என் மலர்
கிறித்தவம்
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு ராமேசுவரம் தீவிலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியிலிருந்து 18 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனிதஅந்தோணியார் ஆலயம் ஒன்றும் உள்ளது. இருநாட்டு மக்களும் திரளாக கலந்து கொள்ளும் திருவிழாவானது ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 6, 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
அந்தோணியார் ஆலய திருவிழா குறித்து இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்து துணை தூதரக அதிகாரி மற்றும் நெடுந்தீவு பங்குதந்தை எமிழிபால் ஆகியோர் ராமேசுவரம் வேர்க்கோடு புனிதசூசையப்பர் ஆலய பங்குதந்தை தேவசகாயத்திற்கு செல்போன் மூலம் பேசி தகவலும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பங்குதந்தை தேவசகாயம் கூறியதாவது:- இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் 6, 7ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக நெடுந்தீவு பங்கு தந்தை செல்போன் மூலம் பேசி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாளில் திருவிழா குறித்து முறையான அழைப்பிதழ் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

“இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள்” (கொலோசேயர் 2:9)
கிரேக்க வழக்கத்தில் கடிதம் எழுதுவதில் ஒரு வரைமுறை உண்டு. யார் கடிதத்தை எழுதிகிறார் என்பது முதலில் குறிப்பிடப்படும். பின்னர் யாருக்காக எழுதப்படுகிறது என்பது பதிவு செய்யப்படும். அதன் பின்னர் வாழ்த்துகள் பரிமாறப்படும். அதைத் தொடர்ந்து பாராட்டுகள், உற்சாகமூட்டுதல் போன்றவை இடம்பெறும். அதன்பின்பு கடிந்து கொள்தல்களும், மையச்செய்திகளும் இடம்பெறும். கடைசியில் முத்தாய்ப்பான செய்தியும், வாழ்த்துகளும் இடம் பெறும்.
பெரும்பாலான பவுலின் கடிதங்கள் இந்த வரையறைக்குள் தான் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நூல்களை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம். இந்த நூலை பவுல் சிறையில் இருந்த காலத்தில் எழுதினார் என நம்பப்படுகிறது.
கொலோசையர் நூலை எழுதியது திருத்தூதர் பவுல் என்கிறது விவிலியம். ஆனால் இதை பவுல் நேரடியாக எழுதாமல் அவருடைய சீடர் ஒருவர் எழுதியிருக்கக் கூடும் எனும் சிந்தனையும் சமீப காலத்தில் எழுந் திருக்கிறது. நூலின் மொழிநடையும், வார்த்தைப் பிரயோகங்களும் பவுலின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டிருப்பதே இதன் காரணம்.
கொலோசைக்கு பவுல் நேரடிப் பயணம் எதுவும் மேற்கொண்டதில்லை. எனவே அங்குள்ள திருச்சபைகளின் உண்மையான நிலவரம் முழுவதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த செய்தி களையெல்லாம் எப்பப்பிரா என்பவர் மூலமாகக் கேள்விப்பட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறார்.
எப்பப்பிரா பவுலின் நற்செய்தி அறிவித்தலின் மூலமாக மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்ட மனிதர்.
கொலோசை நகரில் இருந்த பொதுவான பிரச்சினைகளைத் தொட்டு இந்தக் கடிதத்தை பவுல் எழுதுகிறார். கொலோசை பல்வேறு நம்பிக்கைகள், கலாசார வேறுபாடுகள் போன்றவற்றால் நிரம்பியிருந்தது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தாமல் பல விஷயங்கள் அந்த நகரில் பரவலான தாக்கத்தை உருவாக்கியிருந்தன.
உதாரணமாக, ஆவிகளைக் கொண்டு பலவற்றை நிறைவேற்றுகின்ற பழக்கம் அந்த நகரில் இருந்தது. இயற்கையின் நிகழ்வுகளையெல்லாம் மாபெரும் சக்திகள் என வழிபடும் வழக்கமும் இருந்தது. மலைகள், நதிகள், மரங்கள் போன்றவற்றை ஆவிகள் கட்டுப்படுத்தும் என்றும், அந்த ஆவிகளைத் திருப்திப்படுத்தினால் தான் மனித வாழ்க்கை இயல்பாகச் செல்லும் எனும் நம்பிக்கையும் நிலவியது.
வானியல் அறிவு, நட்சத்திர இருப்பு போன்றவையெல்லாம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று மக்களில் ஒரு பிரிவினர் நம்பினார்கள்.
