search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருத்தோலை ஞாயிறு
    X
    குருத்தோலை ஞாயிறு

    நாகர்கோவில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 28-ந்தேதி நடக்கிறது

    கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி, அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள்.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா அடுத்த மாதம் 4-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    அப்போது அங்கு நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா” என்று பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் வருகிற 28-ந்தேதி குருத்தோலை திருநாளாக கொண்டாடுகிறார்கள். இது ஆண்டு தோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாள் “குருத்தோலை ஞாயிறு” என்று அழைக்கப்படுகிறது.

    அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி, அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதை தொடர்ந்து ஆலயங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை முந்தைய நாள் நேர்ச்சையாக ஆலயங்களுக்கு மக்கள் வழங்குவார்கள்.

    குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 28-ந்தேதி குருத்தோலை பவனி நடக்கிறது அதை தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

    Next Story
    ×