என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா...
    விடுமுறை விட்டாச்சு. குட்டீஸ் அனைவரும், ஜாலியாக விளையாடி பொழுது போக்கிக் கொண்டிருப்பீர்கள் அப்படித்தானே!. விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காயங்கள் மோசமான பாதிப்புகளையும், உயிர்ப்பலியையும் உருவாக்கும் ஆபத்து கொண்டவை. எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா...

    ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 40 கோடி குழந்தைகள் காயம் அடைகிறார்களாம். இதில் 7 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் தெரியவருகிறது. விபத்துகளைப் போலவே விளையாட்டிலும் மோசமான காயங்கள் உண்டாகின்றன என்பதுதான் இங்கே கவனிக்கத் தக்கது.

    12 மாதங்கள் முதல் 5 வயதுடைய குழந்தைகளே அதிகம் காயம் அடைகின்றன. அதுவும் பெரும்பாலான காயங்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது விளையாடும் இடங்களில் ஏற்படுகின்றன. இந்த வகை காயங்கள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

    குழந்தைப் பருவ மரணங்கள், ஊனங்கள் ஏற்பட பெரும்பாலும் காயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை காயங்களை உண்டாக்குகின்றன.

    காயங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வீட்டிலோ, வெளியிலோ, விளையாடும்போதோ, பயணம் செய்யும்போதோ காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தனிமையில் இருக்கும்போது மட்டுமல்லாமல் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது குழுவாக விளையாடும்போதும் காயம் உண்டாகலாம். எனவே காயம் குறித்த எச்சரிக்கை அனைவருக்கும் தேவை.

    நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம், சூடான உணவுகள், கொதிக்கும் நீர் போன்றவை ஆபத்தானவை. காயங்களை உண்டாக்கக்கூடியவை. இவற்றில் விளையாடக்கூடாது என்று உங்கள் அம்மாவும் அப்பாவும் சொல்லியிருப்பார்கள். எனவே இவற்றில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கையாள நேர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.



    குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குதூகலம்தான். அதுவும் உயர உயர ஏறி விளையாடுவது ரொம்ப பிடிக்கும். மாடிப் படிகள், ஏணி, கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை பார்த்தாலே அதில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துவிடுகிறதுதானே. அது இயற்கையான உணர்வுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்களை உங்கள் அறிவுக்கூர்மையால் உணர்ந்து கொண்டு விளையாடினால் காயங்கள் ஏற்படாது. ஏறும்போதும், இறங்கும்போதும் கவனமாக இருப்பதுடன், உறுதியாக பற்றிப்பிடித்து விளையாடுவது பாதுகாப்பை பலப்படுத்தும். அதிக உயரமானவற்றில் ஏறி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் மோசமான காயங்களை உருவாக்கக்கூடியவையே. பெற்றோர் இவற்றை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைக்கலாம். கூர் நுனி கொண்ட, வெட்டும் ஆபத்துடைய பொருட்களை கைகளில் எடுத்து விளையாடக்கூடாது.

    தேவையில்லாமல் எதையும் வாயில் வைத்து கடித்து விளையாடக்கூடாது என்று அம்மா சொல்லியிருப்பார்கள். நாணயங்கள், பென்சில்கள், பிளாஸ்டிக் பந்துகள், கோலிகள், கிரையான்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வாயில் வைத்து விளையாடக்கூடாது. அவை வாய்க்குள் சென்றால் வயிற்றுவலி உள்பட பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். சில பொருட்கள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே சாப்பிடும் பொருட்களைத் தவிர மற்ற எதையும் வாயில் வைத்து விளையாடக்கூடாது. சோப்பு, எண்ணெய், மருந்து, சுத்தப்படுத்துவதற்காக வைத்துள்ள அமிலங்கள், தைலங்கள் போன்றவற்றையும் வாயில் வைக்கக்கூடாது.

    வெயில் நேரத்தில் தண்ணீரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தண்ணீரும் ஆபத்தானதுதான். நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விளையாடக் கூடாது. நீந்தத் தெரிந்திருந்தாலும் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது.

    சாலையில் செல்லும்போதும் கவனம் தேவை. வாகனங்களும், கரடுமுரடான பாதைகளும் காயத்தை உண்டாக்கலாம். எனவே பெற்றோர் இல்லாமல் சாலையில் பயணிக்க வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் சாலையில் எப்படி பயணிக்க வேண்டும், எப்படி கடக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொண்டு பயணிக்க வேண்டும்.



