என் மலர்
கிசுகிசு
தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருப்பவருக்கு தற்போது சோதனை ஏற்பட்டு இருகிறதாம்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை புகழின் உச்சியில் இருக்கிறாராம். இருந்தாலும் நடிகை தற்போது சோகத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த படம் ஒன்று ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். இந்த மாதம் நிச்சயம் ரிலீசாகும் என்றிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தள்ளிப் போயிருக்கிறதாம்.
இதற்கு முன் நடித்த படம் ஒன்று தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை வருகிறதே என்று கவலையில் இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, மாப்பிள்ளை பார்ப்பதை விடாமல் இருந்து வருகிறாராம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை, உடல் எடை கூடியதால் பல படங்களில் நடிக்காமல் இருந்தாராம். மேலும் நல்ல மாப்பிள்ளையை தேடி திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவிலும் இருந்தாராம். தற்போது உடல் எடையை நடிகை குறைத்து அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டாராம்.
இருந்தாலும் மாப்பிள்ளை தேடுவதை நிறுத்த வில்லையாம். எப்போதுதான் நடிகைக்கு திருமணம் ஆகும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் கேட்டு வருகிறார்களாம்.
பிரபல வாரிசு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி யாரும் கிடைக்காமல் தவித்து வருகிறாராம்.
முன்னாள் நடிகரும் தற்போது அரசியல் கட்சி தலைவருமானவரின் மகன், தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறாராம். இவர் நடித்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறாராம்.
ஆனால், இன்னும் கதாநாயகி கிடைக்க வில்லையாம். காரணமாக கேட்டால், நடிகர் மிகவும் உயரமாகவும், வாட்ட சாட்டமாகவும் இருப்பதால், சரியான ஜோடி கிடைக்க மாட்டுகிறதாம். பிற மாநில நடிகைகளும் நடிகருக்கு ஏற்றவாறு அமையவில்லையாம். இதனால் நடிகையை ஜல்லடை போட்டு தேடி வருகிறாராம்.
ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு கைவசம் படங்களை வைத்துள்ள நடிகர், அவரது ரசிகர்களை கண்டித்தாராம்.
‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார். ‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும் முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போட பட்டதாம். இதில் ‘பதி’ நடிகரை வரவேற்க அவரது ரசிகர்கள் போக்குவரத்தை மறித்து பட்டாசு வெடித்தார்களாம். இதனால் காண்டான நடிகர் விழா மேடையிலேயே அவர்களை கண்டித்தாராம்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை காதல் குறித்து கேட்டால் கடுப்பாகி விடுகிறாராம்.
தமிழில் தல, தளபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் வீரமான நடிகை நடித்துள்ளாராம். தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறாராம். தனது சினிமா உலக பயணம் பற்றி அவர் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘உங்களுடன் ஜோடியாக நடித்த ஒரு நாயகனை நீங்கள் காதலித்ததாக வந்த தகவல் உண்மையா?’’ என்று கேட்கப்பட்டதாம்.
உடனே வீரமான நடிகை கடுப்பாகி விட்டாராம். எனக்கு காதல் வந்தால், அதை மறைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன்’’ என்று காட்டமாக கூறிவிட்டு கிளம்பி விட்டாராம்.
மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சம்பாதிக்கும் பணத்தை வைத்து படம் தயாரித்திருக்கிறாராம்.
மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சம்பாதிக்கும் பணத்தை வைத்து படம் தயாரித்திருக்கிறாராம். அவர் தயாரிக்கும் படங்கள் வரவேற்பு பெறாமல் போய்விடுகிறதாம். சில படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டதாம். தயாரிப்பு எல்லாம் வேண்டாம் நடிப்பதோடு நிறுத்திக் கொள் என்று நண்பர்கள் அறிவுரை வழங்குகிறார்களாம்.
ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லையாம். நான் தொடர்ந்து படங்களை தயாரித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
தன்னுடைய படங்களுக்கு நடிகையை நடிக்க வைக்க சிபாரிசு செய்து வந்த நடிகர், தற்போது அந்த நடிகையை கழட்டி விட்டிருக்கிறாராம்.
பதி நடிகர் தற்போது பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். வழக்கமாக பல படங்களில் கதாநாயகியை தேர்வு செய்யும் போது பதி நடிகர் ஒரு நடிகையை சிபாரிசு செய்வாராம். ஆனால், தற்போது நடிக்கும் படங்களில் அந்த நடிகையை சிபாரிசு செய்யவில்லையாம்.
நடிகையுடன் நடித்த சில படங்கள் சரியாக ஓட வில்லையாம். அதனால்தான் நடிகையை சிபாரிசு செய்ய மறுக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், தன்னுடன் நடிக்கும் நடிகைகளைப் பற்றி வதந்தி பரப்புகிறாராம்.
திருடனுக்கு இன்னொரு பெயர் கொண்ட படத்தில் நடித்த அந்த நடிகர், புது விளம்பர யுக்தியை பின்பற்றுகிறாராம். தனக்கும், தன்னுடன் நடிக்கும் நடிகைக்கும் இடையே காதல் இருந்து வருவதாக வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறாராம்.
இதில் கோபம் அடைந்த ஒரு பிரபல கதாநாயகி, “என்னை பற்றியும் வதந்தியை பரப்பாதே” என்று நடிகரை எச்சரித்திருக்கிறாராம்.
பிரபல நடிகைக்கு ஜோடியாக நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தால், அதில் இலவசமாக நடிக்க தயார் என்று நகைச்சுவை நடிகர் கூறியிருக்கிறாராம்.
பரட்டை தலைமுடியை வைத்தே நகைச்சுவை செய்து வரும் நடிகர், தனது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி விட்டாராம். தனது ‘மார்க்கெட்’ உயர்வதற்கு காரணம், நம்பர் நடிகைதான் என்று அந்த நடிகர் நம்புகிறாராம்.
நம்பர் நடிகையை காதலிப்பது போல் நடித்த படத்துக்கு பிறகே தனது மார்க்கெட் உயர்ந்ததாக கருதுகிறாராம். அதனால், அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தால், அதில் இலவசமாக நடிக்க தயார் என்று கூறுகிறாராம்.
புதிய படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு கதாநாயகன் லவ் டார்ச்சர் கொடுப்பதாக நடிகையின் தாய் கூறுயிருக்கிறாராம்.
மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறாராம்.
தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறாராம். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார்.
கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.
அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் என்று பிரபல நடிகை ஒருவர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
கணவரை விவகாரத்து செய்த நடிகை தற்போது துணிச்சலாக ஒரு படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெயர் பெற்றிருக்கிறாராம். இது சக நடிகைகளுக்கு பொறாமையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறதாம்.
அந்த நடிகையைப் பற்றி பெரிய முதலாளி வீட்டில் இருந்தவரும், தற்போது ஈகிளாக வருபவரிடம் கேள்வி கேட்ட போது, அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறாராம்.
முன்னணி நடிகை ஒருவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட கோடி கணக்கில் பணம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அழகியாக பட்டம் பெற்றவர் தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமானாராம். இந்தி, படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாராம். தற்போது முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.
அந்த படத்தில் அவர் முன்னணி நடிகருக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறாராம். இதையடுத்து அவர் மற்றொரு தெலுங்கு படத்தில், ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆட சம்மதித்துள்ளாராம். இதற்கு சம்பளமாக பல கோடி ரூபாய் கேட்டிருக்கிறாராம்.






