என் மலர்
கிறித்தவம்
நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடந்தது. தொடர்ந்து வந்த விழா நாட்களில் மாலை ஜெபம், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெற்றன.
திருவிழாவின் இறுதி நாளில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தன. மதியம் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்பவனியை தொடர்ந்து அன்பின் விருந்தும், மாலையில் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அருட்பணியாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில், துணை பங்குதந்தை அஜீன் ஜோஸ், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நூற்றாண்டுவிழா மற்றும் பங்கு குடும்பவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன.
திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் சேவியர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரை நிகழ்த்தினார். மாலையில் ஜெபமாலையும், ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்தினார்.
10-ம் திருவிழாவான நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்புத்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். காலை 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை பிரபுதாஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் செய்திருந்தனர்.

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பொன்விழா மற்றும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்தாமரைகுளத்தில் தூய பனிமய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பொன்விழா மற்றும் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, புதிய பொன்விழா நுழைவு வாயில் மற்றும் மக்கள் வங்கி அர்ச்சித்தல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம், ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமை தாங்கினார். மணவிளை பங்குதந்தை ஹிலோசியஸ் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலியின் இறுதியில் ஆயர் நசரேன் பொன்விழா ஜூபிலி மலரை வெளியிட்டார். இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, கூட்டுதிருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 9-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு தூய பனிமய அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் அருட்பணியாளர் செல்லையன் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரை நிகழ்த்துகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தனின் பட்டிமன்றம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குபேரவை தலைவர் ராஜன், துணைத்தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் ரெஷ்மி, பொருளாளர் பிரிட்டோ ஜெயசிங், துணைச்செயலாளர் சகாய நிஷா மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

தேவ ஆலோசனைகளை உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கென்று நீங்கள் எடுத்துக் கொண்டு உரிமை பாராட்டி ஆசீர்வாதத்தின் வாசல்களுக்குள் பிரவேசியுங்கள்.
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய வாழ்நாட்களில் ஆசீர்வாதமான நாட்களைக் காணும்படி கிருபை செய்த கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். வாக்குத்தத்தம் பண்ணினவர் உங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து தமது வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதமான திறந்த வாசலை உங்களுக்கு முன்பாக வைத்து அதனுள் நீங்கள் பிரவேசிக்கும்படி உங்களுக்கு கிருபை பாராட்டுவார்.
வாக்குத்தத்தத்தை கிருபையாக கொடுத்த கர்த்தர் அதை சுதந்தரிப்பதற்கான வழியையும் நமக்குக் காட்டுகிற தேவனல்லவா. ஆகவே தொடர்ந்து செய்தியை மிகுந்த ஜெபத்தோடும் விசுவாசத்தோடும் உரிமைபாராட்டி வாசியுங்கள். இதுவரை கண்டிராத அற்புதமான வாசல்கள் உங்களுக்காகத் திறக்கப்படுவதைக் காண்பீர்கள்.
வானத்தின் வாசல்
‘அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்’. (ஆதி.28:17)
ஒவ்வொரு ஆண்டையும் நாம் கர்த்தருக்குள் தொடங்கும்போது புதிய ஆசீர்வாதங்கள், புதிய கிருபை, புதிய காரியங்கள் என புதியவைகளைக் குறித்து நாம் அதிகமாய் எதிர்பார்ப்போம். ஆனால் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல நம் அருமை ஆண்டவருடைய வருகை நம்மை நெருங்குகின்றதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
வாக்குத்தத்தங்கள் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கு மட்டுமல்ல உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவர் வாக்குத்தத்தம் அருளுகிறார்.