    மின்சாரமும் மிக ஆபத்தானது. உடைந்த மின்சாதனங்களைத் தொடுதல், சுவிட்ச் போர்டுகளில் விளையாடுதல், குச்சிகள் அல்லது கத்தியை மின் இணைப்பில் சொருகி விளையாடுதல் போன்றவை கூடாது. இது மோசமான காயத்தையும், உயிர்ப்பலியையும் உண்டாக்கும் ஆபத்து உடையது.

    செல்லப் பிராணிகளிடமும் அதிகமாக விளையாடக்கூடாது. நாய், பூனை உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு பிராணிகளும் கடித்தோ, பிராண்டியோ காயத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத விலங்குகளிடமும் நெருங்கிச் செல்லக் கூடாது.

    காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், முதலுதவி முறையையும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுதான் ஆபத்துகளை குறைக்க உதவும். இளம் சிறுவர்களை கவனமாக கண்காணிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

    விபத்துகள் தவிர்த்த, விளையாட்டு சார்ந்த காயங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைப்பது பெற்றோரின் பொறுப்பு. பெரியவர்களின் சொல்கேட்டு, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களுடன் காயமின்றி அமைதியாக விளையாடுவது குட்டீஸ் உங்களின் பொறுப்பு!

    இன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோ லாக்கரில் பூட்டி வையுங்கள்.

    வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

    வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.



    வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.

    விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.

    வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம்.

    வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
    சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    பொதுவாக குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.



    குழந்தைகளுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

    அதே போல் தாய்மார்கள் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    82 சதவீதம் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். இந்த பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மிகமிக அவசியம்.
    குழந்தைகள் மீது வரும் பாலியல் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர். 13 வயதிற்கு உட்பட்ட பருவ வயது எட்டுவதற்கு முன் உள்ள குழந்தைகள் மேல் பாலியல் இச்சை கொள்ளும் மனநிலையை பீடோபிலியா என்று அழைக்கிறார்கள். இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சில வேளைகளில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இதே குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கண்டு பிடிக்கப்பட்டாலும் இது குடும்ப பாரம்பரிய நோயா அல்லது ஜீன்களால் வருவதா என கண்டுபிடிக்கவில்லை.

    ஆனாலும் சில மனநல மருத்துவர்கள் இது நோயல்ல, சுய இன்பம், ஓரினச்சேர்க்கை போன்ற ஒரு பழக்க வழக்கம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது கற்றுத் தேர்வதோ அல்ல. இயல்பாக சில மனிதர்களில் காணப்படுவது தான் என உளவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பீடோபிலியா என்பது ஒரு விகல்பமான பாலியல் விருப்பமாகவே உள்ளது.

    இந்த நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினம். எதனால் இப்படியான மனநிலைக்கு எட்டுகின்றனர் என்பதை பற்றி இன்னும் சரியான ஆய்வு வரவில்லை. இந்த நோயின் தாக்கத்தை 16 வயது முதல் ஒரு மனிதன் அறிந்து கொள்ள இயலும். தனக்கு இது போன்ற நோய் தாக்கியுள்ளது என அறிந்ததும் சிகிச்சைக்காக உளவியல் மருத்துவர்களை இவர்கள் அணுகுவதில்லை. மாறாக தன்னுடன் அன்புடன் பழகும் குழந்தைகளையோ மற்ற குழந்தைகளையோ தனது பாலியல் இச்சைக்கு இரையாக்க தேடி அலைய ஆரம்பிக்கின்றனர்.



    இந்த நபர்கள் கோரமானவர்களாகவோ அச்சம் கொள்ளும் தோற்றத்திலோ தெரிய மாட்டார்கள். மிகவும் நட்பாக குழந்தைகளிடம் பழகும், குழந்தைகளை எளிதாக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இதில் இன்னொரு பெரும் கொடுமை என்னவென்றால் பெண் குழந்தைகளின் பாதிப்புகூட வெளியில் தெரிகிறது. பேசப்படுகிறது, தண்டனையும் கிடைக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகள் சுத்தமாக வெளிவருவதில்லை. அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இப்போது பெண் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால் இவர்களின் பார்வை ஆண் குழந்தைகள் பக்கம் திரும்பி இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.

