என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-ம் ஆண்டு திருவிழா நேற்று மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தையர் லியோன் மாஸ்கரேன்ஹஸ், வா்ணன் அக்யார், ஏசுராஜ் ஆகியோர் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.

    தொடர்ந்து திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா, தமிழ் திருப்பலி நடக்கிறது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடக்கிறது. 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடக்கிறது.

    ஒவ்வொரு காரியத்திலும் இறைநோக்கத்தின்படி எப்படி செயல்பட வேண்டும்? என்ற தூண்டுதலை உணராதவன், இயல்பானவனே என்பதில் சந்தேகம் இல்லை. இதனடிப்படையில் நம்மை நாம் ஆராய்வோமாக.
    இறைவனால் வடிவமைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் அவரை மட்டுமே வணங்காமல் தீயசக்திக்கும் கீழ்ப்படிந்தவன் என்பதால் தீயகுணங்களும் அவனை ஒட்டிக்கொண்டுள்ளன. அந்த வகையில் முதல் மனிதனிடம் இருந்து பரம்பரை பரம்பரையாக மனிதர்களிடம் தீயகுணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

    இயல்பாக வரும் பிறவிக் குணங்களையும், அவற்றின் அடிப்படையிலான பகை, கோபம், எரிச்சல், கவுரவம், கர்வம், பொறாமை போன்றவற்றை எவராலும் சுயமாக விட்டுவிட முடியாது.

    பலவிதமான இச்சைகளை நாடுவது, பாகுபாடு பார்ப்பது, மத, சாதி துவேஷம் கொண்டு உதவி செய்தலை மறுப்பது, அநியாயமாக குற்றஞ்சாட்டுவது, அதிகாரத்தை சுயலாபத்துக்காக பயன்படுத்துவது, அநியாய சம்பாத்தியத்தை நாடுவது, பொய், பாரபட்சம், குற்றத்தை மறைத்தல் என எத்தனையோ பாவங்கள், உலகத்தில் சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களிடமும் உள்ளன.

    சந்தர்ப்பங்களில் எல்லாருமே இதுபோன்ற குணங்களை இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். ஒருவன் தன்னைத்தானே இந்தத் தீயகுணங்களில் இருந்து விடுவிக்க முடியாத நிலையில், அவற்றோடுதான் உலகத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டுமா? இல்லை என்றால், அந்த தீயகுணங்களை அவனிடம் இருந்து நீக்கக் கூடியவர் யார்? அவர் எப்படி செயல்படுவார்? அதை எப்படி அறிய முடியும்? என்பவை, உண்மையான பக்திக்குள் வர விரும்புபவனின் கேள்விகளாக இருக்கும்.

    எல்லோருமே பெற்றோர் அறிமுகம் செய்த இறைவனை வழிபடுவதோடு, இயல்பான குணங்களின்படியே வாழ்கிறோம். நாம் செல்லும் வழிபாட்டு தலங்கள்தான் வெவ்வேறானவை என்பது தவிர, இயல்பான குணங்களின் அடிப்படையில் சாதி-மத வேறுபாடில்லாமல் எல்லோருமே ஒன்றுதான். இயல்பு குணம் நீக்கப்படுதலே பக்தியாகும். இயல்பு குணங்கள் மாறாமல் தங்களை பக்தர்களாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அனைத்து மார்க்கத்திலும் உள்ளனர்.

    தீயகுணங்களை நீக்கி ஒருவனை பக்தனாக மாற்றுவதற்கு, அவனைப்படைத்த இறைவன் அல்லது கடவுளால் மட்டுமே முடியும். மனிதப்படைப்பு பற்றி பல கருத்துகள் கூறப்பட்டாலும், உலகம் முழுவதும் பிறக்கும் மனிதர்கள் ஒரே சாயலில் (ஒரு தலை, இரண்டு கண், இரண்டு காது, ஒரே மனசாட்சி போன்றவை) இருப்பதால், அவர்களை படைத்த கடவுள் ஒருவரே என்பது தெளிவு.

    அவர் யார்? கடவுள் என்றால் ‘கடந்து உள்’ளே (உள்ளத்துக்குள்) வரக்கூடியவர் என்று அர்த்தம். ஒருவனை உருவாக்கியவர் மட்டும்தான் அவனை மாற்றுவதற்காக அவனது உள்ளத்துக்குள் நுழைய முடியும். அப்படி கடந்து வரும் இறைவன், அவனை தனது நற்குணத்தின்படி படிப்படியாக தன்னைப்போல மாற்றுகிறார் என்பதுதான் இதிலுள்ள தத்துவம். அதற்கேற்ற சூழ்நிலைகளை இறைவன் உருவாக்கி அவனை அதில் கடந்துபோகச் செய்கிறார். அதிலே அவன் பக்தி நடத்தையை கற்றுக்கொள்கிறான்.

