search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஆரோபண அன்னை
    X
    புனித ஆரோபண அன்னை

    புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் திருவிழாவன்று மாலை 6.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ராஜேந்திரன் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் திருப்பலி மற்றும் ஆயர் மார் ராஜேந்திரன் அருளுரை வழங்குகிறார். இரவில் கிறிஸ்தவ மாணவர்கள் இயக்கம் சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடக்கிறது. 5-ம் திருவிழாவன்று மாலையில் மார்னிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் பிறிம்மஸ்சிங் தலைமையிலும், 6-ம் நாள் திருவிழாவன்று குழித்துறை மறை மாவட்ட முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று மாலை 5.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, திருப்பலி நடக்கிறது. மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் அருளுரை வழங்குகிறார். 9-ம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நாஞ்சில் கலை கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் தலைமையில் புதுக்கடை பங்குதந்தை ஜீஸ் ரைமண்ட் அருளுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெலஸ்டின் தலைமையில் கோட்டார் மறை மாவட்ட முதல்வர் ஹலாரியுஸ் அருளுரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவன்று காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தின விழா, ஆடம்பர கூட்டு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையிலும், தேவசகாயம் மலை வட்டார முதல்வர் பெர்பெச்சுவல் அருளுரையும், தொடர்ந்து 11 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பென்சர் சேவியர், திருத்தொண்டர் ஸ்டாலின், அருட் சகோதரர், சகோதரிகள், பங்கு பேரவை உதவி தலைவர் பிரைட் சேவியர், செயலாளர் பிளோமிங் லீமாரோஸ், உதவி செயலாளர் வின்ஸ் ஜோஸ், பொருளாளர் செல்வம், பங்கு மக்கள், பக்த சபை, இயக்கங்கள், சங்கங்கள், பங்கு பேரவையினர் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×