என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    முடி உதிர்தல், தலையில் வழுக்கை விழுதல் பிரச்சனைக்கு உடல் சூடு, பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம்.
    முடி உதிர்தல், தலையில் வழுக்கை விழுதல் பிரச்சனைக்கு உடல் சூடு, பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம். பரம்பரை, பரம்பரையாக இது ஒரு வியாதியாக சிலருக்கு இருக்கும். இதற்கு நாம் சில குறிப்பிட்ட முத்திரைகள், யோகப்பயிற்சிகள் எடுத்து சரி செய்ய முடியும்.
    முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பயின்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    பிரசன்ன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் படத்தில் உள்ளது-போல் சேர்ந்திருக்கட்டும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் செய்யவும். அவசர படாமல் நிதானமாக ஐந்து நிமிடங்கள் செய்யவும். நேரம் கிடைக்கும் பொழுது இந்த முத்திரையை கை விரல் நகங்களை ஒன்றையொன்று உராயும் படி லேசாக பத்து முறைகள் தேய்க்கவும். ஒரு நாளில் மூன்று முறைகள் செய்யவும்.

    லிங்க முத்திரை: எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும்.இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.காலை, மதியம்மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும். நெல்லிப்பழம் சாப்பிடவும். அதி மதுர பொடி உணவில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்கவும். மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும். கடுக்காய் சூர்ணம் ஒரு வேளை எடுக்கவும். முளைகட்டிய வெந்தய சாதப்பொடி உணவில் எடுக்கவும்.

    எப்பொழுதும் அதிக அளவு சிந்தனை செய்ய வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.ஐந்து முறைகள் செய்யவும். ஒரு நாளில் பத்து முறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இது போன்று செய்யவும்.

    மூச்சுப்பயிற்சி சீத்தளி /சீத்காரி / ஸதந்தா பயிற்சிகளையும் செய்யுங்கள். தலை முடி கொட்டுவது நிற்கும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com

    மே மாதம் அக்னி நட்சத்திரம் வரும் பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாகிருக்கும். இந்த காலகட்டங்களில் நம் உடலுக்கு எந்த பிரச்சினைகளும் வராமல் தடுக்கும் முத்திரைகளை பார்க்கலாம்.
    முத்திரைகள்: முத்திரைகள் மூலம் நம் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தாமல் வாழ முடியும்.

    பிராண முத்திரை: தரையில் விரிப்பு விரித்து கிழக்கு முகமாக நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற் காலியில் அமரவும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.பின் மோதிர விரல் சுண்டு விரல் மத்தியில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும்.இரு கைகளிலும் செய்யவும்.இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலைமாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்:வெயில் காலத்தில் கண்களில் கட்டிகள், கண் சம்மந்தமான வியாதி வராமல் பாதுகாக்கப்படுகின்றது, கண் நரம்புகள் நன்றாக இயங்குகின்றது. லிவருக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்கின்றது. உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும்.கால் பாத வீக்கம் பாத எரிச்சல் வராமல் வாழலாம்.

    மலச்சிக்கல் நீக்கும் சுஜி முத்திரை: வெயில் காலங்களில் நிறைய நபர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.அதிலிருந்து விடுபட சுஜி முத்திரையை செய்யவும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.பின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை மோதிரவிரலின் நடுவில் வைத்து ஆள்காட்டி விரலை படத்தில் உள்ளது போல் வலது தோள்பட்டை இடது தோள்பட்டை அருகில் சற்று சாய்த்து வைக்கவும்.2 நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன்பயிற்சி செய்யவும்.
    மலச்சிக்கல் நீங்கும். உடல் உஷ்ணம் தணியும்.உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்,வெயில் காலத்தில் இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.

    வயிற்றுப்போக்கு வராமல் வாழ ஜலோதர நாசக் முத்திரை: வெயில் காலத்தில் நிறைய நபர் களுக்கு வயி ற்றுப்போக்கு (பேதி) ஏற்படும்.அத னால் உடலில் நீர் சக்தி குறைந்து உடல் சோர்வு ஏற்படும்.அதற்கு இந்த ஜலோதர நாசக் முத்திரையை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முது கெலும்பு நேராக இருக்கட்டும்.இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.பின் சுண்டு விரலை மடக்கி அதன் நகத்தின் மேல் மையத்தில் கட்டை விரலை வைத்து லேசாக ஒரு அழுத்தம் கொடுக்கவும்.இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள், காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரையை வயிற்றுப்போக்கு இருந்தால் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.மற்ற சமயங்களில் காலை ஒரு வேளை அல்லது மாலை ஒரு வேளை இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த முத்திரை மூலம் வெயில் காலத்தில் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க முடியும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    கீழே குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.
    சீத்தளி பிராணாயாமம்

    காலை எழுந்தவுடன் பல் விலக்கி, காலை கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.

    முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.இடது, வலது கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் கட்டை விரல் நுனியைத் தொடவும்.மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வாய் வழியாக, உதட்டை விசில் மாதிரி குவித்து மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முதல் இருபது முறைகள் காலை மதியம் மாலை சாப்பிடு முன் பயிற்சி செய்யவும்.

    இப்பயிற்சி செய்யும்பொழுது உங்கள் உணர்வில் நன்கு தெரியும். மூச்சை உள் இழுக்கும் பொழுது குளிர்ந்த காற்று உட்செல்லும். மூச்சு வெளியிடும் பொழுது அடி வயிற்றில் உள்ள சூடான காற்று வெளிவரும். இதனால் நமது உடலில் அதிக உஷ்ணம் வெளியேறுகின்றது. உடல் அதிக சூடாகாமல் பாதுகாக்கப்படுகின்றது.

    சீத்காரி: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். நாக்கை லேசாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும். அதன் இடுக்குகள் வழியாக மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு மூக்கு வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதேபோல் பத்து முறை முதல் இருபது முறைகள் செய்யவும்.

    ஸதந்தா: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். பற்-களின் மேல் வரிசை கீழ் வரிசையை சேர்த்து வைக்கவும். உடன் மூச்சை உள்ளே பற்களின் இடுக்குகள் வழியாக மெதுவாக இழுக்கவும். உடன் வாயை மூடி மூக்கு வழியாக வெளிவிடவும். இதே போல் பத்து முதல் இருபது முறைகள் செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். வெயில் காலங்களில் அதிக உஷ்ணம் உடலில் வராமல் உடலையும், மனதையும் பாதுகாக்கும்.
    இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
    ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம், அல்லது வஜ்ராசனம், அல்லது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதலில் தலை முதல் கால் வரை உடல் வெளித் தசையில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணி ஒரு 5 நிமிடம் தளர்த்தவும். பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.

    பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும். இது மூலாதாரச் சக்கர மாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும். அல்லது பத்து நிமிடம் மனதிற்குள் ஜெபிக்கவும்.

    அப்பொழுது மலர்களினால் மானசீகமாக அர்ச்சனை செய்யவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிட்டு மூலாதாரச் சக்கரத்தில் கணபதியின் முழு அருளைப் பெறுவதாக தியானிக்கவும்.

    பின் விநாயகா, நான் பல ஜென்மங்களில் செய்த தீவினைப் பதிவுகள் அங்கே உன்னிடத்தில் வாசனையாக உள்ளன. எல்லா தீவினைகளும் அழியட்டும். இந்த உடல்,உள்ளம், புனிதம் அடையட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையை அருள்வாய் விநாயகா என்று பிரார்த்திக்கவும்.

    பின் மெதுவாக ஓம் சாந்தி என்று மூன்று முறைகள் கூறி தியானத்தை நிறைவு செய்து கண்களைத் திறந்து கொள்ளவும். மிக அற்புத மகிமை வாய்ந்த இந்த மூலாதார கணபதி தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது.

    இத்தியானத்தால் நம் ஊழ்வினைகள் அறுக்கப்படுகின்றது. உடல் உள் உறுப்புக்கள் நல்ல வலுவாக இயங்குகின்றது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் வாழலாம்.

    உடலில் உயிர்சக்தி மூலாதாரத்தில் இருந்து தான் உடல் முழுக்க இயங்குகின்றது. இந்த மூலாதாரம் பழுதடைந்தால் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக இயங்காது. உடல் சோர்வு, மன சோர்வு- ஏற்படும். இந்த அற்புத தியானத்தால் உயிரோட்டம் மிகச் சிறப்பாக இயங்குகின்றது. என்ன கிரக ஜாதகதோஷங்கள் இருந்தாலும் அவை கணபதி அருளால் விலகி நன்மைகள் நடக்கும்.

    இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
    திருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது.
    சைக்கிள் பயிற்சி, மிகவும் குறைவான பொருட் செலவில் நமது உடல் நலத்தை பேணி பார்த்துக்கொள்ள உதவும் வழியாகும். இன்றைய நிலையில் நிறைய பெண்கள் அலுவலகப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் உடலுழைப்பு குறைவாகவே உள்ளது. காலை முதல் மாலை வரை இருக்கையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் முதுகுப் பகுதியில் ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் வலியால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு உதவும்.

    சைக்கிள் ஓட்டுவதில் ஆண்களை விட, பெண்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும் இன்று அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக கல்லூரி செல்லும் பெண்களுக்கு அதிக அளவில் ஆர்வம் உள்ளது. திருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது.
    உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
    பெண்கள் அன்றாடம் செய்யவேண்டிய ஆசனங்களில் முக்கியமானது தனுராசனம். ‘தனுசு’ என்ற சொல் ‘வில்’ எனும் பொருளைத் தரும். உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

    செய்முறை:

    1. தரையில் விரிப்பை விரித்து அதன்மேல் குப்புறக் கவிழ்ந்து படுக்கவும்
    2. இரண்டு கைகளையும் பக்கவாட்டில் ஒட்டியபடி வைத்துக் கொள்ளவும்.
    3. பின்பு இரண்டு கால்களையும் மடக்கி, வலதுகாலை வலது கையின் மூலமும், இடது காலை இடது கையின் மூலமும் நன்றாகப் பிடித்துக் கொள்ளவும்.
    4. பின்னர் மெதுவாக மார்பு பகுதி, கழுத்து பகுதி, தலை இவற்றை வில்போல் வளைத்து முதுகுடன் சேர்த்து மேல் நோக்கி தூக்க வேண்டும்.
    5. அவ்வாறு தூக்கும்போது வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் ஒட்டியிருக்க வேண்டும். ஏனைய பகுதிகள் வில் போல வளைந்து மேல் நோக்கி இருக்க வேண்டும்.
    6. இந்த நிலையில் சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும்.

    பயன்கள்:

    இயற்கையான வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மார்பகங்களை உறுதிப்படுத்துவதற்கு தனுராசனம் உதவும். தினமும் குறிப்பிட்ட நேரம் தனுராசனம் செய்து வந்தால் போதுமானது.

    இந்த ஆசனத்தை செய்வதால் அடிவயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்பு கரைந்து  தொப்பை எளிதில் நீங்கும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டம் நடைபெறும்.

    ஜீரணசக்தி மேம்படுவதோடு, கர்ப்பப்பை, மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். மேலும், தினமும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும்.
    வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் மட்டுமல்ல நமது நடையிலும் கவனம் வைத்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அறியலாம்.
    பிறந்த குழந்தையின் முதல் நடை அழகானது. அந்த நடை வளர வளர பல்வேறு மாறுதல்கள் அடைந்து தனி அடையாயங்களை அளிக்கிறது. ஒவ்வொருவரின் நடைக்கும் தனியொரு பாணி உண்டு. சில பேர் வேகமாக நடப்பார்கள். சிலர் மெதுவாக நடப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடையை மாற்றி கொள்வர்களும் உண்டு. சிலரின் நடை ரசிக்க வைக்கும். சிலரது நடை சிரிக்க வைக்கும் சிலர் நடை வித்தியாசப்படும். இவ்வாறு நடைகள் பலவிதம்.

    நடையில் என்ன இருக்கிறது என்று நாம் நினைத்துகொண்டிருக்கும் போதே எங்கோ ஒருவரின் நடக்கும் விதம் யாரோ ஒருவரின் மூலம் ரசிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கால்கள் நகரும்விதம், அதற்கோற்றாற்போல் நகரும் கைகள், காற்றில் சற்று அசையும் உடைகள், கையில் இருக்கும் பொருட்களை தாங்கி கொள்ளும் விதம், அலைமோதும் கண்கள், லாடம் கட்டியது போல் சில பார்வை, ஆண் என்றால் மிடுக்கு, பெண் என்றால் நளினம் என நடையில் பல்வேறு மொழிகள் அடங்கியிருக்கிறது.

    அவரவர் நடந்து செல்லும் முறை அவர்களின் அன்றாட செயல்பாட்டை உணர்த்தும்.