    இவ்விதமான நோயாளிகள் வெளியாட்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 82 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவது சொந்த குடும்ப உறுப்பினர்களால் தான். சில வேளைகளில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் போன்றவர்களும் குழந்தைகளை எளிதாக பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்குகின்றனர். இந்த பாலியல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மிகமிக அவசியம்.

    சிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது.
    மாணவர்களும், பெற்றோரும் அட்மிஷனை எதிர்பார்த்து காத்திருக்கும் காலமிது. சமீப காலமாக ‘அட்மிஷன்’ என்ற வார்த்தை அனைவரது காதுகளிலும் அதிகமாக விழுந்து கொண்டிருக்கும். சிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது. அதில் தவறு இல்லை. ஆனால் எந்த ஒரு நிறுவனத்திலும் அட்மிஷன் போடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய சில இருக்கின்றன. அவை பற்றி இங்கே...

    அப்ளிகேசனை பூர்த்தி செய்து அனுப்பு முன்பு, அப்ளிகேசனை நன்றாக படித்து அறியுங்கள். அதற்கு முன்பாக அந்த பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தின் விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    ‘எல்லாம் தெரிந்து கொளண்டுதானே அப்ளிகேசன் போட ஆசைப்படுகிறோம்’ என்று அவசரப்பட வேண்டாம். பள்ளி கல்லூரியின் குறை நிறைகள், தேர்ந்தெடுக்கும் கல்வியின் எதிர்காலம், அதை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதி எல்லாவற்றையும் யோசித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அவர்கள் பல கேள்விகளைக் கேட்பதைப்போல நீங்களும் உங்களுக்குள்ளாகவே பல கேள்விகளை கேட்டுக் கொள்வது நலம். அக்கம் பக்கத்திலும், நிர்வாகத்தினரிடமும் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

    குழந்தைக்கு பள்ளி - கல்லூரி ‘செட்’ ஆகுமா? என்று யோசிப்பதைப் போலவே உங்கள் சூழலுக்கும் அது உகந்ததா? என்பதை யோசியுங்கள். உங்கள் வேலை, மனைவியின் வேலை, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிலை, கல்வி நிர்வாகத்தினரின் கெடுபிடிகள் எல்லாவற்றுக்கும் சூழல் ஒத்துழைக்குமா? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    கல்வி வளாகத்தை நேரில் சென்று பார்வையிடுங்கள். விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அப்படியே நம்பிவிடாதீர்கள். கல்வி நிறுவன வளாகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கிறதா? பாதுகாப்பு இருக்கிறதா? கட்டமைப்புகள் போதுமானதாக இருக்கிறதா? என்பதை நோட்டமிடுங்கள். அவற்றை அறிந்து கொள்வதை விரும்பாத அமைப்புகளில் உங்கள் குழந்தைகளை சேர வேண்டுமா? என்பதை யோசியுங்கள்.

    ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும்போதே, அதை முடிக்கும் வரையிலான பொருளாதார திட்டமிடலையும் வகுத்துவிடுங்கள். இந்த ஆண்டு சேர்த்துவிட்டு, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற மேம்போக்கான திட்டமிடலால் தத்தளிப்பவர்கள் ஏராளம். ‘எப்படியும் கடன்வாங்கித்தானே சமாளிக்கப் போகிறோம்’ என்று சாதாரணமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். நகை, சீட்டு எல்லாம் எதிர்பாராத சிரமங்களை எதிர்கொள்வதற்கு பயன்படும் உபாயங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்ற வருவாய், சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக்கான பொருளாதாரத்தை திட்டமிடுங்கள்.

    பொருளாதார வசதிக்கேற்ப திட்டமிடல் இருக்க வேண்டும். சில பயிற்சிகளுக்கு இலவசம் அல்லது சலுகை அறிவித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை தேர்வு செய்யக் கூடாது. அதே நேரத்தில் ஆசைக்காக அதிக தொகையுள்ள பயிற்சியையும் தேர்வு செய்யக் கூடாது. நல்ல எதிர்காலம் மிகுந்த, உங்கள் குழந்தையின் திறனுக்கேற்ற படிப்புதானா? என்பதை அறிந்து எந்த ஒரு பயிற்சியையும், கல்வியையும் தேர்வு செய்ய வேண்டும்.

    குழந்தையின் விருப்பத்தை முதலில் கேளுங்கள். அவர்கள் விருப்பத்துக்கும், திறமைக்கும் பொருத்தமான துறை படிப்பை தேர்வு செய்கிறோமா என்பதை கவனியுங்கள். அதுபற்றி அறிய பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர் உதவியை நாடுங்கள். விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து கொண்டு அவதிப்பட வேண்டாம்.