கிரேக்கக் கடவுளர்களும், ரோமக் கடவுளர்களும், தேவதைகளும் நகரெங்கும் நிரம்பியிருந்தன. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கடவுளரை மக்கள் வழிபட்டனர். உணவுக்கு ஒன்று, பணத்துக்கு ஒன்று, பாலியலுக்கு ஒன்று என தெய்வங்கள் வேறுபட்டன.
யூத மதமும் இங்கே பரவியிருந்தது. ஆனால் அது எருசலேமின் யூத மதத்தைப் போல இல்லை. தத்துவ சிந்தனைகளாலும், வானதூதர் வணக்கங்களாலும், சட்டங்களாலும் அது நிரம்பியிருந்தது. வாழ்க்கை முறையில் பின்னோக்கியே இருந்தது.
இத்தகைய பின்னணியில் தான் கிறிஸ்தவ மதம் அங்கே முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தது. அவர்களுடைய தத்துவ சிந்தனைகளுக்கு அது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
இயேசு, சர்வ வல்லவராக விண்ணகத்தில் இருக்கிறார். அதே நேரம் நமக்குள்ளேயும் வாழ்கிறார் எனும் இரட்டை சிந்தனையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விண்ணகத்தில் இருக்கிறார் என நம்பியவர்கள், கூடவே மண்ணகத்தில் இருந்து உதவி செய்ய வேறு தேவதைகளை வழிபட்டனர். கூடவே இருப்பதாய் நம்பியவர்கள் விண்ணகத்தில் வேறு கடவுள் இருப்பதாய் வழிபட்டனர். இந்த குழப்பத்தை தெளிவு படுத்த பவுல் விரும்பினார்.
சட்டங்களால் மக்கள் அடக்கப்படத் தேவையில்லை, சுதந்திரமாக இருக்கலாம். இறைவனின் வழிகாட்டுதலின் படி நடந்தால் போதும் எனும் அறிவுரைகளை வழங்குகிறார். வெளி அடையாளங்களில் ஏற்படும் மாற்றமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவை என்பதை வலி யுறுத்துகிறார். எல்லாமே இறைமகன் இயேசுவின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், சிலுவையில் இயேசு அனைத்தையும் வென்று வாழ்வதையும் விளக்குகிறார். சுய வெறுப்பல்ல, இயேசுவின் மீதான விருப்பே முக்கியம் என்பது அவரது போதனையில் இழையோடிய செய்தியாய் இருந்தது.
‘அனைத்தும் இயேசு’ என்பதையே பவுல் கொலோசைக்கு எழுதிய நூலில் மீண்டும் மீண்டும் நிறுவுகிறார். இயேசுவோடு அடையாளப்படுத்திக் கொள்வதன் அவசியம் இதனால் வெளிப்படுகிறது. இயேசுவோடு அடையாளப்பட வேண்டு மெனில் பழைய பாவ இயல்புகள் விலக்கப்பட்டு, இறைமகனின் இயல்புகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இறைவனை மையப்படுத்தும் பவுல், ஆழமான குடும்ப உறவுகளின் தேவையையும் தொட்டுச் செல்கிறார். கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டிய உறவு, பெற்றோர் பிள்ளைகளிடம் இருக்க வேண்டிய உறவு, தலைவர் பணியாளரிடையே இருக்க வேண்டிய உறவு பற்றியெல்லாம் நேர்த்தியாய் அறிவுரைகள் வழங்குகிறார்.
சுருக்கமாக, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், ஏற்றுக் கொண்டபின் நடக்க வேண்டிய வழிகளையும் இந்த நூலின் வழியாக பவுல் விளக்குகிறார்.
“இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள்” (கொலோசேயர் 2:9)
சேவியர்

வாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.
திருத்தூதர் பவுலின் நற்செய்திப் பயணங்களில் மூன்று பயணங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் இரண்டாம் மூன்றாம் பயணங்களின் போது பிலிப்பு நகருக்கு வருகை புரிந்தார்.
பிலிப்பியாவில் நற்செய்தி அறிவித்தலை வெற்றிகரமாகச் செய்த அவர் அங்குள்ள மக்கள் பலரின் இதயத்திலும் இடம் பிடித்தார்.