வருகையின் கடைசி நாட்களில் நாம் வந்துவிட்டதனால் என்றுமில்லாத அளவுக்கு ஆண்டவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தவும், அதை அதிகரிக்கச் செய்யவும் சித்தம் கொண்டுள்ளார். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் ஆன்மிக ஆசீர்வாதத்தின் மேல் ஆவல் கொள்ளும்போது உன்னதமான அனுபவங்களை அப்படிப்பட்டோருக்கு அளவில்லாமல் கொடுக்கப் போகிறார்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாகிய யாக்கோபு தன்னுடைய வனாந்தர மார்க்கமான பிரயாணத்தில் இரவு வேளையில் தூங்கும்போது, சொப்பனத்தின் மூலம் பரலோக ஆசீர்வாதங்களை அவருக்கு வெளிப்படுத்தினார். அவர் சொப்பனத்தில் தேவதூதர்களைக் கண்டார். வானத்தையும் (பரலோகம்) பூமியையும் இணைக்கிற ஏணியைக் கண்டார். அந்த ஏணிக்கு மேலாக தேவனாகிய கர்த்தர் நிற்கிறதையும் கண்டார். ஆகவே அந்த ஸ்தலத்திற்கு இது தேவனுடைய வீடே அல்லாமல் வேறல்ல. இது வானத்தின் வாசல் என்ற வெளிப்பாட்டைப் பெற்றார்.
உங்கள் வனாந்தரப் பாதையில் உங்களுக்குக் கொடுக்கப்படும் சொப்பனங்களை, தரிசனங் களைக் குறித்து அசதியாயிராதீர்கள். கடைசி நாட்களில் சொப்பனங்கள், தரிசனங்கள் மூலம் கர்த்தர் உங்களோடு இடைப்படுவார். அப்படிப்பட்ட உன்னத அனுபவங்கள் நிறைந்த வாசல் உங்களுக்குத் திறக்கப்படும்.
இதனால் நீங்கள் தேவனை, அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும் மட்டுமல்ல உங்கள் விசுவாசம் பெருகவும் ஏதுவாயிருக்கும்.
ஜெபத்தால் தானாய் திறக்கும் வாசல்
‘அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப் போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது. அதன் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்து போனார்கள். உடனே தூதன் அவனை விட்டுப் போய்விட்டான்’ (அப்.12:10).
உங்களுக்கு எதிராய் இருக்கிற அடைக்கப்பட்ட வாசல்களை உங்களுக்காக கர்த்தர் திறந்து உங்களை சூழ்ந்திருக்கிற கட்டுகளிலும், காவல்களிலிருந்து அற்புதமாக தேவன் உங்களை விடுதலையாக்குவார். திறந்த வாசல் வழியாக நீங்கள் பிரவேசிப்பீர்கள். உங்களை ஒருவனும் தடை செய்யமுடியாது. ஆகவே கர்த்தருக்குள் சந்தோஷமாகவும் தைரியமாகவும் ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.
அதே வேளையில், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பேதுரு சங்கிலிகளினால் கட்டப்பட்டு பூட்டப்பட்ட சிறைக்குள் நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார்’ என அப்.12:5,6 சொல்லுகிறது. இந்தச் சூழ் நிலையில் ‘சங்கிலிகள் தானாய் கழன்றுவிட, அவ்வறைக்குள் தூதன் பிரவேசிக்க, இரும்புக் கதவுகள் தானாய் திறக்க, அற்புதமாய் அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்’ என்று அப்.12-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம் அல்லவா?
இவையெல்லாம் சம்பவித்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அப்.12:5 கூறுகிறது. ‘அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள்’.
ஊக்கமான ஜெபம், அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்கும்படி செய்யும். மேலும் கூடி ஜெபிக்கும் ஜெபம் இப்படிப்பட்ட அற்புதங்களைக் கொண்டு வரும். ஆகவே உங்கள் ஜெபம் ஊக்கமான ஜெபமாக மாறட்டும். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் ஜெப நேரத்தைத் தவற விடாதீர்கள்.
முடிந்தால் நண்பர்களோடு இணைந்து ஜெபிக்க அர்ப்பணியுங்கள். அப்போது உங்களுக்கு விரோதமாய் அடைக்கப்பட்ட சகல வாசல்களும் தானாய் திறக்கப்படும், ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேற்கண்ட தேவ ஆலோசனைகளை உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கென்று நீங்கள் எடுத்துக் கொண்டு உரிமை பாராட்டி ஆசீர்வாதத்தின் வாசல்களுக்குள் பிரவேசியுங்கள். அருமை இரட்சகரான இயேசு உங்களோடிருப்பார்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

தூத்துக்குடியில், பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடந்து வருகிறது. தற்போது 435-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது.