    கவுரவம் கருதி ஒரு படிப்பை தேர்வு செய்வதை கைவிடுங்கள். பிள்ளைகள் விரும்பும் படிப்பு வேறு ஒன்றாக இருந்தாலும், ‘அதில் சரியான வாய்ப்புகள் கிடைக்காது, சிறந்த எதிர்காலம் இருக்காது’ என்று புறம் தள்ளிவிட்டு, சமூக கவுரவம் கருதி, குழந்தைக்குப் பிடிக்காத துறையை தேர்வு செய்து படிக்க அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளின் ஆர்வத்தையும், திறனையும் தூண்டும், எதிர்காலத்திற்கேற்ற படிப்பை தேர்வு செய்யவும், அந்தத் துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

    அதிகப்படியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு, இதுவா அதுவா? என்று குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள, உங்கள் குழந்தைக்குப் பிடித்த, எளிதில் வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்திற்கு முதலில் முயற்சி செய்யுங்கள். நீங்கள் கல்லூரியில் இருப்பதைவிட கல்லூரிக்கு வெளியே நிறைய காலம் இருக்க நேரிடும், எனவே சிறந்த கல்வி நிறுவனத்தைவிட, சிறந்த கல்வித் துறையை தேர்வு செய்து படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். 
    புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    புதிதாய் தாயானவர்கள் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? எதை எப்போது செய்ய வேண்டும் போன்ற குழப்பங்கள் என்றுமே மனதில் இருக்கக்கூடும். இந்த குழப்பங்களை தவிர்க்க, புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட 5 பொருளை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

    1. வசதியான படுக்கை:

    உங்கள் குழந்தைகள் வருங்கால இளவரசியாக இருப்பினும், அவர்களுக்கு அளவு பெரிதான படுக்கையை ஆரம்பத்திலேயே அமைத்து தர வேண்டாம். உங்கள் குழந்தைகள் தூங்கும் அளவுக்கு ஏதுவான தலையணை மற்றும் படுக்கை வசதியை நீங்கள் ஏற்படுத்தி தரலாம். இதன் மூலமாக உங்கள் பணத்தை நீங்கள் சேமிப்பதோடு இடத்தையும் அழகாய் மாற்றலாம். குழந்தைகளுக்கு மிகப்பெரிய படுக்கை வசதி அமைத்து தருவதன் மூலம் நேர செலவும் உங்களுக்கு அதிகம் ஆகும்.

    2. போர்வைகள்:

    குழந்தைகள் உஷ்ணம் அதிகமுள்ள இடத்தை தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், கருவறையில் அவர்கள் இருக்கும் நிலையாக கூட அமைகிறது. புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அதிகம் தேவைப்படும் விஷயங்களுள் ஒன்று போர்வை.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட போர்வைகளை உங்கள் குழந்தைக்காகவே நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அந்த போர்வைகள் வெதுவெதுப்பாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

    3. டயப்பர்:

    குழந்தைகளுக்கு தேவையான பொருள் எதுவென அம்மாக்களிடம் கேட்டால், அவர்களுக்கு முதலில் நினைவில் வருவது டயப்பர் தான். எப்போதும் குழந்தைகளுக்கு துணிகளால் ஆன டயப்பரை பயன்படுத்துவது மிக நல்லது. ஏனெனில், புதிதாய் பிறந்த குழந்தையின் சருமம் என்பது மிகவும் உணர்ச்சிவசம் அடங்கியதாக இருக்கும். நீங்கள் கடைகளில் வாங்கும் எல்லா விதமான டயப்பரும் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.

    4. ஊஞ்சல்:

    உங்கள் குழந்தைக்கான ஊஞ்சல் வாங்கி வைக்க வேண்டியதும் அவசியம். இந்த ஊஞ்சல் உங்கள் குழந்தைக்கு தேவையான தூக்கத்தை தர, உங்கள் கவனம் அவன் மீது இருந்த வண்ணமும் இருக்க வேண்டும்.

