என் மலர்
இஸ்லாம்
ரமலான் மாதம் நன்மை, தீமைகளை பிரித்து காட்டக் கூடிய மாதம், திருக்குர்ஆனும் இம்மாதத்தில்தான் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதம் இறைமறைகளை வேதங்கள் இறக்கிய மகத்தான மாதமாக உள்ளது.
ரமலான் மாதம் நன்மை, தீமைகளை பிரித்து காட்டக் கூடிய மாதம், திருக்குர்ஆனும் இம்மாதத்தில்தான் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதம் இறைமறைகளை வேதங்கள் இறக்கிய மகத்தான மாதமாக உள்ளது. மேலும் நன்மைகளை தேடக்கூடியவர்களே விலகிக் கொள்ளுங்கள் (இந்த ரமலானின் சிறப்பின் காரணமாக) அனேக ஜனங்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை கொடுக்கப்படுகிறது.
குர்ஆன் மூலமாக முக்கியமான துவாக்கள் உள்ளன. இதன் மூலம் மருத்துவ, குணங்களையும் அறிந்து அஷ்டபந்தனம், குளிச்சம், தாவீஸ், நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வதற்காகவும் வழிகாட்டியாகவும் குர்ஆன் உள்ளது.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், திருமண மண்டபங்கள் நிலைத்து செழித்தோங்கவும், புதிய கட்டிடங்கள் அஷ்டபந்தனம் செய்திடவும், வியாபாரம் அபிவிருத்தியாகவும், வீட்டு திருஷ்டி நீங்கி குடும்பத்தார் யாவரும் நல்ல மகிழ்ச்சியாகவும் சிறப்புடனும் வாழவும் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட அஷ்டபந்தனமும் எவ்வித மான முடியாத வேலையும் நல்ல முறையில் முடியும்படியும் நல்ல மதிப்பும், நல்ல உயர்பதவிகள் கிடைக்கவும், ராஜவசிய மையும், சக்தி மோதிரமும், தீராத பிரச்சினையும் உடல் நிலை பாதிப்புக்கு தண்ணீர் மந்திரித்து தருதல், திருமண தாவீஜ் (திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகவும்) குளிச்சம், தோஷம், திருஷ்டி, செய்வினை இவைகளுக்கு கழிப்பு செய்து சந்தோஷமாக வாழவும், காணாமல் போனவர்கள் வீடு திரும்பி வர குளிச்சமும், கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழவும், பதவி உயர்வு சொத்து சேர வசதி முன்னேற்றம் ஏற்பட பொருள் (நகை, பணம்) அதிகரிக்கவும், பணப் பெட்டியில் வைக்க ஸ்டார் குளிச்சம் தரப்படும்.
ஞாபகசக்தி, கண்பார்வை கூர்மை அடையவும், கால்நடைகளில் பால் அதிகரிக்க பேர் ராசி, ராவீஜ் தினசரி பார்க்கப்படும். உங்களின் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷமாக வாழவும் நன்மை பெறவும் வாணியம்பாடியில் பல விருதுகள் பெற்ற அஷ்ட பந்தன நிலையம், மதினா மசூதி பக்கத்தில் ராமையன் நோன்பு வழி, முஸ்லீம்பூர், வாணியம்பாடி வந்து ஆலோசனை பெறலாம். அதேபோல் 2-வது மேற்குதெரு, டாக்டர் எம்.ஜி.ஆர். நகர், நூர் மசூதி தெரு, புதுக்காட்பாடி, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நேரில் இக்பாலை சந்தித்து ஆலோசனை பெறலாம். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள், ஈத் முபாரக்
பி.முஹம்மது இக்பால்

“மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே, குற்றம் புரிவோரில் சிறந்தவர்கள் அதிக அளவில் பாவமன்னிப்புக் கோருபவரே ஆவர்” என்பது நபி மொழி.
அஸ்லாமு அலைக்கும், இறைவன் இட்ட ஐந்து கடமைகளில் 1. ஈமான் 2. தினம் ஐந்து வேளை தொழுகை 3. ஜகாத் 4. ரமலான் மாதத்தில் நோன்பு 5. புனித ஹஜ் பயணம் ஆகும்.
