என் மலர்
கிறித்தவம்
மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.
மனிதர்களை ஆபத்து இல்லாத பகுதிகளில் வழிநடத்திச் சென்றார். அங்கு இளைப்பாறுதலும் தந்தார். அவரைப் போலவே, பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.
“மழை, வெயில், பனி என்று பார்க்காமல் வயல்களில் தங்கி ஆடுகளை மேய்த்தார்கள். எதிரிகளிடமிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். காயப்பட்ட ஆடுகளுக்கும், வியாதிக்குள்ளான ஆடுகளுக்கும் தேவையானதைச் செய்தார்கள். ஆட்டுக்குட்டிகளை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்” (40:11) என்று ஏசாயா புத்தகம் மேய்ப்பர்களின் பணியை விவரிக்கிறது.
பெற்றோர்களும் மேய்ப்பர்களைப் போல்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளை `பரலோகத் தந்தைக்கு ஏற்ற முறையில்' வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால் பிள்ளைகளுக்கு, சாத்தான் நிறைய சோதனைகளைக் கொடுக்கிறான்; இளமைப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியான ஆசை களோடு பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்களாக செயல்பட விவிலியம் வழிகாட்டுகிறது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்று ஒரு நல்ல மேய்ப்பர் அடிக்கடி கவனிப்பார். “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு” (27:23) என நீதிமொழி எடுத்துக் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்; என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுங்கள். இளமை பருவத்தில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் மனந்திறந்து பேசத் தயங்குவார்கள். இதை சரிசெய்ய உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அவர்களோடு சேர்ந்து சாப்பிடுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான விஷயம் பேசும்போது, அதில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி, உங்களுக்கும் அவர்களுக்குமான மனத்தடையை உடைத்தெறியுங்கள். இப்படி அவர்களோடு போதுமான அளவு நேரம் செலவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச முன்வருவதைப் பார்ப்பீர்கள்.
மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.
நீங்கள் பொறுமையாகக் கேட்கிறீர்கள் என்று பிள்ளைகளுக்குத் தெரிந்தால்தான் பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசுவார்கள். நீங்கள் எப்போதும் அலுவலக மனநிலையிலேயே இருந்தால் உங்களிடம் பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் வெளிப்படையாகப் பேசுவார்கள்.
“கெட்ட சகவாசமோ, மோசமான பொழுதுபோக்கோ அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும்” என்கிறது நீதிமொழி. ஒரு ஆடு, சற்று தூரத்தில் இருக்கும் பசுமையான இடத்தைப் பார்த்து, அங்கிருக்கும் புல்லை மேய்வதற்குச் சென்றுவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வழிமாறிப் போய்விடலாம். அதேபோல், பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெற்றோர்களை விட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் நல்ல மேய்ப்பர் என்றால் உங்கள் ஆடுகளாகிய அன்புப் பிள்ளைகள், எத்தகைய மேய்ச்சல் நிலத்தில் இளைப்பாறிவருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் ஆபத்துக்கள் நிறைந்ததாக இருந்தால், மந்தையிலுள்ள ஆடு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது என்று உணர்ந்தால் அவர்களை பக்குவமாய் வழிநடத்துங்கள். நல்ல நிலத்திற்கு அழைத்து வாருங்கள். அது நல்ல மேய்ப்பனின் வேலை.

எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.

பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் உலக மீட்பர் என்ற தலைப்பில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து உலக மீட்பர், அருளப்பர், செபஸ்தியர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடியவாறு சென்றனர். முடிவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.
வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.
அதன்படி 144-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் முகப்பில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.
இதில் ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கும், பகல் 11.30 மணிக்கும் திருப்பலிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா நடவடிக்கையாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
18-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது.

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலயம் முன்பு பங்குத்தந்தை தேரை மந்திரித்து புனித நீர் தெளித்ததை தொடர்ந்து ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலய பாஸ்கா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருப்பலிகள் நடைபெற்ற நிலையில் நேற்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் பெரிய தேர்பவனி நடைபெற்றது.