    இந்த 5 பொருட்களை நீங்கள் குழந்தைக்காக வாங்கி வைக்க வேண்டியது அவசியமாக, இது போல் இன்னும் எத்தனையோ பொருட்கள் குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கவும் வேண்டும். 
    விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது.
    புளூவேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே அனைவரும் பேசினர். ஆனால், புளூ வேலைப் போல இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை ஒரே அடியாக மரணத்தைத் தூண்டாவிட்டாலும், ‘ஸ்லோ பாய்சன்’ போல மெதுவாக தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றன.

    ‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் விளையாட்டும் புளூவேல் போல விபரீதமான விளையாட்டுதான். இது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அறிமுகமாகி, பின் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இது 2016-ல் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்தது. போக்கிமான் எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைக் கொண்டு, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

    முதலில் இந்த விளையாட்டு வரவேற்பை பெற்றது. ஆனால், பிறகுதான் இதன் விபரீதங்கள் தெரிய ஆரம்பித்தன. அமெரிக்காவில் 17 வயது பெண் விடியற்காலையில், வெகு தூரம் சென்று, யாரும் இல்லாத இடத்தில் போக்கிமானை பிடிப்பதற்கு பதில் சவத்தை கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த விளையாட்டின் விபரீதங்களைப் பலரும் உணர ஆரம்பித்தார்கள்.

    இந்த விளையாட்டை பயன்படுத்தி பல திருட்டு சம்பவங்களும், கொலைகளும்கூட நடந்துள்ளன. வாகனம் ஓட்டிச் செல்லும்போது இதை விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மக்கள் சுடுகாடுகள், அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கு அத்துமீறி நுழைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த விபரீதமும் இந்த விளையாட்டால் நடக்கவில்லை.

    இதேபோல் பல ஸ்மார்ட்போன் கேம்களும், வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன. ‘கிராண்ட் தெப்ட் ஆட்டோ’ போன்ற வீடியோ கேம்ஸ் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கட்டத்தில், விளையாடுபவர் ஒருவரை துன்புறுத்தி கேள்விகள் கேட்பதுபோல் விளையாட வேண்டும்.

    அதில் சரியான விதிமுறைகள் எதுவும் இல்லாததால், ஆடுபவர் தன் விருப்பத்துக்கு அந்த நபரை துன்புறுத்த ஆரம்பித்தார். இந்த விளையாட்டும் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளான விளையாட்டுதான். பல ஆண்டுகளாக ஏதோ ஒரு ஆன்-லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமைப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். கேண்டி க்ரஷ், மினி மிலிடியா போன்ற விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. 
    குழந்தையை வாக்கரில் உட்கார வைக்கும்போது ஒரு நொடிக்கு மூன்று முறை அடியெடுத்து வைக்கும். இதனால், மூளை கட்டுப்பாடு மீறிச் செயல்படுகிறது.
    மனித உடலில் மூளையும் உடல் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது. இதனால், மூளை தன் கட்டுப்பாட்டை இழக்கும்.

    இதனால், குழந்தைகள் வேகமாக நடக்க ஆரம்பித்துச் சிறு சிறு விபத்துகளைச் சந்திப்பர். சாதாரணமாக குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து நடக்கப் பழகுவர். இதுவே, வாக்கரில் உட்கார வைக்கும்போது அந்தக் குழந்தை ஒரு நொடிக்கு மூன்று முறை அடியெடுத்து வைக்கும். இதனால், மூளை கட்டுப்பாடு மீறிச் செயல்படுகிறது.

    பொதுவாக, வாக்கரின் அடிப்பகுதியில் சக்கரத்தைச் சுற்றி வட்டம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனால், குழந்தைக்கு அடிபடாது எனப் பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், இந்த வட்ட அமைப்பினால் குழந்தையின் கை, கால்களில் அடிபடாமல் இருக்குமே தவிர, தலையில் அடிபடும். அதிக வேகத்துடன் குழந்தை வாக்கரை இழுத்துக்கொண்டு வரும்போது, படிகளில் உருண்டு விழுவது, வாக்கருடன் சேர்ந்து குப்புற விழுவது போன்ற விபத்துகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.

    வாக்கரில் நடக்கும்போது, குழந்தைகள் முழு பாதத்தையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை. கால் விரல்களை மட்டுமே தரையில் பதிக்கின்றனர். இதனால், கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. வாக்கரை எடுத்த பிறகும் இதே பழக்கத்தில் குழந்தைகள் நடக்க முயற்சி செய்யும்போது பிரச்னையைச் சந்திக்கிறார்கள்.

