என் மலர்
சினிமா

காதலருடன் ஊர் சுற்ற இடைவேளை கேட்ட நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய காதலுடன் ஊர் சுற்ற படக்குழுவினரிடம் இடைவேளை கேட்டு சென்றிருக்கிறார்.
நம்பர் ஒன் நடிகை இயக்குனரை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவது வழக்கமாம். ஆனால், இந்த முறை நடிகை படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் வெளிநாட்டில் நடந்த பட விழாவிற்கு இயக்குனர் மட்டும் தனியாக சென்றாராம்.
விழா முடிந்த பிறகு இயக்குனர் வேறு ஊருக்கு செல்ல, நடிகையும் படப்பிடிப்பை முடித்து படக்குழுவினரிடம் சிறிய இடைவேளை வேண்டும் என்று கேட்டு இயக்குனருடன் வெளிநாடு சென்றிருக்கிறாராம்.
Next Story






