என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை நடைபெற்றது.
    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க முக்கிய வீதிகளில் கொடி எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவளம் பங்கு தந்தை பிரபு தாஸ், வாவத்துறை பங்குத்தந்தை ஜான் ஜோர் கென்சன் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் 9-ம் நாளன்று கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். 10-ம் நாள் அதிகாலை சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×