பவுல் சிறைபிடிக்கப்பட்டு தவித்த காலத்தில் பிலிப்பியர்கள் அவருக்கு உதவ வேண்டும் என தவித்தனர். எப்பிப்பிராத்து எனும் நபரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பணமும், தேவையான பொருட்களும் கொடுத்து, பவுலை சந்திக்குமாறு அனுப்பினர்.
பவுல் எங்கே சிறை பிடிக்கப்பட்டிருந்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு, எனினும் அவர் உரோமையில் சிறைபிடிக்கப்பட்டு “வீட்டுக்காவலில்” வைக்கப்பட்டிருந்தார் என்பதே பொதுவான நம்பிக்கையாகும்.
பிலிப்பு பணக்காரத்தனத்தின் உச்சமாக இருந்த நகரம். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதும், விற்பதும் அங்குள்ள சகஜமான தொழில். பிலிப்பு எனும் மன்னனின் பெயரால் அந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது.
நாம் வரலாற்றில் படித்த ‘அலெக்சாண்டர் த கிரேட்’ மன்னனின் தந்தை தான் இந்த பிலிப்பு. 1990-ல் அகழ்வாராய்ச்சியில் பிலிப் மன்னனின் கல்லறை சிக்கியது என்பதும், அதிலிருந்த தங்கங்களின் அளவு உலகையே மிரள வைத்தது என்பதும் சுவாரசியச் செய்திகள்.
பிலிப்பு நகரில் திருச்சபை சுமார் கி.பி. 52-ல் ஏற்படுத்தப்பட்டது. ஒரு சிலரை வைத்து இந்த கூட்டத்தை பவுல் ஆரம்பித்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்றார். அதன்பின் நீண்ட காலத்துக்குப் பிறகு தான் இந்த நூலை பவுல் எழுதுகிறார்.
எருசலேமில் அவரைக் கைது செய்து ரோமைக்கு சங்கிலிகளால் கட்டி அவரை அனுப்பி வைத்தார்கள். உரோமை நகரில் அவர் கைதியாய் இருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.
இந்த நூலை பவுல் எழுதுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று பவுலுக்குத் தேவையான பண உதவியை பிலிப்பு சபையினர் செய்கின்றனர். இரண்டு, ஒரு நபரையும் கூடவே அனுப்பி வைத்து, பவுலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யப் பணிக்கின்றனர்.
இந்த நிகழ்வுகள் பவுலை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. கிறிஸ்துவின் அன்பு பரவுவதை அவர் உணர்ந்தார்.
ஆனால், நன்கொடையை பவுல் நாடவில்லை. அதற்கான நன்றியை அவர் கடிதத்தின் கடைசியில் தான் குறிப்பிடுகிறார். “நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்” என தனது நிலைப்பாட்டை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
துரதிர்ஷ்ட வசமாக பவுலின் உதவிக்கு வந்த எப்பிப்பிராத்து நோயாளியாகிறார். அதை அறிந்த பிலிப்பு நகரத்தினர் கலக்கம் அடைகின்றனர். சாகும் தருவாயிலிருந்த அவருக்காய் பவுல் செபித்து, அவரை மீண்டும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது தான் இந்தக் கடிதத்தையும் கொடுத்து அனுப்புகிறார்.
பவுலுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உணர்வு நிலையை இந்தக் கடிதம் அழகாகப் படம் பிடிக்கிறது. இந்த நூலில், பவுல் ஒரு தலைவராக இல்லாமல் ஒரு தோழராக, நண்பராக தன்னை வெளிப்படுத்துகிறார்.
சிறையில் வாடிய போதும் உள்ளத்தின் மகிழ்ச்சியை விட்டு விடாமல் இறைவனின் உற்சாகமாக இருக்கும் பவுலை இந்த நூல் வெளிக்காட்டுகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது நூல் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறது.
எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம் எனும் சூழலிலும், “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” என தனது கடிதத்தை விசுவாசத்தால் நிரப்புகிறார் பவுல்.
“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” எனும் பவுலின் வசனம் மிகவும் பிரசித்தம். ‘வறுமையிலும் வாழத்தெரியும், வளமையிலும் வாழத்தெரியும். தேவையானதெல்லாம் இறைவனின் அருகாமை மட்டுமே’ என பவுல் ஆன்மிகத்தை முதலில் வைத்துப் பேசுகிறார்.
நமது வாழ்க்கையில் தாழ்மையைக் கொண்டிருக்க வேண்டியதன் தேவையை பவுல் இயேசுவை ஒப்பிட்டு விளக்குகிறார்.
