என் மலர்
கிறித்தவம்
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான நேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஜெபமாலை பாடல்களை பாடினர். தொடர்ந்து கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏசுநாதரை சிிலுவையில் அறைய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தது வரையான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டது.

கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி, அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா அடுத்த மாதம் 4-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா” என்று பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் வருகிற 28-ந்தேதி குருத்தோலை திருநாளாக கொண்டாடுகிறார்கள். இது ஆண்டு தோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாள் “குருத்தோலை ஞாயிறு” என்று அழைக்கப்படுகிறது.
அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி, அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதை தொடர்ந்து ஆலயங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை முந்தைய நாள் நேர்ச்சையாக ஆலயங்களுக்கு மக்கள் வழங்குவார்கள்.
குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 28-ந்தேதி குருத்தோலை பவனி நடக்கிறது அதை தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று தீவிரமாவதால் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை :
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளும் நெருங்கி வருவதால், பொது இடங்களில் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஏப்ரல் 4-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் அதற்கு முன்னதாக 2-ந் தேதி புனித வெள்ளி போன்ற சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை பிடித்து பவனியாக இந்நாளில் செல்வது வழக்கம். ஆலயங்களை சுற்றியும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட தெரு வீதிகளிலும் குருத்தோலையை பிடித்து ஊர்வலமாக செல்லும் போது ‘ஓசன்னா’ என்று பாடல்களை முழங்கி செல்வார்கள்.
அடுத்த வாரம் முழுவதும் சிறப்பு நாட்களாக அனுசரிக்கப்படும். அதனால் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளும் வருவதால், அவற்றின் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கிறிஸ்தவ ஆலய மத போதகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலயத்துக்குள்ளே இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தி முடிக்க தலைமை போதகர்களிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபை மக்களை அழைத்து ஊர்வலமாக செல்ல வேண்டாம் என அனைத்து திருச்சபைகளுக்கும் அதன் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதனால் 2-ந் தேதி குருத்தோலை பவனி நிகழ்ச்சிகள் பெரும்பாலான ஆலயங்களில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஆலயங்களில் சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முககவசம் அணியாமல் கூட வேண்டாம். ஆலயம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் சுகாதாரத்துறை அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அனைத்து ஆலயங்களிலும் அறிவுறுத்தப்படுகிறது.

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தவக்காலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தவக்காலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை சமபந்தி விருந்து நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது. ஆலய பங்கு தந்தையும் ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்கு தந்தை ஜான்சன், அருள் தந்தை பிலிப்ராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.
வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை திருநாள் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 1- ந்தேதி (வியாழக்கிழமை) மாலை பாதம் கழுவும் வழிபாடு, நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை வழிபாடு நடக்கிறது.
2- ந்தேதி புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பகல் 11 மணிக்கு ஏசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. மாலையில் திருச்சிலுவை ஆராதனை நடக்கிறது. 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா விழா மற்றும் அதை தொடர்ந்து ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிருடன் எழுந்த, உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பயணம் மேற்கொண்டு திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெறுவது வழக்கம்.
காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி புனித செபஸ்தியார் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பயணம் மேற்கொண்டு திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெறுவது வழக்கம். அதே போல் நேற்று தவக்கால சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காளையார்கோவில், சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதயாத்திரையாக திருத்தலம் வந்தார்கள். திருத்தலம் வந்ததும் சிவகங்கை இளையோர் பணிக்குழு செயலர் பிரிட்டோவால் சிலுவைப்பாதை வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுடன் சிவகங்கை மறைவட்ட அதிபர் சேசுராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி, சேசு அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.
இறைமகனாகிய இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவற்றில் ‘அறுவடை நாள்’ எனும் உவமை முக்கியமானது. அதற்குமுன் அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.
இயேசு கலிலேயா பகுதியில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். ‘கடவுளின் அரசாங்கம் குறித்துக் கூறுகிறீர்களே, அது எப்படிப்பட்டது’ என மக்கள் கூட்டத்திலிருந்து சிலர் கேட்டனர். அதற்கு இயேசு, “புதையலைத் தேடிக்கொண்டிருந்த ஒருவர், மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அது புதையல் என்று அவருக்கு உறுதியாய்த் தெரிந்தது. உடன் அதைப் பத்திரமாய் மூடிவைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய், தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.” என்றார். அடுத்து அவர், “வணிகர் ஒருவர் சிறந்த முத்துகளைத் தேடிச் செல்கிறார். அப்போது விலை உயர்ந்த முத்து ஒன்றைக் கண்டார். உடன் அவர் போய்த் தமக்குள்ள அனைத்தையும் விற்று, அதை வாங்கிக்கொண்டார். தந்தையின் அரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்” என்றார்.
பின்னர் கடவுளை நல்ல விதைகளைப் பூமியில் விதைக்கும் விவசாயியாக உருவகப்படுத்தி, இயேசு வேறொரு உவமையை மக்களுக்குச் சொன்னார்: “வானுலக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒருவரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம். நல்ல விதைகள் தூவப்பட்ட வயலைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, பயிர்களைப்போல் தோற்றம் காட்டிய களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், அந்த மனிதருடைய ஊழியர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள். அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?” என்று கேட்டார்கள்.
உடன் அவர் “இது எதிரியின் வேலை” என்றார். அதற்கு ஊழியர்கள், “நாங்கள் போய் களைகளைப் பிடுங்கி எறியட்டுமா?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கி விடுவீர்கள். அதனால் அறுவடைநாள் வரும்வரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும். அறுவடைநாள் அன்று, அறுவடை செய்கிறவர்களிடம், முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துவிடுவதற்காகக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேருங்கள் என்று சொல்வேன்” என்றார். இந்த உவமையைக் கேட்ட மக்கள் மனத்தெளிவு பெற்றவர்களாக முகம் மலர்ந்தனர். ஆனால் சீடர்களோ புரிந்தும் புரியாதவர்களைப்போல நின்றனர்.
அதன்பின்பு இயேசு அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது சீடர்கள் அனைவரும் அவரருகே வந்து அமர்ந்து “ஆண்டவரே, கோதுமை வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு மேலும் விளக்கிக் கூறுங்கள்’’ என்று கேட்டனர். புன்முறுவலோடு அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.
“இந்த உலகம்தான் வயல். நல்ல விதைகள், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள். மானிட மகன் நல்ல விதைகளை விதைக்கிறார். களைகளை விதைக்கும் பகைவன், தீயோனாகிய சாத்தான். அறுவடை, உலகின் முடிவு. அறுவடை செய்வோர் கடவுளின் ஊழியர்களாகிய வானதூதர்கள். எவ்வாறு களைகளைத் தனியே பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும், நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களை நெருப்புச் சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள். கேட்கச் செவியுள்ளோர் இதைக் கேட்கட்டும்” என்றார்.

தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.வேளாங்கண்ணி பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடி இருந்தனர். வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

தமிழக-கேரள எல்லையில் உள்ள குருசுமலை திருப்பயண திருவிழா நிறைவடைந்தது. விழாவையொட்டி ஏராளமானோர் மலை ஏறி சென்று வழிபட்டனர்.
தமிழக-கேரள எல்லை பத்துகாணியில் கொண்டகட்டி மலையில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருப்பயண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெய்யாற்றங்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.
தொடர்ந்து வந்த விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, பாடல் ஆராதனை போன்றவை நடந்தன. காலை 7 மணி முதல் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வழிப்பட்டனர்.
நிறைவு நாளான நேற்று காலை மலை அடிவாரத்தில் திருப்பலியும், காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். மாலை 4 மணிக்கு மலை உச்சியில் திருவிழா நிறைவு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மேலும் மலை அடிவாரத்தில் குருசுமலை அதிபர் வின்சென்ட் பீட்டர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி கொடைக்கானல் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக வட்டார திருயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி கொடைக்கானல் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக வட்டார திருயாத்திரை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கொடைக்கானல் வட்டார அதிபரும், மூஞ்சிக்கல் பங்கு தந்தையுமான எட்வின் சகாய ராஜா தொடங்கி வைத்தார்.
இதில் இயேசுவின் பாடுகளை தியானித்த வண்ணம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்த வண்ணம் சென்றனர். இந்த ஊர்வலம் அண்ணாசாலை, கோக்கர்ஸ்வால்க், செயின்ட் மேரிஸ் ரோடு வழியாக தூய சலேத் மாதா ஆலயத்தை அடைந்தது.
அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கொடைக்கானல் வட்டாரத்தை சேர்ந்த பங்குத்தந்தையர்கள், ஏஞ்சல், சேவியர் அருள் ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அன்னதானம் நடந்தது.
கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதனை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலம் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. அதுபோன்று கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் பங்கு மக்கள் இணைந்து கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்திற்கு தவக்கால பரிகார பவனி மேற்கொண்டனர். இந்த பவனியின்போது ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் 14 நிலைகளை தியானித்து சென்றனர். இந்த பவனியின் முடிவில் கருமலை வேளாங்கண்ணி திருத் தலத்தில் பங்கு குருக்கள் மரியஜோசப், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் வால்பாறை முடீஸ் சோலையார் நகர் ரொட்டிக்கடை பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர் ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார். நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.
அல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.
அப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா? மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர்.
அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
அப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
எழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.
மக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது.
எப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக் கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.
இந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.
``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர்.
ஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.

தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
“கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.
ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)
கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)
நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.
இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.