என் மலர்
கிசுகிசு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான இரண்டெழுத்து நாயகன் காதலி சொல்லை மந்திரமாக என்கிறாராம். #Gossip
இரண்டெழுத்து நாயகனும், நான்கெழுத்து நாயகியும் காதலை முறித்துக் கொண்டதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில், தற்போது அதில் உண்மை இல்லை என்றும், இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தான் அது என்றும் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியிருக்கிறாராம்.
இருவரும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், தனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதற்காக நாயகி இவ்வாறு கேட்டுக் கொண்டாராம். இருவரும் பேசி பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே நல்லது என்று நாயகி கூற, நாயகனான காதலன் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாராம். #Gossip
காதலர் தினத்தில் அந்த நடிகையும், இயக்குனரும் முத்தம் கொடுத்தது, பரபரப்பாக பேசப்பட்டதாம்.
காதலர் தினத்தில் அந்த நடிகையும், இயக்குனரும் முத்தம் கொடுத்தது, பரபரப்பாக பேசப்பட்டதாம். மேலும் அது சமூகவலைதளங்களில், காட்டுத்தீயாக பரவியதாம்.
அதைப்பார்த்த ஒரு ரசிகர், “மூன்றெழுத்து நடிகர் கொடுத்த முத்தம் இனித்ததா, இயக்குனரான தற்போதைய காதலர் கொடுத்தது இனித்ததா?” என்று நடிகையிடம் கிண்டலாக கேட்டாராம். அதை படித்த இயக்குனர், கோபமாக அவருக்கு பதில் அளித்து இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான அங்காடி நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவர் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், திருமணம் குறித்து நடிகை யோசித்து வருகிறாராம்.
நடிகைக்கும் வெற்றிக்கு மறுபெயரை தன் பெயராக கொண்ட கதாநாயகனுக்கும் இருந்ததாம். ஆனால் திடீரென்று நடிகை தன் காதலை முறித்துக் கொண்டாராம். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்து வந்த அவர், விரைவில் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறாராம்.
மணமகன் அவருடைய காதலரா, இல்லை வேறு நபரா? என்பதை அவர் ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறாராம். #Gossip
வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.
தற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம்.
வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம். முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பலரும் பேசி வரும் நிலையில், கடைசியாக நடித்த சாக்லெட் பாய் நடிகருடன் காதல் கிசுகிசுவில் இணைந்தாராம். இதையடுத்து அவருடன் விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானதாம்.
இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறதாம். பல இடங்களில் இந்த நடிகையா, வேண்டவே வேண்டாம். திருமணம் எப்போது செய்து கொள்வார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு பாதியில் திருமணம் செய்து கொண்டால் படம் என்ன ஆகும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம்.
மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம். இதில் ஒரு இயக்குனர் விடாபிடியாக இருந்து, நடிகையை தமிழுக்கு அழைத்து வந்தாராம். நடிகை நடித்த படம் ரசிகர்களை கவர, தொடர்ந்து ரவுடியான பாடலுக்கு நடனம் ஆட, அவரின் மார்க்கெட் திடீர் என உயர்ந்ததாம்.
பல இயக்குனர்கள் நடிகை அதிக சம்பளம் கேட்பாரோ என்று பேச, நடிகையோ ஸ்கிரிப்ட் கரெக்டா இருந்தா, எனக்கு முக்கியத்துவம் இருந்தா சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். பட வாய்ப்புக்காக நடிகையின் புது டெக்னிக் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் அறிமுக இயக்குநர் ஒருவரை புலம்ப வைத்துள்ளாராம். #Gossip
கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம்.
அவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் ரிலீசாக இருக்கிறதாம். அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
படத்தின் புரமோஷனுக்கு கூப்பிட்டால் சார் வரமாட்டாரா என்று தெரியவில்லை. ட்விட்டரில் பேசுகிறார், நேரில் வரமாட்டாரா என்று இயக்குநர் மேடையிலேயே ஆதங்கப்பட்டுள்ளாராம். #Gossip
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வந்த நடிகையிடம், சினிமாவை விட்டு விலகிய நிலையில், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க சில இயக்குநர்கள் அவரை அணுகிய போது மறுத்து விட்டாராம். #Gossip
தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, முன்னணி நாயகியாக வளராவிட்டாலும், பிரபலமான தில்லான நடிகை, வளர்ந்து வரும் போது, திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்த வெளியேறினாராம்.
அவரை கதாநாயகர்களுக்கு அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் அழைத்தார்களாம். மீண்டும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை உறுதியாக கூறிவிட்டாராம். #Gossip
இயக்குநராக அறிமுகமாகி முழுநேர நடிகராக மாறிவிட்ட நடிகர் ஒருவர் தான் அறிமுகம் செய்து வைத்த நாயகியை நடிக்க கேட்டதற்கு நாயகி மறுத்துவிட்டாராம். #Gossip
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை, நடிகருடனான திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாராம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.
தற்போது நாயகியின் கைவசம் ஒருசில படங்கள் உள்ளதாம். நாயகியை அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்க கேட்டதாகவும், நடிகை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நாயகி ஏற்கனவே படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் தான் நாயகி மறுத்துவிட்டாராம். இருந்தாலும் நாயகியை அறிமுகம் செய்து புகழை தேடித் தந்த இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டாமா என்று பேசுகிறார்களாம். #Gossip
தமிழ், தெலுங்கு என கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கும் நடிகை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு செல்கிறாராம். #Gossip
சுவருக்காக சண்டை நடந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பூர்வீகம் கேரளாவாம். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாய் தானாம். கைவசம் சொல்லும்படியான படங்களை நாயகி வைத்திருக்கிறாராம். தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
படப்பிடிப்பு இல்லையென்றால் நாயகி வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறாராம். அவருடைய வெளிநாட்டு பயணம் மர்மமாக இருப்பதாக ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறினாராம். “அந்த பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அந்த நடிகைக்கு வெளிநாட்டு நண்பர்கள் அதிகம். அவர்களை சந்திக்கவே நாயகி வெளிநாடு செல்கிறார் என்று சக நடிகர் ஒருவர் அதனை தெளிவுபடுத்தியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை கசிய விடுகிறாராம். #Gossip
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த புஸ்புஸ் நாயகிக்கு கடந்த வருடம் சொல்லும்படியாக வாய்ப்பு இல்லையாம். தற்போது கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறாராம்.
சமீபத்தில் தனது படத்தின் போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய அந்த நாயகி, தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மற்றொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறதாம். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, வெளியான புகைப்படங்களை தடுக்கும் பணிகளில் இறங்கினாராம். எனினும் அந்த படங்கள் சமூக வலைதளங்கில் சுற்றிக் கொண்டே இருக்கிறதாம்.
நாயகிக்கு வேண்டாதவர்கள் யாரோ பார்த்த வேலை தான் இது என்று ஒருசாரார் சொல்ல, வாய்ப்புக்காக நாயகியே தனது புகைப்படத்தை வெளியிட்டிருப்பார் என்று மற்றொரு சாரார் சொல்கிறார்களாம். எது தான் உண்மையோ தெரியவில்லையே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.
தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.
“இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாதே, பட உலகில் உனக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ‘நம்பர்-1’ தென்னிந்திய கதாநாயகி ஆவதற்கான யோகம் உன் ஜாதகத்தில் இருக்கிறது” என்று அவர் நம்பிக்கையூட்டினாராம். என்றாலும் அந்த நடிகையின் பெற்றோர்கள், மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்!