முதலாவது கடமையாக இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு மனிதன் முதலில் செய்ய வேண்டியது உள்ளத்தால் இறைவனையும் அவரின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் ஏற்று கலிமா ஓத வேண்டும். இரண்டாவது கடமையாக தினமும் அந்த மனிதன் ஐந்து வேளை தொழுகை தொழ வேண்டும். மூன்றாவது கடமையாக வருடத்தில் ஒருமுறை தான் சம்பாதித்த பணத்தில் ஜகாத்துக்கு கொடுப்பது. அதாவது சம்பாதித்த பணத்தில் 40ல் ஒருபாகம் தன் ஏழை உறவினர்கள், அக்கம் பக்கம் வசிக்கும் தகுதியானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அளித்து அவர்களின் வாழ்வு “ஒளி” பெற வேண்டும்.
நான்காவது கடமையாக வருடத்தில் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். அதாவது பொழுது விடிவதற்கு முன்பாக (சஹர்) உணவு உண்டு அன்று பகல் முழுவதும் பச்சை தண்ணீரும் அருந்தாமல் தொழுகை நேரங்களில் ஈடுபட்டு பிறருக்கு தொந்தரவு அளிக்காமலும், கண், காது, வாய், கை, கால்களாலும் கெட்ட செயலில் ஈடுபடாமலும், சூரியன் மறைந்த பிறகு (இப்தியார்) உணவு உண்ண வேண்டும். இதற்கு பெயர்தான் நோன்பு ஆகும். இப்படி ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இறுதியாக ஐந்தாவது கடமையாக ஹஜ் ஆகும். அதாவது பணம் வசதி படைத்தவர்கள் தனது ஆயுளில் ஒரு முறையாவது இஸ்லாமிய ஹிஜிரி வருடத்தில் கடைசி மாதமாக துல்ஹஜில் மாதத்தில் “புனித மெக்கா” நகருக்கு சென்று “ஹஜ்” செய்வது ஆகும்.
புனித ரமலான் மாதத்தில் பிறருக்கு உதவுவதும், பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் நல்ல காரியங்களில் ஈடுபட்டு புனித குர்ஆன் ஓதியும் அதை அறிந்தும் தன் வாழ்வில் அதன்படி நடக்கவே இது ஒரு பயிற்சி ஆகும். நோன்பு இருப்பவர்கள் பெரும்பாலும் அந்த நாட்களில் அவருக்கு ஏற்கனவே உள்ள நோய்களால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.
மேலும் ரமலான் மாதத்தில் 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகள் மிகவும் முக்கியமான இரவுகள் ஆகும். இந்த ஒற்றைப்படை இரவுகளில் யார் இறைவனுக்கு அஞ்சி பாவ மன்னிப்பு கோரி, தன் நற்செய லுக்கு அங்கீகாரம் பெறுகிறார்களோ அவர்கள் இந்த ஒற்றைப்படை இரவு களில் ஏதோ ஒரு இரவில் அன்று அவர்கள் செய்கின்ற பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். மேலும் இந்த ஒரு இரவு மட்டும் ஆயிரம் இரவுகளுக்கு மேலானதாகும், அன்று செய்கின்ற பிரார்த்தனை அவ்வளவு சிறப்பு வாய்ந்தவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்.
“உங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோருங்கள் பிறகு அவன் பக்கம் மீளுங்கள், திண்ணமாக, இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின் றான். (திருக்குர்ஆன்11:90) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.
“மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே, குற்றம் புரிவோரில் சிறந்தவர்கள் அதிக அளவில் பாவமன்னிப்புக் கோருபவரே ஆவர்” என்பது நபி மொழி.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார். “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி கள் உண்டு. அதில் ஒன்று நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றொன்று மறுமையில் இறை வனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்.
