என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மின்தேர் பவனி நடைபெற்றது.
    கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பெருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு அன்னையின் பெருவிழா திருப்பலி நடந்தது. இதற்கு திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா தலைமை வகித்தார்.

    உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நிகழ்த்தினார். இதில் முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், கோவிந்தன், எட்வர்டு உள்பட கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து அன்னையின் அலங்கார மின் தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து அதிகாலை அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் விடுதலை பெருவிழா திருப்பலியினை பேராயர் இல்லத்தை சேர்ந்த ஜான்திரவியம் நிகழ்த்தினார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை பங்குத்தந்தை பிரிட்டோ ஏற்றி வைத்தார்.

    பின்னர் பகல் நேர சப்பர பவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது. அங்கு நற்கருணையுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் மற்றும் பங்குத் தந்தையர்கள் செய்திருந்தனர்.
    ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஏராளமான ஆற்றல்கள் மறைந்து இருக்கின்றன. இவற்றை உணர்ந்த கொண்டவன் வலிமை மிக்கவனாக இந்த உலகில் பயணம் செய்கிறான்.
    ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஏராளமான ஆற்றல்கள் மறைந்து இருக்கின்றன. இவற்றை உணர்ந்த கொண்டவன் வலிமை மிக்கவனாக இந்த உலகில் பயணம் செய்கிறான். தன்னை உணர்ந்தவனே இந்த உலகில் அனைத்தையும் வென்று காட்டுகிறான்.

    ஒரு மனிதன் தான் செல்லும் வழியில் யானை ஒன்று சிறிய சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை கண்டான். உடனே அச்சம் கொண்டவனாய் யானை அருகில் சென்று அந்த பாகனிடம் கேட்டான். இவ்வளவு பெரிய யானையை ஒரு சிறிய சங்கிலியால் கட்டி வைத்து இருக்கிறாயே சங்கிலியை அறுத்து விட்டு கலகம் செய்து விடாதா? என்று. அதற்கு பாகன் இந்த யானை சிறியதாக இருந்த போது அதனை கட்டுவதற்கு ஒரு சிறிய சங்கிலி தேவைப்பட்டது. இந்த சங்கிலி அதற்கு போதுமானதாக இருந்தது. அது வளர்ந்த பின்பும் அந்த சங்கிலியின் பிணைப்பில் இருந்து விடுபடவே முடியாது என் மனநிலையுடன் உள்ளது என்றான்.

    இந்த யானையை போலவே நம்முடைய பலங்களை தெரியாமல் பல நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னை அறிந்தவன் வாழ்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவான். எவ்விதமான கலக்கங்களும் அவனை ஒன்றும் செய்திடாது. முடிந்த அளவுக்கு வாழ்வுக்குரிய ஏராளமான விழுமியங்களை தொடர்ந்து வாழ்ந்து காட்டுகிறவனாக உருமாறுவான். இறையருள் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய காரியங்களுள் தன்னை அறிதல் மிக முக்கியமான ஒன்றாகும்.

    வரலாற்றில் ஞானிகள், சான்றோர்கள், உயர்ந்தவர்கள் என போற்றப்படுகிறவர்கள், மதிக்கப்படுகிறவர்கள் அனைவரும் தன்னை அறிந்தவர்களே ஆவார். தன்னை அறிந்து கொண்டதால் தான் உலகிற்கு வழிகாட்ட முடிந்தது. உலகத்தில் நிரந்தரமான செய்கைகளை உருவாக்க முடிந்தது. இறைமகன் இயேசு கிறிஸ்து இதைத்தான் நானே உலகின் ஒளி என சான்றுரைத்தார். தனது வாழ்வால் உலகத்தில் உள்ள ஏராளமானோருக்கு வழிகாட்டினார். அவரது வழிகாட்டுதலில் பயணம் செய்கிற நாமும் தன்னை அறிந்து உலகத்தை செம்மைபடுத்துவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார்மறைமாவட்டம்.
    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள். கடவுள் சகலவற்றையும் படைத்தார். பறவைகள், மிருகங்கள், சமுத்திர மச்சங்கள், இயற்கை, வானம், பூமி இவை அனைத்தும் கடவுளின் சிருஷ்டியே.
    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள். கடவுள் சகலவற்றையும் படைத்தார். பறவைகள், மிருகங்கள், சமுத்திர மச்சங்கள், இயற்கை, வானம், பூமி இவை அனைத்தும் கடவுளின் சிருஷ்டியே.