    நடக்கும் வேகம், ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும், செல்களை சுறுசுறுப்பாகி புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது. ஒரு நாளுக்கு 5000 அடிகள் நடப்பதால் செரிமான சக்தி வலுப்பெறும் என்கிறார்கள் மருத்துவர்கள். நடக்கும் போது வெளியேறும் வியர்வையின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும் எனவும், திறந்த வெளியில் நடப்பதன் மூலம் சுவாசம் மேம்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆரோக்கித்திற்கு முன்னுரிமை அளித்து எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சீரான அளவு உடலுழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே. வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் மட்டுமல்ல நமது நடையிலும் கவனம் வைத்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அறியலாம்.
    நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும்.
    தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடது நாசியில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்பொழுது உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து அமைதியாக தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும். மன அமைதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வலது மூளை நன்கு இயங்கும். பிட்யூட்டரி - பினியல் சுரப்பி நன்கு சரியான அளவில் சுரக்கும். தலைவலி வராமல் வாழலாம்.

    தலைவலி வருபவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் பயிற்சி செய்யுங்கள். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல் தலைவலி வராமல் வாழலாம்.
    பெண்களுக்கு மார்பில் கட்டிகள் வராமல் வாழ்வதற்கும், மார்பக புற்று நோய் வராமல் வாழ்வதற்கும் யோகா முத்திரைகள் உள்ளன. அந்த முத்திரைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்களும் சில முக்கியமான முத்திரைகளை தினமும் காலை / மாலை பயின்றால், மனோ ரீதியான பயிற்சிகளை தினமும் பயின்று உணவிலும் ஒழுக்கத்தை கடைபிடித்தால் நிச்சயமாக மார்பக புற்று நோய் வராமல் வாழலாம். உடலில் எந்தப் பகுதியில் கழிவுகள் கட்டிகளாக இருந்தாலும் அதனை கரைக்கும். கழிவுகள் தங்காமல் வெளியேற்றும் முத்திரை சூரிய முத்திரை.

    சூரிய முத்திரை : விரிப்பில் நேராக நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிரவிரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைத்து அதன் நடுவில் கட்டை விரலை வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை மதியம் மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    சூன்ய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறை செய்யவும். பின் நடு விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    ஆகாய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். நடுவிரல் பெருவிரலால் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    யோகமுத்ரா: பத்மாசனம் போடவும். இரு கைகளையும் பின்னால் கட்டி மூச்சை வெளிவிட்டு குனிந்து நெற்றியால் தரையை தொடவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். இதேபோல் காலை / மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

    அதிக புளிப்பு வேண்டாம், அருகம்புல் சாறு மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். மிளகு எட்டு நுனிக்கி 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் போட்டு சுட வைத்து சாப்பிடுங்கள்.மாதுளம் பழம், கொய்யா பழம், வெள்ளரி, வாழைப்பூ, பீட்ருட், முட்டைகோஸ், உணவில் அடிக்கடி எடுக்கவும்.

    பச்சி மோஸ்தாசனம், புஜங்காசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், விபரீதகரணி போன்ற ஆசனங்களை முறையாக தேர்ச்சிபெற்ற யோகாசன ஆசிரியரிடம் நேரடியாக பயிலுங்கள் மார்புபுற்று நோய் வராமல் வாழலாம்.

    தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம்.
    வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் உடல் ஆரோக்கியமாக வாழத்தான் விரும்புகின்றனர். எனினும் நமது பழக்க வழக்கங்கள், உணவு முறை, எண்ணத்திற்கேற்ப உடலில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றது. இதனை நோய் என்று சொல்கிறோம். அந்த வகையில் நிறைய நபர்களுக்கு தலைவலி வருகின்றது. அது சிலருக்கு ஒற்றைத்தலைவலியாக வரும். இடது பக்கம் மட்டும் வலி இருக்கும். சிலருக்கு வலது பக்கம் மட்டும் வலி இருக்கும். சில நபர்களுக்கு இரு பக்கமும் தலைவலி இருக்கும். பலவகையான மாத்திரைகள் எடுத்தும் முழுமையான தீர்வு இல்லாமல் இருப்பர்.

    யோகாவில் இதற்கு நிச்சயமாக தீர்வு உண்டு. தலைவலி வராமலும் வாழலாம். தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம்.

    சின் முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும். தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள் காட்டி விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். மிக, மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை இழுப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது உடல், மனதில் உள்ள டென்‌ஷன், கவலை, மன அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    முகுள முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும்.தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி நான்கு விரல்களையும் குவித்து வானத்தைப் பார்க்கும்படி வைக்கவும். மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நமது உடல், மனதில் உள்ள டென்‌ஷன், கவலை, கோபம், மன அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து தியானிக்கவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்கவும்.

