என் மலர்tooltip icon

    கிசுகிசு

    அடல்ட் காமெடி படமாக வந்த, மச்சமுள்ள படத்தில் படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தாராம்.
    அடல்ட் காமெடி படமாக வந்த, மச்சமுள்ள படத்தில் படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் நடிகைக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லையாம். தற்போது தனது பப்ளிசிட்டிக்காக இணைய தளத்தை நம்பி இருக்கிறாராம்.

    அடிக்கடி குறைந்த ஆடை அணிந்த படங்களை வெளியிட்டு வரும் நடிகை, தற்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறாராம். ரசிகர்கள் அவரிடம் இது என்ன பட வாய்ப்புக்கான தவமா? என்று கிண்டல் செய்திருக்கிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த நடிகை ஒருவருக்கு முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த படங்களில் கிடைக்காததால் தற்போது படவாய்ப்பின்றி தவிக்கிறாராம். #Gossip
    நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து பின்னர் குத்துச்சண்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாராம். முதல் படமே வெற்றி பெற்றதால், முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்த்தார்களாம். முதல் பட வெற்றியை தொடர்ந்து நடிகை ஒப்பந்தமான இரண்டு படங்களும் ஓரளவுக்கே வரவேற்பை பெற்றனவாம்.

    அதன் பிறகு நாயகிகக்கு பட வாய்ப்புகளே இல்லையாம். அவர் தன்னை விதம் விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினாராம். இருப்பினும் அவருக்கு புது பட வாய்ப்புகள் வரவில்லையாம். 

    இதனால் நொந்து போன நடிகை, தற்போது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லையாம். #Gossip

    மதராச இயக்குனர் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்த பின், திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறாராம்.
    மதராச இயக்குனர் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்த பின், திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறாராம். இவருக்கும் சமீபத்தில் ரவுடி பேபியாக வலம் வரும் நடிகைக்கும் காதல் இருந்ததாகவும், விரைவில் நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானதாம்.

    இதைக்கேட்டு நடிகையின் ரசிகர்கள் அதிர்ச்சியானார்களாம். ஆனால், இது வதந்தி என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்களாம். இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்களாம். 
    முன்னாள் காதல் ஜோடி நடிக்கும் இரண்டெழுத்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளதாம்.
    முன்னாள் காதல் ஜோடி நடிக்கும் இரண்டெழுத்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளதாம். அந்த முன்னாள் காதல் ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பதுதான் இதற்கு காரணமாம். சர்ச்சைக்குரிய தகவல்கள் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பதை அந்த நாயகி இப்போதுதான் புரிந்து கொண்டாராம்.

    அதைத்தொடர்ந்து அந்த நாயகி சர்ச்சைக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறாராம். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், “சர்ச்சைக்குரிய கதை இருக்கிறதா... அதை முதலில் சொல்லுங்கள்” என்கிறாராம்!
    தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம்.
    தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறாராம். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டாராம்.

    “இப்போது திருமணம் செய்து கொண்டால், ‘மார்க்கெட்’ போய்விடும்” என்று சொன்ன ஜோதிடர், நடிகைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலையும் சொன்னாராம். “உனக்கு அரசியல் வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. இன்னும் 5 வருடத்தில், பெரிய பதவி உன்னை தேடி வரும். இதை யாராலும் தடுக்க முடியாது” என்றாராம். 

    இதைக்கேட்ட நடிகைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம்.
    தொடர்ந்து துணிச்சல் கதாபாத்திரங்களே தன்னை தேடி வர அடுத்ததாக கவர்ச்சியாக நடிப்பதென்று நடிகை முடிவு செய்திருக்கிறாராம். #Gossip
    நாயகி அறிமுகமான காலத்தில் போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வந்த யோகி நடிகை, சமீபத்தில் உச்ச நட்சத்திரத்தின் மகளாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டதாம்.

    தொடர்ந்து நடிகை வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும், நடிகைக்கு தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களே தேடி வருகிறதாம். இது நடிகைக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். எனவே கவர்ச்சிக்கு மாறுவது என்று நடிகை முடிவு எடுத்து இருக்கிறாராம். #Gossip

    தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
    தெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும் கூறி வந்தார்களாம்.

    இதனால், வருத்தமடைந்த நடிகைக்கு உச்ச நட்சத்திரம் உடன் நடித்த படம், வம்பு நடிகர் படம், வாரிசு நடிகர் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியானதாம். இதைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அடுத்த படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.