    ‘இவையெல்லாவ‌ற்றையும் உண்டாக்கின தேவன், மனிதனை தம்முடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியும் சிருஷ்டித்தார்’ என்று திருமறை தெளிவாகக் கூறுகிறது (ஆதி 1:26).

    “கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்’ என்றார்”.

    தெய்வத்தின் சாயலில் சிருஷ்டித்த மனுக்குலத்தை தேவனாகிய கர்த்தர் பலுகி பெருகி பூமியை நிரப்பும்படி ஆசீர்வதித்தார். தேவன் அவருடைய நற்குணங்களை மனிதனுக்குள் வைத்தார். அதில் பிரதானமான குணம் என்று கருதப்படும் ‘பிறருக்கு உதவி செய்யும் குணாதிசயம்’ நம்மிடயே அதிகமாக காணப்படுவதில்லை.

    எத்தனையோ மனிதர்கள் திக்கற்றவர் களாக, அனாதைகளாக, விசாரிப்பாரற்றவர் களாக, தனிமையில் வேதனையில் கண்ணீர் வடிப்பது உண்டு. ‘நான் நம்பின மனிதர்கள் என்னை கைவிட்டார்களே, என் உறவுகள் என் சொந்தங்கள் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று அங்கலாய்க்கிற உள்ளங்கள் எத்தனையோ உண்டு. ஏன் தன் சொந்தப் பெற்றோர்களைத் தவிக்கவிடுகிற எத்தனை பிள்ளைகள் உண்டு.

    இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தியை, ஆறுதலான செய்தியை வேதம் எடுத்துரைக்கிறது.

    ‘நசரேனாகிய இயேசு, நன்மை செய்கிறவராய் பூமியில் அவர் வாழ்ந்த நாட்களில் சுற்றித்திரிந்தார்’ (அப் 10:38).

    இந்த நசரேனாகிய இயேசு யார்?

    அவர்தான் உதவி செய்யும் தெய்வம். ஆம், அவர்தான் மனுக்குல மீட்பிற்காக, இரட்சிப்பிற்காக, பூமியில் அவதரித்த இறைமகன்.

    ‘ஆண்டவர் உதவி செய்கிற தெய்வமாக இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்’.

    ஆம், அவர் என்றன்றைக்கும் சதாகாலமும் உயிரோடிருக்கிற தேவன்.

    “மரித்தேன், ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்” என்று திருவுளம்பற்றியவர் இயேசு பிரான் (வெளி 1:18).

    இந்த தெய்வம் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்தார். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி உங்களுக்கு அவர் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.

    நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நம்பிக்கையோடு அவரை நோக்கி வேண்டுதல் செய்வதே.

    ஒரு முறை கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பக்தன் பேதுரு, ‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ என்று கதறி கூப்பிட்டான்.

    இயேசு அவன் கரங்களை பிடித்து மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றினார்.

    ஒருமுறை ஒரு குருட்டுப் பிச்சைக்காரன், ‘ஆண்டவரே எனக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டு கூப்பிட்டான்.

    அவன் வேண்டுதலைக் கேட்டு அவனுக்கு பார்வையளித்தார் அருள் நாதர் இயேசு.

    ஆம், அவர் வியாதியில் உதவி செய்கிற தெய்வம்.

    ஒருமுறை ஒரு ஸ்த்ரீ, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும். என் மகன் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்று கூப்பிட்டார்.

    ஆண்டவர் அவளுக்கு இரங்கி அந்த பிசாசை துரத்தி அவளுக்கு உதவி செய்தார்.

    தொழிலிலே ஒரு ஆசீர்வாதமும் இல்லாமல் இருந்த பேதுருவை சந்தித்து, படகு நிறைய மீன்களைப் பிடித்துக் கொடுத்து அவன் தொழிலை, வியாபாரத்தை ஆசீர்வதித்த தெய்வம் அருள் நாதர் இயேசு.