இறுதியாக ரமலான் மாதம் முடிந்து அன்று இரவு பிறை பார்த்ததும் ஷவ்வால் மாதம் முதல்நாள் “ஈதுல்பிதர்” என்னும் ஈத் பெருநாள் ஆகும். அன்று காலை தொழுகைக்குப் பிறகு ஈத்பெருநாள் விசேஷ தொழுகை நடைபெறும். தொழுகைக்குப் பிறகு அனைவரும் கட்டிப்பிடித்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறுவார்கள். ஈதுல் பிதர் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு “ஈத்முபாரக்” வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலியார்ஜூபேர் அகமது முன்னாள் நகரமன்றத் தலைவர், பேரணாம்பட்டு.

திருமறையாம் திருக்குர் ஆனின் வசனத்தில் ரம்ஜான் மாதத்தில் நோன்புகளை கடமையாக்கியதை சுட்டிக்காட்டி, உங்கள் முன்னோர்களின் மீதும் நோன்பை கடமையாக்கியதை நினைவு கூறுகிறது
திருமறையாம் திருக்குர் ஆனின் வசனத்தில் ரம்ஜான் மாதத்தில் நோன்புகளை கடமையாக்கியதை சுட்டிக்காட்டி, உங்கள் முன்னோர்களின் மீதும் நோன்பை கடமையாக்கியதை நினைவு கூறுகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பிற மனிதர்களின் துன்பங்களையும், பசியின் கொடுமையையும் அறிந்து மனிதநேயத்தை பேணிக்காத்திட ஒரு சிறந்த பயிற்சியாகவும், வழிகாட்டுதலாகவும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
சூரிய உதயத்திலிருந்து அஸ்த மணம் வரை உண்ணாமலும், பருகாமலும், 30 நோன்புகளை கடைப்பிடிக்கும் காலத்தில், செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் ஏழைகளின் பங்காக 2.5 சதவீதத்தை பங்கிட செய்ய வேண்டுமாய் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பண்பு ஈகை உணர்வை மேம்படுத்துகிறது. பெறக் கூடியவர்கள் தரக்கூடியவர்களாக உயர்த்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்த ஈகை வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசியாலும், தாகத்தாலும், பசியின் கொடுமையாலும் தன்னுடைய அடியார்கள் அலைக்கழிக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் நோக்க மல்ல, பசியின் கொடுமையிலும் மற்றவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் கடுகளவும் கேடு விளைவிக்காமல் தன்னடக் கத்தோடு மனித மாண்புகளை பேணிக்காக்கும் பயிற்சிதான் நோன்பு.
மதங்கள் என்பது மனித சமூகத்தை நெறிப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்காகத்தான், இறைவனை வழிபடும் முறைகள் முரண்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவனே என்ற உறுதிப்பாடு நம் மண்ணிற்கே உரித்தான ஒன்று, இறைவன் ஒருவனே என்ற (ஏகத்துவ) நம்பிக்கை, மதங்களுக்கு அப்பால் பொது வானதாக கருதப்படுவதும் நம் மண்ணில்தான். சமூகத்தில் பொதுவாக மனிதர்கள் மொழியால், இனத்தால், மதத்தால் அறியப்படுவது இயல்பான ஒன்று. ஒருவனால் ஏற்படும் நன்மைக்கும், தீமைக்கும் அவனே முழு பொறுப்பே தவிர, அவன் சார்ந்த இனத்தையோ, மதத்தையோ குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. எனவே தீவிரவாதத்தை மதத்தோடு ஒப்பிடுவதை தவிர்ப்போம்.
