என் மலர்
கிறித்தவம்
அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் வருகிற 30-ந் தேதி நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் ஆராதனையும், மே 1-ந் தேதி அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.
அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் மாலை ஆராதனையும், மே 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.

இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
“கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.
ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)
கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)
நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.
இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை திருப்பலிகள் நடைபெறும்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வழிபாட்டு தலங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு ஏற்ப கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாட்டு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபற்றி ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஞாயிறு திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக சனிக்கிழமை மாலை 5 மணி மற்றும் மாலை 6.15 மணிக்கு திருப்பலிகள் நடைபெறும். இந்த 2 வேளைகளில் ஏதேனும் ஒரு நேரத்தில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பங்குத்தந்தை ஜான் சேவியர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
சிலுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த இயேசு, பூவுலக வாழ்க்கையின்போது தன்னுடைய இரண்டாம் வருகை குறித்து, தெளிவாக கூறிச் சென்றிருக்கிறார். மத்தேயு புத்தகம் 25-வது அதிகாரம், 31 முதல் 46 வரையிலான இறை வசனங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை உறுதிசெய்யும். அதேநேரம், அவரை வரவேற்க நம்மை எவ்வாறு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றன. அந்த வசனங்களைக் காண்போம்.
இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது கூறியது, “வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வருவார். அப்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறிஆடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல், அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உங்களது உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உமக்கு உணவளித்தோம், உமது தாகத்தைத் தணித்தோம், எப்பொழுது உம்மை ஏற்றுக்கொண்டோம், ஆடை அணிவித்தோம், எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம், எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.
அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் முடிவில்லா வாழ்வு பெறவும் செல்வார்கள்.” (மத்தேயு 25: 31- 46). என்றார்.
இயேசு போதித்த உவமைகளில், நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஒரே உவமை இதுதான். சக மனித தேவைகளுக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்ற கேள்வியை இந்த உவமை நம்மை நோக்கி எழுப்புகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சாதாரண செயல்களைத்தான். இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார்.
நாம் செய்ய முடியாததை கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பிறருக்கு நம்மால் செய்யமுடிந்த சிறுசிறு உதவிகளை செய்யவே, அவர் அறிவுறுத்துகிறார். எனவே சக மனிதருக்குக் கைகொடுக்கவும், கைதூக்கிவிடவும் மறக்காதீர்கள். அப்போது ஆண்டவரை வரவேற்கும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறைவா உமக்கு நன்றி! பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறைவா உமக்கு என் நன்றி!
“ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு| உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றத்துடன் செயலாற்றாதே. “
சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
நம் வாழ்வின் பாதையுங் கூட.
மனிதனாக நான் வாழ
சிலுவைப் பாதை
என்னைச் சிந்திக்கச் செய்கிறது.
அந்தச் சிந்தனை ஒரு தியானமாகி
எனக்குள் ஒரு முறை
நானே உற்று நோக்கி
தெரிகின்ற குறைகளை, நிறைகளை
சீர்தூக்கிப் பார்த்து
ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்ற
சிலுவைப்பாதைச் சம்பவங்கள்
என்னைத் தூண்டுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
நடந்து முடிந்துவிட்ட
வெறும் சம்பவமல்ல இது.
நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
நிகழ்வுகள் இவை.
துன்பப்பட்டவன் வாழ்வு இது.
துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.
எனவே,
சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்
சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்
புறக் கண்களை மட்டுமல்ல
அகக் கண்களையும் கூட திறந்து நடப்போம்.
முதலாம் நிலை
இயேசு சாவுக்குத் தீர்வையிடப்படுகிறார்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம். அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“தீயோனின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறுபெற்றவன்”
“நீதித் தீர்ப்பு வரும்போது தீயோர் நிலை குலைந்து போவர்; நல்லவர் சபையில் பாவிகள் நிலைத்திரார்.”
(சங். 1 : 1 மற்றும் 4)
வஞ்சகம் அறிவுக்குத் திரைபோட, வெஞ்சினம் கண்களை மறைக்க சதிகாரர் ஆடுகின்ற ஆட்டம்.