    தன் கைகளில் இருந்த கடைசி காசையும் கொண்டு வந்து காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழை விதவையை மறக்காமல் போஷித்த வள்ளல் அவர்.

    இன்றைக்கு உங்களுக்கும் நிச்சயமாக உதவி செய்வார். வியாதியிலிருந்து பிசாசின் பிடியிலிருந்து, மரணத்திலிருந்து, வியாபார நஷ்டத்திலிருந்து இவர்களைக் காப்பாற்றின தெய்வம் நிச்சயமாய் உங்களுக்கும் உதவி செய்வார்.

    நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ (பிலி 4:6) என்கிற வாக்கின்படியாகவும்,

    “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) என்கிற வாக்கின்படியாகவும், ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக்கூப்பிடுங்கள்.

    நிச்சயமாய் ஆண்டவர் உங்களுக்கும் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார். காரணம், அவர் உதவி செய்யும் தெய்வம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் இந்த தெய்வம். அன்றைக்கு இவரை நோக்கி கூப்பிட்டவர்களுக்கு உதவி செய்தது போல இன்றைக்கும் அவர் உதவி செய்வார்.

    உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும், நீங்களும் உங்கள் நன்மைகளை பெற்றுக்கொள்வீர்கள், ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    கடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா?’
    விவிலியத்திலுள்ள நூல்களில் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்று ‘யோனா’.

    நான்கே நான்கு அதிகாரங்களும், 481 வசனங்களும், 1321 வார்த்தைகளும் தான் இந்த நூலில் உள்ளன. ஆனாலும் இது சொல்கின்ற செய்தி மிகவும் வலிமையானது.

    யோனாவின் நூல் மிகப்பிரபலமாக இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.

    ஒன்று யோனா நூலில் வருகின்ற அதிசயச் செயல்கள். அதிலும் குறிப்பாக பெரிய மீன் ஒன்றின் வயிற்றில் யோனா மூன்று நாட்கள் உயிரோடு இருக்கும் நிகழ்வு.

    இன்னொன்று. இறைமகன் இயேசு தன்னோடு ஒப்பிட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இந்த யோனா தான் எனும் சிறப்பு.

    அமித்தாய் என்பவருடைய மகனான யோனாவுக்கு கடவுளின் அழைப்பு வருகிறது. நினிவே நகருக்குச் சென்று “பாவத்தில் வாழ்கின்ற உங்களுக்கு அழிவு வரப் போகிறது” என அறிவிக்க வேண்டும். இந்த பணி யோனாவுக்குப் பிடிக்கவில்லை.

    நினிவேயில் வாழ்ந்த மக்கள் அசீரியர்கள். அவர்கள் யூதர் அல்லாத பிற இன மக்கள்.

    இறைவனின் செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்க யோனாவுக்கு மனமில்லை.

    ‘நான் போய் மக்களை எச்சரித்து, அவர்கள் மனம் திரும்புவதை விட, இறைவன் அவர்களை அழிப்பதே நல்லது’ என்பதே அவருடைய சிந்தனை.

    வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகள் அசீரியர்களை கொடுங்கோலர்களாகச் சித்தரிக்கின்றன. போர்க்கைதிகளை அவர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாய் சாகடித்து ரசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் போதே கைதிகளின் கண்களைப் பிடுங்கி, மூக்கை அறுத்து, காதுகளை வெட்டி ரசிப்பார்கள். அதனால் அசீரியர்கள் என்றாலே உலக நாடுகளுக்கு கொலை நடுக்கம் எழும்.

    அசீரியர்கள் ஒரு நாட்டை முற்றுகையிடுகிறார்கள் என்றால் நாடு நிலைகுலைந்து விடும். அசீரியர்களிடம் மாட்டிக் கொள்வதை விட தற்கொலை செய்து கூண்டோடு அழிந்து போவோம் எனும் நிலையை நாடுகள் எடுப்பதுண்டு. அத்தகைய கொடுங்கோலர்கள் தான் அசீரியர்கள். அவர்களிடம் தான் யோனா செல்லவேண்டும்.

