என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.
    தமிழில் தற்போது பல படங்களில் காமெடி வேடத்திலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருபவர், அடுத்ததாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தபட்டதாம்.

    இதில் சித்தி பிரச்சனையில் சிக்கிய நடிகையிடம் நடிக்க கேட்டார்களாம். நடிகை உடனே நடிக்க சம்மதித்து விட்டு, சம்பளம் அதிகமாக கேட்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார்களாம். படக்குழுவும் சரி என்ன செய்வது என்று பணம் கொடுக்க சம்மதித்து இருக்கிறார்களாம்.
    நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிரபல நடிகர், வயதாகியும் பல இயக்குனர்களிடம் அடம் பிடித்து வருகிறாராம்.
    ஒரு காலத்தில் சூப்பர் நடிகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த ‘ஆட்டக்கார’ நாயகன் இதுவரை 49 படங்களில் நடித்து இருக்கிறாராம். இவரை பல படங்களில் அண்ணன், உறவினர் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றதாம். ஆனால், நடிகர் எதுக்கும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

    50-வது படத்திலும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம். அவரை, ஒரு இரண்டாம் பாக படத்தில் குணச்சித்ர வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார், ஒரு பிரபல டைரக்டர். அவர் வருகிறார் என்றாலே ஓடி ஒளிகிறார், அந்த முன்னாள் நாயகன்!
    முத்தக்காட்சி காரணமாக பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிப்பதை டீச்சர் நடிகை தவிர்த்தாராம்.
    தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் பிரபல நடிகரின் படத்தில் அந்த நடிகை நடிக்க மறுத்துவிட்டாராம். 

    பிரபல நடிகருடன் நடிக்க மறுத்தது ஏன் என டீச்சர் நடிகையிடம் செல்லும் இடமெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டதாம். சமீபத்தில் அதற்கான காரணத்தை நடிகை கசியவிட்டுள்ளாரம். 

    படத்தில் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என கேட்டதால், அதற்கு மறுப்பு தெரிவித்தாராம். இதனால் டீச்சர் நடிகைக்கு தெலுங்கில் மவுசு குறைந்துள்ளதாம்.
    தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளாராம்.
    தமிழில் தல, தளபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் வீரமான நடிகை நடித்துள்ளாராம். தொடர்ந்து கிளாமர் வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை, இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று திடீர் அறிவிப்பு விடுத்துள்ளாராம்.

    இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை, கவர்ச்சி காட்டி நடிக்கவே மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறிவிட்டாராம். நடிகையின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? காதலா, மோதலா? என்று சக நடிகர்-நடிகைகள் அலசி ஆராய்கிறார்களாம். 
    ஹோம்லி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நடிகை, பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
    தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் மெர்சலான நடிகை நடித்துள்ளாராம். கவர்ச்சியாகவோ நெருக்கமாகவோ நடிக்க மாட்டேன் என்று கட்டுப்பாடுகள் விதித்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம்.

    அவருடன் திரையுலகுக்கு வந்த நடிகைகள் தற்போது முன்னணி இடத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மெர்சலான நடிகையை 2வது ஹீரோயினாகவே நடிக்க கேட்கிறார்களாம்.

    இதனால் விரக்தி அடைந்த நடிகை தற்போது கவர்ச்சியாக நடிக்க துணிந்திருக்கிறாராம். கவர்ச்சியான புகைபடங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறாராம்.
    தமிழில் பல படங்களில் நடித்த நடிகை, தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    மங்காத்தா விளையாடிய நடிகை அடிக்கடி கவர்ச்சி தோற்றத்தை புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறாராம். டூபீஸ் நீச்சல் உடையில் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறாராம். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கிறாராம்.

    இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அழகாக இருக்கீங்க என்று வர்ணிக்கிறார்களாம். ஆனால், ஒரு சில ரசிகர்கள் வாய்ப்பு இல்லாததால் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருவதாக கூறுகிறார்களாம்.
    பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் பிரபல நடிகை, வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    தமிழில் சில படங்களில் நடித்துள்ள கலாசலா நடிகை, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுபவராம். ஒரு பாடலுக்காக வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்குமாறு கலாசலா நடிகையிடம் படக்குழு அணுகினார்களாம். 

    ஆனால் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம். அந்த நடிகை ஏற்கனவே சில படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், லிப் டு லிப் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கறார் காட்டுகிறாராம்.
    தமிழில் தல, தளபதி போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு வீரமான நடிகை ஜோடியாக நடித்தாராம். இவர் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். கிளாமருக்கு ஒகே சொல்லும் நடிகை லிப் டு லிப் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கறார் காட்டுகிறாராம். 

    இதனால் வீரமான நடிகைக்கு ஏராளமான பட வாய்ப்புகள் நழுவி போகின்றதாம். இருப்பினும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். 
    ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை திருமணம் ஆன பின்னரும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு அண்மையில் திருமணம் ஆனதாம். முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த அந்த நடிகை திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் நொந்துபோயிருக்கிறாராம். 

    விட்ட இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் அவர் இணைய தள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறாராம்.  
    தமிழில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை பணமோசடி புகாரில் சிக்கியுள்ளாராம்.
    தமிழில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். மேடையில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளாராம். 

    ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்தாராம். இதனையடுத்து அந்த நடிகை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். 

    திருமணம் ஆன நிலையிலும் பல வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகை, ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்
    சில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம். 

    ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற பார்முலா பற்றி சூப்பர் ஸ்டார் பட நடிகை கூறிய கருத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். 

    திருமணம் ஆன நிலையிலும் பலருடன் காதல் கொள்வதில் அந்த நடிகைக்கு நம்பிக்கை இருக்கிறதாம். ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரச்சனையில் சிக்கிய தயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்தியுள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம்.

    பண பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தயாரிப்பாளரை காப்பாற்றும் முயற்சியில் சிவமான நடிகர் இறங்கியுள்ளாராம். மேலும் பிரச்சனையை முடித்துவிட்டு படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம்.
    ×