தொடர்ந்து மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர். கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.

திருச்சி பெரிய மிளகுபாறையில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தல பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது.
திருச்சி பெரிய மிளகுபாறையில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.

அஞ்சுகிராமத்தை அடுத்த ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலய தேர்ப்பவனி இன்று நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
அஞ்சுகிராமத்தை அடுத்த ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. அணைக்கரை, கூட்டப்புளி, அழகப்பபுரம் ஊர்களின் கிளை கிறிஸ்தவ பங்காக செயல்பட்ட ரஜகிருஷ்ணாபுரம் 1963 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தனிபங்காக செயல்பட தொடங்கியது.
இந்த ஆலயத்தில் தேவ அன்னைக்கு விவிலியத்தை விளக்கும் சொரூபம் மிக பிரசித்தி பெற்றது. ஆலய பீடத்தின் இடதுபுறம் புனித சூசையப்பர் சொரூபம், வலதுபுறம் புனித அன்னம்மாள் சொரூபம் உள்ளது. பீடத்தின் முன் புனித அந்தோணியார் சொரூபம் அழகாக காட்சி அளிக்கிறது.
இங்கு தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5.30 மணி மற்றும் காலை 7 மணிக்கு என 2 திருப்பலிகளும் நடைபெற்று வருகிறது.
வியாழன்தோறும் புனித அன்னம்மாள் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் ஆலயத்தின் பின்புறம் உள்ள மாதா கோவிலில் ஜெபமாலையுடன் மறையுரை, திருப்பலி நடக்கிறது. புனித அன்னம்மாள் ஆலயத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து அருள் பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு இளைஞர்கள் சார்பில் நாடகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்குபேரவை துணைத்தலைவர் எட்வர்ட் டொமினிக்ராஜன், செயலாளர் நெல்சன், துணை செயலாளர் லீலா, பொருளாளர் லலிதா, பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்துள்ளனர்.

இயேசுவின் போதனைகள், இவ்வுலகம் உள்ளவரை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இறுதியில் நற்கதி அடைவதற்கும் உள்ள வழியாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மத்தேயு என்ற நற்செய்தியாளர் அக்காலத்தில் அறிவித்த செய்தியை, இவ்வாரம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்போம்.
அக்காலத்தில், இவ்வுலகில் மனிதராகப் பிறந்த இயேசு பிரான், தம்முடைய சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார்:
“சீடர்கள், குருவை விடப் பெரியவர்கள் கிடையாது. பணி செய்பவர்களும், தம்முடைய தலைவரை விடப் பெரியவர்கள் கிடையாது. சீடர்கள், தம் குருவைப் போல ஆகட்டும். பணியாளர்கள், தம்முடைய தலைவரைப் போல ஆகட்டும். அதுவே போதுமானது என்பதை நாம் அறிதல் வேண்டும்”.
“வெளியே தெரியாதபடி, மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிந்து கொள்ள இயலாதவாறு, மறைவாக இருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் கூறுவதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். செவியோடு செவியாய்க் கேட்பதை, வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்வதற்கு இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்குப் பயப்பட வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிப்பதற்கு வல்லவருக்கே பயப்படுங்கள்”.
“காசுக்கு, இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பது இல்லையா? எனினும், அவற்றுள் ஒன்றுகூட, உங்கள் தந்தையின் விருப்பமின்றி, தரையில் விழுந்து விடாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது. சிட்டுக் குருவிகள் பலவற்றையும் விட, நீங்கள் மேலானவர்களாக இருக்கிறீர்கள். எனவே பயப்படாதிருங்கள்”.
“மக்களின் முன்பாக, என்னை, ஏற்றுக்கொள்பவரை, விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்பாக, நானும் ஏற்றுக்கொள்வேன். மக்களின் முன்பு என்னை மறுப்பவர் எவரையும், விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்பாக, நானும் மறுதலித்து விடுவேன்”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நற்செய்தியை உற்றுக்கவனியுங்கள். இயல்பாகவும், இயற்கையாகவும் இயேசு பிரான் கருத்தொன்றைத் தொடங்கிப் பேசுவதைக் கவனித்துப் பாருங்கள். ‘சீடர்கள், குருவை விட பெரியவர் கிடையாது’ என்று தொடங்குகிறார்.
