என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பிரபல நடிகரால் தான் தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரெட்டி நடிகை புலம்புகிறாராம்.
    ரெட்டி நடிகை, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தாராம். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். தற்போது கர்ப்பமாக உள்ள ரெட்டி நடிகை அவ்வப்போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.

    தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது பிரபல நடிகரால் தான் என கூறியுள்ளாராம் ரெட்டி நடிகை. ஜுனியர் நடிகரை காதலிப்பதாக பரவிவந்த கிசுகிசு தான் ரெட்டி நடிகையின் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டுவந்ததாம்.
    தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர், அப்போது தவறவிட்ட படங்களை நினைத்து இப்போது வருந்துகிறாராம்.
    கூட்டமான ரோஜா படத்தில் அறிமுகமான நடிகர் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானாராம். ஆனால், ஒரு சில தவறான படங்களின் தேர்வால் சில காலத்திலேயே மார்க்கெட் இழக்க நேரிட்டதாம். முன்னணி நடிகராக இருக்கும் பல படங்களில் நடிக்க தவறிவிட்டாராம்.

    இவர் தவற விட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானதாம். அந்த தவறவிட்ட படங்களில் நடிகர் நடித்திருந்தால் தற்போதும் முன்னணி நடிகராக இருந்திருப்பராம். தற்போது இதை நினைத்து வருத்தப்பட்டு வருகிறாராம்.
    மலையாள படத்தின் மூலம் பிரபலமான டீச்சர் நடிகை தமிழ் படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், 2 நிபந்தனைகளை விதிக்கிறாராம்.
    தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழில் ஹோம்லி கேரக்டரில் நடித்த படங்கள் பிளாப் ஆகியதாம். இதையடுத்து கிளாமர் கதைகளுடன் வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், அவர் 2 நிபந்தனைகளை விதிக்கிறாராம்.  

    “குட்டை பாவாடை அணிந்து நடிக்க மாட்டேன்” என்பது அவரின் முதல் நிபந்தனையாம். “முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்பது இரண்டாவது நிபந்தனையாம். 

    ஒரு தெலுங்கு படத்தில் பயங்கரவாதியாக நடிக்கும் நடிகையை பற்றி டைரக்டர் ஒருவர், “கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் அந்த நடிகை பயங்கரவாதியாக நடிக்கலாமா? இது, எந்த ஊர் நியாயம்?” என்று புலம்புகிறாராம்.
    தேடி வந்த பட வாய்ப்புகளை சீன் போட்டு தட்டி கழித்த நடிகை, தற்போது பட வாய்ப்பின்றி தவித்து வருகிறாராம்.
    நம்பர் படத்தில் பள்ளிப்பருவ நாயகியாக நடித்தவர், பலருடைய கவனத்தை ஈர்த்தாராம். முதல் படத்திலேயே தன்னை பெரிய நடிகை போல் நினைத்துக்கொண்டு தேடி வந்த பல படங்களை தட்டி கழித்தாராம்.

    பெரிய படங்களில் இருந்து வாய்ப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். தற்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்பு தேடி வருகிறாராம். ஏற்கனவே நடிகையை வைத்து படம் எடுக்க  நினைத்த இயக்குனர்கள் தற்போது வாய்ப்பு தர மறுக்கிறார்களாம். 
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்த படத்தை வியாபாரம் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறாராம்.
    அல்டிமேட் நடிகர் தற்போது இளம் இயக்குனரின் படத்தில் நடித்துள்ளாராம். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சக்கைபோடு போட்ட படத்தின் ரீமேக்காம். இந்த படத்தை மயிலு நடிகையின் கணவர் தயாரித்துள்ளாராம். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். அல்டிமேட் நடிகரின் முந்தைய படங்கள் எல்லாம் வெளியாகும் முன்பே நல்ல விலைக்கு வியாபாரம் 

    ஆனால் இந்த படத்தின் வியாபாரம் டல் அடித்து இருக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர் செய்வதறியாது, திகைத்து போய் உள்ளாராம்.

    தயாரிப்பாளர் அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயம் செய்ததே இதற்கு காரணம் என்று விநியோகிஸ்தர்கள் பேசி வருகிறார்களாம்.
    காதல் தோல்வியால் விரக்தியடைந்திருக்கும் வாரிசு நடிகை எடுத்த அதிரடி முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த வாரிசு நடிகை, வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தாராம். காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த காதல் சமீபத்தில் முறிந்ததாம். 