அண்டை வீட்டார் பசித்திருக்க புசித்துவிடாதே என்ற பெருமா னாரின் அறிவுரை மனித மாண்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கடமை வேறு, உரிமை வேறு, கடமை ஆற்றாமல், உரிமை கோருவதும், உரிமைகளையே கடமையாக்கி கொள்வதும் நிகழ்காலத்தில் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கடமை செய்வதோடு உரிமைகளை பேணிக் காத்திட அனைவருக்கும் சூப்பர் நேஷன் பார்ட்டி சார்பில் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
மதார் கலிலூர் ரஹ்மான் நிறுவன தலைவர் சூப்பர் நேஷன் பார்ட்டி

நான்காவது கடமையான ஜகாத் வசதி படைத்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஜகாத் அளிக்காவிட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயத்தையும் உண்டாக்கியுள்ளான்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் நான்கு கடமைகள் ரமலான் மாதத்தில் அதிக அளவில் இறைவனை எண்ணும் வகையில் செயல்பட அடங்கி இருப்பதால் இம்மாதத்தை மிகச்சிறந்தமாதமாக கருதி முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். இது ஒரு புனித மாதம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் 1.கலிமா, 2. 5 வேளை தொழுகை, 3. நோன்பு, 4. ஜகாத், 5. ஹஜ் ஆகும். முதல் மூன்று கடமைகள் எல்லா இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காவது கடமையான ஜகாத் வசதி படைத்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் ஏழை, எளிய சொந்தக்காரர்களின் நலனிலும், ஏழைகள் மீதும் அக்கறை காட்டும் அளவுக்கு சமூக வளர்ச்சி செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுள்ளான்.
ஜகாத்தின் சிறப்புகள்
இதன்மூலம் தன்வந்தர்களின் சொத்துக்கு பாதுகாப்பு அளித்துள்ளான். ஜகாத் கொடுப்பவரின் சொத்தை விரிவடையச்செய்தும், மனதிருப்தியும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அடையச்செய்துள்ளான். ஜகாத் அளிக்காவிட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயத்தையும் உண்டாக்கியுள்ளான்.
முக்கியத்துவம்
ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆனில் 82 இடங்களில் தொழுகைக்கு அடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஜகாத் அளிக்காவிட்டால் அவரின் தொழுகை ஏற்கப்படுவது கடினம். ஜகாத் அளித்தவரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட காரணமாக அமைகின்றன.
யார் மீது கடமை
ஜகாத் ஒருவரின் சொத்தை பொறுத்து கணக்கிட வேண்டும். அவரின் வருமானத்தை பொறுத்து அல்ல. சொத்தின் மதிப்பு அவரிடம் ஒருவருடம் இருக்க வேண்டும். அதன்மதிப்பு அவரின் கடன்போக 52½ தோலா வெள்ளிக்கு குறைவாகவோ அல்லது தங்கம் 87½ கிராமுக்கு குறைவாகவோ அதன்மதிப்பு இருக்கக்கூடாது. இன்றைய தினம் அதன் மதிப்பு ரூ.2,05,000 ஆகும்.
எதன்மீது ஜகாத் கிடையாது
சொந்தத்திற்கான வீடு, கார், வீட்டு உபயோகத்திற்குரிய பொருட் கள், வாடகைக்கு எடுத்துள்ள சொத்து மீது ஜகாத் கிடையாது. தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, தாத்தா, பாட்டி, பாட்டன் ஆகியோர் ஜகாத் பெற தகுதி உடையவர்கள் கிடையாது.
பெற தகுதி உடையோர்
ஒருவரின் ஏழை, எளிய, சுற்றத்தார்கள், தன்மாநில, ஊரார், கடனில் சிக்குண்டவர்கள், தன்தொழிலாளர்கள், வழிபோக்கர் கள், அடிமைகளை விடுவிப்பவர்கள், ஜகாத் வசூலிப்பவர்களுக்கு அளிக் கலாம். பணமாகவும், நகையாகவும், நிலமாகவும், தானியமாகவும், கால் நடைகளாகவும், துணிகளாகவும் கொடுக்கலாம்.
உரியவர்களுக்கே ஜகாத் அளித்து இன்று ஈத்பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். ஈத் முபாரக்
பிர்தோஸ் கே.அஹமத், ஷபீக் ஷமீல் சமூக சேவை தலைவர், ஆம்பூர்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
புதுடெல்லி:
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.
இந்த பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து, புத்தாடையோ அல்லது தங்களிடம் இருப்பவற்றில் சிறந்த ஆடையையோ அணிந்து தொழுகைக்கு சென்றனர். தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹமீதியா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நாடு முழுவதிலும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்திற்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும். நமது நன்மைகளும், தீமைகளும் தராசில் வைத்து நிறுக்கப்படும். நன்மை செய்தோருக்கு சொர்க்கமும், தீமை புரிந்தோருக்கு கொடுமையான நரகமும் உண்டு.