உண்மைதான், சீடர் என்பவர் யார்?
‘குருவிடம் இருந்து பயிற்சி பெறுபவர்கள், குருவின் வார்த்தைக்குச் செவி கொடுப்பவர்கள்’.
ஆகவே இத்தகைய சீடர்கள், குருவை விடப் பெரியவர்களாக எப்படி இருக்க முடியும்?
அதனால்தான் இயேசு பிரான், இப்படிப்பட்ட வார்த்தையால் தன் போதனையைத் தொடங்குகிறார். இக்காலத்தில் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நம்மால் உணர முடியும்.
அடுத்து அவரிடம் இருந்து வரும் வார்த்தை களைக் கவனியுங்கள். மேலும் முதல் வார்த்தைக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. ‘பணியாளர்களும், தம்முடைய தலைவர்களை விடப் பெரியவர்கள் கிடையாது’ என்று கூறு கிறார்.
சீடர்களுக்குப் போதிக்கும்போது இப்படியாக ஒரு வார்த்தையைக் கூறுகிறார். ‘ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி விட்டு, அருமையான ஒரு கருத்தை வெளிப்படுத்து கிறார்.
‘வெளியே தெரியாதபடி மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிந்து கொள்ள இயலாதவாறு, மறைவாக இருப்பதும் ஒன்றும் இல்லை’.
இவ்வாசகத்தை மேலும் தங்கள் சிந்தனையால் மெருகேற்றிப் பாருங்கள். எல்லாம், அறிந்து கொள்ளக்கூடியதுதான். எதையும் மறைத்து விட முடியாது என்ற கருத்து புலப்படுகிறது.
எதையும் மறைத்து விட முடியாது என்பதால், கேட்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள்.
அதற்கு அவர் இப்படிக் கூறுகிறார்: ‘காதோடு, காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, வெளிப்படையாய் அறிவியுங்கள்’ என்கிறார்.
ஆன்மா வேறு; உடல் வேறு என்பதை நாம் அறிவோம். அக்காலத்தில் இப்படிப்பட்டவைகளை எண்ணிப் பார்ப்பவர்கள் கிடையாது. வெறும் உடலை மட்டும் அழித்து விட்டால், வெற்றி என்று எண்ணும் காலம் அந்தக் காலம். இக்காலத்திலும் அப்படிப்பட்ட கருத்துதான் நிலவுகிறது.
கண்ணுக்குப் புலப்படும் உடலை மட்டும் கொல்வதால், உடல் இயக்கம் இருக்காது. ஆன்மா அப்படிப்பட்டதல்ல. உடலை விட்டு வெளியே சென்று இயங்குகிறது. அந்த ஆன்மாவைப் புனிதமாக்கி வைப்பதுதான், ஒருவனுக்கு வெற்றி வாழ்க்கையாகிறது.
‘இத்தன்மை வாய்ந்த ஆன்மாவையும், உடலையும், நரகத்தில் அழிப்பதற்குத் தயாராக இருக்கும், வல்லமையுடையவர்களுக்குப் பயப்படுங்கள்’ என்கிறார்.
‘காசுக்கு இரண்டு சிட்டுக்குருவி விற்கிறார்கள். அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமில்லாமல், தரையில் விழுந்து விடாது’ என்கிறார்.
ஆம்! சிட்டுக்குருவி மிகச் சிறியது. அவ்வளவு சிறியதான அக்குருவிகூட பரலோகத் தந்தையின் விருப்பமில்லாமல், தரையில் விழுந்து விடாது.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, ‘உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது. சிட்டுக்குருவிகள் எல்லாவற்றையும் விட, நீங்கள் மேலானவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே பயப்படாமல் இருங்கள்’ என்று துணிச்சலையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறார்.
எல்லாவற்றையும் கூறி விட்டு, இறுதியாக அவர் கூறும் வார்த்தைதான், ஆணித்தரமானது.
