search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஹாக்கினி முத்திரை
    X
    ஹாக்கினி முத்திரை

    மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் முத்திரை

    ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் ஹாக்கினி முத்திரையை தினமும் மறக்காமல் பயிற்சி செய்யுங்கள் நியாபக சக்தி வளரும், அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
    ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் ஹாக்கினி முத்திரையை தினமும் மறக்காமல் பயிற்சி செய்யுங்கள் நியாபக சக்தி வளரும், அதிக மதிப்பெண்கள் பெறலாம், மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பலன் தரும் அருமையான முத்திரை

    நீரிழிவு வியாதி உள்ளவர், இரத்த அழுத் தம் உள்ளவர், இளம் வயதில் கவனமாக வாழாதது தானே அவர்கள் வியாதிக்கு காரணம். கவனத்துடன் சரியான உணவு, சரியான யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி, முத்திரை, சரியான ஓய்வு உடலுக்கு கொடுத் திருந்தால் இந்த வியாதி வந்திருக்காது. கவன்குறைவினால் நோய் வருகின்றது.

    மனித உடலில் பஞ்ச பூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம்) சமமான அள வில் செயல்பட்டால் மூளை செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல் படும். நமது கவனம் சிதறாது. செய்யும் செயலில் கவனம் முழுமையாக இருக்கும். வெற்றி நிச்சயம்.

    கவனச் சிதைவை தடுத்து, கவனத்துடன் மூளை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ஒரு முத்திரைதான் ஹாக்கினி முத் திரை என்ற அற்புத முத்திரையாகும். இந்த முத்திரையை செய்வதால் அனைவருக்கும் பலன் உண்டு. பள்ளி மாணவர்கள், வாகனம் ஓட்டுபவர், குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்தை மிகக் கவனமாக பாதுகாத்து மேன்மையடையச் செய்யலாம்.

    ஹாக்கினி முத்திரையின் சிறப்பம்சமே நமது உடலில் பஞ்ச பூதங்களையும் சிறப்பாக இயங்கச் செய்வதுதான். அதனால் மன அழுத்தம், கவலை உள்ளவர்கள் இந்த முத்திரையைச செய்யும் பொழுது நரம்பு மண்டலம் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றது. மேலும், மன அழுத்தம் இல்லாமல் வாழும் பண்பாட்டையும் இந்த முத்திரை நமக்கு அளிக்கின்றது.

    எப்படி ஹாக்கினி முத்திரை செய்வது

    நமது வலதுகை விரல் நுனிகளை இடது கை விரல் நுனிகளுடன் இணைத்து தொட வேண்டும். ஒரு விரலுக்கும் அடுத்த விரலுக்குமிடையே இடைவெளி இருக்கும். ஒவ்வொரு விரல் நுனியிலும் இலேசான அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி நெற்றிப் புருவ மையத்தில் நினைவை வைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். முதலில் பயிற்சி செய்பவர்கள் மூன்று நிமிடங்கள் செய்யவும். தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்த பின் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். காலை, மாலை இரு வேலையம் செய்யலாம்.
    Next Story
    ×