    அதன்பிறகு தீயகுணங்களை அவன் செயல்படுத்த விரும்பாமல், இறைவனைப்போலவே படிப்படியாக நற்குணசாலியாக மாறுகிறான். எந்த சூழ்நிலையிலும் இறைகுணங்களான மன்னிப்பு, பகை மறுப்பு, பாகுபாடு தவிர்ப்பு, இச்சையை விலக்குவது போன்றவற்றை செயல்படுத்த நாடுகிறான்.

    உள்ளத்துக்குள் வரக்கூடிய இறைவன் யாராக இருக்க முடியும்?. உதாரணமாக, ஒரு பொருள் கெட்டுப்போகும்போது, அதைப் படைத்தவர் அதை அறிந்துகொள்கிறார். அது எதனால் கெட்டது? அதை சரியாக்க எந்த பாகத்தைத் தொட வேண்டும்? என்ற விபரங்கள் எல்லாமே அந்தப் பொருளை உருவாக்கியவருக்கு மட்டுமே தெரியும். அதை முன்னிருந்தபடி சீர்படுத்தவும் அதை படைத்தவரால் மட்டுமே முடியும்.

    தீமையால் சூழப்பட்டு அழிந்துவிடாதபடி, தீயகுணங்களில் இருந்து விடுவித்து அவனை தன்னைப்போல மாற்ற வேண்டும் என்பதுதான் அவனைப் படைத்த இறைவனின் ஆசையாகும் (மத்.5:48).

    ஆனால் உள்ளத்துக்குள் இறைவனை எப்படி கொண்டு வர முடியும்? என்ற கேள்விக்கு கிறிஸ்தவம்தான் பதிலளிக்கிறது.

    பாவம் செய்வதை விட்டுவிட்டு, யாருக்கு எதிராக என்னென்ன பாவங்களை செய்தோமோ, அவர்களிடம் சென்று மன்னிப்பைக் கேட்டுவிட்டு, இயேசு காட்டியுள்ள வழியில் நடப்பதற்கு ஒருவன் உளப்பூர்வமாக முடிவு செய்தால் அவன் உள்ளத்துக்குள் இறைவன் தனது ஆவியை அனுப்புகிறார். இந்த ஆவியைப் பெறாமல், மற்ற எந்தவித வழியைப் பின்பற்றினாலும் எவராலும் தனது இயல்பு குணத்தை மாற்ற முடியாது.

    இறைஆவியால்தான், உடல் ரீதியாக செய்யும் தப்புகள், பிறவிக்குணங்களின் அடிப்படையில் செய்யக்கூடிய குற்றங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் தீயசிந்தனை போன்ற பாவங்கள் ஆகிய 3 அம்சங்களில் இருந்தும் அவன் முற்றிலும் விடுபட ஏவுதல் கிடைக்கிறது. பாவ தூண்டுதல்களில் இருந்து மனிதனை விடுவித்து, செய்திருக்கும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனை படைத்த இறைவனிடம் மட்டும்தான் உள்ளது.

    இறைவனின் ஆவி தன்னுள் இருக்கிறதா? என்பதை ஒருவன் தனது செயல்பாட்டின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, அவமானத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு அதுபோல செய் என்று உள்ளம் ஏவினால், அது இயல்பான குணத்தைக்கொண்ட உள்ளமாகும். அப்படி செயல்பட முற்படும்போது, ’குற்றவாளியை மன்னித்துவிடு, பதிலுக்கு எதுவும் செய்யாதே’ என்று மனம் தூண்டப்பட்டால், அதுதான் இயேசு காட்டிய இறைவழியில் செல்லத் தூண்டும் இறைவன் அருளிய ஆவியாகும்.

    இப்படி ஒவ்வொரு காரியத்திலும் இறைநோக்கத்தின்படி எப்படி செயல்பட வேண்டும்? என்ற தூண்டுதலை உணராதவன், இயல்பானவனே என்பதில் சந்தேகம் இல்லை. இதனடிப்படையில் நம்மை நாம் ஆராய்வோமாக.

    ஜெனட், காட்டாங்குளத்தூர்.

    மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று மாலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    நாளை அதிகாலை 2 மணிக்கு திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணிமையம் செயலர் சாம்சன் ஆரோக்கியதாஸ் தலைமையில் தேரடி திருப்பலி நடை பெறுகிறது. தொடர்ந்து புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வானதூதர் ஆகிய ரத பவனி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் ஆலயத்தை சுற்றி வருகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு பெரிய தேர்கள் பவனி ஆலயத்தை சுற்றி வருகிறது. இரவு 7 மணிக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கரூர் எம்.பி. ஜோதிமணி, திண்டுக்கல் ஸ்ரீதரணி குழுமம் தலைவர் எம்.ரத்தினம், முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், முன்னாள் மேயர் வீ.மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, திரைப்பட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்பிரமணியன், மாரம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரொசாரியோ உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை எஸ்.அமலதாஸ் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஏ.ஆபேல் மற்றும் பெரியதனக்காரர்கள், அமலவை கன்னியர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி திண்டுக்கல் மற்றும் வேடசந்தூரில் இருந்து மாரம்பாடிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணான்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டிய 300-வது ஆண்டு தொடக்க விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜு பெரியநாயகம், புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். முன்னதாக அன்று மாலை 5 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 23-ந் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறும். 24-ந் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸ் ஒளில் குமார் மற்றும் வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.
    முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
    முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில் பொது அன்னதானம் நடந்தது. விழா தொடர்ந்து 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு அன்பிய கலைநிகழ்ச்சி, நாளை (சனிக்கிழமை) இரவு மாதா சபை, 19-ந் தேதி இரவு பட்டிமன்றம், 20-ந் தேதி சிங்கம்பாறை தூய பவுல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, 22-ந் தேதி மைலபுரம் தொடக்கப்பள்ளி சார்பாக கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறும். 23-ந் தேதி இரவு பட்டிமன்றம், 24-ந் தேதி பாளை.மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேரடி திருப்பலி, உறுதி பூசுதல் கொண்டாட்டம் நடைபெறும்.

    25-ந் தேதி காலை நன்றி திருப்பலி, மதியம் சப்பர பவனி, இரவு கொடியிறக்கம், சிறப்பு வாண வேடிக்கை நடக்கிறது. அதனை தொடர்ந்து 17-வது ஆண்டு மாநில அணிகள் கலந்துகொள்ளும் மின்னொளி கபடி போட்டி நடைபெறும். கொடியேற்றம் நிகழ்ச்சியில் அந்தோணி குரூஸ் அடிகளார், அருள்ராஜ் அடிகளார், சகாய பவுல், செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 5 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பேட்ரிக் தலைமையில் கிளாட்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.

    18-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் குணபால் ஆராச்சி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 19-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டேன்லி சகாயம் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்துள்ளனர்.
    புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையான, அதிக தத்துவார்த்த சிந்தனைகள் இல்லாத, அதே நேரம் மிக முக்கியமான பவுலின் கடிதங்களின் பட்டியலில் தெசலோனிக்கக் கடிதங்களுக்குத் தனியிடம் உண்டு.
    திருத்தூதர் பவுல், தெசலோனிக்க இறை மக்களுக்காக இரண்டு கடிதங்கள் எழுதினார். அதில் முதலாவது இந்த நூல். பவுல் எழுதிய திருமுகங்களிலேயே முதலில் எழுதப்பட்டது இது தான். இது கி.பி. 51 -ல் எழுதப்பட்டது.

    உயிர்ப்பு, தீர்ப்பு, மறுவாழ்வு, இரண்டாம் வருகை போன்ற செய்திகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பவுல் தனது இரண்டாவது பயணத்தின் போது சந்தித்த நகரங்களில் ஒன்று தெசலோனிக்கா. கி.பி. 49- ல் அவர் இந்த நகரத்துக்கு வருகை புரிந்தார். மாசிதோனியாவிலுள்ள நகரங்களில் மிகப்பெரிய நகரம் இது. ரோமையும் ஆசியாவையும் இணைக்கும் பாதையில் உள்ள முக்கியமான ஒரு துறைமுக நகரம். இங்கே யூதர்கள் கணிசமான அளவு இருந்தனர். இந்த இடத்தில் நற்செய்தியை விதைத்தால் உலகின் பல பாகங்களுக்கும் அது பரவும் என்பதை பவுல் அறிந்திருந்தார், எனவே உற்சாகமாக அவர் நற்செய்தியை அறிவித்தார்.