“(இயேசு) தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப் படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” என பவுல் குறிப்பிடுகிறார்.
‘கிறிஸ்து நமக்குள் செயலாற்று கிறார், நாம் கிறிஸ்துவை வெளியே செயல்படுத்த வேண்டும். நமக்கானதை விடுத்து பிறருக்கானதை நாடவேண்டும். உலக சிந்தனையை விட்டுவிட்டு, விண்ணக சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்’ என்பது போன்ற போதனைகளை பவுல் தருகிறார்.
விசுவாசிகளுக்கு இறைவன் என்ன தருகிறார் என்பதைத் தாண்டி இறைவனுக்கு விசுவாசிகள் என்ன தரவேண்டும் என்பதை கற்றுத்தருகிறது இந்த நூல்.
வாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.
நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு விவிலிய நூல், பிலிப்பியர்.

பிரியமானவர்களே, ‘ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதியும் என்று ஜெபியுங்கள். அப்பொழுது கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்’.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்களை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.
தேவன் நம்மை குடும்பம் குடும்பமாக படைத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். மேலும் நாம் சந்தோஷமாக, செழிப்பாக வாழ வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அதற்காகவே அவர் சிலுவையிலே நம் தரித்திரங்களை சுமந்து தீர்த்தார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருடைய சித்தம்.
கர்த்தரின் ஆசீர்வாதம் எப்படிப்பட்டது? என்பதைக் குறித்து நாம் தியானிக்கலாம்.
வேதம் சொல்கிறது: ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’. (நீதிமொழிகள் 10:22)
மீதியான துணிக்கை
வனாந்தரத்திலே இயேசுவின் செய்திகளைக் கேட்க வந்த திரளான மக்களுக்கு இயேசு போஜனம் கொடுக்க விரும்பினார். ஆனால் அக்கூட்டத்திலுள்ள ஒரு சிறுவனிடம் இருந்ததோ ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் மாத்திரமே. ஆனால், ஜனங்களோ திரளாயிருந்தார்கள். இயேசு அந்த அப்பத்தையும் மீனையும் கையிலே எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி ஆசீர்வதித்து கொடுத்த போது, அத்தனை ஜனங்களும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். (மாற்கு 6: 41-43)
பிரியமானவர்களே, நம்மிடத்திலே உள்ள பணமோ, பொருளோ மிகவும் குறைவாயிருக்கலாம். இதைக் கொண்டு எப்படி நம் பெரிய தேவைகளை சந்திக்க முடியும்? எப்படி மகளின் திருமணத்தை நடத்த முடியும் என்று மனம் கலங்கலாம்.
சோர்ந்து போகாதிருங்கள். நம்மிடத்திலுள்ள கொஞ்சத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுத்து அவரின் ஆசீர்வாதத்திற்காக நாம் காத்திருக்கும் போது, மீதியான துணிக்கைகளை எடுக்கத்தக்கதாக கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். இந்த நாளில் உங்கள் தேவைகள் சந்திக்கப்படுவது உறுதி.
‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’. (பிலிப்பியர் 4:19)
மீதியான எண்ணெய்
இரண்டாவதாக, ‘கர்த்தரின் ஆசீர்வாதம் எப்படிப் பட்டது?’.
ஒருமுறை தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவர் இறந்து போனார். அவர் மற்றவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். எனவே அவர் இறந்ததும், கடன் கொடுத்தவர்கள் அவருடைய பிள்ளைகளையும் அடிமைகளாக்கிக் கொள்ள வந்தனர். இதை எலிசாவிடம் அவர் மனைவி கூறினாள்.
உடனே எலிசா ‘வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது’ என்றார். அதற்கு அவள் ‘ஒரு குடம் எண்ணெயே அல்லாமல் வேறொன்றுமில்லை’ என்றாள். (II இராஜாக்கள் 4:1,2)
அதற்கு எலிசா கொடுத்த ஆலோசனை என்னவென்றால், ‘நீ போய் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்று’ என்றார்.
தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு உடனே அந்த விதவை கீழ்ப்படிந்ததன் விளைவு, உடனே அற்புதம் அவள் வீட்டில் நிகழ்ந்தது. எண்ணெய் நிரம்பி வழிந்தது. அதன்நிமித்தம் கடன் பாரம் விலகியது.