உதிக்கும் சூரியனில் கரிக்கும், கறைக்கும் இடமிருப்பதாக நயவஞ்சகரின் கொக்கரிப்பு.
சேற்றின் நடுவே இருந்தாலும் தாமரையில் ஏது சேறு? பாவிகள் நடுவே வாழ்ந்தாலும் இயேசுவில் பாவக்கறை இருக்க முடியுமா?
பரபாசுக்கும், பரமனுக்கும் வித்தியாசம் புரியாத அறிவிலிகள் நடுவே பதவிக்காக நீதியைக் கைகழுவி விடும் பிலாத்துக்கள்.
வாழவைக்க வந்த தெய்வம் வாழாவெட்டியாகப் போனதிங்கே.
தன் கண்ணில் குத்தி நிற்கும் நாட்டுக் கட்டையைக் கண்டு கொள்ளாமல், கண்டு கொள்ள மனமில்லாமல், அயலவன் கண்ணில் தூசைக் காட்டும் அவல ஜீவன்கள் நடுவே ஒரு உத்தமர் இங்கே மௌனியாக!
நீதி ஸ்தலத்திலே சத்தியம் வாயடைத்துப் போயிற்று உண்மை ஊமையாயிற்று!! மனதில் மட்டும் நீதி எப்படி வரும்?
சிந்திப்போம்:
பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறைவா உமக்கு நன்றி!
பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறைவா உமக்கு என் நன்றி!
தேவையான இடத்தில் வாய் திறந்து நீதிக்காக்குரல் கொடுக்கத் துணிவை எனக்குத் தந்தமைக்காகவும் இறைவா எனது நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி-
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான நாள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி அறிவிக்கப்படுகிறது. ரோம் நகரில் கர்தினால்களுடன் நடைபெறும் கூட்டத்தில் போப் ஆண்டவர் முடிவு செய்கிறார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வாசுதேவன் நம்பூதிரி-தேவகியம்மா தம்பதிக்கு மகனாக தேவசகாயம் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இணைந்த பின்பு தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அப்போதைய ஆட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவருக்கு 22-12-2003- அன்று இறையூழியர் பட்டமும், 8-5-2012-ல் அருளாளர் பட்டமும் வழங்கப்பட்டது. இதையடுத்து தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையெழுத்திட்டார். இதையடுத்து புனிதராக அறிவிக்கும் நாள் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் 3-ந் தேதி ரோம் நகரில் நடக்கிறது.
இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியிருப்பதாவது:-
அருளாளர் தேவசகாயம் புனிதர் பட்டத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் பக்தர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக திருத்தந்தை (போப் ஆண்டவர்) பிரான்சிஸ் நமக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ரோம் நகரின் வத்திக்கான் மாளிகையில் கர்தினால்கள் வழக்கமாகக் கூடும் அறைக்கு கர்தினால்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைத்துள்ளார்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதாவது நம் அருளாளர் தேவசகாயம் மற்றும் இவரை போன்ற 7 அருளாளர்களை அகில உலகம் போற்றும் மாபெரும் புனிதர்களாக பிரகடனப்படுத்துவதாகும்.
அதன்படி வருகிற 3-ந்தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டத்தில் அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றிய அனைத்து முடிவுகளையும் ஆய்வு செய்து அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்று நோயால் உலகம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதால் வழக்கம்போல் ரோமை நகர பேதுரு பேராலயத்தின் முன்வளாகத்தில் பெரும் விழாவாக நடைபெறும் புனிதர் பட்ட நிகழ்வு இந்தாண்டு எளிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 3-ந் தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டம் நாம் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நம் மறைசாட்சியை அகில உலகமும் போற்றிக் கொண்டாடும் மாபெரும் புனிதராக அறிவிக்கட்டும். இந்த மகிழ்ச்சியான செய்தியின் எதிரொலி உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தட்டும்.
இவ்வாறு ஆயர் நசரேன் சூசை தெரிவித்துள்ளார்.

புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெற்று வந்தது
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் தலைமையில் பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடந்தது.
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர் ராஜ் மறையுரை ஆற்றினார். முன்னாள் பங்குதந்தை சந்திரசேகர் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர், கொடி இறக்கம் ஆகியவை நடந்தது. இறுதியில் பங்குதந்தை ஆன்டனி கோமஸ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் திருவிழாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
நேற்று பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி என்ற மணி, கிராம கமிட்டி தலைவர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலையில் தேர்பவனி நடந்தது. இதுகுறித்து அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் கூறும்போது. புனித ஜெர்மேனம்மாள் தேவாலயம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அரசு விதித்த கட்டுப்பாடுடன் வெளிமாவட்ட, வெளியூரிலிருந்து பக்தர்கள் வராமல் உள்ளூர் பக்தர்களை வைத்து எளிய முறையில் திருவிழா நடக்கிறது. அடுத்த ஆண்டு கொரோனா நோய் இல்லாமல் திருவிழா நடைபெறும் என்று கூறினார். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் முளகுமூடு தூய மரியன்னை ஆலய பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், திருத்தந்தை பிரான்சிசால் தமிழகத்தின் ஏழாவது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு பெருவிழா 20-ந்தேதி மாலை 4 மணிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் மேற்படி பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.

சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.
நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– சாம்சன் பால்

சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும்.
அன்பான சகோதர சகோதரிகளுக்கு நமக்காய் மரித்து உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும். இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்[மத்தேயு:16:24].
சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக இருந்தாலும் மறுபுறம் கிறிஸ்துவின் அன்பின், மன்னிப்பின், கிருபையின், மகிமையின் சின்னமாய் நம்மை மகிழ்விக்கிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்தில் அனுப்பி நம் எல்லாரையும் இவவசமாய் மீட்டு இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் கொடுத்து சிலுவையில் தொங்கினார். இந்த சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மேன்மையான அழைப்பை கொடுக்கிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்கிற அழைப்பின் குரலே அது.
ஆம் அன்பானவர்களே நமக்காக சிலுவை சுமந்த இயேசு இந்த மேலான அழைப்பை எல்லா மனிதருக்கும் இலவசமாய் விடுக்கிறார். இரட்சிப்போடு இணைந்தது தான் சிலுவையின் அழைப்பும். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இந்த அழைப்புக்கு பாத்திரவான்கள். அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து நாமும் அவரை பின்பற்ற வேதம் நமக்கு சொல்லும் ஆலோசனைகளை சிந்திப்போம்.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா வருகிற 20-ந் தேதி நடப்பதாக பேராயர் அந்தோணி பப்புசாமி கூறினார்.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை கடந்த 2020 -ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி ரோமாபுரி வத்திக்கானில் உள்ள திருவழிபாட்டு பேராயம் பசிக்காவாக அறிவித்தது. இதன் மூலம் தமிழகத்தின் சாந்தோம் புனித தோமையார் பேராலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டி புனித லூர்து மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், திருச்சி உலக ரட்சகர் ஆலயம், கோவை கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயம் ஆகியவற்றின் வரிசையில் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகவும் முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் திகழ்கிறது.
இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா தொடர்பாக முளகுமூடு ஆலய வளாகத்தில் மறைமாவட்ட பொறுப்பு பேராயர் அந்தோணி பாப்புசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 160 ஆண்டுகள் வரலாறு படைத்தது. இந்த ஆலயம் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காகவும் அமைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
இந்த மகிழ்ச்சியை அதிகாரபூர்வமாக அறிவித்து கொண்டாடும் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி மாலை 4 மணிக்கு முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா வளாகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்று இறையாசீர் பெற அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம், மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன், நாஞ்சில் பால் நிலைய இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின், முளகுமூடு பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாச்சதாஸ். பங்குத்தந்தை தாமஸ், பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோண்யன் மணி, பொருளாளர் விஜி கலா, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, ஒருங்கிணைந்த துணைக்குழு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.