என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி என்பது தசைகளில் நல்ல அசைவினை ஏற்படுத்தி உடலின் கலோரி சக்தியினை எரிக்கின்றது. இந்த உடற்பயிற்சி தரும் நன்மைகள் ஏராளம்.
    ‘உடற்பயிற்சி’ என்ற வார்த்தை இன்று உணவின் முக்கியத்துவத்தினை விட அதிகமாக பேசப்படுகின்றது. அந்த அளவுக்கு நாம் அசையாது கம்ப்யூட்டர் முன்பும், டி.வி.முன்பும், செல்போன் உள்ளேயே அமர்ந்து கொண்டு வாழ்கின்றோம்.

    உடற்பயிற்சி என்பது தசைகளில் நல்ல அசைவினை ஏற்படுத்தி உடலின் கலோரி சக்தியினை எரிக்கின்றது. இந்த உடற்பயிற்சி தரும் நன்மைகள் ஏராளம்.
    நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் என பயிற்சி பல பிரிவுபடுகின்றது. இவைகளில் ஏதேனும் ஒன்றினையோ அல்லது விருப்பப்பட்ட முறையிலோ தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பெறக்கூடிய சில நன்மைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

    * உடற்பயிற்சி உங்களை மன மகிழ்வுடன் வைக்கும். மன உளைச்சல் குறையும்.

    * நிச்சயமாக எடை குறையும். உடல், சக்தியினை மூன்று விதத்தில் பயன்படுத்துகின்றது. உணவு செரிமானம், உடற்பயிற்சி, உடலின் செயல்பாட்டு வேலைகள் (இருதய துடிப்பு, மூச்சு விடுதல்..) ஆகிய விதத்தில் உடலின் சக்தி செலவாகின்றது.

    * அதிக உணவு கட்டுப்பாடு செய்யும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் குறைவதால் எடை குறைவது தாமதப்படுகின்றது. உடற்பயிற்சி உடலின் செயல்பாட்டுத் திறனை கூட்டுவதால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எடையும் சீராக இருக்கும்.

    * உடற்பயிற்சி கொழுப்பினை எரித்து தசைகளை உறுதிப்படுத்துகின்றன.

    * உடற்பயிற்சி தசைகளுக்கும், எலும்புகளுக்கும் சிறந்தது.

    * வயது கூடும்போது தசைகள் பலவீனம் அடைகின்றன. இதனால் இயலாமை கூடுகின்றது. உடற்பயிற்சி தசைகளின் வலியினை சீராய் வைக்கின்றது.

    * சற்று விறு விறுப்பான பயிற்சிகள் ஜிம், ஓட்டப்பயிற்சி, கூடைப்பந்து போன்றவை எலும்புகளின் அடர்த்தியினை பாதுகாக்க வல்லவை.

    * உடற்பயிற்சி உடலின் சக்தியினை கூட்டுகின்றது. அடிக்கடி உடல் ஆரோக்கியம் இருந்தும் சோர்வாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். நல்ல சக்தியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பர்.

    * உடற்பயிற்சி பல நீண்ட கால நோய்களை தவிர்க்க வல்லது.

    * உடற்பயிற்சி சிறந்த ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்துவதால் சருமத்தில் முதுமை தோற்றத்தினை தவிர்க்கும்.

    * உடற்பயிற்சி மூளை ஆரோக்கியம், ஞாபகத்திறன் இவற்றினை சிறப்பாக இருக்க செய்யும்.

    * உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை அளிக்கும். உடற்பயிற்சியின்பொழுது கூடும் உடலின் உஷ்ணம் தூக்கத்தின் தரத்தினை உயர்த்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * உடற்பயிற்சி உடல் வலியினை குறைக்கும்.

    * இப்படி விடாது சொல்லப்படும் அதன் நன்மைகளால் உடற்பயிற்சியினை முறையாக செய்வோமாக.

    ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் ஹாக்கினி முத்திரையை தினமும் மறக்காமல் பயிற்சி செய்யுங்கள் நியாபக சக்தி வளரும், அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
    ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் ஹாக்கினி முத்திரையை தினமும் மறக்காமல் பயிற்சி செய்யுங்கள் நியாபக சக்தி வளரும், அதிக மதிப்பெண்கள் பெறலாம், மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பலன் தரும் அருமையான முத்திரை

    நீரிழிவு வியாதி உள்ளவர், இரத்த அழுத் தம் உள்ளவர், இளம் வயதில் கவனமாக வாழாதது தானே அவர்கள் வியாதிக்கு காரணம். கவனத்துடன் சரியான உணவு, சரியான யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி, முத்திரை, சரியான ஓய்வு உடலுக்கு கொடுத் திருந்தால் இந்த வியாதி வந்திருக்காது. கவன்குறைவினால் நோய் வருகின்றது.

    மனித உடலில் பஞ்ச பூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம்) சமமான அள வில் செயல்பட்டால் மூளை செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல் படும். நமது கவனம் சிதறாது. செய்யும் செயலில் கவனம் முழுமையாக இருக்கும். வெற்றி நிச்சயம்.

    கவனச் சிதைவை தடுத்து, கவனத்துடன் மூளை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ஒரு முத்திரைதான் ஹாக்கினி முத் திரை என்ற அற்புத முத்திரையாகும். இந்த முத்திரையை செய்வதால் அனைவருக்கும் பலன் உண்டு. பள்ளி மாணவர்கள், வாகனம் ஓட்டுபவர், குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்தை மிகக் கவனமாக பாதுகாத்து மேன்மையடையச் செய்யலாம்.

    ஹாக்கினி முத்திரையின் சிறப்பம்சமே நமது உடலில் பஞ்ச பூதங்களையும் சிறப்பாக இயங்கச் செய்வதுதான். அதனால் மன அழுத்தம், கவலை உள்ளவர்கள் இந்த முத்திரையைச செய்யும் பொழுது நரம்பு மண்டலம் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றது. மேலும், மன அழுத்தம் இல்லாமல் வாழும் பண்பாட்டையும் இந்த முத்திரை நமக்கு அளிக்கின்றது.

    எப்படி ஹாக்கினி முத்திரை செய்வது

    நமது வலதுகை விரல் நுனிகளை இடது கை விரல் நுனிகளுடன் இணைத்து தொட வேண்டும். ஒரு விரலுக்கும் அடுத்த விரலுக்குமிடையே இடைவெளி இருக்கும். ஒவ்வொரு விரல் நுனியிலும் இலேசான அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி நெற்றிப் புருவ மையத்தில் நினைவை வைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். முதலில் பயிற்சி செய்பவர்கள் மூன்று நிமிடங்கள் செய்யவும். தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்த பின் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். காலை, மாலை இரு வேலையம் செய்யலாம்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக பின்பற்றினால், நீங்கள் எப்போதும் கனவு கண்ட அந்த மெலிந்த கால்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்.
    நாம் எல்லோரும் அந்த மாதிரியான கால்கள் கொண்டிருப்பதாக கனவு காண்கிறோம். உண்மையில் நம்மில் சிலருக்கு ஆதிர்ஷ்டவசமாக மெலிந்த மெல்லிய கால்கள் இருக்கும், மற்றவர்கள் உடற்பயிற்சி செய்து அவர்களிடம் இருப்பதை உணர்ந்து அதில் இருந்து சிறந்ததை பெற வேண்டும்.

    எனினும், அந்த பாட்டில்-வடிவ கால்கள் கிடைப்பது கடினமல்ல. இங்கே பயிற்சிகளை ஒரு தொகுப்பாக, தொடர்ச்சியாக பின்பற்றினால், நீங்கள் எப்போதும் கனவு கண்ட அந்த மெலிந்த கால்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்:

    1) குந்துகை : தோள்பட்டை-நீளத்திற்கு உங்கள் கால்களை அகற்றி நில்லுங்கள். உங்கள் முழங்கால்களை வளைத்து, ஒரு நாற்காலியில் அமர்த்திருப்பதுபோல உங்கள் இடுப்பை வெளியே துள்ளுங்கள். இறுக்கமாக உங்கள் வயிற்றை இழுத்தவாறு, அமரும்போது சுவாசத்தை உள்ளிழுங்கள். உங்களை சமநிலைப்படுத்த உங்கள் கைகளை பயன்படுத்துங்கள். எழுந்து மேலும் வாய் வழியாக வலுவாக சுவாசத்தை வெளியேற்றவும். இது ஒரு குந்துகை. 15 குந்துகை தொகுப்புகளை முடிக்கவும்.
     