    காதல் தோல்வியால் விரக்தியடைந்திருக்கும் நடிகை, இனி திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம். இது காதல் தோல்வியா இல்லை காதலரை மறக்க முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
    கெஸ்ட் ரோலாக இருந்தாலும், அதற்காக சர்ச்சை நடிகர் அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
    சர்ச்சை நடிகர் தற்போது இளம் நாயகனின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

    மேலும் தன்னுடைய மேக்கப் வுமன்கள் 2 பேர் மற்றும் நண்பர்கள் 8 பேரையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து தினமும் மது, உணவு என தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கிறாராம் அவர்.

    மேலும் அவர் `நைட்ல ஷூட்டிங் வெச்சாத்தான் வருவேன்' என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
    முன்னணி நடிகர் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்காக நடிகை நேரம் பார்த்து இயக்குனருக்கு தூது அனுப்பி இருக்கிறார்.
    தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் நடிக்க விஜபி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் அந்த படத்தில் இருந்து சில காரணங்களால் நடிகை விலகி விட்டாராம். 

    இதையறிந்த ஆகாஷாமான நடிகை, இயக்குனருக்கு தூது அனுப்பி இருக்கிறாராம். இயக்குனரும் படப்பிடிப்பு தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், நடிகையை உடனே ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். 
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகையிடம் திருமண பேச்சு எடுத்தாலும் மிகவும் கடுப்பாகி கோபப்படுகிறாராம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த இனிப்பு கடை நடிகையின் தங்கை திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம். நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்களாம். பெற்றோர் ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்க்க நடிகை மறுபக்கம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். 

    திருமணம் என்று பேச்சு எடுத்தாலே நடிகைக்கு கடுப்பாகிறதாம். நடிகை ஏற்கனவே ஒருவரை காதலித்ததாகவும், நடிக்க கூடாது என்று அவர் கட்டளை போட்டதால் அவரை விட்டு பிரிந்ததாகவும் ஏற்கனவே நடிகை பேட்டியில் கூறியிருக்கிறாராம். இதனால்தான் நடிகை திருமணம் செய்ய மறுக்கிறாராம்.
    பல வெற்றிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
    பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடிகையின் வாழ்க்கை வரலாறு படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றாராம். இதன் பின் ஓய்வு தேவை என்று முடிவு எடுத்து பல படங்களில் ஒப்புக் கொள்ளாமல் இருந்தாராம். பின்னர் உடல் எடையை குறைக்க முடிவு செய்து பட வாய்ப்பை தவிர்த்து வந்தாராம்.

    தற்போது ஓய்வு முடிந்தும், உடல் எடை குறைத்தும் இருக்கும் நடிகைக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. முன்பு கேட்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தற்போது நடிகை பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய காதலுடன் ஊர் சுற்ற படக்குழுவினரிடம் இடைவேளை கேட்டு சென்றிருக்கிறார்.
    நம்பர் ஒன் நடிகை இயக்குனரை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவது வழக்கமாம். ஆனால், இந்த முறை நடிகை படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் வெளிநாட்டில் நடந்த பட விழாவிற்கு இயக்குனர் மட்டும் தனியாக சென்றாராம். 

    விழா முடிந்த பிறகு இயக்குனர் வேறு ஊருக்கு செல்ல, நடிகையும் படப்பிடிப்பை முடித்து படக்குழுவினரிடம் சிறிய இடைவேளை வேண்டும் என்று கேட்டு இயக்குனருடன் வெளிநாடு சென்றிருக்கிறாராம்.
    சகோதரிக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தனக்கு வரும் வாய்ப்பை அவருக்காக மாற்றி வருகிறாராம் நடிகை.
    தமிழில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற கல் நடிகைக்கு, தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். நடிகையும் சலிக்காமல் பல கதைகள் கேட்டு வருகிறாராம். அப்படி கேட்கும் நடிகை, தனது சகோதரிக்கு ஏற்ற மாதிரி கதை இருக்கா என்று பல இயக்குனர்களிடம் கேட்கிறாராம்.

    சகோதரிக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், நடிகைக்கும் வரும் பட வாய்ப்பை தனக்கு தரும் படி கேட்கிறாராம். இதனால், நடிகையும் என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர்களிடம் கேட்டு வருகிறாராம்.
    ×