
பிராண முத்திரை செய்முறை
ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.
இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.