என் மலர்tooltip icon

    கிசுகிசு

    இனிப்பு கடை பெயரை கொண்ட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம்.
    இனிப்பு கடை பெயரை கொண்ட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத நடிகை கைப்பற்றி விட்டாராம்.

    இதைக் கண்டுக்கொள்ளாத நடிகை, தற்போது பெரிய பட வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். இதனால், இனிப்பு கடை நடிகை அஞ்சாத நடிகை மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.
    தமிழில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம். #Gossip
    தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

    தமிழ், தெலுங்கு என நாயகி பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்களாம். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம். #Gossip
    தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

    தமிழ், தெலுங்கு என நாயகி பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்களாம். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம். #Gossip

    ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். #Actor #ComedyActor
    தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம்.

    ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம். இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். 
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.

    நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர்.

    அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள்” என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், “சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு” என்று நடிகையின் பின்னால் இருந்து சொன்னவரும் நடிகர்தானாம்.
    தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகரும், நடிகையும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். #Gossip
    ஒரு இயக்குநரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக வைத்திருக்கும் நாயகன் சத்தமில்லாமல் சினிமாவில் வலம் வருகிறாராம். அவரது நடிப்பில் வரும் படங்களும் சத்தமில்லாமல் வந்து செல்கிறதாம்.

    அவருக்கும் அவரது நீண்ட நாள் தோழியுமான பிரியமான நடிகையும் காதலித்து வந்தார்களாம். தொடர்ந்து படங்களிலும் இணைந்து நடித்தார்களாம். 

    இருவருக்குமே பட வாய்ப்புகள் குறைந்ததற்கு அவர்களின் காதலும் ஒரு காரணம் என்று கூறினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவலும் வெளியானதாம்.

    ஆனால் இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்களாம். ஆனால் வெளியே இருவரும் பிரிந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நடித்து சம்பாதித்தபின், தகுந்த நேரம் பார்த்து தங்களின் காதலையும், திருமண தகவலையும் அறிவிப்பார்களாம். #Gossip

    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம்.
    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும் ரத்தாகி விட்டதாம். அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தாராம்.

    அவரைப்போல் தற்போது நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறாராம். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த வீரமான நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம்.
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் என்னுடைய அருமை தெரியவில்லை என்று பேசியிருந்தாராம்.

    தமிழ் நாட்டில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நாயகியை தொடர்பு கொண்டு பேசினால், சம்பளம் இவ்வளவு தந்தால்தான் நடிப்பேன், அங்குதான் ஷூட்டிங் எடுக்கணும் என்று கட்டளை எல்லாம் போடுகிறாராம். 
    முன்னணி நடிகை ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நான்கெழுத்து வெள்ளை நடிகை தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தாராம். தற்போது தமிழ் படங்களுக்கே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

    புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் அவர் தயாராகி இருக்கிறாராம்.

    இந்த நிலையில், பெற்றோர் அவருக்கு திருமண பேச்சுவார்த்தை நடத்த, பட வாய்ப்புகள் வந்தால் சினிமா, இல்லையென்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம். #Gossip

    பொதுவாக நடிகைகள் படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சிக்கு மாறும் நிலையில், கவர்ச்சி இருந்தால் நடிக்க தயார் என்று கூறும் நாயகியை பார்த்திருக்கிறீர்களா என்று இயக்குநர் ஒருவர் ஆச்சரியப்பட்டுள்ளாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களை கவர்ந்த மூன்றெழுத்து நடிகை, பெண் இயக்குநர் படத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததாம். படத்தில் நாயகி படு கவர்ச்சியாக நடித்திருந்தாராம்.

    இந்த நாயகியா இப்படி என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும் அவரே கூறினாராம்.

    நாயகியை சந்தித்து கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் நாயகி படத்தில் கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா? என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம். இருக்கிறது என்றால், உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். இல்லையென்றால், சில கவர்ச்சியான காட்சிகளை படத்தில் சேர்த்துக் கொள்ள சொல்கிறாராம். இப்படி ஒரு நாயகியா என்று இயக்குநர் ஆச்சரியப்படுகிறாராம்.

    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

    சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். “உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார்” என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், “பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுடன் ஜோடி சேர மாட்டாரா?” என்று எதிர் வாதம் செய்கிறாராம்!

    “எல்லாம் எங்க தலையெழுத்து” என்று ஒரு புது பட அதிபர் தலையில் அடித்துக் கொண்டாராம்! 
    தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.
    தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்களாம். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறாராம்.

    அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டாராம்! 
    குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறதாம்.
    குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறதாம். சமீப காலமாக அவருடன் நடித்து வரும் ஒரு கதாநாயகனுடன் இணைத்து பேசப்படுகிறாராம். எந்த படத்தில் நடிக்க வேண்டும்? எந்த படத்தில் நடிக்க கூடாது என்று அந்த நடிகர்தான் வழிகாட்டியாக இருந்து உதவுகிறாராம்.

    இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருப்பதால், நடிகர் சொல்வதைத்தான் நடிகை கேட்கிறாராம்! (நண்பர் சொல்வதே வேதம்.)
    ×