ஆலயம் முன்பு பங்குத்தந்தை தேரை மந்திரித்து புனித நீர் தெளித்ததை தொடர்ந்து ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரைச்சுற்றி மீண்டும் நிலையை வந்து அடைந்தது. முன்னதாக 6 சப்பரங்கள் தேருக்கு முன் சென்றன.
இன்று நடைபெறுவதாக இருந்து தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில் பங்குத்தந்தைகள், ஊர்முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டு திருப்பலிக்கு பின்னர் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.
வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. 18-ந்தேதி ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.
இந்த தகவலை பங்குத்தந்தை பிச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

குடந்தை மறைமாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
குடந்தை மறைமாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் பெருவிழா நடைபெற்றது. விழாவை பங்குத்தந்தை பிரான்சிஸ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவையொட்டி திருச்சி சமயபுரம் பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேர்பவனி பாபநாசம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கடை வீதி, தெற்கு ராஜவீதி, மேலவீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.
அதனை தொடர்ந்து கும்பகோணம் குருகுல முதல்வர் அமிர்தசாமி, புனித அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் திருப்பலி, கொடி இ்றக்கம் ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு கொடி பவனி, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. திருத்துவபுரம் பேராலய பங்குதந்தை பீட்டர் கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். முள்ளங்கினாவிளை பங்குதந்தை கில்பர்ட் லிங்சன் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாைல, இரவு 8 மணிக்கு அன்பின்விருந்து ஆகியவை நடக்கிறது.
17-ந்தேதி காலை 7.30 மணிக்கு நட்டாலம் இணை அதிபர் ஜஸ்டின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். ஹெலன்நகர் பங்குதந்தை ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு விழுந்தயம்பலம் பங்குதந்தை சார்லஸ் விஜீ தலைமை தாங்கி சிறப்பு ஆராதனை நிறைவேற்றுகிறார். ஏற்றகோடு பங்குதந்தை சேவியர்சுந்தர் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாதஸ்வர மேளம், அலங்கார மின்விளக்குகளுடன் தேர்பவனி நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அருட்பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர் பவனி, அன்பின்விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நன்றியுரை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேங்கோடு பங்குதந்தை ஆன்றனி கோமஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை.
இயேசு பூமியில் அவதரித்து வாழ்ந்த காலம் முழுவதும் மனத்தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். எல்லாப் புகழையும் தமது வானுலகத் தந்தைக்கே அர்ப்பணித்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து, அவருடைய நற்குணங்களைக் கண்டு, மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அந்தப் புகழை இயேசு ஒருபோதும் தன்னுடையது என்று கருதவில்லை. அனைத்தையும் தனது தலையில் அவர் ஏற்றிக்கொள்ளவில்லை, பரலோகத் தந்தைக்கே சமர்ப்பித்தார்.
இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை. மனிதர்களைக் கண்டு அஞ்சவும்இல்லை. அதேபோல, இயேசு ஒருபோதும் வீராப்புடன் நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடும் அன்போடும் கனிவோடும் நடந்துகொண்டார்.
தன்னை நாடிவந்த மக்கள் அத்தனை பேரையும் நடத்திய விதத்திலும் மனத்தாழ்மையைக் காட்டினார் இயேசு. தனது சீடர்கள் தனக்கு ஏமாற்றம் அளித்தபோது அவர்கள் மீது எரிந்து விழவில்லை; மாறாக, அவர்களிடம் அன்பாகவே நடந்துகொண்டார். ஓய்வு எடுப்பதற்கும், தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்வதற்கும் அவர் தனிமையான இடத்தைத் தேடிச் சென்ற நேரத்தில் மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்; அப்போது இயேசு அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை, தம்முடைய சொந்த நலன்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கற்பித்தார்.
“நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியுடனும் இருக்கிறேன்” (மத்தேயு 11:29) என்று இயேசு குறிப்பிட்டார். தன் சீடர்களுக்கு மனத்தாழ்ச்சியைக் கற்பிக்க அவர் மறக்கவில்லை.