நமது சொல், செயல் அனைத்தும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மனித வாழ்க்கையில் நாம் எப்போதும் மறக்கக்கூடாது.
மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்திற்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும். நமது நன்மைகளும், தீமைகளும் தராசில் வைத்து நிறுக்கப்படும். நன்மை செய்தோருக்கு சொர்க்கமும், தீமை புரிந்தோருக்கு கொடுமையான நரகமும் உண்டு.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திலும அவசரப்படுவது ஷைத்தானின் செயல் ஆகும். இருப்பினும் 5 விஷயங்களில் நாம் அவசரப்படுவது நன்மையாகும் அவை வருமாறு:
* வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உடனே அவரை நாம் உபசரிக்க வேண்டும். இதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது.
* ஒருவர் மரணம் அடைந்து விட்டால் உடனே அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் தாமதம் செய்வது குற்றமாகும்.
* ஆணோ, பெண்ணோ திருமண வயதை அடைந்ததும், அவர்களுக்கு பொருத்தமான ஜோடி அமைந்து விட்டால் உடனே திருமணத்தை செய்து வைக்க வேண்டும்.
* ஒருவருக்கு கடன் இருந்தால் அதை விரைவில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்த தாமதம் செய்யக்கூடாது.
* அறிந்தும், அறியாமலும் பாவம் செய்து விட்டால் உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அந்த பாவத்தில் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும்.
அதுபோல மரணம் குறித்த நினைவு ஒருவரது மனதில் வந்துவிட்டால் பின்வரும் 3 காரியங்கள் மூலம் இறைவன் அவனுக்கு நன்மைகள் செய்கின்றான்.
* பாவங்களுக்கு உடனே பரிகாரம் தேட வேண்டும் என்று நினைவு அதிகரித்து அவன் அதிகமாக பாவ மன்னிப்பு கேட்பான்.
* போதும் என்ற மனம் அவனுக்கு ஏற்பட்டு விடும். பேராசை போன்ற தீய குணங்கள் அவனை விட்டு விலகிவிடும்.
* இறைவழிபாட்டில் அவன் அதிகமாக ஈடுபடுவான்.
அதுபோல மரணத்தை மறந்து செயல்பட்டால் 3 காரியங்கள் மூலம் அவனை இறைவன் சோதிப்பான். அவை:
* தவறுகள் செய்து விட்டால் பின்னர் பாவமன்னிப்பு கேட்கலாம் என்ற தள்ளிப்போடுவான்.
* உலக வாழ்வில் ஆசையும், விருப்பமும் அதிகரித்து அதிகமான தீமைகள், கெடுதல்கள் செய்ய தயங்கமாட்டான்.
* இறைவனை வழிபடுவதில் சோம்பேறித்தனமும், அலட்சியமும் ஏற்படும்.
இறைவன் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.
அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாக தங்கும் கவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனை குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும். (திருக்குர்ஆன் 98:7-8)
இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்து நன்மைகள் பெறுவோம். ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

மறுமையில் 3 இடங்களில் நாம் நமக்கு பிரியமானவர்களை நினைக்க முடியாது. அவர்கள் எவ்வளவு தான் பிரியமானவராக இருந்தாலும் அவர் நினைவுக்கு வரமாட்டார்கள். அந்த மூன்று இடங்கள்:
ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள். மறுமையில் தனக்கு பிரியாமானவர்களை நாம் நினைக்க முடியுமா?. இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதில் வருமாறு:
மறுமையில் 3 இடங்களில் நாம் நமக்கு பிரியமானவர்களை நினைக்க முடியாது. அவர்கள் எவ்வளவு தான் பிரியமானவராக இருந்தாலும் அவர் நினைவுக்கு வரமாட்டார்கள். அந்த மூன்று இடங்கள்:
1. மனிதனின் நன்மைகள் - தீமைகளை எடைபோட்டு பார்க்கும் தராசுக்கு அருகில் நிற்கும் போது.