    யூதர்களுடைய தொழுகைக் கூடங்களில் அவர் நற்செய்தியை அறிவிப்பது வழக்கம். ‘இறையரசில் நுழைய யூதராய் இருக்கத் தேவையில்லை, கடவுளுக்குப் பயந்த வாழ்க்கை வாழ்ந்தாலே போதும்’ என அவர் போதித்தார். அது யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.

    யூதர்களின் பெரும்பான்மையான எதிர்ப்பையும், அதன் விளைவாக எழுந்த போராட்டமும் பவுலை அங்கிருந்து வெளியேற்றின. சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே அவர் தெசலோனிக்காவில் இருந்ததாக இறையியலார்கள் குறிப்பிடுகின்றனர். பின்னர் அவர் அங்கிருந்து ஏதென்சு நகருக்குச் சென்றார்.

    பல மாதங்கள் கடந்தபின் தெசலோனிக்கா மக்களின் விசுவாச வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய திமோத்தேயுவை அவர்களிடம் அனுப்பினார் பவுல். திமோத்தேயு தெசலோனிக்கா சென்று, கொண்டு வந்த நல்ல தகவல்களினால் உற்சாகமடைந்த அவர் இந்த கடிதங்களை எழுதுகிறார்.

    தெசலோனிக்க மக்கள் கொண்டிருந்த விசுவாசத்துக்கு நன்றி செலுத்தும் பவுல், மக்கள் எப்படி வாழவேண்டும், எத்தகைய எதிர்நோக்குடன் பயணிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். இயேசுவின் இரண்டாம் வருகை, மீட்பு போன்றவை குறித்த மக்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்.

    பவுலின் நற்செய்தி அறிவித்தல் பயணம் மிகப்பெரிய சவால்களுடன் தான் தொடங்கியது. பிலிப்பி பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தார், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். தெசலோனிக்கா வந்தார், எதிர்ப்புகள் அவரை விரட்டின. பெரேயா நகருக்குச் சென்றார். அங்கே தங்க முடியவில்லை. ஏதென்சு சென்றார். அங்கிருந்தும் நிராகரிக்கப்பட்டு கொரிந்து நகருக்கு வந்தார்.

    அப்படி மனம் உடைந்தவராக இருந்த பவுலுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி தான், தெசலோனிக்க சபை துளிர்விடுகிறது என்பது.

    நற்செய்தியை ஏற்றுக்கொண்ட தெசலோனிக்க மக்களைக் குறித்த செய்தி அவருக்கு உற்சாகம் கொடுத்தது என்பதை இந்தக் கடிதம் முழுவதும் உணர முடியும். செயல்களாலும், வார்த்தைகளாலும், அடையாளங்களாலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதை பவுல் பதிவு செய்கிறார்.

    விசுவாசம், அன்பு, எதிர்நோக்கு எனும் மூன்று முக்கிய விஷயங்களை பவுல் முன்னிறுத்துகிறார். விசுவாசம் என்பது- கடவுள் நமக்குச் செய்த நன்மைகளினால் முளைக்கிறது. அன்பு-அவர் நமக்கு என்ன செய்கிறார் எனும் புரிதலில் தொடர்கிறது. எதிர்நோக்கு-அவர் நமக்கு என்ன செய்வார் எனும் தெளிவில் வலுவடைகிறது. இந்த மூன்றும் வலுவாக இருக்க வேண்டும் என பவுல் விரும்புகிறார்.

    பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பி, இறைமகன் இயேசுவின் பாதையில் நடந்து, இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் தெசலோனிக்க மக்களின் வாழ்க்கையை அவர் பாராட்டுகிறார்.

    தெசலோனிக்க மக்கள் இரண்டு விஷயங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என பவுல் விரும்புகிறார். ஒன்று புனிதம், இன்னொன்று எதிர்நோக்கு.

    ஆண், பெண் உறவுகளில் புனிதமற்ற சூழல் அங்கு நிலவியது. கிரேக்க பாரம்பரிய வாழ்க்கை முறையில் அவை சரியென கருதப்பட்டன. மனைவியரை மாற்றிக் கொண்டே இருப்பது குற்றமென்றோ, பாவமென்றோ அதுவரை போதிக்கப்படவில்லை. பவுல் தான் மனைவியரை மதிக்கவேண்டும், அன்பு செய்ய வேண்டும், ஒரே மனைவியுடன் தூய வாழ்க்கை வாழவேண்டும் என்பதைப் போதித்தார்.