அது மாத்திரமல்ல, மீதியான எண்ணெயும் இருந்தது. அப்பொழுது, ‘எலிசா மீந்ததைக் கொண்டு ஜீவனம் பண்ணு’ என்றார். (II இராஜாக்கள் 4:7)
இதை வாசிக்கிற உங்கள் வாழ்விலும் கடன் பிரச்சினை உங்களை வாட்டுகிறதா?, சோர்ந்து போகாதிருங்கள். ‘கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் கடன் பாரங்கள் தீர்ந்து போகும். மேலும் உங்கள் ஜீவிய காலம் முழுவதும் எவ்வித கடன் பிரச்சினைகளுமின்றி நீங்கள் சந்தோஷமாக வாழ முடியும்’. விரைவில் உங்கள் கடன் பிரச்சினைகள் மாறுவது உறுதி.
மீதியான காணிக்கை
மூன்றாவதாக, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, நாம் ஆசீர்வாதமாய் சாப்பிட்டு திருப்தியடைவது மாத்திரமல்ல, நம் மூலமாய் ஊழியர்களும் திருப்தியடைந்து மீதியான காணிக்கையை எடுக்க முடியும்.
எசேக்கியா ராஜாவின் காலத்தில் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதித்த போது, அவர்களை தானியங்களிலும், திராட்சை ரசத்திலும், நிலத்தின் விளைச்சலிலும், மிருக ஜீவன்களிலும், தசமபாகத்தை ஆசாரியர்களுக்குக் கொடுத்தனர். இந்த காணிக்கையின் மூலமாய் ஆசாரியர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தனர். அது மட்டுமல்ல மீதியான காணிக்கையை எடுத்தனர்.
‘கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்’. (II நாளாகமம் 31:10)
பிரியமானவர்களே, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும் போது நம் மூலமாய் அநேக ஊழியர்களும் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இது எவ்வளவு பெரிய பாக்கியம். எனவே ‘கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும் பொழுது, உங்கள் ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியை கர்த்தருடைய ஊழியத்துக்குக் கொடுங்கள். அப்பொழுது ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்படும். ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கப்படும். இதன் நிமித்தம் ஆத்துமாக்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பங்கடைவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்’.
பிரியமானவர்களே, ‘ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதியும் என்று ஜெபியுங்கள். அப்பொழுது கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்’.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் 142 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தொடங்கி வைக்கிறார்.
பிரான்ஸ் நாட்டு கட்டிட கலை நுட்பமான கோதிக் நுட்பத்துடன் கட்டப்பட்ட142 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம்சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வேண்டினால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அங்கு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3 நாட்கள் நடைபெறும் பாஸ்கு விழா சிறப்பு வாய்ந்தது. இதில் ஏசு பிறப்பு, இறப்பு, உயிர்தெழுதல் உள்ளிட்டவை நாடகமாக நடத்தப்படும்.இந்த தேவாலயத்தில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.பணிகள் முடிந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தேவாலய அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது.
விழா குறித்துஅருட்தல பணியாளர் ரெமிஜியஸ் கூறுகையில்,புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று அர்ப்பணிப்பு விழா நடைபெறுகிறது. சிவகங்கை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜோசப் லூர்து ராஜா தலைமையில் நன்றி வழிபாடும், சிவகங்கை மறை மாவட்டஆயர் சூசைமாணிக்கம் கூட்டுத்திருப்பலி தொடங்கி வைக்கிறார்.கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைைமயில் மாலைத்திருப்பலி நடைபெறவுள்ளது என்றார்.
இரவில் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை மரியின் ஊழியர் அருள்சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர். ஆண்டின் முதல் வெள்ளி மற்றும் தேவாலய அர்ப்பணிப்பு விழா நடைபெறுவதால் பல்வேறு இடங்களிலிருந்து தேவாலயத்திற்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

பூண்டி மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இரவு 11.30 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியில் பேராலய துணை அதிபர் அல்போன்ஸ் 2019-ம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு நடத்தினார். நள்ளிரவு 11.55 மணி அளவில் பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட் தந்தையர்கள் பேராலயத்துக்குள் வந்தனர். இதையடுத்து திருப்பலி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை பேராலய அதிபர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஆரோக்கியராஜேஷ், விக்டர்லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் நேற்று காலை தொடங்கி மாலை வரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பூதலூர், கோட்டரப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, மணத்திடல், மேகளத்தூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா’ என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது.
இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு திருப்பலி பேராலயத்தின் விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.