2. ஒரு மனிதன் செய்த நன்மை- தீமைகளுக்கு ஏற்ப அவனது செயல்கள் எழுதப்பட்ட பட்டோலை வலது கரத்தில் கொடுக்கப்பட்டால் அவன் சொர்க்கவாதி, இடது கரத்தில் கொடுக்கப்பட்டால் அவன் நரகவாதி. அது போன்ற நிலையில் தனது பட்டோலை எந்தக்கரத்தில் கொடுக்கப்படும் என்று தெரியாமல் நிற்கும் போது.
3. நரகத்தில் கழுத்து நீண்ட ஒரு மிருகம் உள்ளது. அந்த மிருகம் மூன்று பிரிவினரை பிடித்துக்கொள்ளும். அல்லாஹ்வுக்கு இணை வைத்தவன், பெருமையுடனும் தற்பெருமையுடன் வாழ்ந்தவன், மறுமைநாளில் இறைவனின் கேள்வி கணக்குகள் கேட்கப்படும் என்பதை மறுத்தவன், ஆகிய மூன்று பேர்களை இந்த மிருகம் தன் வாயால் பிடித்து நரகத்திற்குள் வீசி எறியும். அந்த மிருகம் எப்போது தன் முன்பு தோன்றுமோ என்ற பயத்தில் இருக்கும் போதும் யாருடைய நினைவும் ஒரு மனிதனுக்கு வராது.
இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.
மறுமை நாளில் நமக்கு துணையாக இருப்பது அந்த ஏக இறைவன் மட்டுமே. அந்த இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்றால் அந்த வல்லவன் வகுத்த வழியில் நமது வாழ்க்கை அமைய வேண்டும். இதையே திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:
நிச்சயமாக எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பிறகு அதிலேயே நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்: அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்(திருக்குர்ஆன 46:13-14)
இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனின் ஏட்டில் பதிவு செய்யப்படும். நமது செயல்களில் தன்மைக்கு ஏற்ப நன்மைகளும், தீமைகளும் நமக்கு வழங்கப்படும். இதில் எந்த மாறுபாடும் கிடையாது என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
அன்றியும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை பூரணமாக பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்(திருக்குர்ஆன் 46:19)
இறைநம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்:(எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீராக்கி வைப்பான்: உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்: அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (திருக்குர்ஆன் 33:70-71)
இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அல்லாஹ்வை வணங்கி அவன் அருளைப்பெறுவோம். ஆமீன்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

இந்த புனித ரமலானில் நமது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு வெண்மையான உள்ளத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
ரமலான் நோன்பின் மகத்துவமே மனிதன் பாவங்களில் இருந்தும், பாவச்செயல்களில் இருந்தும் விலகி நன்மைகளைப்பெற வேண்டும் என்பது தான். நோன்பு நோற்று இறைவனை வணங்கி தான- தர்மங்கள் செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கத்தை பரிசாக பெற்றுக்கொள்ளவே ரமலான் வழிகாட்டுகிறது.
