என் மலர்

  ஆரோக்கியம்

  மாணவர்களுக்கு உகந்த யோகப்பயிற்சி
  X
  மாணவர்களுக்கு உகந்த யோகப்பயிற்சி

  மாணவர்களுக்கு உகந்த யோகப்பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யோகப்பயிற்சியை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் உதவும்.
  நம்முடைய ஒவ்வொருவர் இல்லத்திலும் என் குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை. கவனக்குறைவு, ஞாபக சக்தி குறைவு, புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவாக உள்ளது. டியூசன் வைத்தும் மதிப்பெண் குறைவாக வாங்குகின்றான். என்ன செய்வது தென்றே தெரியவில்லை என்று பெற்றோர்கள் கூறுவதை கேட்க முடியும்.

  இன்றைய போட்டி உலகில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் நாம் நினைத்தபடி கல்லூரியில் மேற்படி சேர முடியும். ஆனால் இப்படி படித்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் பெற்றோருக்கு உள்ளது.

  சில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்கள் சகவாசத்தாலும், சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் தகாத பாலியல் சம்மந்தமான காட்சிகளைப் பார்த்து மனதில் காமம் சூழ்ந்தவராய் படிப்பில் நாட்டமில்லாதவராய் வாழ்கின்றனர்.

  இந்நிலை மாறவேண்டுமெனில் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி தான். யோகக் கல்வி ஒன்று தான் மனிதன் மனதில் உள்ள விலங்கினப் பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீகப் பண்புகளையும் வளரச் செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் எளிய நாடி சுத்தி பயிற்சி.

  விரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத் தில் அமர்ந்து கொள்ள வேண்டும். கண் களை மூடிக்கொள்ள வேண்டும். இடது கை சின் முத்திரையில் இருக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெது வாக மூச்சை வெளி விடவும்.

  மூச்சு உள்ளே இழுக்கும் பொழுது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம்மிடமுள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவைகள் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ண வும். இதுபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

  பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வலது நாசியில் வெளியிடவும். மூச்சை இழுத்து வெளியிடும் பொழுது மேற்கூறியவாறு எண்ணி பத்து முறைகள் பயிற்சி செய்யவும். இப்பொழுது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும் ஒரு பத்து முறைகள் செய்யவும்.

  பின் கீழ்கண்ட வாசகங்களை மனதிற்குள் மூன்று முறைகள் உச்சரிக்கவும்.

  நான் எனது தாய், தந்தையாரை மதிப்பேன்
  தாய், தந்தை அறிவுரையை ஏற்று நடப்பேன்
  நான் எனது ஆசிரியர்களை மதிப்பேன்
  ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடப்பேன்
  நான் கோபப்படமாட்டேன்
  நான் பிறர் பொருளுக்கு ஆசைப் பட மாட்டேன்
  என்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தி யால் நான் எதையும் சாதிக்க முடியும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.

  மேற்குறிப்பிட்ட பயிற்சியின் மூலம், மாணவர்கள் அறியாது சேர்த்த எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக உடலைவிட்டு, உள்ளத்தைவிட்டு வெளியேறும். ஒவ்வொரு நாளும், நேர்மையான எண்ணங்கள் உள்ளத்தில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். விடாமுயற்சி அதிகரிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும், தவறான, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாமல் வாழ்வர். இன்றைய இன்டர்நெட், செல்போன் கலாச்சார வாழ்க்கையில் மனதில், குறிப்பாக மாண வர்கள் மனதில், மாசில்லாமல் வாழ்வதற்கு மேற்கூறிய பயிற்சி, முதலில் மாணவர்களுக்கு அவசியம். மாணவர்கள் பயில வேண்டிய முதல் கல்வி இது தான்.
  Next Story
  ×