நள்ளிரவு 12 மணியளவில் மறைமாவட்ட ஆயர் மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறந்ததாக அறிவித்தார். பின்னர் பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியம் மறைமாவட்ட ஆயரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது புதுவருட வாசகங்கள் அடங்கிய பைபிளை அங்கு கூடியிருந்த ஏராளமான மக்களிடம் தூக்கி காண்பித்து புத்தாண்டை வரவேற்பதாக அவர் அறிவித்தார்.
பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது.
அதனைத்தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணியில் கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
புத்தாண்டையொட்டி விண்மீன் ஆலயம் மற்றும் பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் கீழ் ஆலயத்திற்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை மற்றும் தியான மண்டபம் அருகில் மின்விளக்கு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.

புத்தாண்டையொட்டி, நெல்லை மாநகர பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
2019-ம் ஆண்டு நிறைவடைந்து 2020-ம் ஆண்டு இன்று (புதன்கிழமை) பிறந்துள்ளது. இதையொட்டி, நெல்லை மாநகர பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவ ஆலயங்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க மறைமாவட்ட புதிய பிஷப் அந்தோணி சாமி தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய பங்குத்தந்தை ராஜேஷ் மற்றும் இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் இலந்தைகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம், டவுன் அடைக்கலமாதா ஆலயம், சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம், சேவியர் காலனி அந்தோணியார் ஆலயம் உள்பட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் புத்தாண்டு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அனைத்து சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களிலும் அதிகாலையில் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புத்தாண்டையொட்டி, நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் நெல்லை மாநகர பகுதியில் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்தனர். கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி கடலூரில் தூய எபிபெனி தேவாலயத்தில் அருட்தந்தை அருண் ஜெபஸ் தலைமையில் நேற்று இரவு 11.30 மணிக்கு பழைய வருட ஆராதனை நடந்தது.
பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சொரக்கால்பட்டு அந்தோணியார் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 12 மணி ஆனதும் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் ’லூர்து நகர்’ என்று இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ’பசிலிக்கா’ என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) விண்மீன் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் திருப்பலி நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
விடுமுறையையொட்டி வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நாளை(புதன்கிழமை) காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் ஆலயத்துக்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை மற்றும் தியான மண்டபம் அருகில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்கு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

விவிலியத்தில் அமைந்துள்ள திருமுகங்களில் மிக ஆழமான சிந்தனையுடைய நூல்களில் ஒன்று எபேசியர்.
விவிலியத்தில் அமைந்துள்ள திருமுகங்களில் மிக ஆழமான சிந்தனையுடைய நூல்களில் ஒன்று எபேசியர். இதற்கும் கொலோசேயர் நூலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிந்தனையிலும், கருத்து பரிமாற்றத்திலும் இரண்டு திருமுகங்களும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றன.
சிலர் இதை கொலோசேயர் நூலின் விளக்க உரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்த நூலை எழுதியவர் பவுல் என்பது மரபுச் செய்தி. ஆனாலும் இறையியலாளர்களிடையே கருத்து வேற்றுமைகள் உண்டு.
இந்த நூலின் நடை பவுல் எழுதிய மற்ற நூல் களிலிருந்து வேறுபட்டிருப்பது ஒரு காரணம். இந்த நூலின் சிந்தனைகள் பிற்கால இறையியல் சிந்தனைகளின் தாக்கத்தை உள்வாங்கியிருப்பது இன்னொரு காரணம்.
எனவே இது பவுலின் சீடர்களில் ஒருவர், பவுல் சொன்ன சிந்தனைகளைத் தொகுத்து ஒரு செறிவான நூலாக உருவாக்கியிருக்கலாம் எனும் சிந்தனை வலுப்பெற்று வருகிறது. அப்படியெனில் இந்த நூல் கி.பி. 80-க்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இன்னொருவரின் பெயரில் நூலை எழுதுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகத் தான் இருந்து வந்திருக்கிறது.
‘எபேசியர் நூல்’ என்று சொன்னதும் எபேசியர் களுக்கு எழுதப்பட்ட நூல் என நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட திருச்சபைக்காக எழுதப்பட்ட நூல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் பழைய முதன்மை சுவடிகளில் “எபேசியர் களுக்கு” எனும் வார்த்தையே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு எப்படியோ, இந்த நூல் ஆன்மிக வாழ்வுக்கு மிக முக்கியமான ஒரு நூல் என்பதில் சந்தேகமில்லை.