இந்த ரமலான் மாதத்திலே மகத்துவம் மிக்க ஓர் இரவு உள்ளது. லைலத்துல் கத்ர் இரவு என்று அழைக்கப்படும் அந்த இரவில் நாம் செய்யும் வணக்கங்களுக்கு, ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கங்களை விட சிறந்த நன்மைகளைப்பெற்றுத்தரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமலானில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லீம்)
புனிதமான அந்த இரவு என்பது குறித்து உபாதா இப்னு ஸாமித்(ரலி) இவ்வாறு அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (ரமலானில் வரும்) லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமலான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்கு தெரிவிப்பதற்காக (தம் வீட்டிலிருந்து) புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லீம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக நான் (வீட்டிலிருந்து) புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (என் நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாகவே இருக்கலாம். எனவே (ரமலான் மாதத்தின் இருபத்து) ஒன்பதாவது(இருபத்து) ஏழாவது. (இருபத்து) ஐந்தாவது இரவுகளில் அதனை தேடிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (நூல்:புகாரி)
லைலத்துல் கத்ர் இரவில் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
கண்ணிமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் (திருக்குர்ஆன் 97:1-5)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களின் புனித இரவு சிறப்பு தொழுகை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக விளங்குவது ரம்ஜான். இறைதூதர் முகமது நபிக்கு திருக்குரான் அருளப்பட்டதை நினைவு கூர்ந்து ரம்ஜான் நோன்பின்போது முஸ்லிம்கள் திருக்குரானை தினந்தோறும் ஓதி வருகிறார்கள். அதன்படி 27 நாட்கள் திருக்குரான் ஓதி முடிக்கும் நாளாக வருகிற சனிக்கிழமை (நாளை) உள்ளது. இந்த நாள் முஸ்லிம்களின் புனித இரவாக இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறியதாவது:-
இறை தூதர் முகமது நபிக்கு ரம்ஜான் மாதத்தில் திருக்குரான் இறக்கப்பட்டது. எனவே ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது திருக்குரானை தினமும் படித்து வசனங்களை புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
திருக்குரானின் மொத்த வசனங்கள் 6 ஆயிரத்து 666 ஆகும். இதனை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை பள்ளி வாசல்களில் ஓதி, அதற்கு விளக்கங்கள் கூறப்படும். 27-வது நாள் முழுமையாக திருக்குரான் ஓதி முடியும்நாள். இந்த நாள்தான் ‘லைலத்துல் கதர்’ எனப்படும் புனித நாளாகும். இந்த நாளில் சூரியன் மறையும் நேரத்தில் இருந்து அடுத்த நாள் சூரியன் உதிப்பதுவரை ஒரு முழு இரவும் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதப்படும். வசனங்களுக்கு பள்ளிவாசல் தலைவர்கள் விளக்கங்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த புனித இரவையொட்டி அனைத்து பள்ளி வாசல்களும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறினார்.
புனித இரவு தொழுகை நாளை (சனிக்கிழமை) இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும். மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா தலைமையில் ஈரோடு டவுன் பெரிய பள்ளிவாசலில் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடக்கிறது.

நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.
புனிதமான இந்த ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மையான அமல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு செய்தால் இறைவனின் நற்கூலியைப்பெறலாம். நரகத்தை விட்டும் பாதுகாப்பும் பெறலாம். நாம் செய்யவேண்டிய அமல்களில் குறிப்பிடத்தக்கது தொழுகை, கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை குறித்த நரத்தில் இமாம் ஜமாத்துடன் சேர்ந்து தொழுவது சிறப்பு மிக்கது. இதுகுறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:
மேலும் பொறுமையை கொண்டும், தொழுகையைக்கொண்டும (அல்லஹ்விடம்) உதவி தேடுங்கள் (திருக்குர்ஆன்2:45)
நம்பிக்கை கொண்டோரே பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (திருக்குர்ஆன் 2:153)
தொழுகையை நிலைநாட்டுவதுடன் திருக்குர்ஆனையும் ஓதிவர வேண்டும். குறிப்பாக திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் அதை அதிகமாக ஓதிவர வேண்டும். ஏன்என்றால் மறுமைநாளில் நமக்கு சொர்க்கத்தை பரிந்துரை செய்யும் வல்லமை கொண்டது திருக்குர்ஆன்.
திருக்குர்ஆனை முறையாக ஓதி வந்தவர் மறுமைநாளில் இறைவனை சந்திக்கும் போது அவருக்காக அவர் ஓதிய திருக்குர்ஆன் சிபாரிசு செய்யும். இறைவா இந்த மனிதன் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருந்தான். இரவில் தூக்கத்தை விட்டும் விலகி இருந்து இவன் திருக்குர்ஆன் ஓதினான். எனவே இவனுக்கு சொர்க்கத்தை அளிப்பாயாக என்று திருக்குர்ஆன் தனது சிபாரிசை தெரிவிக்கும். இது தவிர சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடையும் இந்த திருக்குர்ஆன் வழிகாட்டும்.
ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைக் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது என்று திருக்குர்ஆன்(2:185) குறிப்பிடுகிறது.
