என் மலர்
கிசுகிசு
காதலியை முதல்முறையாக விட்டு தனியாக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் இயக்குனர், காதலி நினைவால் அதிகமாக வாடி வருகிறாராம்.
முன்னணி நடிகையும், பிரபல இயக்குனரும் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்களாம். தற்போது இயக்குனர் நடிகையை விட்டு வெளிநாட்டில் நடக்கும் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.
காதலுக்கு பிறகு முதல்முறையாக நடிகையை விட்டு தனியாக சென்றிருக்கும் இயக்குனர், தான் தனியாக செல்கிறேன். வருத்தமாக இருக்கிறது. அவள் நினைவாகவே இருக்கிறது என்று தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறாராம்.
இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் உச்ச நடிகர் ஒருவருக்கும், அவரது படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். #Gossip
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் உயர்ந்த நடிகர், முதல்முறையாக தமிழில், குஷியான இயக்குநருடன் இணைந்து நடிக்கிறாராம். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், உச்ச நடிகர் படத்தில் இருந்த விலகியதாக சிலர் வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.
இதையடுத்து, உச்ச நடிகர் படத்தில் இருந்து விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை, அதனை விரைவில் சரி செய்து படப்பிடிப்பு விரைவில் தொடங்குவோம் என்றும் குஷியான இயக்குநர் நடிகர் கூறியுள்ளாராம். #Gossip
வாரிசு நடிகர் தற்போது பல வம்புகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம்.
வாரிசு நடிகர் தற்போது பல வம்புகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். இவர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில் கொடுத்து விட வேண்டுமாம். அந்த பணத்தில், முதல் காப்பி வரை எடுத்து கொடுத்து விடுவாராம். “இனிமேல் இதுதான் என் பாலிசி” என்கிறார், அந்த நடிகர்!
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல தயாரிப்பாளர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். சில தயாரிப்பாளர்களை இது, வருத்தம் அடைய செய்திருக்கிறதாம்.
படத்துக்கு படம் இப்படி சம்பளத்தை உயர்த்தினால், தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது? என்று பலரும் கூடிப்பேசி வருகிறார்களாம்!
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை, தனக்கு விபரீத ஆசை இருப்பதாக கூறியிருக்கிறாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ராசியான நடிகை, சிங்கமான நடிகர் தான் பிடிக்கும். அவரை திருமணம் ஆகவில்லை என்றால், அவரை திருமணம் செய்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை அடுத்ததாக அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கத்தான் இப்படி ஆசை இருப்பதாக கூறுவதாக பலரும் பேசி வருகிறார்களாம். மேலும் பல புகைப்படங்களை எடுத்து அவரை வைத்து படம் இயக்கும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் மூன்றெழுத்து நடிகர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பிரியாணி கொடுத்த நடிகர் என்று பிரபலமான மூன்றெழுத்து நடிகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாம். அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகையையே திருமணம் செய்து கொண்டாராம்.
அவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம். எனினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் இனி புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். நல்ல கதையம்சம், ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க சம்மதிக்கிறாராம். #Gossip
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைக்கு அவரது காதலர் புதியதாக தடை ஒன்றை போட்டு இருக்கிறாராம்.
நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம். விரைவில் நிச்சயதார்த்தம், திருமணம் என்று எல்லாம் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறதாம். இந்நிலையில் நடிகைக்கு காதலர் ஒரு தடை ஒன்றை விதித்திருக்கிறாராம்.
அதாவது எந்த நடிகர் கூட வேண்டுமானாலும் நடி, ஆனால், வம்பான நடிகருடன் மட்டும் நடிக்க கூடாது என்று தடை போட்டிருக்கிறாராம். இதை நடிகை ஏற்றுக் கொண்டு தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கண்டிப்பாக சொல்லிவிடுகிறாராம்.
சமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். #Gossip
சமீபத்தில் கிரிக்கெட் விளையாடிய நடிகை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். நடிகைக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். இந்நிலையில், நடிகை காதல் வலையில் விழுந்திருக்கிறாராம்.
பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்த ஜூனியர் நடிகர்தான் நடிகையின் காதலர் என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்களாம். விரைவில் யார் அந்த நபர் என்று அனைவருக்கு காட்ட இருக்கிறாராம் நடிகை.
நடிகர் நடிக்க ஒப்பந்தமான படத்தில், நடிகை நுழைந்ததால் அந்த படத்தில் இருந்து நடிகர் விலகி இருக்கிறாராம். #Gossip
வம்பு நடிகருக்கு சில காலமாக பல சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். அதன்பின் மணியான இயக்குனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம். இந்த நிலையில், மணியான இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம்.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம். பல பேர் நடிக்க ஒப்பந்தம் ஆகும் நிலையில், நம்பர் ஒன் நடிகையிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
இதற்கு நடிகை, வம்பு நடிகர் நடித்தால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இந்த விஷயம் நடிகருக்கு தெரிந்து அவரே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.
சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை, ரசிகர்களின் கமண்ட்டால் கடுப்பாகி விட்டாராம். #Gossip
தற்போது பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வரும் பால் நடிகை, அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவாராம். இதற்கு ரசிகர்கள் தரும் கமண்ட்களை ரசித்தும் வருவாராம்.
ஆனால், நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர்கள் வேறுமாதிரியான கமண்ட்களை போட ஆரம்பித்தார்களாம். இதைப்பார்த்த நடிகை, இப்படியெல்லாமா கமண்ட் பண்ணுவார்கள் என்று மிகவும் கடுப்பாகி விட்டாராம்.
பிரபல நடிகை பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படத்தை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார். #Gossip
தமிழில் குத்துச் சண்டை நடிகையாக களமிறங்கிவர், அந்த படத்தில் பலருடைய பாராட்டுக்களை பெற்றாராம். அதன்பிறகு ஒன்று இரண்டு தமிழில் வாய்ப்பு கிடைக்க, அதில் நடிகையின் பெயர் அதிகமாக எடுபட வில்லையாம். இதனால் பிற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.
நடிகை நினைத்த படி எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், கவர்ச்சியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறாராம்.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகரும், உச்ச நட்சத்திரமுமான நடிகர் ஒருவர் விரைவில் சினிமாவை விட்டு விலகி ஓய்வு கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம். #Gossip
இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டதாம். இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறாராம்.
இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம். தற்போது அவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்து வருகிறாராம்.
மேலும் தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். அந்த படத்திற்கு பிறகுதான் சினிமா படங்களை குறைத்துக கொண்டு, குடும்பத்திற்கு அதிக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறாராம். #Gossip