எபேசு திருச்சபைக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. இயேசு தன் அன்னையை யோவானிடம் ஒப்படைத்தபின், யோவான் எபேசுவில் தான் அன்னை மரியாளுடன் தங்கியிருந்தார். யோவான் நற்செய்தியையும் அவர் அங்கிருந்து தான் எழுதினார். யோவானுடைய கடிதங்களும் அங்கிருந்து தான் எழுதப்பட்டன.
பவுலின் திருமுகங்களான 1 திமோத்தேயு மற்றும் 2 திமோத்தேயு இரண்டுமே எபேசுவில் வாழ்ந்த திமேத்தியுவுக்கு எழுதப்பட்டவை. அப் படியே எபேசு சபைக்கான கடிதங்களாகவும் அவை அமைந்தன. திருவெளிப்பாடு நூலில் இறைவன் வெளிப்படுத்தும் சபைகளில் ஒன்று எபேசு திருச்சபை.
விவிலியத்தைத் தாண்டிய பதிவுகளைப் புரட்டினாலும் எபேசு சபை மிக முக்கியமான சபையாய் இருந்தது விளங்குகிறது. புனித யோவானின் கல்லறையும், ஆலயமும் அங்கே அமைந்துள்ளன. கி.பி. 431 -ல் திருச்சங்கம் எபேசுவிலுள்ள அன்னை மரியாள் ஆலயத்தில் கூடியதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
பவுல் எபேசுவில் சுமார் இரண்டு ஆண்டு காலம் தங்கியிருந்தார். கிறிஸ்தவ மதம் அந்த பகுதியில் செழித்து வளர அது மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது.
எபேசியர் திருமுகம் மிகத்தெளிவாக இரண்டு விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று, நமக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடு இருக்க வேண்டிய ஆழமான உறவு. இரண்டாவது சகமனிதரோடு நமக்கு இருக்கவேண்டிய கடவுளின் அன்பு.
மீட்பைப் பெற என்ன செய்யவேண்டும் என்பது முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது என்றால், மீட்பைப் பெற்றவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது இரண்டாம் பாதியில் விளக்கப்படுகிறது.
நாம் நல்ல செயல்களைச் செய்வதனால் மீட்கப்பட்டவர்களல்ல, ஆனால் நல்ல செயல்களைச் செய்வதற்காக மீட்கப்பட்டவர்கள். இந்த சிந்தனையை நாம் எபேசியர் நூலில் காணலாம்.
திருச்சபைக்கு உள்ளே நிகழும் மாற்றமாக முதல் பாதியை எடுத்துக் கொள்ளலாம். வானம் நோக்கி கரங்களை விரிக்கும் கணம் அது. திருச்சபைக்கு வெளியே நிகழும் மாற்றமாக இரண்டாவது பாதியை எடுத்துக் கொள்ளலாம். திருச்சபைக்கு வெளியே கரங்களை விரிக்கும் செயல் அது. இரண்டும் கலந்த வாழ்க்கையே உண்மையான கிறிஸ்தவப் பயணம் என்பதை இந்த நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.
யூதரெனன்றும், பிற இனத்தவர் என்றும் பிரிவினைகள் இல்லாமல் இறைவன் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரின் மீட்புக்காகவும் தன்னைக் கையளித்தார். இறைவனின் அருளைப் பெற்று நாம் அவரில் நடக்க வேண்டும் எனும் இறையியல் சிந்தனையை இந்த நூல் வலியுறுத்துகிறது.
‘ஒன்றே ஒன்று’, எனும் போதனை மையமாய் அமைகிறது. ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே விசுவாசம், ஒரே திருமுழுக்கு, ஒரே இறைவன் எனும் அடிப்படை நம்மிடம் இருக்க வேண்டும். நமது செயலும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். ஆபாசமாக பேசுவதைக் கூட பாவம் என ஒதுக்கவேண்டும். பிறரை மன்னித்தல், பிறரை ஏற்றுக்கொள்ளல், பிறரைப் பொறுத்துக்கொள்ளல் என சக மனித கரிசனை மிக முக்கியம் என்றெல்லாம் இந்த நூல் பேசுகிறது.
கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை, கணவன்-மனைவி உறவோடு ஒப்பிட்டு மேன்மைப்படுத்துகிறது இந்த நூல். “திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். கிறிஸ்து திருச் சபை மீது அன்பு செலுத்தியது போல கணவர்கள் மனைவியரிடம் அன்பு செலுத்த வேண்டும்” என குடும்ப உறவை உச்சத்தில் வைக்கிறது எபேசியர் நூல்.

சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
உலகத்தில் இன்று அநேக பாதுகாப்பு மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரின் பாதுகாப்பு. மனிதர்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு. நமது நாட்டிற்கு ராணுவத்தால் பாதுகாப்பு.
ஆனால் சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
‘ஆண்டவர், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்” (ஏசா.6:1).
ஏசாயா தீர்க்கதரிசி மேற்கண்ட வசனத்தின் தரிசனத்தை கண்டார். தேவன் பரலோகத்தில் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பார்க்கிற நட்சத்திரங்களின் உயரம் எவ்வளவு உயரமாயிருக்கிறது. அதைவிட உயரத்தில் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். உன்னதத்தில் இருந்துகொண்டு தமது அக்னி ஜுவாலை போன்ற கண்களால் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பார்க்கிறார். நாம் அவரை காண முடியாது, அவர் நம்மை காண்பார்.
‘கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்” (ஏசா.33:5).
நம்மை பாதுகாக்கிற சர்வலோக தேவன் பரலோக உன்னதத்தில் வாசமாயிருக்கிறார். அவர் உறங்குவதில்லை. உன்னதமானவர், நமக்கு அடைக்கலமானவர். ஆபத்துக் காலத்தில் நமக்கு பாதுகாவலராக இருக்கிறார். கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார்.
தேவ கட்டளை
‘உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்னியை உனக்குக் காண்பித்தார். அக்னியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்’ (உபா.4:36).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்தார்கள். கர்த்தர் மோசேயை அழைத்து இஸ்ரவேல் ஜனங்கள் 3 நாட்கள் தங்களை பரிசுத்தப்படுத்தி 3-வது நாளின் விடியற்காலையில் 3 மணிக்கு இடி முழக்கங்களும், மின்னல்களும், எக்காள சத்தங்களும் கேட்கும்போது சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்து நிற்கவேண்டும். சீனாய் மலையை யார் தொட்டாலும் இறந்து போவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
விடியற்காலையில் கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்னியில் இறங்கினார். மலை முழுவதும் மிகவும் அதிர்ந்து அசைந்தது. மலையிலிருந்து வானளவு அக்னி எரிந்துகொண்டிருந்தது.
அக்னியின் நடுவிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தோடு பேசினார். அவர் சத்தத்தை கேட்டார்கள். அவர் ரூபத்தை யாரும் பார்க்கவில்லை. அக்னியிலிருந்து பேசி 10 கட்டளைகளை கொடுத்தார். 10 கட்டளைக்கு கீழ்படிந்து யார் வாழ்ந்தாலும் அவர் கரத்தின் மறைவில் உன்னை பாதுகாப்பார்.
தேவ வசனம்
‘நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது’ (யோவா. 6:63).
பிதாவின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது. பிதாவின் வார்த்தை மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிட்ட சுத்தமான வார்த்தை. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் மேலான வல்லமையான வார்த்தை. தேனிலும், தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமான வார்த்தை.
தாவீது சொன்னார், ‘உமது வார்த்தைகள் என் நாவிற்கு இன்பமும், என் வாய்க்கு தேனிலும் மதுரமானது’ என்றார்.
தேவ வார்த்தைகள் பரிசுத்தத்திலும், அதிகாரத்திலும், வல்லமையிலும் உயர்ந்த வார்த்தைகள். ‘என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்’ என்றார். உலக வேஷம் தரித்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனால் நமது ஜெபத்திற்கு பதிலும் இல்லை, உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார்.
உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கிறார்
‘இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்’ (ஏசா.49:16).
ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ?, அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்றார். ஒரு தாய் தனது குழந்தையின் மேல் காட்டும் அன்பை விட தேவனின் அன்பு மேலானது. அவர் அன்புடனும் கருணையுடனும் நம்மை பாதுகாப்பார்.
நம்மை மறக்காதிருக்க அவரது உள்ளங்கையில் வரைந்து வைத்திருப்பதே அவரது மேலான அன்பு. நமது கண்முன் நிற்கும் அவரது கையிலுள்ள தழும்புகளால் நமது வியாதிகளை குணமாக்கி பாதுகாக்கிறார். ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.