    2) அரைமண்டி(பிளை) குந்துகை : தோள்களை விட அகலமாக கால்களை விரித்து நிற்கவும், கால் விரல்கள் 45 டிகிரி கோணத்தில் சுட்டி காட்டவும் மேலும் கைகளை இடுப்பில் வைக்கவும். சுவாசத்தை உள்ளிழுக்கும்போது ஒரு ஆழ்ந்த குந்துகையில் கீழே வளையவும். உங்கள் வயிற்று தசைகளை கசக்குங்கள் மேலும் குந்துகை நிலையில் மூன்று வினாடிகள் இருக்கவும். வாயில் இருந்து வலிமையாக சுவாசத்தை வெளியே விடுங்கள். ஒரு 15 அரைமண்டி(பிளை) குந்துகை தொகுப்பை முடியுங்கள்.

    3) நீடிக்கப்பட்ட பக்க குந்துகை : தோள்களை விட அகலமாக கால்களை விரித்து நிற்கவும் மேலும் கால் விரல்கள் முன்னோக்கி சுட்டிக்காட்டவும். வலது காலில் குந்துகையில் நீங்கள் இடது காலை வெளியே நீட்டவும். சுவாசத்தை உள்ளிழுத்து மேலும் மூன்று வினாடிகள் நிறுத்தவும். இடது காலைக் உள்ளே கொண்டுவந்து குந்துகையை விடுவிக்கவும். இரண்டு கால்களுக்கும் ஒவ்வொன்றாக பத்து குந்துகைகளை திரும்பவும் செய்யவும்.

    4) பக்க பிளாங் : உங்கள் கால்களை ஒன்றிற்கு மேல் ஒன்று ஓய்வாக வைத்து பக்கவாட்டிலும் மற்றும் முழங்கையினால் உங்கள் மேல் உடலை தாங்கிக்கொள்ளுமாறு படுங்கள். பக்க பிளாங் செய்ய உங்கள் இடுப்பை தரையில் இருந்து உயர்த்துங்கள். சுவாசத்தை உள்ளிழுங்கள் மற்றும் உங்கள் வயிற்று தசையை இறுக்கங்கள், பத்து வினாடிகள் பிளாங்கிள் நிறுத்துங்கள். உங்கள் இடுப்பை கீழே கொண்டுவரும்போது சுவாசத்தை வலுவாக வெளியேற்றுங்கள்.
    ஐந்து பிளாங்கை ஒவ்வொன்றையும் பத்து வினாடிகள் செய்யவும். நீங்கள் முன்னேறும்போது நிறுத்தும் நேரத்தை அதிகரிக்கவும்.

    5) பக்க பாத ஏற்றம்

    உங்கள் முழங்கையால் உங்கள் தலையை தாங்கி பக்கவாட்டில் படுங்கள் மேலும் கால்கள் ஒன்றிற்குமேல் ஒன்று ஓய்வாக வைக்கவும். காலை 45 டிகிரி கோணத்திற்கு மேலே உயர்த்தவும். ஓய்வான இடத்திற்கு சற்று மேல் கால்களை போடுங்கள். அது கீழ் உள்ள பாதத்தை தொட்டுவிட வேண்டாம். இரண்டு பாதங்களையும் 20 முறை மீண்டும் மீண்டும் உயர்த்துங்கள்.

    தினசரி உடற்பயிற்சி முறையில் இந்த பயிற்சிகளை செய்ய என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பயிற்சிகளை முயற்சிதான் செய்கிறீர்கள் என்றால்கூட, இதை செய்வதற்குமுன் நிச்சயம் உங்களை தயாராக வையுங்கள். மேலும் செய்ததற்குப் பிறகு தசைகளில் ஏதாவது இறுக்கம் மற்றும் வலியில் இருந்து எளிதாக்க முழு உடல் நீட்டிப்பு செய்யுங்கள்.
    மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் வரும் முதுகுவலி, கழுத்துவலி இந்த ஆசனம் செய்வதால் நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும். இரு கைளையும் தலைக்கு மேல் உயர்த்தி இரு கைகளையும் சேர்த்து கும்பிட்ட நிலையில் நிற்கவும்.

    இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு குதிகாலை உயர்த்தவும். கால் விரல்களில் நிற்கவும். மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட தடாசனத்தை கை விரல்கள் ஒன்றை பின்னி விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து கால்களை உயர்த்தி பண்ணவும். மூன்று முறைகள் செய்யவும்.

    பலன்கள்

    மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் கழுத்துவலி, முதுகு வலி வரும். அதிக பாடங்கள் படிப்பதால் டென்ஷனாலும் கழுத்துவலி, முதுகு வலி வரும். மன சோர்வு ஏற்படும். இந்த ஆசனம் செய்வதால் முதுகுவலி, கழுத்துவலி நீங்கும். குட்டையான மாணவர்கள் உடல் உயரம் வளர்வதற்கு துணை புரியும்.
    அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.
    விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.

    பலன்கள்


    பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.

    சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.

    இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
    யோகப்பயிற்சியை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் உதவும்.
    நம்முடைய ஒவ்வொருவர் இல்லத்திலும் என் குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை. கவனக்குறைவு, ஞாபக சக்தி குறைவு, புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவாக உள்ளது. டியூசன் வைத்தும் மதிப்பெண் குறைவாக வாங்குகின்றான். என்ன செய்வது தென்றே தெரியவில்லை என்று பெற்றோர்கள் கூறுவதை கேட்க முடியும்.

    இன்றைய போட்டி உலகில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் நாம் நினைத்தபடி கல்லூரியில் மேற்படி சேர முடியும். ஆனால் இப்படி படித்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் பெற்றோருக்கு உள்ளது.

    சில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்கள் சகவாசத்தாலும், சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் தகாத பாலியல் சம்மந்தமான காட்சிகளைப் பார்த்து மனதில் காமம் சூழ்ந்தவராய் படிப்பில் நாட்டமில்லாதவராய் வாழ்கின்றனர்.

    இந்நிலை மாறவேண்டுமெனில் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி தான். யோகக் கல்வி ஒன்று தான் மனிதன் மனதில் உள்ள விலங்கினப் பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீகப் பண்புகளையும் வளரச் செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் எளிய நாடி சுத்தி பயிற்சி.

    விரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத் தில் அமர்ந்து கொள்ள வேண்டும். கண் களை மூடிக்கொள்ள வேண்டும். இடது கை சின் முத்திரையில் இருக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெது வாக மூச்சை வெளி விடவும்.

    மூச்சு உள்ளே இழுக்கும் பொழுது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம்மிடமுள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவைகள் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ண வும். இதுபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

    பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வலது நாசியில் வெளியிடவும். மூச்சை இழுத்து வெளியிடும் பொழுது மேற்கூறியவாறு எண்ணி பத்து முறைகள் பயிற்சி செய்யவும். இப்பொழுது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும் ஒரு பத்து முறைகள் செய்யவும்.

    பின் கீழ்கண்ட வாசகங்களை மனதிற்குள் மூன்று முறைகள் உச்சரிக்கவும்.

    நான் எனது தாய், தந்தையாரை மதிப்பேன்
    தாய், தந்தை அறிவுரையை ஏற்று நடப்பேன்
    நான் எனது ஆசிரியர்களை மதிப்பேன்
    ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடப்பேன்
    நான் கோபப்படமாட்டேன்
    நான் பிறர் பொருளுக்கு ஆசைப் பட மாட்டேன்
    என்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தி யால் நான் எதையும் சாதிக்க முடியும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சியின் மூலம், மாணவர்கள் அறியாது சேர்த்த எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக உடலைவிட்டு, உள்ளத்தைவிட்டு வெளியேறும். ஒவ்வொரு நாளும், நேர்மையான எண்ணங்கள் உள்ளத்தில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். விடாமுயற்சி அதிகரிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும், தவறான, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாமல் வாழ்வர். இன்றைய இன்டர்நெட், செல்போன் கலாச்சார வாழ்க்கையில் மனதில், குறிப்பாக மாண வர்கள் மனதில், மாசில்லாமல் வாழ்வதற்கு மேற்கூறிய பயிற்சி, முதலில் மாணவர்களுக்கு அவசியம். மாணவர்கள் பயில வேண்டிய முதல் கல்வி இது தான்.
    பெண்களை அதிகம் அசிங்கப்படுத்துவது பின் பக்க சதை தான். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.
    அழகு இதை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கின்றார்கள். குறிப்பாக பெண்கள். ஆனால் பெண்களுக்கு தான் அழகாக இருப்பதற்கு தடங்கல் வருகிறது. உடல் எடை அதிகரிப்பு, தொப்பை, இதனுடன் பின் பக்க சதை. பெண்களை அதிகம் அசிங்கப்படுத்துவது பின் பக்க சதை தான். எந்த ஒரு உடையும் அணிய முடியாமல் தடை போட பின் பக்க சதை மற்றும் தொப்பையால் மட்டுமே முடியும்.

