என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது.

    தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    புதுவை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை குழந்தைசாமி அடிகளார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

    இதே போல் புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை அருகே உள்ள சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் நேற்று காலை 11 மணிக்கு மும்மணி நேர தியான ஆராதனை நடந்தது. இதில் தலைமை போதகர் ஹென்ரி ஜெபா ரிச்சர்டு கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார். அப்போது 7 திருவசனத்தின் அடிப்படையில் 7 பேர் அருளுரை வழங்கினர்.

    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் அரியாங்குப்பம் பங்குதந்தை அந்தோணிரோச் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக சிலுவை வழிபாடு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரர்த்தனை செய்தனர்.

    இதேபோல் முருங்கப்பாக்கம் மாதா கோவில், கொருக்கமேடு புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதில் முககவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
    புனித வெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிரோடு எழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அதை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புனித வெள்ளி என்பதால், அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையின்போது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு தொங்கியபோது பேசின 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் ஆயர் கோபிநாத் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதுபோன்று சிலுவை பாதை வழிபாடு, சிலுவை ஆராதனையும் நடந்தது. மேட்டுப்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனைக்கு பஙகு குரு ஹென்றி லாரன்ஸ் தலைமை தாங்கி நடத்தினார்.

    பின்னர் சிலுவை பவனி நடந்தது. ஆலயம் முன்பு தொடங்கிய பவனி, ஆலயத்தை சுற்றி ஆலயம் முன்பு வந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கைகளில் சிலுவைகளை ஏந்திய படி சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதுபோன்று காரமடை, அன்னூர், சிறுமுகை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
    புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
    ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது.

    தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

    மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதில் முககவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர்

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரமாக கடந்த 28-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியை யொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி ஆலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் ஆகியோர் சிலுவை ஆராதணை செய்தனர்.

    ஆண்டு தோறும் புனித வெள்ளி அன்று ஏசு சிலையின் பாதத்தை பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து கலையரங்கத்தில் இருந்து ஏசு சிலை ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. அபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையை ஆராதணை செய்தனர். பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக மேல்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்லினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    "குருவும், போதகரும் ஆகிய நான் உங்களுடைய பாதங்களை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளை கழுவ கடமைப்பட்டு இருக்கின்றீர்கள்" என்று கூறி இயேசு கிறிஸ்து உலகில் குருத்துவத்தையும், நற்கருணையையும் நேற்றைய நாளில் ஏற்படுத்தினார்.
    "குருவும், போதகரும் ஆகிய நான் உங்களுடைய பாதங்களை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளை கழுவ கடமைப்பட்டு இருக்கின்றீர்கள்" என்று கூறி இயேசு கிறிஸ்து உலகில் குருத்துவத்தையும், நற்கருணையையும் நேற்றைய நாளில் ஏற்படுத்தினார். இதனை நினைவு கூறும் வகையில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் சடங்கு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் பாதம் கழுவும் சடங்கு நேற்று நடந்தது. இதனை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில், ஆயரின் செயலர் ஆபேல், பங்கு தந்தையர்கள் சகாயராஜ், ஜெயசீலன் பிரபு, சாம்சன் ஜெபராஜ், பாதிரியார் பாலா ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர். இதையொட்டி பேராலயத்தில், புனித வளனார் பங்கை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அமரவைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு தொடங்கியது. அதன்பிறகு பாதம் கழுவும் சடங்கு நடந்தது. இதில் ஆயர் முக்கியஸ்தர்களின் பாதங்களை கழுவினார். அதன்பின்னர் நற்கருணை வழிபாடு நடைபெற்று, நற்கருணை பேராலய பீடத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, குமரன் திருநகர், என்.ஜி.ஓ. காலனி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு தேவாலயங்களிலும் அந்தந்த பங்கு தந்தையர்கள் தலைமையில் பாதம் கழுவும் சடங்கு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக விளங்கும் இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்துள்ளதால் மேலும் சிறப்புடன் விளங்குகிறது.

    உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். ஏசு சிலுவையில் உயிர் விட்ட நாள் ‘புனிதவெள்ளி' ஆகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ெஜபம், மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடந்து வந்தது. கடந்த 28-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

    ஏசு சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக உள்ளதுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவுகூரும் வகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆண்டு தோறும் பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள், சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம்.

    ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதை தொடர்ந்து திவ்யநற்கருணை வழங்கப்பட்டது.

    இன்று(வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவைகள் கலையரங்கில் நடைபெறுகிறது.

    பின்னர் ஏசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய மேல் கோவிலுக்கு பவனியாக எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.. 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும்.
    இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

    அந்த 40 நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாகவும், துக்க நாளாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்.

    இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும்.

    சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3-வது நாளில் இயேசு உயிர்ந்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடுவார்கள்.
    கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் நடந்தது. அன்று முதல் ஈஸ்டர் திருநாள் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படும்.

    இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

    சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் நாளை நடை பெறுகிறது. சீரோ மலபார் சபை ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

    மார்தோமா சபையின் ஆலயங்கள் மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள இச்சபையின் ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    பாடி பெத்தேல் ஆலயத்திலும் நாளை புனித வெள்ளி வழிபாடுகள் நடைபெறுகிறது. இதுபோல செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆலயம் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பாரிமுனை, சின்னமலை, சாந்தோம், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெறும். கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சாந்தோம் ஆலயத்தில் பங்கேற்று நற்செய்தி அளிக்கிறார்.

