என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் பல படங்களில் நடித்த நடிகை, தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    மங்காத்தா விளையாடிய நடிகை அடிக்கடி கவர்ச்சி தோற்றத்தை புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறாராம். வழக்கமாக டூபீஸ் நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் நடிகை இம்முறை சற்று வித்தியாசமாக சிங்கிள் பீஸ் நீச்சல் உடைக்கு மாறியிருக்கிறாராம். 

    இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அழகாக இருக்கீங்க என்று வர்ணீக்கிறார்களாம். ஆனால், ஒரு சில ரசிகர்கள் வாய்ப்பு இல்லாததால் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருவதாக கூறுகிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தற்போது நடிகருக்காக ஒரு படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறாராம்.
    நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் வீரமான நடிகை கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறாராம். 

    இதுபற்றி நடிகையிடம் கேட்டால், “நான் அவருக்காக கவர்ச்சி நடனம் ஆடவில்லை. ஹீரோவுக்காகவே ஆடினேன். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு பெரிய நடிகருக்காக, அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவே கவர்ச்சி நடனம் ஆடினேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறாராம்.
    தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்.
    தெலுங்கு படம் மூலம் பிரபலமான கன்னட நடிகை, பருத்தி நடிகர் பட வாய்ப்பு மூலம் கோலிவுட் வந்துள்ளாராம். நடிகையை பார்ப்பவர்கள் பலரும் பக்கத்து வீட்டு பெண் போன்று ஹோம்லியாக இருக்கிறார் என்று கூறுகிறார்களாம்.

    இந்நிலையில் அவர் பேண்ட் போடாமல் டி சர்ட் மட்டும் போட்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளாராம் நடிகை. அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை கண்டமேனிக்கு திட்டத் துவங்கிவிட்டார்களாம்.
    வரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தனது உடல் எடையை குறைத்ததற்கு அவருக்கு பிடித்தமான நடிகர் மிகவும் பரிதாபப்படுகிறாராம்.
    வரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். விரதம், இரவு பகலாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை தற்போது குறைத்திருக்கிறாராம்.

    தனது ஒல்லியான உடல் அழகை மனதுக்கு பிடித்த தெலுங்கு நாயகன் பாராட்டுவார் என்று நடிகை எதிர்பார்த்தாராம். ஆனால், அந்த நாயகனோ பாராமுகமாக இருக்கிறாராம். அதோடு, “அந்த கதாநாயகி முன்பு மப்பும் மந்தாரமுமாக அழகாகவே இருந்தார். உடல் எடையை குறைத்தபின், அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று பரிதாபப்படுகிறாராம். 
    தமிழில் பல படங்களில் நடித்து பிசியான நடிகை, தற்போது வெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி வருகிறாராம்.
    தமிழில் பல படங்களில் நடித்த பிரியமான நடிகையின் கைவசம் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே இருக்கிறதாம். நடிக்க வாய்ப்பு கேட்டு பலருக்கு தூது அனுப்பியும் பலனலிக்க வில்லையாம். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்க நடிகையும் மறுக்காமல் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.

    இந்த நிலையில், நடிகை விடுமுறைக்கு வெளிநாட்டு சென்றிருக்கிறாராம். அங்கு ஒரு ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வருகிறாராம். வெளிநாட்டு நண்பரை நடிகை காதலிப்பதாகவும் பலரும் பேசி வருகிறார்களாம்.
    காதலுக்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    நம்பர் படத்தின் மூலம் அறிமுகமான வாரிசு நடிகை, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு முன்னணி நடிகையானாராம். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். இதனால், படங்களில் நடிக்காமல் இருந்தாராம். இந்த காதல் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்தால் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாம்.

    காதலரை பிரிந்த நடிகை தற்போது மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என்று நடித்து வருகிறாராம். மேலும் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.
    தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
    தெலுங்கில் இளம் நடிகருடன் ராஷான நடிகை நடித்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாம். இதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சில படங்களிலேயே அங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகி இருக்கிறாராம் நடிகை. 

    இதையடுத்து மீண்டும் இதே ஜோடி புதிய படத்தில் நடிக்க, நடிகையின் சம்பளம் முந்தைய படத்தைவிட 50 சதவீதம் உயர்ந்துள்ளதாம். தற்போது தமிழில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
    விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம்.
    விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். நகைக்கடை அதிபர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், சோப்பு கம்பெனிக்காரர்கள் ஆகியோர் இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

    போட்டி இருந்தால், சொற்ப சம்பளம் கொடுத்து நடிக்க வைத்து விடலாம் என்று அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதாம். ஆனால், வாரிசு நடிகையோ போட்டியிருந்தாலும் சம்பள விஷயத்தில் கரெக்ட்ராக இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது தமிழ் படங்களை கைப்பற்ற தீவிர பட வேட்டையில் இறங்கி இருக்கிறாராம்.
    தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ‘டாப்’ நடிகை, மும்பை சென்று இந்தி பட வேட்டையில் இறங்கினாராம். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததாம். மளமள வென்று மூன்று இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் கைப்பற்றினாராம்.

    இந்தி படங்களில் நடித்தாலும் அவரால் தமிழ், தெலுங்கு பட உலகை மறக்க முடியவில்லையாம். மறுபடியும் தெற்கு நோக்கி வலைவீசி இருக்கிறாராம். இங்கே இதுவரை எந்த மீனும் அவருடைய வலையில் சிக்கவில்லையாம். இருப்பினும், ‘டாப்’ நடிகை தன் முயற்சியை கைவிடவில்லையாம். தீவிரமாக தமிழ் படங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
    திருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையாமல் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை திருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையாமல் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். குறிப்பாக தெலுங்கில் போட்டியாக இருந்த நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லாத்தால் நடிகைக்கு ஜாக்பாட் அடித்து வருகிறதாம்.

    தற்போது நடிகை ஒரு படத்துக்கு ரூ.3 கோடி கேட்கிறாராம். அந்த தொகையை கொடுத்தும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்கிறார்களாம். 
    கோலிவுட்டில் பிரபலமான நடிகை தற்போது பாலிவுட்டில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கிளாமருக்கு ரெடியாகி இருக்கிறாராம்.
    வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை இன்னமும் கோலிவுட்டில் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறாராம். மாடர்ன் உடை அணிந்தாலும் அதிலும் கிளாமர் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். 

    இந்நிலையில் நடிகை இந்தியில் நடிக்கச் சென்றிருக்கிறாராம். பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமருக்கு ரெடியாகி வருகிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது போட்டோக்களை அனுப்பு பலரிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான அயோக்கியமான நடிகை, தற்போது பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இதற்காக புதுப்புது போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு வருகிறாராம். 

    மேலும், தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அந்த போட்டோக்களை அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறாராம். 
    ×