‘மக்களின் முன்பாக என்னை ஏற்றுக் கொண்டால், விண்ணகத்தில் இருக்கும் என் தந்தையின் முன், நானும் ஏற்றுக்கொள்வேன். மக்களின் முன் என்னை மறுத்தால், யாராக இருந்தாலும், என் தந்தையின் முன்பாக நானும் மறுதலித்து விடுவேன்’ என்று கூறுகிறார்.
இயேசு பிரான் இம்மண்ணுலகில் அவதரித்த நோக்கமே, மக்களை நல்வழிப்படுத்தி, தந்தையிடம் சேர்ப்பதற்கே என்பதை நாம் அறிவோம். அதனால்தான் அவர் இவ்விதம் கூறுகிறார்.
இந்த நற்செய்தியைச் செவிமடுக்கும் நாம், இயேசு பிரானின் கருத்துகளைக் கேட்போம். நல்வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். அதோடு மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.
‘உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது’ என்று இவ்விடத்தில் குறிப்பிடும் இயேசு பிரான், வேறோர் இடத்தில், ‘நீங்கள் நினைத்தால்கூட ஒரு முழம் கூட்டவோ குறைக்கவோ உங்களால் முடியாது’ என்ற கருத்தையும் எடுத்துரைக்கிறார்.
இம்மண்ணுலகில் மிகக்குறைந்த காலமே இயேசு பிரான் வாழ்ந்தார் என்ற கருத்து வரலாற்று ரீதியாக இருக்கிறது என்றாலும், அவருடைய போதனைகள், இவ்வுலகம் உள்ளவரை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இறுதியில் நற்கதி அடைவதற்கும் உள்ள வழியாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.
உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலையில் மலையடி திருப்பலியை மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு ஜெ.அந்தோணி ஜோசப் நடத்தி மறையுரை வழங்கினார்.
பின்னர் திருவிழா சிறப்பு திருப்பலியினை லால்குடி மறைவட்ட முதன்மை குரு எம்.ஏ.தனராஜ் நடத்தி மறையுரை வழங்கினார். இதையடுத்து சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் திருப்பலி நடத்தி மறையுரை வழங்கினார். மாலையில் பெரிய தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை நடைபெற்றது.
கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க முக்கிய வீதிகளில் கொடி எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவளம் பங்கு தந்தை பிரபு தாஸ், வாவத்துறை பங்குத்தந்தை ஜான் ஜோர் கென்சன் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் 9-ம் நாளன்று கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். 10-ம் நாள் அதிகாலை சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

திருச்சி பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலயம் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வரகனேரி தூய சவேரியார் ஆலயத்தில் திருக்கொடி புனிதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் உலக மீட்பர் பசிலிக்கா ஆலயத்திற்கு பவனியாக திருக்கொடி ‘கொண்டு வரப்பட்டது.
பின்னர் கொடியேற்றம் நடந்தது. இதில் திருத்தல பங்கு தந்தை அமல்ராஜ், உதவி பங்கு தந்தை மரியசூசை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. அதன் பின்னர் ‘ அன்னை மரியாள் மீட்பின் முதல் கனி’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.
வருகிற 30-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து தேர் பவனி, செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.

நமக்கு ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருக்கிற எல்லா காரியங்களையும் உடைத்து மாற்றுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரே, ஆமென்.
‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ (யாத்.14:14).
நானூற்று முப்பது வருடங்கள் அடிமைதனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து, பாலும் தேனும் பாய்கிற கானான் தேசத்திற்கு போக தேவன் உத்தரவு கொடுத்தார்.
அதன்படி ஜனங்கள் ஈரோத் பள்ளத்தாக்கில் வந்தபோது செங்கடல் அவர்களுக்கு தடையாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் இறைவனை நோக்கி கூப்பிட்டார்கள். தேவன் மோசையை நோக்கி ‘நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தை பிளந்துவிடு’ என்றார்.
சர்வ வல்லமையுள்ள ஆண்டவரின் வலக்கரத்தால் செங்கடல் இரண்டாக பிளந்தது. சமுத்திரத்தின் நடுப்பகுதி ஆழமான தண்ணீர் நடுக்கடலில் உறைந்து போயிற்று. இரண்டு பக்கமும் தண்ணீர் குவியலாக மதில்போல் நிமிர்ந்து நின்றது. இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். செங்கடலின் தடையை உடைத்து மாற்றினார்.