    கிழக்கே இருந்த நினிவேவுக்குச் செல்ல கடவுள் சொன்னார். யோனாவோ மேற்கே இருந்த தர்சீசை நோக்கிக் கடல் பயணம் மேற்கொண்டார். அந்தக் காலத்தில் மேற்கு எல்லையாக தர்சீசு தான் இருந்தது. அதைத் தாண்டி நாடுகள் இல்லை.

    கடவுளோ கடலை கொந்தளிக்கச் செய்தார். கப்பல் பேயாட்டம் ஆடியது. கப்பலில் இருந்தவர்களெல்லாம் அவரவர் கடவுளிடம் மன்றாட, யோனாவோ கீழ்த்தளத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

    கப்பலில் இருந்தவர்கள் பொருட்களையெல்லாம் கடலில் எறிந்து பார்த்தார்கள், என்னென்னவோ செய்து பார்த்தார்கள். கடைசியில் இந்த கொந்தளிப்புக்குக் காரணம் யார் என அறிய சீட்டுப் போட்டார்கள், அதில் யோனாவின் பெயர் வந்தது.

    யோனா விஷயத்தைச் சொல்கிறார். தன்னைக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு அடங்கும் என்கிறார். அவர்கள் அப்படியே செய் கிறார்கள், கொந்தளிப்பு அடங்குகிறது.

    கடலில் விழுந்த யோனாவை கடவுள் அனுப்பி வைத்த ஒரு பெயர் தெரியா ராட்சத மீன் விழுங்குகிறது. மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் கிடந்த யோனா, பின்னர் கடவுளை நோக்கி மன்றாடுகிறார். பாட்டுப் பாடுகிறார், நன்றி செலுத்துகிறார். அவருடைய மன்றாட்டு பைபிளிலுள்ள சங்கீத நூலின் அடிப்படையில் அமைகிறது.

    கடவுள் மீனுக்குக் கட்டளையிட மீன் யோனாவை ஒரு கரையில் கக்கியது. அந்த இடம் நினிவே. கப்பல் பயணத்தில் வர விரும்பாதவனை மீனின் வயிற்றில் பயணிக்க வைத்தார் கடவுள்.

    யோனா எழுந்தார், அந்த மிகப்பெரிய நினிவே நகரில் சென்று “கடவுள் உங்களை அழிக்கப் போகிறார்” என அறிவித்தார்.

    மக்களோ மனம் மாறினர். மன்னன் மனம் மாறினான். எல்லோரும் உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனம் இரங்கினார். மக்களை அழிப்பதில்லை எனும் முடிவுக்கு வந்தார்.

    யோனாவுக்கு இது கடும் கோபத்தை உருவாக்கியது. தனது நற்செய்தி அறிவித்தல் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்காய் கோபப்பட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இவர் தான்.

    ‘இந்த மக்களை அழிக்காவிட்டால், என்னை அழியும்’ என கடவுளிடம் அவர் முறையிட்டார். பின்னர் ஊருக்கு வெளியே ஒரு கூடாரமடித்து நகரின் அழிவைக் காண ஆவலாய் காத்துக் கொண்டிருந்தார்.

    கடவுள் அவருக்கு அருகே ஒரு ஆமணக்கு செடியை வளரச் செய்தார். அது சட்டென ஒரு இரவில் சடசடவென வளர்ந்து அவருக்கு நிழல் கொடுத்தது, மறு இரவில் கடவுள் அனுப்பிய ஒரு புழு அதை அழித்தது. யோனாவின் கோபம் இப்போது பல மடங்காகியது.

    கடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா?’

    யோனாவின் நூல், கடவுளின் பேரன்பையும், கடவுளை விட்டு விலகி ஓடி ஒளிய முடியாது எனும் பாடத்தையும் நமக்குச் சொல்கிறது.

    சேவியர்.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியூஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்குமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து நடந்த திருப்பலியில் முளகுமூடு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுறை யாற்றினார். விழாவில், குருகுல முதல்வர் ஜெயசந்திர ரூபன், கிறிஸ்துநகர் பங்குதந்தை அருள் ஆனந்த், அருட்பணியாளர் அருள், இசைக்குழு தலைவர் காலேப் மற்றும் ஆலய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, ஆடம்பர கூட்டுத்திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். 16-ந் தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்தும், 17-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, இரவு 9 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 18-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரியூஸ் தலைமை தாங்கி, திருவிழா கொடியை ஏற்றுகிறார். முளகுமூடு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டுத்திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    11-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து, 17-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனையை நிறைவேற்றி, மறையுரை வழங்குகிறார்.

    தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 18-ந்தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 9 மணிக்கு நற்கருணை ஆராதனை, பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா நடக்கிறது.

    17-ந் தேதி காலை 7 மணிக்கு மறவன் குடியிருப்பு பங்குதந்தை பெஞ்சமின் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி, 18-ந் தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்ற, தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி மறையுரையாற்றுகிறார்.

    மதியம் 2 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்து நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி, பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலய திருவிழாவுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவுக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், பங்கு தந்தை பென்சர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., 10-க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கிறிஸ்தவ மாணவர் இயக்கம் சார்பில் ஏழை மாணவிக்கு உயர்கல்வி பயில ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    இந்த திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் தேர்பவனி வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
    ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, 437-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி ஆலயத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பி‌‌ஷப் நசரேன் தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பி‌‌ஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பி‌‌ஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு செபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது. அதனை தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது.

    இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது.

    நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது மக்கள் மரியே வாழ்க என்று கோ‌‌ஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர்.

    அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.
    கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 153-வது பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக திருக்கொடி மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது.

    அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதனை திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் ஏஞ்சல்ராஜா, அடைக்கலராஜா ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், ஆலய பங்கு தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்பட கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 14-ந் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதனை மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி நிகழ்த்துகிறார். அதனைத்தொடர்ந்து புனித சலேத் அன்னையின் மின் அலங்கார தேர்பவனி நகரின் வீதிகள் வழியாக வந்து 15-ந்தேதி அதிகாலை மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைகிறது.

    அதனைத்தொடர்ந்து பகல் நேர சப்பரபவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைகிறது. அங்கு நற்கருணை பெருவிழா மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் திருவிழாவன்று மாலை 6.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ராஜேந்திரன் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் திருப்பலி மற்றும் ஆயர் மார் ராஜேந்திரன் அருளுரை வழங்குகிறார். இரவில் கிறிஸ்தவ மாணவர்கள் இயக்கம் சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடக்கிறது. 5-ம் திருவிழாவன்று மாலையில் மார்னிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் பிறிம்மஸ்சிங் தலைமையிலும், 6-ம் நாள் திருவிழாவன்று குழித்துறை மறை மாவட்ட முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று மாலை 5.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, திருப்பலி நடக்கிறது. மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் அருளுரை வழங்குகிறார். 9-ம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நாஞ்சில் கலை கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் தலைமையில் புதுக்கடை பங்குதந்தை ஜீஸ் ரைமண்ட் அருளுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெலஸ்டின் தலைமையில் கோட்டார் மறை மாவட்ட முதல்வர் ஹலாரியுஸ் அருளுரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவன்று காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தின விழா, ஆடம்பர கூட்டு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையிலும், தேவசகாயம் மலை வட்டார முதல்வர் பெர்பெச்சுவல் அருளுரையும், தொடர்ந்து 11 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பென்சர் சேவியர், திருத்தொண்டர் ஸ்டாலின், அருட் சகோதரர், சகோதரிகள், பங்கு பேரவை உதவி தலைவர் பிரைட் சேவியர், செயலாளர் பிளோமிங் லீமாரோஸ், உதவி செயலாளர் வின்ஸ் ஜோஸ், பொருளாளர் செல்வம், பங்கு மக்கள், பக்த சபை, இயக்கங்கள், சங்கங்கள், பங்கு பேரவையினர் இணைந்து செய்துள்ளனர்.
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 437-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, மறையுரை ஆசீர், நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. விழாவையொட்டி கடந்த 28-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனி விழா நடந்தது.

    10-வது திருநாளான நேற்று காலை 8-30 மணிக்கு நோயுற்றோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) காலை 5-30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் இரண்டாம் திருப்பலியும், 7-30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக நின்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×