    அதே போல உடல் உழைப்பையும், அதன் முக்கியத்துவத்தையும், உற்சாகமாய் இருக்க வேண்டியதன் தேவையையும் அவர் போதித்தார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உழைப்பை ஒதுக்கி சோம்பித்திரிவதல்ல எனும் புரிதலை அவர் கொடுத்தார்.

    இயேசுவின் இரண்டாம் வருகை மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை அவர் அழுத்தமாய் போதித்தார். புதிய ஏற்பாட்டில் முன்னூறு தடவைக்கு மேல் குறிப்பிடப்படும் இந்த ‘இரண்டாம் வருகை’ கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான ஒன்று என்பதை அவர் வலியுறுத்துகிறார். இறந்தவர்கள் இரண்டாம் வருகையில் பங்குபெற மாட்டார்கள் என்பது தவறான நம்பிக்கை என விளக்குகிறார்.

    புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையான, அதிக தத்துவார்த்த சிந்தனைகள் இல்லாத, அதே நேரம் மிக முக்கியமான பவுலின் கடிதங்களின் பட்டியலில் தெசலோனிக்கக் கடிதங்களுக்குத் தனியிடம் உண்டு.

    சேவியர்
    கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோணான்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டிய 300-வது ஆண்டு தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியும், அன்று இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 24-ந் தேதி கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவடைகிறது.

    விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸ் ஒளில் குமார் மற்றும் வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. நாகர்கோவில் குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் போர்ஜியா, ஊர்தலைவர் கென்னடி, செயலாளர் டெய்சி, துணை செயலாளர் ஜாண்சன், பொருளாளர் ரெத்தினதாஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) மாலை 5.45 மணி திருப்பலிக்கு இயேசு ரெத்தினம் தலைமையில் வலேரியன் மறையுரையாற்றுகிறார். மேலும், விழா நாட்களில் திருச்செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    18-ந் தேதி காலை 6.45 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, 11 மணிக்கு நோயாளிகளுக்கு குணமளிக்கும் திருப்பலியில் ஆன்றனி சகாய ஆனந்த் தலைமையில் ஞானசேகரன் இணைந்து ஜெபிக்கிறார், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, மாலை ஆராதனைக்கு ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி நடக்கிறது. 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி. இதற்கு பெர்க்மான்ஸ் சே.ச. தலைமை தாங்கி அளுரையாற்றுகிறார். காலை 6.15 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.
    தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரத்தில் எழுந்தருள ரதவீதியை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து புனித அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஆலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் ஆலயத்தின் உள்ளே இருந்து எடுத்து வந்தார். அந்த கொடியை தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ரூபன் ஜெபம் செய்து அர்ச்சித்தார்.

    தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. மறையுரை மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது. இதில் துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஆலிபன், தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை பால்ரோமன் விஜயன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் பூண்டிமாதா, பூலோகம் போற்றும் மாதா என பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட பூண்டி மாதா பேராலயத்தில் 2020-ம் ஆண்டின் முதல் புதுமை இரவு வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பக்தர்களின் நலன்களுக்காகவும் உலக அமைதிக்காகவும் நடைபெற்ற இந்த புதுமை இரவு வழிபாட்டினை தர்மபுரி மாவட்டம் ஓசூர் பங்குத்தந்தை வினோத்லூயிஸ் வழிநடத்தினார்.

    அருள்பொழிவு திருப்பலியுடன் புதுமை இரவு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து பூண்டி அன்னையின் தேர்பவனி நடந்தது.

    அப்போது பக்தர்கள் ஜெபமாலை பாடல்களை பாடினர்.

    இதையடுத்து நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு முழுவதும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்த வழிபாட்டில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் விக்டர்லாரன்ஸ், ஆரோக்கியராஜேஷ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு ஜான்குழந்தை தலைமையில், ஸ்டேன்லி சகாய சீலன் அருளுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.45 மணி திருப்பலிக்கு இயேசு ரெத்தினம் தலைமையில் வலேரியன் மறையுரையாற்றுகிறார். மேலும், விழா நாட்களில் திருச்செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    18-ந் தேதி காலை 6.45 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, 11 மணிக்கு நோயாளிகளுக்கு குணமளிக்கும் திருப்பலியில் ஆன்றனி சகாய ஆனந்த் தலைமையில் ஞானசேகரன் இணைந்து ஜெபிக்கிறார், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, மாலை ஆராதனைக்கு ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி நடக்கிறது. 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி. இதற்கு பெர்க்மான்ஸ் சே.ச. தலைமை தாங்கி அளுரையாற்றுகிறார். காலை 6.15 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.
    ×