    ஆதி முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற் காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரலை உள்ளங்கையில் மடித்து மற்ற நான்கு விரல்களை கட்டை விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை இழுப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும்பொழுது உடல், மனதில் உள்ள கவலை, டென்‌ஷன், வெளியேறுவதாக எண்ணவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் கவனிக்கவும்.

    பத்மாசனம்: விரிப்பில் நிமிர்ந்து அ ம ர வு ம். இருகால் களையும் நீட்டவும். இடது காலை மடித்து வலது தொடை மேல் போடவும்.பின் வலது காலை மடித்து இடது தொடை மீது போடவும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது உடல், மனம், உள்ளத்தில் உள்ள டென்‌ஷன், கவலை, வெளியேறுவதாக எண்ணவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். நெற்றிப் புருவ மத்தியில் உங்களது மூச்சோட்டதை கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.

    எளிய நாடி சுத்தி:தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடது நாசியில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்பொழுது உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து அமைதியாக தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும். மன அமைதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வலது மூளை நன்கு இயங்கும். பிட்யூட்டரி - பினியல் சுரப்பி நன்கு சரியான அளவில் சுரக்கும். தலைவலி வராமல் வாழலாம்.

    மேற்கூறிய பயிற்சிகளை தலைவலி வருபவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் பயிற்சி செய்யுங்கள். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல் தலைவலி வராமல் வாழலாம்.
    கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது.
    முத்திரை… இந்த வார்த்தையைக் கேட்டதும் சிலர் வேறுவிதமாக யோசிப்பார்கள். ஆனால், இது நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும், வந்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய ஒன்று என்பது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம்.

    மனித உடலானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது. பஞ்ச மகா பூதம் எனப்படும் இவற்றில் ஒன்று சரியாக செயல்படவில்லையென்றாலும் பிரச்சினை ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் முத்திரை செய்தால் பலன் கிடைக்கும். முத்திரை என்பது யோகா, பிராணாயாமம், தியானம், பரதநாட்டியம் செய்யும்போது கைவிரல்களை அழுத்திப்பிடிக்கும் ஒரு நிலையாகும். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். நரம்பு மண்டலம் வழியாக ஆற்றல் தூண்டப்படும்; மனம் மற்றும் உடல்ரீதியாக ஆற்றல் குறையும்போது முத்திரை செய்தால் செல்கள் புதுப்பிக்கப்பட்டு உடலியக்கம் சீராகும்.

    நம் கை மற்றும் காலில் உள்ள ஒவ்வொரு விரலும் இந்த பஞ்ச மகா பூதங்களின் வரிசையில்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது. ஆக ஒவ்வொரு விரல்களுக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. எனவே, அந்தந்த ஆற்றல்களுக்குரிய முறைகளுடன் விரல்களின் நுனிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து முத்திரை செய்தால் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் சமநிலைக்கு வரும்.

    எப்போதெல்லாம் ஆற்றல் தேவைப்படுகிறதோ அப்போது இந்த முத்திரைகளைச் செய்து பலன் பெறலாம். முத்திரைகளைச் செய்வதால் மன ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் குறிப்பாக மனரீதியான பிரச்சினைகளைப் போக்க இந்த முத்திரை உதவும்.
    தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
    விரிப்பில் அமரவும். மோதிர விரல், சுண்டு விரல், மத்தியில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் காலை மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

    இரவு படுக்கும் முன் படுக்கையில் அமர்ந்து இந்த பிராண முத்திரையை செய்யவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறைகள். ஆழ்மனதில் இன்று எனக்கு நன்றாக தூக்கம் வரும். எந்த கனவும், சிந்தனைகளும் வராது. நான் நன்கு தூங்குவேன் என்று பத்து முறைகள் சொல்லவும். அந்த உணர்வை உடல் முழுக்க பரவச் செய்யவும்.

    தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    ஓம் என்று மூன்று முறை உச்சரித்து கண்களை மூடி படுக்கவும். உங்களது மூச்சு உள்ளே வருவது, வெளியே செல்வதில் மட்டும் கண்களை மூடி கவனிக்கவும். இதிலேயே ஆழ்ந்த நித்திரை கனவுகள் இல்லா தூக்கம் கைகூடும். 48 நாட்கள் விடாமல் இரவு இந்த மாதிரி செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

    யோகக் கலைமாமணி

    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com
    ×