பூமியில் இயேசு வாழ்ந்த கடைசி இரவு அது. தனது சீடர்களுடன் இரவு விருந்து நடக்கிறது. அப்போது இயேசு எழுந்து தம் மேலங்கியைக் கழற்றி வைத்தார். ஒரு வேலைக்காரனைப் போல ஒரு சிறு துண்டை இடுப்பில் அணிந்துகொள்கிறார். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தமது சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகே தனது மேலங்கியை அணிந்துகொள்கிறார்.
இயேசு ஏன் இந்தத் தாழ்மையான வேலையைச் செய்தார்? இயேசுவே விளக்கமளிக்கிறார் பாருங்கள்: “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை எஜமான் என்றும், போதகரே என்றும் அழைக்கிறீர்கள். எனக்கு உங்கள் இதயத்தில் உயர்ந்த இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்குத் தந்திருக்கிற இடத்திலிருந்து இறங்கி உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இந்த மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா. 13:12-15).
இப்படியொரு தாழ்மையான வேலையைச் செய்ய முன்வந்ததன் மூலம் தம் மைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளத் தம்முடைய சீடர்களுக்கு உதவினார். அந்தப் பாடம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம்பெற்றது. மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள அவர்களுக்கு ஊக்கமளித்தது.
மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை இயேசு தனது சீடர்களுக்கு வலியுறுத்திக் காட்டியது அது முதல் தடவை அல்ல. ஒருசமயம் தனது சீடர்களுக்கு மத்தியில் போட்டி மனப்பான்மை தலைதூக்கியபோது, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் பக்கத்தில் நிறுத்தி, “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று அவர்களிடம் சொன்னார் (லூக். 9:46-48).
மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்ட தன்னைக் கொல்ல நினைக்கும் பரிசேயர்கள் முதன்மையான இடத்தைப் பெறவே துடிக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்ததால், “தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக். 14:11) என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.
சில சமயங்களில் தாழ்வாய்க் கருதப்படும் வேலைகளை நாம் மனப்பூர்வமாய் ஏற்றுச் செய்வதன் மூலம் இயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா? இதை சிந்தித்து பார்க்கவும், முயன்று பார்க்கவும் இந்த புனித வாரம் நமக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது. முயன்று பார்ப்போம். புனித வாரத்தில் பக்தியோடு பங்கெடுப்போம்.

உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.
உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே. தன் சாவை எப்படி அவர் முன்னறிவித்தாரோ அதேபோல் “நான் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்” என்பதையும் முன்னறிவித்தார். ஆம்..! இறைமகன் இயேசுவின் முன்னால் மரணம் மண்டியிட்டது. “சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா” என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இந்த ஈஸ்டர் திருநாளில் ஒலிக்கின்றது. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்டும் உட்பொருள் பற்றி நம்மில் எத்தனை பேர் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதைப் பகிரும் முன் நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
வாரத்தின் முதல்நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை (யோவான் 20: 1-9).
வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மரியா மக்தலேனா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள். யோவான் அங்கே, துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார்.
ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்பதே. இதைத்தான் திருத்தூதர்பணி நூல் அதிகாரம் 1, வசனம் 11-ல் பார்க்கிறோம்..
“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி விவிலியம் வழியாக நமக்குத் தரப்படுகிறது.
‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது கிறித்தவ விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப் போயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய நற்செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே மனித வாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிலேதான் மீட்பின் வரலாறு நிறைவடைகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ, தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேராலயத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு் புதிதாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இந்த மெழுகுவர்த்தியை பேராலய அதிபர் பாக்கிய சாமி ஏந்தி வந்தார். அப்போது அங்கிருந்த திரளான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிலுவையில அறையப்பட்டு உயிரை விட்ட ஏசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ‘ஈஸ்டர்’ பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நள்ளிரவில் ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. பின்னர் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.
கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஜெபம் செய்தனர். இரவு 11.40 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கியபடி ஏசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ஈஸ்டர் திருநாளை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் திரண்டிருந்தனர்.
ஈஸ்டர் திருநாளையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர் பவனியும் நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.
இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.
இயேசு சிலுவையில் இறந்த வேளையில், எருசலேம் கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை, இரண்டாக கிழிந்தது யூத குருக்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தி இருந்தது. கடவுளையும் மனிதரையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த திரை கிழிந்தது, இயேசு இறைமகனாக இருப்பாரோ என்ற எண்ணத்தை அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. அவராக உயிர்த்தெழுந்து வரவில்லை என்றாலும், அவரது சீடர்களே உடலை மறைத்து வைத்துவிட்டு வதந்தியைப் பரப்பலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய யூத சமயத் தலைவர்கள்,இயேசுவின் கல்லறைக்கு முத்திரையிட்டு, காவல் வீரர்களைக் கொண்டு அதை கவனமாக காவல் காக்க ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் வடிவில் வந்த வானதூதர் இயேசுவின் கல்லறையைத் திறந்தார். இடி சத்தத்தில் மயங்கி விழுந்த காவல் வீரர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இயேசுவின் உடலை காணவில்லை. யூத சமயத் தலைவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. ஆனால் அவர்கள், இயேசுவின் உடல் திருடப்பட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.
மறுபக்கம் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்கள் தடவி மரியாதை செலுத்த வந்த பெண் சீடர்கள், கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து விட்டதாக அறிவித்தனர். இந்த செய்தியை அப்பெண்கள் இயேசுவின் மற்ற சீடர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. அவ்வேளையில் கல்லறை அருகில் நின்று அழுது கொண்டிருந்த மகதலேன் மரியாவுக்கு இயேசு காட்சி அளித்து, தாம் உயிரோடு இருப்பதை உறுதி செய்தார். இந்த நிகழ்வை,
“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்”
என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடியுள்ளார்.
இதையடுத்து, யூத சமயத் தலைவர்களுக்கு பயந்து, பூட்டிய அறைக்குள் தஞ்சம் அடைந்து கிடந்த சீடர்களுக்கு முன்பும் இயேசு தோன்றினார். சிலுவையில் அறையப்பட்டதால், தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஏற்பட்ட காயங்களை அவர்களுக்கு காட்டினார். இதனால் அவர் உயிர்த்து எழுந்தது உண்மை என்பதை சீடர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாற்பது நாட்களாக பலமுறை காட்சி அளித்த இயேசு, அவர்களோடு பந்தியில் அமர்ந்து உணவு உண்டதாகவும், தமது நற்செய்தியை அறிவிக்க அவர்களைத் தயார் செய்ததாகவும் பைபிள் கூறுகிறது.
உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளில் ஒலிவ மலைக்கு சீடர்களை அழைத்து சென்ற இயேசு, உலகெங்கும் சென்று தம்மைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கட்டளையிட்டார். அவரை கடவுளாக நம்புவோருக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் ஞானஸ்நானம் வழங்குமாறும் ஆணையிட்டார். உலகம் முடியும் வரை தமது சீடர்களோடு இருப்பதாக வாக்களித்த இயேசு, அவர்கள் கண் முன்பாகவே விண்ணகத்திற்கு ஏறி சென்றார். அப்போது அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், உலகின் முடிவில் மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள அரசராக இயேசு மீண்டும் வருவார் என்று கூறி மறைந்தனர்.
எருசலேமுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் இருந்து வந்த இறைமகன் என்றும், மரணத்தை வெற்றி கொண்ட ஆண்டவர் என்றும் மக்களிடம் போதித்தனர். சீடர்களின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் பலரும் இயேசுவை கடவுளாகவும், தங்கள் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும், நட்புறவுடன் வாழ்வதிலும், உடைமைகளை பொதுவாக கொண்டு பிறரது துயர் துடைப்பதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். சீடர்கள் வழியாக ஆண்டவர் இயேசு பல்வேறு அற்புதங்களை செய்தார். இதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த வேகமான வளர்ச்சி யூத சமயத் தலைவர்களின் கண்களை உறுத்தியது. சீடர்களை பிடித்து, அடித்து உதைத்த அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போதும், யூத குருக்களால் இயேசு உயிர்த்தெழவில்லை என உறுதியாக கூற முடியவில்லை. பலவித துன்பங்களை சந்தித்தாலும், இயேசுவுக்கு சான்று பகர்வதை சீடர்கள் நிறுத்தவில்லை. இயேசுவின் பெயரால் அதிக அளவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால், பாலஸ்தீன் நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கிறிஸ்தவம் விரைந்து பரவியது. இயேசுவின் சீடரான புனித தோமா அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு வந்து பலரையும் கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார்.
