என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைச்சுருளி மூலிகை"

    • நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை.
    • புற்றுநோய்க்கு அற்புதமான மருந்து இந்த தலைச்சுருளி.

    நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. பூச்சிகள் கடித்துவிட்டால் நாட்டு வைத்தியம் மூலமாக,  அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இப்போது நாம் பார்க்கப்போகும் மூலிகை ஈஸ்வர மூலி, தலைச்சுருளி, பெருமருந்து உரிக்கொடி, ஆதிமூலம், தராசுக்கொடி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    புற்றுநோய்க்கு அற்புதமான மருந்து இந்த தலைச்சுருளி. புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு பெரிதும் உதவும் இந்த தலைச்சுருளி. இது இதற்குமட்டுமல்ல சர்க்கரை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கால் பாதங்களில் எரிச்சல் இருப்பவர்களுக்கு இந்த தலைச்சுருளி மூலிகை பயன்படுகிறது.

    அதோடு மட்டுமல்லாமல் காலில் ஆணி இருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த மருந்து. கால் ஆணி இருப்பவர்கள் ஒரு மண்டலம் இந்த மூலிகையை தடவி வந்தால் மறுபடியும் வராமல் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

    வயிற்றுக்கோளாறுகளை நீக்கும், இருமல் சலி, மூட்டுவலி நீங்க பயன்படுத்தபடுகிறது. ஆஸ்துமா நோயை குணபடுத்துகிறது

    பாம்பு கடிக்கு சிறந்த தலைச்சுருளி மருந்தாக இலை சாறு கொடுக்கபடுகிறது. புண்களை ஆற்றுவதற்கு பயன்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

    எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளினால் ஏற்படும் நஞ்சை நீக்குவதற்கும் இந்த தலைச்சுருளி மூலிகை பயன்படுகிறது.

    நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்த பொடியை டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

    விஷம் இறங்குவதற்கு இந்த பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்து தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.

    வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

    சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

    ×