என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.
    பாலியல் புகார் கூறி திரையுலகை பதற வைத்த நான்கெழுத்து நடிகைக்கு மிரட்டல் வந்ததையடுத்து சென்னையில் குடியேறினாராம்.
    தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அவரது புகாரில் சிக்கினார்களாம்.

    அவரது வாழ்க்கை படமாகவும் உருவாகி வருகிறதாம். அந்த படத்தை தடை செய்ய சதி நடப்பதாகவும் படக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளார்களாம். இந்த நிலையில் நடிகை தற்போது அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். சமீப காலமாக நடிகைகள் பலர் அரசியலில் குதித்து எம்.பி, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வருவதால், நடிகைக்கும் அரசியல் ஆசை வந்துள்ளதாம்.

    நான்கெழுத்து நடிகை ஒருவர் தனது ரூட்டை மாற்றி காமெடி பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள நான்கெழுத்து நடிகை பற்றி காதல் கிசுகிசு தான் அடிக்கடி வருமாம். இதனால் நாயகிக்கு படவாய்ப்புகள் குறைந்ததால், காதலை மறைத்து வந்தாராம்.

    நாயகி நடிப்பில் தற்போது சில படங்கள் தயாராகி இருக்கிறதாம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேய் படம் ஒன்றுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் வருத்தப்பட்ட நடிகை இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

    தனது ரூட்டை மாற்றி, அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை, தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறாராம்.
    இனிப்பு கடை நடிகை தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சி போட்டியில் இறங்கியிருக்கிறாராம். தனது ஒவ்வொரு படம் திரைக்கு வரும்போதும் தன்னை கவர்ச்சி படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதை அவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறாராம்.

    இரண்டெழுத்தில் டைட்டிலை கொண்ட ஒரு தெலுங்கு படத்தில், இதுவரை நடித்திராத அளவுக்கு படுகவர்ச்சியாக அவர் நடித்து இருக்கிறாராம். “எல்லாமே என் ரசிக கண்மணிகளுக்காக” என்று வாயெல்லாம் பல்லாக சொல்கிறாராம், இனிப்பு கடை நடிகை! 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, சமீபத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதால், நடிகையின் வீட்டில் மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தினார்களாம்.

    நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை தான் ஒப்பந்தமான படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்த நிலையில், நடிகையின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நாயகி காதலில் விழுந்திருப்பதாக கூறினாராம். அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு ஏதோ சொல்லி குழப்பியிருக்கிறாராம். எனினும் நாயகி காதலில் விழுந்திருப்பது உறுதியாகியிருப்பதால், அவரது காதலர் யார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    பிரபல பாடகர் ஒருவர் டி.வி. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    தமிழில் முன்னணி கானா பாடகராக வலம் வந்தவர், தற்போது பட வாய்ப்பு அதிகம் இல்லாமல் இருக்கிறாராம். ஒரு சில படங்கள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில், பாடகரை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பாடகர் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக பணம் தர வேண்டும் என்று கேட்டாராம். 

    இதை கேட்ட பலரும் அதிர்ந்து போய், மார்க்கெட் இல்லாத நேரத்தில் இவ்வளவு பணம் கேட்கிறாரா? என்று முணுமுணுக்கிறார்களாம். 
    தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.
    விரல் வித்தை நடிகர் அறிமுகமான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமீபகாலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.

    நடிப்பதை விட படங்களை தயாரிப்பதை தான் விரும்புவதாக கூறுகிறாராம். நாயகியின் திருமணம் பற்றி பலரும் கேள்வி கேட்க, திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணமே தான் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நடிகை கூறிவிட்டாராம்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகை இனி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறாராம்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகைக்கு, சமீபத்தில் எந்த தமிழ் படமும் ரிலீசாகவில்லையாம். நாயகி தெலுங்கில் நடித்த படங்கள் வெளியாகுவதால் நாயகி மகிழ்ச்சியில் இருக்கிறாராம். எனினும் தமிழ் சினிமாவையும் விடவும் நாயகிக்கு மனமில்லையாம்.

    நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அவர் நடித்திருக்கும் படமும், கோமாளியான நடிகருடன் அவர் நடித்துள்ள படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால், சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டாராம்.

    நாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமில்லாமல், மற்ற நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நாயகியின் எதிர்பார்ப்பாக உள்ளதாம். தாமதமானாலும் அதுமாதிரி படங்களில் நடிக்கவே அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

    குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை ஒருவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகிறாராம்.
    மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். 

    எனினும், அவரது அடுத்தடுத்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லையாம். அதன்பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை தற்போது வட இந்தியா பக்கம் சென்றுவிட்டாரம். இந்த நிலையில், பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாம்.

    இந்த நிலையில், மற்ற முன்னணி நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க விரும்புகிறாராம். அதேநேரத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தயக்கம் காட்டுவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

    அவருடைய வேண்டுகோளை அந்த நாயகன் ஏற்றுக்கொண்டு, “நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்!
    முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் நடிகை, இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
    முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, தமிழில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் நடிகை, நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அவருடையே மார்க்கெட்டே மாறிவிட்டதாம். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து பல ஊர்களை சுற்றி விட்டு தற்போது கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.

    கதை சொல்லும் இயக்குனர்களிடம் நடிகர்கள் இல்லாமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக சொல்லுங்கள். நடிகர்களுடன் நடிக்க தயக்கமாக இருக்கிறது என்கிறாராம். அப்படி ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள கதை சொன்னால், நடிகை நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லுகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, தற்போது ஒரு நடிகருடன் நடிக்க படக்குழுவினரிடம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வந்த யாம்பல் நடிகை, நட்சத்திர நடிகருடன் நடித்த பிறகு அதிக சம்பளம் கேட்ட பிரச்சனையால் மார்க்கெட்டை இழந்தாராம். இதனால் பல படங்கள் இவர் கையை விட்டு சென்றதாம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம்.

    இவரை இயக்குனர் ஒருவர் அணுகி படத்தில் நடிக்க கேட்டாராம். நடிகையும் கதையை கேட்டு ஓகே சொன்னாராம். ஆனால், பசங்க நடிகர்தான் கதாநாயகன் என்று சொன்னவுடன் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். படக்குழுவினரும் பரவாயில்லை என்று நடிகை சம்பளம் அதிகம் தர சம்மதித்திருக்கிறார்களாம்.
    தமிழில் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், தனது வேதனையை பதிவு செய்திருக்கிறாராம்.
    ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்களாம்.

    பின்னர் நாயகி நடிப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். நாயகியாக மட்டுமில்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம். சமீபத்தில் நாயகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லையாம்.

    இந்த நிலையில், தான் அம்மாவாக நடிக்க தயார், ஆனால், தனது வயதுடைய நடிகர்களுக்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வது தான் என்னை எரிச்சலாக்குகிறது என்று நாயகி வேதனையுடன் புழம்பியிருக்கிறாராம்.

    ×