இதனிடையே, பாலஸ்தீன் நாட்டில் கிறிஸ்தவ சமயத்தை தீவிரமாக எதிர்த்த சவுல் என்ற இளைஞர், கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கொலை வெறியுடன் செயல்பட்டார். இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்ட பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க செய்தார். ஸ்தேவான் என்ற கிறிஸ்தவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தார். தாமாஸ்கஸ் நகருக்கு செல்லும் வழியில், திடீரென வானத்தில் இருந்து வீசிய பேரொளியால் அவர் குதிரையுடன் தடுமாறி விழுந்தார்.
அப்போது, “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் ஒலித்தது. “ஆண்டவரே நீர் யார்?” என்று திருப்பிக் கேட்டார் சவுல். “நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்” என பதில் வந்தது. அத்துடன் கிறிஸ்தவர்கள் மீதான அவரது கொலைவெறி அடங்கியது. பவுல் என்ற பெயருடன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்.
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தாலே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. நரபலி உள்ளிட்ட கொடூரங்கள் கிறிஸ்தவ சமயத்தின் பரவல் காரணமாகவே முடிவுக்கு வந்தன. உலகெங்கும் அடிமை முறை ஒழிந்ததற்கும், ஆண் - பெண் சமத்துவம் ஏற்படவும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெறவும் கிறிஸ்தவ போதனைகளே வித்திட்டன. இவ்வாறு, இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகில் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போர் அனைவருக்கும் மாற்றமும், புதுவாழ்வும் கிடைப்பது உறுதி என்று பைபிள் கூறுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!
தமிழகத்திற்கு வந்த இயேசுவின் சீடர் :
உயிர்த்த இயேசு முதல் முறை தம் சீடர்களுக்கு தோன்றியபோது, பன்னி ருவரில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. “ஆண்டவரை கண்டோம்“ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, “அவ ருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும் பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட் டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று தாமஸ் பதில் கூறினார். ஒரு வாரத்துக்கு பிறகு, தாமசும் இருந்தபோது இயேசு தம் சீடர்கள் முன்பு தோன்றினார்.
அப்போது அவர் தாமஸைப் பார்த்து, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. சந்தேகப்படாமல் நம்பிக்கைகொள்” என்றார். உடனே தாமஸ் இயேசுவைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி அவரை பணிந்து வணங்கினார். இயேசு அவரிடம், “நீ என் னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப் புக்கு உறுதியான சான்றாக அமைந்தது.
அப்போது தாமஸ் பெற்ற நம்பிக்கையே, பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை அவருக்கு வழங்கியது. கி.பி.52ல் கேரளாவுக்கு வந்திறங்கி ஏராளமான மக்களை மந்திருப்பிய தாமஸ், ஏழு இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இயேசுவைப் பற்றி போதித்த தாமஸ், இறுதியாக சென்னைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நற்செய்தி அறிவித்த தாமஸ், இங்குள்ள பலரையும் இயேசுவை கடவுளாக ஏற்கச் செய்ததாக அறிகிறோம்.
கி.பி.72ல் செயின்ட் தாமஸ் மவுன்டில் செபம் செய்து கொண்டிருந்த அவரை, கிறிஸ்தவத்தின் எதிரிகள் சிலர் ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். தாமஸின் உடல், சாந்தோம் பேராலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது கல்லறையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வருகின்றனர். இயேசுவின் சீடர்களை அவருக்காக உயிரைக் கொடுக்கும் அள வுக்கு தூண்டியது அவரது உயிர்த் தெழுதலே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-டே.ஆக்னல் ஜோஸ்.