    மார்டன் ஆடைகள் அணியும் போது பின் சதை இருந்தால் அசிங்கமாக காட்டிவிடும். இதற்கு தீர்வு என்ன? மருந்து மாத்திரைகளால் இதனை சரி செய்ய முடியாது. இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.

    அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.

    அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.

    அடுத்து “படி ஏறு பயிற்சி” (step’s ups ) இது சாதாரண பயிற்சி தான் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆக குறந்தது 15 படிகளில் 20 தொடக்கம் 25 முறை ஏறி இறங்க வேண்டும். காலையில் இதனை செய்து வந்தால் பின் பக்க சதை சீக்கிறமே குறைந்துவிடும். அடுத்து மிகவும் இலகுவான பயிற்சி “தோப்புக்கரணம்” ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து 30 தொடக்கம் 50 வரை தோப்புக்கரணம் போட்டாலே போதும்.

    பின் பக்க சதை கரைவதோடு தொப்பையும் குறைந்துவிடும். இவை அனைத்துமே சாதாரண உடற்பயிற்சி முறைகள் தான். இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடுகிறது… 
    பெண்கள் கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும்.
    பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

    ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.

    சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

    2020 புது வருடத்தில் மன அமைதியுடன் மன அழுத்தம் இல்லாமல் வாழ இதோ ஒரு எளிய முத்திரை - “தியான முத்திரை”.
    எல்லா உடல், மன நோய்களுக்கு காரணமாக அமைவது மன அழுத்தம், மனக்கவலைதான். மன அழுத்தத்தினால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல் பலவித நோய்கள் வருகின்றது. மனதில் அழுத்தம் இல்லாமல் கவலையில்லாமல் இருந்தால் தான் நமது உடலில் உள்ள நானமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.

    மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும். பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் முத்திரைத்தான் தியான முத்திரையாகும்.

    இன்றைய பரப்பரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்

    தியான முத்திரை எப்படி செய்வது

    விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம். மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும். பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க). பின் மெதுவாக கண்களை திறக்கவும்.

    காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யவும்.

    நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை, பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது. அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது. உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.

    தியான முத்திரையின் இதர பலன்கள்

    மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாது காக்கப்படும், இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது, சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், தன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

    இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை இந்த 2020-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற யோகாசனத்தையும் பயிலுங்கள். 
    காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. நடை, நடனம், யோகா, உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்.
    காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

    காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.

    நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவணையை கொண்டுள்ளனர். எனவே, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.
    வந்தனம் என்ற இந்த கும்பிடு ஆசனத்தை செய்யுங்கள்! எல்லா வியாதியும் கும்பிடு போட்டு ஓடிவிடும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    நீரிழிவிற்கு ஒரு கும்பிடு. அழுத்தத்திற்கு ஒரு கும்பிடு. கால் வலிக்கு ஒரு கும்பிடு. நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு கும்பிடு. கழுத்து வலிக்கு ஒரு கும்பிடு. முதுகு வலிக்கு ஒரு கும்பிடு. இப்படி எல்லா வியாதியும் உடலில் வராமல் இருக்க ஒரே ஒரு கும்பிடு. புரியவில்லையா சார்! வந்தனம் என்ற இந்த கும்பிடு ஆசனத்தை செய்யுங்கள்! எல்லா வியாதியும் கும்பிடு போட்டு ஓடிவிடும். ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் வந்தனம் என்று சொல்லி உங்கள் உடம்பிற்குள் வந்துவிடும். அப்புறமென்ன வந்தனத்தை பயில வாருங்கள்.

