
சூரிய முத்திரை : விரிப்பில் நேராக நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிரவிரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைத்து அதன் நடுவில் கட்டை விரலை வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை மதியம் மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.
சூன்ய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறை செய்யவும். பின் நடு விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
ஆகாய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். நடுவிரல் பெருவிரலால் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
யோகமுத்ரா: பத்மாசனம் போடவும். இரு கைகளையும் பின்னால் கட்டி மூச்சை வெளிவிட்டு குனிந்து நெற்றியால் தரையை தொடவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். இதேபோல் காலை / மாலை சாப்பிடுமுன் செய்யவும்.
அதிக புளிப்பு வேண்டாம், அருகம்புல் சாறு மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். மிளகு எட்டு நுனிக்கி 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் போட்டு சுட வைத்து சாப்பிடுங்கள்.மாதுளம் பழம், கொய்யா பழம், வெள்ளரி, வாழைப்பூ, பீட்ருட், முட்டைகோஸ், உணவில் அடிக்கடி எடுக்கவும்.
பச்சி மோஸ்தாசனம், புஜங்காசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், விபரீதகரணி போன்ற ஆசனங்களை முறையாக தேர்ச்சிபெற்ற யோகாசன ஆசிரியரிடம் நேரடியாக பயிலுங்கள் மார்புபுற்று நோய் வராமல் வாழலாம்.