நமக்கு எது தேவை என்றாலும் இறைவனையே அழைக்க வேண்டும், இறைவனிடமே கேட்க வேண்டும்.
இது குறித்து திருக்குர்ஆன் (2:186) இவ்வாறு குறிப்பிடுகிறது:
(நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றிக்கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலாம் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும்(அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.
மற்றொரு வசனத்தில் நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள ரத்த நரம்பை விட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம் எனும் இறைவன் குறிப்பிடுகின்றான் ( திருக்குர்ஆன் 50:16)

இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக்கிடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும் மரணத்திற்குப்பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக்கூறினார்கள்.
அடுத்து இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டதற்கு‘ இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீங்கள் இணையாகக் கருதாத நிலையில் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை வழங்கி வருவதும், ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்ற கூறினார்கள்.
அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்ட போது (இஹ்ஸான் என்பது ) அல்லாஹ்வை (நேரில்) காண்பதை போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப்பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மை பார்த்து கொண்டே இருக்கிறான் என்றார்கள்.
அடுத்து உலகம் அழியும் நாள் எப்போது? என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப்பற்றி கேட்கப்பட்டவர் (நான்) அதைப்பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களை பற்றி உமக்கு சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப்பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்: மேலும் கருப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த மக்கள் உயர்ந்த் கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக்கொள்ளல்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிமாட்டார் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
நிச்சயமாக (உலக முடிவு) காலத்தை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்) தான் இருக்கிறது. (திருக்குர்ஆன்31:34)
பின்னர் அம்மனிதர் திரும்பிச்சென்றார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரை காணவில்லை.
அப்போது இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்(ரலி)
இதுகுறித்து திருக்குர்ஆன்(2:277) வசனம் குறிப்பிடுகையில், ‘ பார் ஈமான் கொண்டு நற்கருமங்களை செய்து தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது: அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று தெரிவிக்கிறது.

தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் கிருபை நிறைந்தவன், மன்னிக்கும் குணம் கொண்டவன். அவன் மனிதர்களை படைத்ததே தன்னை வணங்க வேண்டும், தான் வகுத்த வழியில் வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான்.
தவறு செய்யும் மனிதனை தண்டிக்க வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் அல்ல. மாறாக தான் படைத்த இந்த மனித இனம் தனது கட்டளைப்படி நடக்கிறதா? என்பதை சோதிக்கவே இந்த உலக வாழ்க்கையை மனித இனத்திற்கு இறைவன் கொடுத்துள்ளான்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘இறைவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்: உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு. மேலும் எவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்’(திருக்குர்ஆன் 69:2)
இதனால் தான் நாம் செய்யும் தீமையான எந்த செயல்களுக்கும் உடனடி தண்டனை என்பது கிடையாது. ஏன்எனில் இறைவன் கூறுகிறான், ‘என் அருள், என் கோபத்தை முந்திவிட்டது’ என்று.
தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான். அப்போதும் மனிதன் தன்னைமாற்றிக்கொள்ளவில்லை என்றால் இவ்வுலகிலும், மறுமையிலும் அவனுக்கு கடும் தண்டனை அளிக்கின்றான்.
எனவே முதலில் இறைவன் தரும் எச்சரிக்கையை உணர்ந்து கொண்டு, அவன் குறைவான தண்டனை தரும் போதே நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறுமை நாளில் காத்திருக்கும் மிக மோசமான தண்டனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், நரகத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்நாளில் இறைவணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நற்செயல்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இந்த ரமலான் மாதம் நமக்கு வழிகாட்டுகிறது.
ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி வாரி வழங்கினார்கள் என்பது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
‘இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: ரமலான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் ஒவ்வொர் இரவிலும் நபி(ஸல்) அவர்களை சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருநத) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் போது அவர்கள் மழைக்காற்றை விட அதிகமாக (மக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
புதிதமான இந்த ரமலானில் நாமும் வாரிவழங்குபவர்களாக மாறுவோம். பாவங்களை விட்டு விலகி நன்மைகளை நாளும் பெறுவோம்.