    ஆரம்பத்தில், குழந்தைகளை நடக்கப் பழகுவதற்காக என வாக்கரில் அமரவைக்கும் பெற்றோர், நாளடைவில் தங்களுக்கு வேலை இருக்கும்போதெல்லாம், வாக்கரில் உட்கார வைத்துவிட்டு வேலைகளைப் பார்க்கிறார்கள். இதனால், குழந்தையின் இயல்புகளில் பாதிப்பு ஏற்படுவதுடன் எனர்ஜி அளவும் குறைகிறது.

    குழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால்தான், ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழுந்து நடக்க முயல்வார்கள். வாக்கரைப் பயன்படுத்தும்போது இதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. வாக்கரில் பழகிய குழந்தையானது, தானாக நடக்க ஆரம்பிக்கும்போது, பயம், தடுமாற்றம் போன்றவற்றைச் சந்திக்கிறது.
    குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

    * ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய்விடலாம்.

    * ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.



    * குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.

    * இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.

    * போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும்.  ஜோஸ்கதவு, ஜன்னல் எனச் சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத்  தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஏ.சி.யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.

    பல விஷயங்களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்துவைத்திருப்பது இல்லை. அதனால், இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யலாம்.
    நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங்களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்துவைத்திருப்பது இல்லை. அதனால், இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்யலாம். அதற்கான சில யோசனைகளே இவை.

    * பள்ளி நாள்களில் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் கொண்ட குழந்தைகளை, வீட்டுக்குள்ளே சிறு நூலகம் அமைக்க வைக்க ஏற்பாடு செய்து தரலாம். அருகிலுள்ள புத்தகக் கடைக்கு அழைத்துச்சென்று குழந்தைகளுக்குப் பிடித்த நூல்களை வாங்கிச் செய்யவும். வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி, முடிந்தால் அலமாரிகள் வாங்கித் தரவும் அல்லது சின்ன மரப்பலகைத் துண்டுகளைக் கொண்டு அலமாரிகளை உருவாக்கக் கற்றுத்தரலாம். அதன்பின், புத்தகங்களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அடுக்கச் செய்யவும். இது பள்ளி மற்றும் பொது நூலகத்தில் எவ்வாறு புத்தகங்களை அடுக்குகிறார் என்பதைக் குழந்தைகள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.



    * டைரி எழுதுவது என்பது நல்ல பழக்கம் என்று சொல்லிக்கொடுத்திருப்போம். ஆனால், எப்படி எழுதுவது, என்னவெல்லாம் எழுதுவது என்று விரிவாகக் கூறியிருக்க மாட்டோம். இந்த விடுமுறையில் புதிய டைரியை வாங்கித் தந்து, அன்றைய தேதியில் நடந்தவற்றை மட்டுமல்லாமல், நண்பர்களோடு ஏற்பட்ட சண்டை, யார் மீது தவறு, ஆசிரியரிடம் கிடைத்த பாராட்டு, திட்டு உள்ளிட்டவற்றை எழுதப் பழக்கலாம்.

    * வீட்டின் மையமான ஓரிடத்தில் பெரிய சார்ட்டை ஒட்டவும். அதில் தினமும் குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஓவியம் வரையுங்கள். முதல் நாளில் மேகம் என நினைத்துத் தொடங்கிய ஓவியம், அடுத்த நாள் கட்டடமாக மாறும். அதற்கு அடுத்த நாள் மலை மீதுள்ள கட்டடமாக மாறும். இப்படி உருமாறும் ஓவியம் உங்கள் குழந்தைக்கு விரிவடைந்த கற்பனை ஆற்றலை வழங்கும்.

    இவை மட்டுமல்லாது, சிறுவருக்கான சினிமாக்களைப் பார்த்தல், கதைப் புத்தகங்கள் வாசித்தல், கதை எழுதுதல், புதிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்தல் உள்ளிட்ட பலவற்றிலும் குழந்தைகளை ஈடுபடச் செய்வதன் மூலம் சோர்வில்லாமல் கோடை விடுமுறையை செலவழிப்பர்.
    கோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.


    குழந்தை, பெற்றோர்,





    கோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.

    * விடுமுறை காலம் என்பதற்காக தூங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது. பள்ளி நாட்களில் தூங்க செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் வழக்கமாக கடைப்பிடிப்பது போல் இப்போதும் தூங்கும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும். விடுமுறை என்பதற்காக இரவில் அதிக நேரம் கண் விழித்து விளையாட அனுமதிக்கக்கூடாது. உடல் புத்துணர்ச்சி பெறவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் போதுமான தூக்கம் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.