    வந்தனம் ஆசனம் செய்முறை

    * விரிப்பில் நேராக நிற்கவும்.
    * இரு கால்களையும் நிதானமாக முடிந்த அளவு அகற்றவும்.
    * இருகால் பாதங்களும் படத்தில் உள்ளதுபோல் இருக்க வேண்டும்.
    * இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.
    * இந்நிலையில் ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து வெளிவிடவும்.
    * ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.
    * பின் மெதுவாக கைகளை கீழிறக்கி கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
    * இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.

    வந்தனம் ஆசனத்தின் பலன்கள்

    இந்த வந்தனம் ஒன்று போதுமே! உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். 72000-ம் நாடி நரம்புகளுக்கும் ஒரே நேரத்தில் பிராண சக்தி கிடைக்கும். தசைகள் தொய்வில்லாமல் இளமையுடன் அழகாக தோற்றமளிக்கும். உடல் எடை அதிகமாகாமல் ஒரே சீராக அழகாக இருக்கும்.

    கால் தொடை தசைகள் சிக்கென இருக்கும். தொடை யில் உள்ள அதிக தசைகள் நீங்கி மிக அழகாகயிருக்கும். கணுக்கால் வலி நீங்கும்.கால் பாதவலி நீங்கும். உள்ளங்கால் வலி நீங்கும்.

    ஆண்களுக்கு மார்புப் பகுதியில் ஏற்படும் கூன், சுருக்கம், நீங்கி ஆண்மை அழகு மிளிரும். பெண்கள் இந்த ஆசனம் செய்தால் மிக இளமையுடன், அழகுடன் திகழலாம். பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி நீங்கும்.

    மூலம் நீங்கும். ஆசனவாயில் அரிப்பு, புண் நீங்கும். ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள குறைபாடுகள் நீங்கும். ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். தூக்கத்தில் கணுக்கால் தசை மேல் ஏறி வலிக்கும். இந்த ஆசனம் அதனை அறவே நீக்கி கால் தசை, நரம்புகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கின்றது.

    மன அழுத்தம் நீங்கும் வந்தனம்

    மன அழுத்தம், கவலை தான் எல்லா வியாதிக்கும் மூல காரணம். இதனால் சோக உணர்வுகள் உடலில் படர்கின்றது. இந்த ஆசனம் செய்யும் பொழுது மன அழுத்தம், கவலை நீங்கும். உடலில் உள்ளதமோ குணம் (சோம்பல்) நீங்கி, புத்துணர்ச்சியடையலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தைமஸ் சுரப்பி இருதயம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறப்பாகயிருக்கும்.

    மன அழுத்தம் நீங்குவதோடு மட்டுமல்ல, மனம் ஒருமைப்படும். பிட்யுட்டரி பீனியல் சுரப்பிகள் சிறப்பாக இயங்கும். அதனால் எண்ணச் சிதறல்கள் இருக்காது. குறிப்பாக மாணவர்கள் இதனை பயின்றால் ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெரிய பெரிய இயந்திரத்தை இயக்குபவர்கள் நல்ல மன ஒருநிலைப்பாட்டுடன் செயல்படுவதால் விபத்து தவிர்க்கப்படும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.

    பஸ் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் பயின்றால் விபத்து தவிர்க்கலாம். காரணம் எண்ணச் சிதறல்கள் இல்லாமல் வாகனத்தை முழுக்கவனத்துடன் ஓட்ட முடியும்.

    இந்த ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கி ஒரு டம்ளர் நீர் அருந்திவிட்டு ஐந்து நிமிடம் நிதானமாக செய்ய வேண்டும். அதன் மூலம் உடல் மனபலம் பெற்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
    கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள். இந்த முத்திரை செய்வதால் லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
    லிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான “ பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம் செய்ய முடியாது, வயதானவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய முடியாது. எனவே கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள்.

    பிராண முத்திரை செய்முறை

    ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
    நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.

    இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
    இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
    இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.
    ×