    நடிகைக்கு வாய்ப்புகள் குவிவதை அறிந்த நடிகைகள், மேகமான நடிகை மீது பொறாமை பட்டு வருகிறார்களாம்.
    சங்க நடிகர் தற்போது ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம்.
    சங்க நடிகர் தற்போது ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம். நடிகை ஆட சம்மத்திப்பார் என்று நடிகர் எதிர்பார்த்த நிலையில், நடிகை மறுத்து விட்டாராம். இதனால், தெலுங்கு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.

    அந்த நடிகையும் ஆட மறுத்து விட்டாராம். ஒரு வழியாக தமிழ் மார்க்கெட் இல்லாமல் இந்தி பக்கம் சென்ற நடிகையிடம் பேசி ஆட வைத்திருக்கிறார்களாம். பல நடிகைகள் ஆட மறுத்ததால் நடிகர் கோபமடைந்து விட்டாராம்.
    டி.வி. நிகழ்ச்சி மூலம் புது வாழ்வு பெற்ற மூன்றெழுத்து நடிகை நடித்து, ஒரு புதிய படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறதாம்.
    டி.வி. நிகழ்ச்சி மூலம் புது வாழ்வு பெற்ற மூன்றெழுத்து நடிகை நடித்து, ஒரு புதிய படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறதாம். படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம். 

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த நடிகை தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். அடுத்த படத்துக்கு ரூ.2 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். இதுதான் நல்ல சமயம் என்று நடிகையும் சம்பளத்தை உயர்த்த தயாராக இருக்கிறார்களாம்.
    நடிப்பில் இருந்து தயாரிப்பாளராக சமீபத்தில் அறிமுகமான நடிகர் ஒருவர் தனது அடுத்த தயாரிப்பை தனது நண்பரை வைத்து யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் துவங்கியிருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சேட்டையான குழுவுடன் பயணம் செய்தாராம். சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமானாராம்.

    வெற்றிக்கு மறுபெயரை கொண்ட இரண்டெழுத்து நடிகரை வைத்து அவர் தயாரித்த படம் வரவேற்பை பெற்றதாம்.

    இந்த நிலையில், தயாரிப்பாளரான அந்த நடிகர் அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். அவர்களது கூட்டணியில் இருக்கும் ஆர்.கே.நகரைச் சேர்ந்த மூன்றெழுத்து நடிகரை வைத்த சத்தமே இல்லாமல் புதிய படத்தை துவங்கிவிட்டாராம். இந்த படத்தை பிரபல இயக்குநரிடம் பணிபுரிந்த ஒருவர் இயக்குகிறாராம். #Gossip
    ஹர பாடலுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் அந்த இசையமைப்பாளர். இவர் தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம்.
    ஹர பாடலுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் அந்த இசையமைப்பாளர். இவர் தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம். முன்பெல்லாம் ஒரு படத்தின் புரமோஷனுக்கு தன்னை அழைக்க மாட்டார்களா என்று ஒவ்வொரு சின்ன சின்ன மீடியாக்களை கேட்டு வந்தாராம்.

    ஆனால், இப்போது கொஞ்சம் வளர்ந்தவுடன் பெரிய டி.விக்கு மட்டும்தான் போவேன், அதுக்கு வரமாட்டேன், இதுக்கு வரமாட்டேன் என்று ஓவராக கெத்து காட்டுகிறாராம். 
    தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த நடிகை ஒருவருக்கு தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையிலும், வருத்தப்படாமல் பட வாய்ப்பை பெறுவது குறித்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம். #Gossip
    சங்கத்தை மையமாக வைத்து உருவான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நான்கெழுத்து நடிகைக்கு கைவசம் தற்போது படங்கள் இல்லையாம். பட உலகில் தனது மார்க்கெட்டை இழந்தாலும் அதற்காக நாயகி வருத்தப்படவில்லையாம்.

    புதிய பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்பது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம். அவர்களது ஆலோசனைப்படி அந்த தனது சம்பளத்தை பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கூட்டி, குறைக்க நாயகி முடிவு செய்திருக்கிறாராம். 

    பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தால், தனது லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என்றும், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேர கோடியில் சம்பளம் கேட்பதென்றும் அவர் முடிவெடுத்து இருக்கிறாராம். #Gossip

    ×