search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "skin disease medicine"

    • உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை.
    • பால்வினை பாதிப்புகளையும் சரியாக்கும்.

    சீமை அகத்தி, இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.

    உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், ரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்யவும், சுவாசக்கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், பெண்களின் ரத்த சோகை, மாதாந்திர பாதிப்புகள் இவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது சீமை அகத்தி. மற்றும் பால்வினை பாதிப்புகளையும் சரியாக்கும்.

    சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு, சிலருக்கு சிறுநீர் கழிக்க முயற்சித்தாலும், சிறுநீர் கழிக்க முடியாமல், வேதனையில் தவிப்பார்கள். இதற்கு தீர்வுகாண சீமை அகத்தியின் மஞ்சளும் பழுப்பும் கலந்த வண்ண மலர்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் அந்த மலர்களை நீரில் இட்டு, நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை தினமும் பருகி வர, சிறுநீர் கழிக்க முடியாமல் அடைப்பை ஏற்படுத்திய சிறுநீரக பாதிப்புகள் எல்லாம் விலகி, சிறுநீர் முழுமையாக வெளியேறும். சிறுநீர்ப்பையில் தேங்கிய நீர் முழுதும் வெளியேறி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.

    விஷ பூச்சிகள் கடித்துவிட்டாலோ அல்லது அவற்றின் எச்சம் நம் மீது பட்டாலோ, உடலில் அரிப்பு உண்டாகி, அதை சொரிய, வீக்கமாகி, காயமாகி ஆறாத புண்ணாக மாறிவிடும். இதற்கு தீர்வாக, சீமை அகத்தியின் பசுமையான இலைகளை நன்கு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உடலில் அரிப்பு, ஆறாத புண் மற்றும் வண்டுகடி காயங்களின் மேல் தடவி வர, சில நாட்களில், விஷக்கடி பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறி விடும்.

    சீமை அகத்தியை, உடலுக்குள் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். படர்தாமரை பாதிப்பை சரிசெய்ய, பசுமையான சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, தினமும் இருவேளை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.

    சீமை அகத்திக்கீரை, பூஞ்சைத்தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் அடர்ந்த சிவப்பு வண்ண தேமல், அரிப்பு சொரி, சிரங்கு போன்ற இடங்களில் இந்த சீமை அகத்திக்கீரை 200 கிராம், குப்பை மேனி இலை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 2 துண்டு, மிளகு- 4 பல் ஆகியவற்றை நன்றாக இடித்து இதனை அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதனை தடவி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    ×