    சி.எஸ்.ஐ. கதிட்ரல் தேவாலயத்தில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்து கொள்கிறார். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பகல் 11.30 மணிக்கு புனித வெள்ளி வழிபாடு தொடங்கி 3 மணி நேரம் நடைபெறும். இதேபோல இ.சி.ஐ. பெந்தே கோஸ்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று மாலை புனித வியாழன் வழிபாடுகள் நடைபெறுகிறது. இதில் பாதம் கழுவும் சடங்குகள் நடக்கிறது. தொடர்ந்து நற் கருணை ஆராதனை நடை பெறுகிறது.

    கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்போர் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வருகிற ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றும் அனைத்து ஆலயங்களிலும் விசே‌ஷ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும்.

    இதுவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது. இது குறித்து வேதாகமத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி பகுதிகளில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

    இந்த பெரிய வியாழன் ஆண்டு தோறும் இயேசு உயிர்தெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 6 நாட்களை பரிசுத்த நாட்களாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து அதில் இந்த பெரிய வியாழனையும் நினைவுகொள்கின்றனர்.

    பெரிய வியாழன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) விழாவின் முதல் நாளாகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி, மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடைபிடிக்கின்றனர்.

    இப்படி இந்த பெரிய வியாழன் அன்று இயேசு 3 முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார். முதலில் இயேசு பெரிய வியாழன் அன்று தன்னுடைய சீடர்களுடன் உணவு உட்கொண்டு நற்கருணை எண்ணும் அப்பம் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறார். பின்னர் இயேசு தம்முடைய சீடர்களின் கால்களை கழுவுகிறார். பின்னர் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்துகிறார்.குருத்துவம் என்றால், இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஏற்படுத்திய அப்பம் கொடுக்கும் நிகழ்வை, இனி எல்லா தேவாலயங்களிலும் குருவானவர் (போதகர்) ஏற்படுத்தி அவர்கள் தான் எல்லா ஜனங்களுக்கும் அப்பம் கொடுக்கும் நிகழ்வை பின்பற்ற வேண்டும்.

    இவர்கள் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு பணிசெய்யும் பொறுப்பையும் போதகர்களிடம் ஒப்படைத்தார் என்பது தான் குருத்துவத்தை ஏற்படுத்துதல் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தான் இயேசு உயிர்த்தெழுந்த முந்தைய வியாழக்கிழமையை பெரிய வியாழன் என்று போற்றப்படுகிறது.

    சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம்.
    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    தஞ்சை மாவட்டத்தில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புனித வார நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகின்றன. கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் நாளில் தொடங்கியது.

    அன்றிலிருந்து கிறிஸ்தவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து தவக்காலத்தை அனுசரித்து வருகின்றனர். தவக்காலத்தின் நிறைவு வாரமாக குருத்தோலை ஞாயிறு கடந்த ஞாயிறு அன்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய வியாழன் பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற உள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வை பேராலய அதிபர் பாக்கிய சாமி இறைவார்த்தை வழிபாட்டுடன் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைவன் என்பவன் எப்பொழுதும் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்பதில்லை, மாறாக கடையனாகவும், பணி பெறுபவனாக மட்டுமல்லாமல், பணி புரிவனாகவும் இருக்க வேண்டும், என்பதை எடுத்துச் சொல்லும் மகத்தான ஒரு செய்தியை அனைவருக்கும் எடுத்துக் கூறும் நிகழ்வாக பாதம் கழுவும் சடங்கு நிகழ்வு நடைபெறுகிறது.

    இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணைஅதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குதந்தை அருண்சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளாநந்தம், கருணைதாஸ், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு வருகிற சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. சரியாக 12 மணிக்கு ஏசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக புதிய நெருப்பு ஏற்றப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஈஸ்டர்தினமான ஞாயிற்றுக்கிழமை பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. புனித வார நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பூண்டி பேராலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    புனித வாரத்தில் பெரிய வியாழன் எனப்படும் பாஸ்கா வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார். பின்னர் அவர் "நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்று தனது சீடர்களிடம் கூறினார்.

    அதன் நினைவாக நாளை (வியாழக்கிழமை) பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களை கழுவுகிறார்கள். திருப்பலிக்கு பின்னர் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.நாளை மாலை நடைபெறும் திருப்பலியில் "உன்னதங்களிலே" என்ற வானவர் கீதம் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கும். அதன்பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகள் ஒலிக்காது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக விளங்கும் இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். தவக்காலம் தொடங்கும் நாள் 'சாம்பல் புதன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் கூறிவருகின்றனர்.

    இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் புலால் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கியது. தவக்காலத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுக்கிறது. இதையொட்டி குருத்தோலை பவனி நடைபெறும்.

    அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    இதைத்தொடர்ந்து குருத்தோலை பவனி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று பேராலயத்தின் பின் பகுதியை அடைந்தனர்.

    நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்குதந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள்சகோதரிகள், சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
    ×