search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெறிப்படுத்தும் ரம்ஜான் மாதம்
    X

    நெறிப்படுத்தும் ரம்ஜான் மாதம்

    திருமறையாம் திருக்குர் ஆனின் வசனத்தில் ரம்ஜான் மாதத்தில் நோன்புகளை கடமையாக்கியதை சுட்டிக்காட்டி, உங்கள் முன்னோர்களின் மீதும் நோன்பை கடமையாக்கியதை நினைவு கூறுகிறது
    திருமறையாம் திருக்குர் ஆனின் வசனத்தில் ரம்ஜான் மாதத்தில் நோன்புகளை கடமையாக்கியதை சுட்டிக்காட்டி, உங்கள் முன்னோர்களின் மீதும் நோன்பை கடமையாக்கியதை நினைவு கூறுகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பிற மனிதர்களின் துன்பங்களையும், பசியின் கொடுமையையும் அறிந்து மனிதநேயத்தை பேணிக்காத்திட ஒரு சிறந்த பயிற்சியாகவும், வழிகாட்டுதலாகவும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

    சூரிய உதயத்திலிருந்து அஸ்த மணம் வரை உண்ணாமலும், பருகாமலும், 30 நோன்புகளை கடைப்பிடிக்கும் காலத்தில், செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் ஏழைகளின் பங்காக 2.5 சதவீதத்தை பங்கிட செய்ய வேண்டுமாய் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பண்பு ஈகை உணர்வை மேம்படுத்துகிறது. பெறக் கூடியவர்கள் தரக்கூடியவர்களாக உயர்த்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்த ஈகை வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பசியாலும், தாகத்தாலும், பசியின் கொடுமையாலும் தன்னுடைய அடியார்கள் அலைக்கழிக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் நோக்க மல்ல, பசியின் கொடுமையிலும் மற்றவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் கடுகளவும் கேடு விளைவிக்காமல் தன்னடக் கத்தோடு மனித மாண்புகளை பேணிக்காக்கும் பயிற்சிதான் நோன்பு.

    மதங்கள் என்பது மனித சமூகத்தை நெறிப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்காகத்தான், இறைவனை வழிபடும் முறைகள் முரண்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவனே என்ற உறுதிப்பாடு நம் மண்ணிற்கே உரித்தான ஒன்று, இறைவன் ஒருவனே என்ற (ஏகத்துவ) நம்பிக்கை, மதங்களுக்கு அப்பால் பொது வானதாக கருதப்படுவதும் நம் மண்ணில்தான். சமூகத்தில் பொதுவாக மனிதர்கள் மொழியால், இனத்தால், மதத்தால் அறியப்படுவது இயல்பான ஒன்று. ஒருவனால் ஏற்படும் நன்மைக்கும், தீமைக்கும் அவனே முழு பொறுப்பே தவிர, அவன் சார்ந்த இனத்தையோ, மதத்தையோ குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. எனவே தீவிரவாதத்தை மதத்தோடு ஒப்பிடுவதை தவிர்ப்போம்.

    அண்டை வீட்டார் பசித்திருக்க புசித்துவிடாதே என்ற பெருமா னாரின் அறிவுரை மனித மாண்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கடமை வேறு, உரிமை வேறு, கடமை ஆற்றாமல், உரிமை கோருவதும், உரிமைகளையே கடமையாக்கி கொள்வதும் நிகழ்காலத்தில் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கடமை செய்வதோடு உரிமைகளை பேணிக் காத்திட அனைவருக்கும் சூப்பர் நேஷன் பார்ட்டி சார்பில் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

    மதார் கலிலூர் ரஹ்மான் நிறுவன தலைவர் சூப்பர் நேஷன் பார்ட்டி
    Next Story
    ×