமாக தலையணையில் வைத்து படுக்க வேண்டும். அதிக தலைபாரம், சளி, காய்ச்சல் மூன்றும் இருக்கும் போது மூச்சுவிடுவதிலும் சிரமம் இருக்கும். படுக்கை அறையில் மண்சட்டியில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி என அருகில் கிடைக்கும் மூலிகைகளை கைப்பிடி சேர்த்து அதிக சூட்டில் அருகில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் சூடான ஆவியை மூக்கினுள் நன்றாக இழுக்க வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்ய வேண்டும்.
படுக்கையிலேயே கிடக்காமல் அறைக்குள் நடக்க வேண்டும். தூங்கும் போதும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சில துளி யூகலிப்டஸ் தைலம் விட்டு, சுத்தமான துணியை நனைத்து பிழிந்து மூக்கின் மேல் பற்று போல் போட்டால் மூக்கடைப்பு இருக்காது. சளி அடர்த்தியாக இருந்தால் கரைந்து வெளியேறும். அதேநேரம் சுகாதாரம் பேணுவதும் அவசியம்.
- நெட்டி முறிப்பது எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
பொதுவாக நம்மில் பலருக்கு விரல்களை அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கும். உண்மையில் இது தவறான பழக்கம் ஆகும். ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வேலை செய்துகொண்டிருக்கும்போதே விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளத்து `சொடக்கு' எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை `நெட்டி முறித்தல்', உடல் முறித்தல் என்றெல்லாம் சொல்வார்கள் நெட்டி முறிக்கும்போது சொடக்கு சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல.
விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே சைனோவியல் என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய் போல செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால் குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கு இடையே இந்த திரவம் மொத்தமாக சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும் போது எலும்பு இணைப்புகள் விரிவடைவதால் அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்கு சத்தம் வெளிப்படுகிறது.
தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக்குறைவாக இருப்பதால் தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்கு சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டிமுறிக்கும் போது ஏற்படும் இந்த சத்தம் தான் பலரை மீண்டும் மீண்டும் அதை செய்யத்தூண்டுகிறது.
ஏற்படும் பாதிப்புகள்
* 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய பேர் நெட்டி முறித்தால் அவர்களுக்கு பிடி வலிமையின்றிப் போவது முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
* விரல்களை மீண்டும் மீண்டும் நெட்டி முறிப்பது எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* அடிக்கடி நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தம் எலும்பு பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே இவற்றை தவர்ப்பது நல்லது.
* நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடியின் வலிமையை பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
* எப்போதாவது நெட்டி முறிப்பதில் தவறில்லை. ஆனால், அதையே பழக்கமாக கொண்டிருந்தால் மூட்டுவலி ஏற்படும் அபாயம் உள்ளது.
- வெந்தய டீ குடித்து வர இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வெறும் வயிற்றி வெந்தயம் சாப்பிட்டு வருவது நல்லது.
தொப்பை குறைய வெந்தய டீ:
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற தொப்பை குறைய வழிவகுக்கின்றது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அதுவும் காலையில் வெறும் வயிற்றி வெந்தய டீ குடித்து வரும்போது இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெந்தயத்தில் அதிக அளவு அமினோ ஆசிட் உள்ளதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றி வெந்தயம் சாப்பிட்டு வருவது நல்லது.
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்துவர மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்கிறது.
அதிலும் வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை குடித்து வந்தாலோ அல்லது காலை வெந்தயத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தாலோ செரிமானப்பிரச்சினைகள், அல்சர் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
- தயிர் இரவில் சாப்பிடும் போது செரிமானப்பிரச்சினையை ஏற்படுத்தும்.
- தக்காளி சாப்பிடுவது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இரவுநேரத்தில் நாம் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே நமது செரிமான உறுப்புகள் ஆரோக்கியத்துடன் செயல்படும். நாம் எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிட்டால் செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.
தயிர்
தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் இரவில் சாப்பிடும் போது செரிமானப்பிரச்சினையை ஏற்படுத்தும். மற்றும் சளி பிரச்சினையை உண்டாக்கும்.
தக்காளி
இரவுநேரத்தில் தக்காளி சாப்பிடுவது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இவற்றில் டைரமின் என்ற அமிலம் உள்ளது. இதனால் இரவு சாப்பிடும்போது மூளையின் செயல்பாடு அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
மசாலாபொருட்கள்
மசாலா உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து இரவுநேரத்தில் தூக்கம் வராமல் செய்துவிடும்.
காபி
இரவுநேரத்தில் காபி அருந்தக்கூடாது. காபியில் உள்ள கேஃபைன் என்ற வேதிப்பொருள் மூளையில் உள்ள நரம்புமண்டலத்தின் செயல்பாடுகளை செயல்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரவு தூக்கம் வராது.
குளிர்பானங்கள்
குளிர்ச்சியான எந்த உணவுகளை இரவுநேரத்தில் உண்ணக்கூடாது. ஐஸ்கிரீம், ஆரஞ்சு, திராட்சை பழங்களை இரவுநேரத்தில் உண்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை இரவுநேரத்தில் உண்ணக்கூடாது. அது செரிமானப்பிரச்சினையை உண்டுபண்ணும். எனவே இரவுநேரத்தில் தவிர்த்துவிடுவது நல்லது.
கத்தரிக்காய்
கத்தரிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் ப்ராக்கோலி இவற்றை இரவுநேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இந்த காய்கறிகள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே இரவில் தூக்கப்பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.






