search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தணிய பிராணாயாமம்
    X
    வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தணிய பிராணாயாமம்

    வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தணிய பிராணாயாமம்

    கீழே குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.
    சீத்தளி பிராணாயாமம்

    காலை எழுந்தவுடன் பல் விலக்கி, காலை கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.

    முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.இடது, வலது கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் கட்டை விரல் நுனியைத் தொடவும்.மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வாய் வழியாக, உதட்டை விசில் மாதிரி குவித்து மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முதல் இருபது முறைகள் காலை மதியம் மாலை சாப்பிடு முன் பயிற்சி செய்யவும்.

    இப்பயிற்சி செய்யும்பொழுது உங்கள் உணர்வில் நன்கு தெரியும். மூச்சை உள் இழுக்கும் பொழுது குளிர்ந்த காற்று உட்செல்லும். மூச்சு வெளியிடும் பொழுது அடி வயிற்றில் உள்ள சூடான காற்று வெளிவரும். இதனால் நமது உடலில் அதிக உஷ்ணம் வெளியேறுகின்றது. உடல் அதிக சூடாகாமல் பாதுகாக்கப்படுகின்றது.

    சீத்காரி: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். நாக்கை லேசாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும். அதன் இடுக்குகள் வழியாக மெதுவாக மூச்சை இழுக்கவும். உடன் வாயை மூடி இரு மூக்கு வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதேபோல் பத்து முறை முதல் இருபது முறைகள் செய்யவும்.

    ஸதந்தா: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். பற்-களின் மேல் வரிசை கீழ் வரிசையை சேர்த்து வைக்கவும். உடன் மூச்சை உள்ளே பற்களின் இடுக்குகள் வழியாக மெதுவாக இழுக்கவும். உடன் வாயை மூடி மூக்கு வழியாக வெளிவிடவும். இதே போல் பத்து முதல் இருபது முறைகள் செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். வெயில் காலங்களில் அதிக உஷ்ணம் உடலில் வராமல் உடலையும், மனதையும் பாதுகாக்கும்.
    Next Story
    ×