    * விடுமுறை நாட்களில் வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் மாறுதல் ஏற்படுத்திவிடக்கூடாது. குழந்தைகள் சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதுதான் செரிமானத்திற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. அவர்களுடைய அறிவையும், திறமையையும் மேம்படுத்த ஆரோக்கியமான உணவு அவசியமானது.

    * சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க குழந்தைகளை பழக்கப் படுத்த வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கை களை கழுவும் பழக்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும். சுகாதாரத்தை பேணுவது பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

    * செல்போனிலோ, டி.வி.யிலோ பிள்ளைகள் வீடியோ கேம் விளையாடும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது அவர்களுடைய உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் உயர்த்தும்.



    * சிறுவயது முதலே சர்க்கரையின் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். சர்க் கரையை அதிகமாக உட்கொள்ளும்போது கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியை உடல் இழந்து பலவீனமாகிவிடும்.

    * குழந்தைகள் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன்னால் அதிகநேரம் உட்கார்ந்தால் மந்த உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும். டி.வி.யோ, வீடியோ கேமோ விளையாடிக்கொண்டே சாப்பிடவும் கூடாது.

    * குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வெளிப் படுத்தும் களமாக அவர்களின் கோடை விடுமுறையை மாற்ற வேண்டும். ஓவியம் தீட்டும் வகையிலான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து பயனுள்ள பொழுதுபோக்காக மாற்றிவிடலாம். கலர் பென்சில்களும், கிரையான்களும் அவர்களுடைய கண்களுக்கும், கைவிரல்களுக்கும் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையாற்றலை வெளிப்படுத்தும் சக்தியை கொடுக்கும்.

    *களிமண், வண்ண காகிதங்கள், கத்திரிக்கோல், தெர்மாக்கோல் போன்றவைகளை வாங்கிக்கொடுத்தும் அவர்களுடைய கலைத்திறனை வெளிப்படுத்தலாம். படிப்பு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தாமல் வீட்டு அலங்கார பொருட்களை தயார் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்களும் ஆர்வமாக கலைப்பொருட்கள் உருவாக்கத்தில் ஈடு படுவார்கள்.

    * இணையதளங்களில் குழந்தைகளின் படைப்பு திறனை மெருகேற்றும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை வீடியோ காட்சிகளாக பதிவேற்றம் செய்து காண்பித்து அவர்களிடம் கலை ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம்.

    * விடுமுறை நாட்களில் வீட்டு தோட்டம் அமைப்பதற்கும் ஊக்கப்படுத்தலாம். செடிகள் வளர்க்கும் ஆர்வத்தை துளிர்விட செய்து பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகும் அதில் கவனம் பதிக்க செய்ய வேண்டும்.
    வெயிலின் தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வயிற்றுக்கு இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
    வெயிலின் தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வயிற்றுக்கு இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.

    வெறுமனே தயிர்சாதமாக குழந்தைகளுக்கு கொடுக்காமல் அதில் மாதுளை, உலர் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள், காய்கறிகள், பழங்களை கலந்து கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அது வயிற்றுக்கு இதமளிக்கும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். கீரை சாதமும் குளிர்ச்சி தரக்கூடியது. அதனுடன் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    அது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கவும் உதவும். கோடைகாலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக காய்கறிகள், பழங்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். பற்களால் கடித்து சாப்பிடுவதுதான் நல்லது என்றாலும் அவர்கள் அப்படி சாப்பிட அடம்பிடிக்கும் பட்சத்தில் கூழாகவோ, ஜூஸாகவோ தயாரித்து கொடுக்கலாம். காய்கறிகள், பழங்கள் இரண்டையும் ஒன்றாக கலந்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

    சூப் வகைகளும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். கோழி இறைச்சியை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் காய்கறி துண்டுகளை சேர்த்து சூப்பாக தயாரித்து கொடுக்கலாம். ஐஸ்கிரீமை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை வீட்டிலேயே சிறப்பாக தயாரித்து அளிக்கலாம். ஐஸ்கிரீமுடன் பழங்கள் கலந்தும் கொடுக்கலாம். பழங்கள், காய்கறிகளை சாலட்டு களாகவும் சுவைக்க செய்யலாம்.
    ×