‘மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாக குவிந்தது’ (யோசு.3:16).
இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்கு போகிற வழியிலே யோர்தான் நதி தடையாக இருந்தது. யோசுவா ஜனங்களை பார்த்து ‘ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார். நீங்கள் கலங்காமல் இருப்பீர்களாக’.
யோர்தான் நதி அறுப்புக்காலத்தில் இருபுறமும் கரை புரண்டு ஓடும். நதி மிகவும் அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தான் நதியின் தண்ணீரிலே பட்ட மாத்திரத்தில் மேலேயிருந்து ஓடிவருகின்ற தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக மேல்நோக்கி நின்றது.
ஆசாரியர்களின் கால்கள் யோர்தான் நதியில் காலூன்றி நிற்கும்போது, சகல இஸ்ரவேல் ஜனங்களும் தண்ணீர் இல்லாத உலர்ந்த தரைவழியாய் நடந்து போனார்கள். யோர்தான் நதியின் தடைகளை ஆண்டவர் நீக்கினார்.
‘திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்’ (யோசு.12:24).
பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு போக முப்பத்தொரு ராஜாக்கள் தடையாக இருந்தார்கள். யோசுவா என்ற தேவ மனிதன் தலைமையில் முப்பத்தொரு ராஜாக்களிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தம் செய்தார்கள்.
எல்லா ராஜாக்களையும் சர்வ வல்லமையுள்ள தேவன் முறியடித்து கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கச் செய்தார். ஒவ்வொரு யுத்த களத்திலும் யோசுவாவுக்கு தேவ ஆலோசனை கொடுத்து கர்த்தர் யுத்தம் செய்தார்.
தேவ ஆலோசனையின்படி இஸ்ரவேல் ஜனத்திற்கு கானான் தேசத்தை யோசுவா பங்கிட்டு கொடுத்தான். எல்லா தடைகளையும் நீக்கி பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து எல்லா இஸ்ரவேல் ஜனங்களையும் காப்பாற்றினார்.
அவர்களுடைய சத்துருக்கள் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொல்லியிருந்த நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த கானான் தேசம் முழுவதும் யுத்தமில்லாமல் இளைப்பாறப் பண்ணினார்.
‘தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’. (யோபு.42-2)
கிழக்கத்தி மனிதர்கள் எல்லாரிலும் யோபு செல்வ சீமானாக இருந்தான். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர் மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும், திரளான பணிவிடைக்காரரும், ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் இருந்தார்கள். பிசாசினால் சோதிக்கப்பட்டு, குடும்பத்தில் உள்ள எல்லா ஆசீர்வாதங் களையும், பத்து பிள்ளைகளையும் இழந்து தடைகள் வந்தபோதும் யோபு சொல்லியது:
‘அவர் பிடித்தாலும் அவர் அடைத்தாலும் அவர் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவரைத் தடை பண்ணு கிறவன் யார்’ (யோபு 11:10).
ஆண்டவர் ஒரு மனிதனை ஆசீர்வதித்து அவனுடைய எல்லா தடைகளையும் மாற்ற நினைத்தால் அவன் பாக்கியவான். யோபுக்கு எல்லா ஆசீர்வாதங்கள் இழந்து தடைகள் வந்தபோதும் தடைகளை நீக்கி அவனை ஆசீர்வதித்தார்.
ராஜாதி ராஜாவாகிய தேவன், எல்லா தடைகளையும் நீக்கி யோபுவின் முன் நிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்நிலைமையை இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார். அவனுக்கு மீண்டும் பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங் களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் உண்டானது. மீண்டும் ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். அவன் மீண்டும் செல்வ சீமானாக மாறினான். யோபுவின் பிள்ளைகள் அழகிலும் ஞானத்திலும் ஐசுவரியத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
நமக்கு ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருக்கிற எல்லா காரியங்களையும் உடைத்து மாற்றுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரே, ஆமென்.
சி.பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.